Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம் ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுத…

  2. ‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் இப்போது பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டிலும் இதேபோல சதித் திட்டம் தீட்டப்பட்டதால் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. மூன்று மாதங்களில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்'' என்றெல்லாம் அந்த அறிக்க…

  3. ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பிரபல நடிகையாக இருந்தபோது ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாகவும் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியின்போது அவரை நேருக்கு நேராக பார்த்தபோதும் அவர் அழகாகவே காட்சி அளித்ததாகவும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றுவது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் செயலாகாது என முன்னர் சட்டரீதியாக விளக்கம் அளித்த சுப்ரீம…

  4. ஆர்.கே. நகரில் அள்ளி வீச ரூ.50 கோடி பணம்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது. சென்னை: இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான். பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலா…

  5. ’தொப்பி, மின் விளக்கு’ திணறும் ஆர்.கே.நகர்.. அனல் பறக்கும் தேர்தல் களம் ! இடைத்தேர்தல் நடக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் தொடங்கிவிட்டதால்,தொகுதி முழுக்க பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதன்முறையாக அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை இல்லாமல் நடக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான அரசியல் கட்சியான தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அதனால் தொகுதி முழுக்க உதயசூரியன் சின்னம் மட்டும்தான் எல்லோரின் கண்களுக்கும் பழகிய சின்னமாக காட்சியளிக்கிறது.மீதியுள்ள சின்னங்கள் எல்லாம் இன்னும் அவ்வளவாக வெளியே காணமு…

  6. கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு கிரிமினல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில்,டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. அந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, என்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு …

  7. விரட்டப்பட்டவர் தினகரன் பன்னீர் விளாசல் சென்னை: ''ஜெயலலிதாவால், 2007ல் விரட்டப்பட்டவர் தினகரன். அவரை, நீங்களும் புறக்கணிக்க வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நாகூரான் தோட்டம் பகுதியில், நேற்று பிரசாரம் செய்தார். ஜெ.,ஆன்மா வழிநடத்தும் அவருக்கு மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும், வீடுகள் முன் வண்ண கோல…

  8. ரஜினி என்னும் கோமாளி சூப்பர் ஸ்டார் ரஜினி தனது இலங்கை பயணம், அரசியல் ஆக்கப்பட்டதால் தனது பயணத்தை கைவிடுவதாக கூறி நீண்ட நெடிய மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். யாரை முட்டாள் ஆக்க இந்த முயற்சி ரஜினி சார் ! தலைவா ! தலைவா ! என்ற சரணாகதி கோசம் போட்ட தலைமுறை எல்லாம் போயே போய் விட்டது. டிஜிட்டல் தலைமுறைகளின் காலம் இது. அட கிளம்புங்க ஜி ! காத்து வரட்டும் ! வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காக லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், 150 வீடுகளை கட்டி, தனது தாயார் பெயரில் அர்பணிக்கிறார். நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை ! அவர் அன்பானவர் ! கருணை உள்ளவர் தான். ஆனால் நீங்கள் சொல்ல மறந்தது, மறைத்தது, சு…

  9. ஜெயலலிதா மகன் என்று கூறியவருக்கு நேர்ந்த சிக்கல்! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகன் என்றுக் கூறியவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர், தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன். நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக…

  10. அன்னிய செலாவணி வழக்குகளை தள்ளிவைக்க கோரி வழக்கு: டிடிவி தினகரனின் மனு தள்ளுபடி அன்னிய செலாவணி வழக்குகளை தள்ளிவைக்க கோரிய டி.டி.வி. தினகரனின் மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை: டி.டி.வி. தினகரன் மீதான 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள், சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும், அதனால் தேர்தல் நடவடிக்கை முடியும் வரை, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று டி.டி.வி. தினகரன் சார்பில் ஒர…

  11. ராஜிவ் கொலை குற்றவாளி முருகனிடமிருந்து 2 மொபைல்போன்கள் பறிமுதல் வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை குற்றவாளியான முருகனிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், சார்ஜர்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மொபைல் போன்கள் பறிமுதல் : ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருபவர் முருகன். இவர், மற்றொரு குற்றவாளியான நளினியின் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை சிறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது முருகனின் அறையில் இருந்த சுவாம…

  12. ரூ.100 கோடியை வசூலிக்காம விடமாட்டாங்க போல...! கறார் கர்நாடகா ‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, எப்போது மறுசீராய்வு மனு போடுவார்?’ இந்தக் கேள்வியுடன் இருந்த அரசியல் வட்டாரங்களுக்கு, கர்நாடக அரசின் அதிரடி, அதிர்ச்சி தந்திருக்கக்கூடும். ஆம், சசிகலாவுக்குப் பதிலாக கர்நாடக அரசு முந்திக்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குறித்து தெளிவு வேண்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. சொத்துக் குவிப்பு வழ…

  13. "விவசாயிகளையே பிச்சை எடுக்க விட்டுட்டாங்க; எங்களையா கண்டுக்கப் போறாங்க?" ஈழ அகதிகள்! "தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது"- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக…

  14. மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..! ‘‘தினகரன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்து விட்டார்” என்றபடி வந்து உட்கார்ந்தார் கழுகார். ‘‘அடுத்த நகர்வா?” என்றோம்! ‘‘சசிகலாவையே ஒதுக்குவதுதான்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார் கழுகார். ‘‘சசிகலாவை மொத்தமாகப் புறக்கணிக்கும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் தினகரன் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்காக தண்டையார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேடையில் ஜெயலலிதா, தினகரன் படங்கள் மட்டும்தான் இருந்தன. சசிகலா படம் இல்லை. சித்தியை இப்போதே ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன்.” ‘‘தைரியம்தான்!” ‘‘இதில் என்ன தைரியம்? சித்தி சிறையில் இருக்கிறா…

  15. கலக்கம் ! தொடர் அஸ்திரத்தால் சசி அணியினர்... அ.தி.மு.க.,அலுவலகத்தை கைப்பற்ற பன்னீர் இலக்கு இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல, அ.தி.மு.க., அலுவலகத்தை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளதால், சசி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப்பின், அ.தி.மு.க., சசிகலா, பன்னீர் என, இரண்டு அணிகளாகச் செயல்படுகிறது. சசி அணிக்கு, 122 எம்.எல்.ஏ.,க் கள், 37 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆதரவு உள்ளது. பன்னீர் அணிக்கு, 11 எம்.எல்.ஏ.,க்கள், 12 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளது. சிறு குழு சசிகலா குடும்பத்தினர் மீதுள்ள வெறுப்பு காரண மாக, தொண்டர்கள்,…

  16. உதிர்ந்தது இலை ''அ.தி.மு.க.வில் கூட்டணி வைத்துக்கொள்ள யார் வந்­தாலும் தனது கட்­சியின் இரட்டை இலை சின்­னத்தில் மட்­டுமே போட்டியிட வேண்டும் என்பது ஜெயலலிதாவினால் வகுக்கப்­பட்ட விதி. அந்தளவு ஜெயலலிதாவுக்கு இரட்டை இலையில் பற்றும் விருப்­பமும் இருந்தது. இரட்டை இலையில் ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று ஜெயலலிதா இன்று இரண்டுமே உதிர்ந்துவிட்டன...'' ''நான் இறந்த பின்­னாலும் அ.தி.மு.க. என்ற இப்­பே­ரி­யக்கம் இன்னும் 1000 வரு­டங்கள் தாண்­டி­யி­ருக்கும். வெற்றி சின்­ன­மாம் மக்கள் திலகம் கண்ட இரட்டை இலை சின்­னத்­துக்கு வாக்­க­ளித்து வெற்­றி­பெறச் செய்­யுங்கள்'' என்று கடந்த வருடம் சென்னை தீவுத் திடலில் நடை­பெற்ற தனது கடைசி தேர்தல் பிர­சா­ரத்…

  17. கமி‌ஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்: ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கோரிக்கையை ஏற்று கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக கரண் சின்ஹாவை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. 2 அணிகளாக உடைந்து இடைத்தேர்தலை சந்திக்கிறது. அ.இ.அ.தி.மு.க. அம்மா (சசிகலா அ…

  18. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சாலமன் வேட்புமனு நிராகரிப்பின் பின்னணி என்ன? பரபர தகவல்கள்! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசிய சாலமனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் கூட்டுச் சதி இருக்கிறது என்று கூறப்படுகிறது. திட்டமிட்டே மனுவை நிராகரித்துள்ளார்கள் தேர்தல் அதிகாரிகள் என்ற புகாரும் எழுந்துள்ளது. டி.டி.வி.தினகரன், தீபா உள்ளிட்டவர்களுக்கு பலமணி நேரம் கால அவகாசம் கொடுத்து அவர்கள் பூர்த்தி செய்து மிகவும் பொறுமையாக வேட்பு மனுக்களை அளிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரிகள், சாலமனின் வேட்பு மனுவை அளிக்க போதிய நேரம் தராமலும்,வேண்டுமென்றே தாமதப்படுத்தியும் மன…

  19. புதுடில்லி:'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது குறித்து, மத்திய அரசின் நிலைப்பாடு என்ன' என, இரு வாரங் களுக்குள் பதிலளிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதே போல், நீதித் துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், இது போன்ற தடை விதிப்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 'குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடவும், நீதித் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பதவியை தொடர வும், வாழ்நாள் முழுவதும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா அமர்வு முன், நேற்ற…

  20. ’சசிகலா மக்களை மொட்டையடித்தார்... தினகரன் தொப்பி போடுகிறார்...!’ - சாடும் தீபா அணியினர் 'தமிழக மக்களை மொட்டையடித்து விட்டு சிறைக்குச் சென்றுள்ளார் சசிகலா. அடுத்து, மக்களுக்கு தொப்பி போட ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நிற்கிறார்' என்று எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவைத் தலைமைச் செய்தி தொடர்பாளர் செல்லராஜாமணி தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். தீபாவின் பிரசார வியூகம் குறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் செல்லராஜாமணி கூறுகையில், "தேர்தலில் தீபா, போட்டியிடக்கூடாது என்று சசிகலா அணியினர் செயல்பட்டுவருகின்றனர்.…

  21. ஆர்.கே நகரில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு ஆதரவில்லை: இளையராஜா மகன் அதிரடி! on: மார்ச் 24, 2017 ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு தனது ஆதரவில்லை என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் இளையராஜாவின் தம்பியாவார். இந்நிலையில் இளையராஜாவின் இளைய சகோதரர் பாஸ்கரின் மகளான வாசுகி தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த டிவீட்டில் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜாவ…

  22. சசிகலாவை திட்டி கடிதம் எழுதும் தமிழக மக்கள்: திக்குமுக்காடும் சிறை நிர்வாகம் பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது. சசிகலாவுக்கு வந்த கடிதங்களில் ஏராளமானவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்று கூறி சசிகலாவை சபித்து எழுதப்பட்டிருப்பதாக பரப்பன அக்ரஹார மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி சிறையில் சரணடைந்த நாள் முதல் தற்போது வரை 'சசிகலா, மத்திய சிறைச்சாலை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூர் - 560100' என்ற முகவரிக்கு…

  23. பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்! பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. இவரின் இயற்பெயர், தியாகராஜன். பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதை தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றார். செகந்திராபாத்தில் பிறந்த இவர், தனது 21-வது வயதில் சென்னைக்குக் குடியேறினார். இவருக்கு, தமிழ்நாடு அரசு மும்முறை பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளது. இலக்கியச் சிந்தனை விருதுகளை 1977-ம் ஆண்டிலும், 1984-ம் ஆண்டிலும் இருமுறை பெற்றுள்ளார். 2007-…

    • 11 replies
    • 1.3k views
  24. தொப்பியுடன் மனு தாக்கல்:தினகரன் காமெடி சென்னை:ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடும் தினகரன், திடீரென தன், 'கெட்டப்'பை மாற்றி, தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான தொப்பியை அணிந்து வந்து, காமெடி செய்தது, எம்.ஜி.ஆர்., ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்து உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில், சசி அணி சார்பில், சசிகலா அக்காள் மகன் தினகரன் போட்டியிடு கிறார். அவருக்கு தேர்தல் கமிஷன், ஆட்டோ ரிக் ஷா சின்னம் ஒதுக்கியது. அதை வேண்டாம் என, தொப்பி சின்னத்தை பெற்றனர். நேற்று காலை, தினகரன் தன் ஆதரவாளர் களுடன் சென்று, வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, தன் சின்னமான தொப்பியை தலையில் அணிந்தபடி, மனு தாக்கல் செய்தார்.அவ…

  25. 112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது புகார்: காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை சிறுதாவூரில் கங்கை அமரன் பங்களா உள்பட 112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது அளிக்கப்பட்ட புதிய புகாரின் அடிப்படையில் காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர், பையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நிலங்கள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.