தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
“யாரைக் கேட்டு பேட்டி கொடுத்தார்..?” எகிறிய ஸ்டாலின்... சைலண்ட் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போலீஸுக்கு இது போதாத காலம்போல... மெரினா ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பத்தில் காவல் துறை காட்டிய கரிசனத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள். ஆனால், கடந்த 23-ம் தேதி அதே காவலர்கள், காட்டிய கோரமுகத்தைக் கண்டு, ‘‘காட்டுமிராண்டிகளாக தமிழக போலீஸ் நடந்த்கொண்டது’’ என்று வசைபாடினார்கள். போலீஸார், வீடுகளுக்குள் புகுந்து தாக்கிக்கொண்டிருந்த போதுதான், சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கலவர பூமியாகச் சென்னை காட்சியளித்துக் கொண்டிருந்தபோது ‘‘அமைதிப் பூங்காவாகத் தமிழகம் உள்ளது’’ என்று சிலாகித்துக்கொண்டிருந்தார் கவர்னர். ஜல்லிக்கட்டு போர…
-
- 0 replies
- 483 views
-
-
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்? விசாரணை வெளிப்படுத்துமா ? ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்கரையில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யார் காரணம்? யார் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டது? தாக்குதலின் பின்னணியில் விஷமிகள் உள்ளனரா? அல்லது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான சக்திகளா? என்பது போன்ற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுதும் 8 தினங்களுக்கு மேல் போராட்டங்கள் இடம்பெற்றன. இந்தப் போராட்டம் சென்னையில் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலும் …
-
- 1 reply
- 643 views
-
-
கலைகிறதா அதிமுகவின் ராணுவ கட்டுப்பாடு? அதிமுக பிரமுகர் சட்டைப் பையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா-சசிகலா படம் | படம்: ம.பிரபு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தற்போது அதிமுகவில் நிலவும் போட்டி விமர்சனங்கள், கட்சியின் பல்வேறு நிகழ்வுகள் அக்கட்சியின் ராணுவ கட்டுப்பாடு கலைகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை, அவரை மீறி கட்சியில் எந்த விஷயமும் நடந்துவிடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தவறியதில்லை. மேலும், எந்த விஷயத்திலும் அவர் உத்தரவின்றி யாரும் எதையும் செய்துவிட முடியாது; எவரையும் விமர் சித்து விடவும் முடியாது. இதற்கு சசிகல…
-
- 0 replies
- 600 views
-
-
இவர் தான் peta வின் இந்திய பிரதிநிதி
-
- 0 replies
- 482 views
-
-
வரலாறு படைத்த அறவழி போராட்டம் தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத ஒரு சூழலை கடந்த வாரம் எதிர்கொண்டது. உலக வரலாற்றில் சாதனையாக பதிவு செய்யும் அளவிற்கு தலைமையேயில்லாத தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அரசியல் நோக்கர்கள் மற்றும் எதிர்கால அரசியலுக்கான கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு ஆகச்சிறந்த உதாரணமாகவும் இந்த அறவழி போராட்டம் அமைந்தது. ஜனநாயகத்தில் மக்களின் உரிமை காக்கப்படவேண்டும் என்றாலோ அல்லது உரிமை மீட்டெடுக்கப்படவேண்டும் என்றாலோ போராட்டம் நடத்துவது என்பது அடிப்படையான நோக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் போராட்டத்தின் எந்த வடிவமாக இருந்தாலும் அதற்கு ஒரு தலைமை இருக…
-
- 0 replies
- 634 views
-
-
சென்னை மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு சென்னை : சென்னை மெரினாவில், இன்று பிற்பகல் முதல் மீண்டும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மெரினாவை சுற்றி உள்ள பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பதற்றமாக மெரினா : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி 17 ம் தேதி முதல் 23 வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம் உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை அமைதியான முறையில் நடந்து வந்த போராட்டம், ஜனவரி 23 ம் தேதி சென்னையில் கலவரமாக மாறியது. த…
-
- 2 replies
- 540 views
-
-
ஓ.பி.எஸ்.,க்கு எதிராக உள்ளடி செய்த மந்திரிகள்! அலங்காநல்லூரில் அம்பலமான சதி முதல்வருக்கு எதிராக, அமைச்சர்கள் செயல்படுவது, அ.தி.மு.க.,விலும், அரசியல் வட்டாரத்திலும், பெரும் பரபரப்பை உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை, முதல்வர் பதவியில் இருந்து, ஜெ., விலக நேரிட்ட போது, முதல்வ ராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதன் பின் மீண்டும், ஜெ., பதவியேற்கும் சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் பதவியை துறந்து, தன் விசுவாசத்தை நிரூபித்தார். எனவே, ஜெ., மறைவுக்கு பின், மீண்டும் அவர் முதல்வ ரானது, மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை. ம…
-
- 0 replies
- 394 views
-
-
சசிகலாவுக்கு எதிராக தேர்தல் கமிஷனில் நெருக்கடி தம்பிதுரை முயற்சியை முறியடிக்க திட்டம் அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறும் முயற்சியில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஈடுபட்டுள்ளார். அதற்கு எதிராக, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மற்றும் தீபா ஆதரவாளர்கள், தேர்தல் கமிஷனிடம் மனுக்களை வழங்கி, சட்ட ரீதியாக நெருக்கடி கொடுப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி விதிப்படி, உறுப்பினர்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம், …
-
- 0 replies
- 421 views
-
-
மிஸ்டர் கழுகு: குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு! கடற்கரையில் இருந்து பறந்து வந்தார் கழுகார்! சிந்தனை வயப்பட்ட முகத்தோடு எதிரில் அமர்ந்தார். ‘‘குடியரசு தினக் காட்சிகளைப் பார்க்கலாம் என கடற்கரைக்குப் போனேன். சில நாட்களுக்கு முன்னால் மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்த கடற்கரை இன்று வெறிச்சோடிக் கிடந்தது. இதற்குக் காரணம் நிச்சயமாக அரசும் போலீஸும்தான். அமைதியாகப் போராடியவர்களை அராஜகமாகக் கலைத்ததன் விளைவு, ‘குடியரசு தினக் கொண்டாட்டத்துக்குப் போகலாமா’ என்ற பயத்தைக் கிளப்பிவிட்டது. போலீஸ் மீதான கோபத்தால் பலர் வரவில்லை. குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது நிரம்பி வழியும் கடற்கரை வெறிச்சோடியது. ‘ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துன’ கதையாகிவிட்டது. ‘யாராவது உள்ளே புகுந்து…
-
- 0 replies
- 572 views
-
-
தீபாவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் முதல் நிகழ்ச்சியை தடுத்த சசிகலா டீம் தீபாவின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சியில் சசிகலா தரப்பு ஈடுபடுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலில் ஈடுபடுவதாக சமீபத்தில் அறிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசியல் பயணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தீபாவின் அரசியல் பயணம், அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபாவுக்கு செக் வைக்கும் வேலையில் சசிகலா தரப்பு ஈடுபட்டு வருவதாக தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையி…
-
- 0 replies
- 555 views
-
-
அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவால் உருவாக் கப்பட்ட, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். ஆட்டம் போட்டவர்களுக்கு மீண்டும் பதவி தரும் முடிவில், கட்சியின் பொதுச் செயலர் சசிகலா இருப்பதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, தீபா பக்கம் செல்வது பற்றி பெண் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட மன்னார்குடி உறவுகள் கட்சியிலும், ஆட்சியி லும் கோலோச்சத் துவங்கி இருக்கின்றன. சசிகலாவின் அரவணைப்பில் உள்ள, அவரின் அக்கா வனிதாமணியின் மகன் தினகரனுக்கும், அண்ணன் சுந்தரவதனத்தின் மகன், டாக்டர் வெங்கடேஷுக்கும் இடையே, அதிகார போட்டி நடக்கிறது. கட்சி,…
-
- 0 replies
- 353 views
-
-
' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!' -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு தி.மு.க நிர்வாகிகளில் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் சற்று வித்தியாசமானவர். நடப்பு அரசியலை நையாண்டி செய்து கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் வல்லவர். மெரினா போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை விமர்சித்து, அவர் எழுதிய பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மெரினா புரட்சியின் விளைவால், அவசரச் சட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் டெல்லி சென்ற காட்சிகளை, 'மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்' என்ற தலைப்பில் நையாண்டி செய்திருந்தார். இறுதியாக, 'இடைவேளைக்குப் பிறகான ரஜினி படம் …
-
- 0 replies
- 520 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம்! முதல்வர் ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும், சென்னையில் போலீஸ் தடியடி தொடர்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு ப…
-
- 2 replies
- 549 views
-
-
கொடூர போலீஸ் தாக்குதல்.. அரசு மீது கோபத்தை திருப்பிய தமிழக மக்கள்.. களையிழந்த குடியரசு தினம். சென்னை; குடியரசு தினம் என்றால் மாவட்டந்தோறும் நடக்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு களிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி இருப்பதால் குடியரசு தினம் களையிழந்து காணப்படுகிறது. கடந்த திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்ற வன்முறையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுகுப்பம், அயோத்திய குப்பம் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக புகுந்து போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இது போதாதென்று அவர்களே குடிசைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்…
-
- 1 reply
- 625 views
-
-
நடுக்குப்பத்தில் காவல்வெறி! சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை வெளியிட்ட ஆவணப் படம்! அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற பண்பாட்டுப் புரட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்போது சென்னை மெரீனாக் கடற்கரையிலும் மிகப் பெரியளவில் மக்கள் திரண்டு போராட்டம் இடம்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்குமாறு தமது முழக்கத்தை வெளிப்படுத்தினர். வரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பிதமடைந்தது. ஜல்லிகட்டு விடயத்தில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு என்பன தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும் அளவில் தமிழகமே திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 485 views
-
-
'பன்னீர்செல்வத்திடம் ஏன் பேசினார் அமித் ஷா?!' - குடியரசு ‘முதல் மரியாதை’ கொதிப்பில் கார்டன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நடவடிக்கைகளால் அதிர்ந்து போய் உள்ளனர் மன்னார்குடி உறவுகள். 'குடியரசு தின விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றது; விழாவில் பங்கேற்க மன்னார்குடி உறவுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பாதது; டெல்லி பா.ஜ.க நிர்வாகிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது போன்ற காரணங்களால் கார்டன் தரப்பினர் கடுகடுப்பில் உள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முற்படுகிறார் பன்னீர்செல்வம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செ…
-
- 0 replies
- 427 views
-
-
மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்! தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை முதல்வரின் மனைவி பொது நிகழ்வில் பங்கற்றது இல்லை. முதன் முறையாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி, பொது நிகழ்வில் கலந்து கொண்டது, அரசு ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல பிரச்னைகள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாதான், முதல்வராக பொறுப்பேற்க வ…
-
- 1 reply
- 997 views
-
-
சென்னையில் மட்டும் கலவரம் ஏன்? தமிழ்நாட்டிற்கென தனிக்கொடியை உருவாக்கிய சமூக விரோதிகள் மாணவர்களை உசுப்பேற்றி கோட்டையில் கொடியேற்ற திட்டம் மாணவர்கள் போர்வையில், மெரினாவில் கூடியிருந்த சமூக விரோத கும்பல், தேசிய கொடியை அகற்றி விட்டு, தனித்தமிழ்நாடு கோஷத்துடன், புதிய கொடியை, போர் நினைவு சின்னம் மற்றும் கோட்டையில் பறக்க விட, திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. சென்னை, மெரினாவில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் வன்முறையின்றி, கட்டுக்கோப்பாக இருந்த மாணவர்களுடன், மாணவியரும் போராட்டத்தில் இறங்கினர்.இதையெல்லாம், பார்த்த பொதுமக்கள், அறவழி போராட்டத்திற்…
-
- 2 replies
- 611 views
-
-
துடிக்குது புஜம்,ஜெயிப்பது நிஜம் ஒட்டுமொத்த பார்வையையும் இன்றைக்கு தமிழக இளைஞர்கள் மீதுதான்.எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மீசைக்கவிஞன் பாரதி பாடியது போல ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரே குரலில் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களும் எழுச்சி கொண்டு நிற்பதை பார்த்து மிரண்டு போயிருக்கிறது அதிகாரவட்டம். சென்னை கடற்கரை இரண்டாவது முறையாக சுனாமி எனும் பேரலையை சந்தித்தது, இந்த சுனாமிக்கு காரணம் மாணவர்கள்தான்.ஒரே ஒரு விஷயம் இந்த சுனாமி அழிக்க வரவில்லை அழிவின் விளிம்பில் இருக்கும் ஜல்லிக்கட்டை மீட்க வந்ததாகும். போலீசாரை வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு மாணவர்களே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குடிதண்ணீர்,உணவு போன்றவைகளை வாங்கிவந்த…
-
- 0 replies
- 704 views
-
-
தொடங்கிய ஊரில் முடித்துவைத்த போலீஸ்! எருதுப் புரட்சி! அலங்காநல்லூரில் கடந்த 16-ம் தேதி ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கப் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் கொழுந்துவிட்டு எரியக் காரணமான காவல்துறை, 23-ம் தேதி காலை அதைவிட கடுமையான தாக்குதலை நடத்தி, போராட்டத்தை முடித்துவைத்துள்ளது. கடந்த 22-ம் தேதி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்க மதுரை வந்த முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை அலங்காநல்லூருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கடுமையான எதிர்ப்பை ஊர்க்காரர்களும் மாணவர்களும் காட்டி முதல்வரைச் சென்னைக்குத் திருப்பிவிட்டபோதே காவல் துறையால் அலங்காநல்லூருக்கு நாள் குறிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல், சமாதானம் பேசவந்த மதுரை கலெக்டர் வீரராகவ ராவை நெடுந்த…
-
- 0 replies
- 658 views
-
-
காவலர்களை நம்பி என் பிள்ளைகளை பள்ளிக்கும், வெளியிடங்களுக்கும் எப்படி அனுப்ப முடியும் என்ற பயம் வந்துவிட்டது
-
- 0 replies
- 386 views
-
-
-
மெரினா புரட்சி முடிவில்... குப்பத்து மக்களைக் குறிவைக்கிறதா காவல்துறை? மெரினா புரட்சியில் எது நடந்ததோ, இல்லையோ சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக பாசம்மிகுந்த மதுரைக்காரர்கள், வந்தாரை வாழவைக்கும் மெட்ராஸ்வாசிகள், மரியாதைக்குப் பெயர்போன கோயம்புத்தூர்க்காரர்கள், வீரத்துக்குப் பெயர்போன நெல்லையைச் சேர்ந்தவர்கள், அனைவருக்கும் சோறுதரும் தஞ்சை தரணிக்காரர்கள், வற்றாத காவிரி பாயும் திருச்சிவாசிகள் என்று நிலவியல் குறுகிய எண்ணங்களை உடைத்து எறிந்து, நாம் ‘அனைவரும் தமிழர்கள்’ என்ற நிலைப்பாடு மேலோங்க காரணமாயிருந்தது, ஜல்லிக்கட்டு மீட்பு பிரச்னைதான். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிக்காக, அதைப் பற்றி அறிந்திராத, பிறமாவட்ட மக்களும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், 'இன்று காலை போராட்ட களத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் பொறுமையாக பேசி மாணவர்களை கலந்து போகச் சொல்லினர். மக்களை அமைதியாக கலைக்கவே விரும்பினோம். ஆனால், கூட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர் இதை எதிர்த்தனர். சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்குழுவில் சிலர் அச்சுறுத்தல் விடுப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தன. சமூக விரோத சக்திகள் உள்ளே புகுந்ததால் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
செக்ஸ் பற்றி ராதா ராஜனுக்கு என்ன தெரியும்??
-
- 0 replies
- 575 views
-