Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பதவி இறங்க மறுக்கிறாரா பன்னீர் செல்வம்? - Exclusive தமிழகம் இதுவரை பார்த்திராத பல அரசியல் கேவலங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளது. 'முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி.. ' என்ற ஒரே தகுதி போதும், கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் கட்சியை நிர்வகிக்கவும், ஏழரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டை ஆளவும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர் அதிமுக நிர்வாகிகள். வெளியிலிருந்து பார்த்தால் கட்சி நிர்வாகிகள் எல்லாம் சசிகலாவை 'சீக்கிரம் சிஎம் ஆகுங்க... அப்பதான் எங்க ஜென்மம் சாபல்யமடையும்' என்று வற்புறுத்துவது போலத் தெரிந்தாலும், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள். சசிகலா மற்றும் அவரது குடும்ப கேங்கின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாகவே கட்சியினர் சசிகலாவுக்கு வேண்டுகோள் …

  2. கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...! ‘கோபல்ஸ்’ (Goebbels), வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் பரப்புரையாளன்; எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி, மக்களை நம்பவைக்கும் வித்தை அறிந்தவன்; ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து... அதை, பொதுக் கருத்தாக்கி... அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைப்பவன்; பெரும் தந்திரக்காரன். அவன், பிரசாரத்துக்காக 19 யுக்திகளை வகுத்துச் சென்றான். அதை, அப்படியே சுவீகரித்துக் கொண்டு... அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, மிகத் தந்திரமாக காய்களைக் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நகர்த்திக் கொண்டிருக்கிறார். பிரசாரத்துக்கு கோபல்ஸின் யுக்திகளும்... சசிகலாவின் நகர்வுகளும்!…

  3. ஜெ., மரணத்திற்கு நீதி கேட்டு நெடும் பயணம் மக்களை சந்தித்த பின் முடிவெடுக்கிறார் தீபா 'கட்சியும், ஆட்சியும் உங்களோடு; மக்களும், தொண்டர்களும் எங்களோடு' என்ற கோஷத் துடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபா, மக்களிடம் நீதி கேட்கும் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில், 'சசிகலா தலைமை ஏற்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, எதிர் பார்த்த படியே,சசிகலா, பொதுச்செயலராகி உள்ளார். எனினும், தனி அதிகாரியை நியமித்து, முறைப்படி தேர்தல் நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. கட்சி விதிப்படி, பொதுச்செயலரை,…

  4. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது ப…

  5. சசி பாரதம் தொடக்கம்! ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ எனச் சொன்ன ஜெயலலிதா, பொதுமக்களை கார்டனில் சந்தித்தது அபூர்வம்தான். எம்.ஜி.ஆரின் அரவணைப்பு, ஜெயலலிதாவின் பரிவு என நவரசங்களையும் தொட்டார் சசிகலா. கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா பெரியம்மாவாக மாறிக்கொண்டிருக்கிறார். பொதுக்குழு நடந்த ஏரியாவில் ஜெயலலிதாவின் பிரமாண்டமான பேனர் இருந்தது. ‘சசிகலா பொதுச்செயலாளர்’ என்றதும் ஜெயலலிதாவை மறைத்துவிட்டு (!) சசிகலாவின் பேனர் உதயமானது. சட்டப்படிதான் நடக்குறாங்களாம். ராமரின் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி நடத்திய பரதன் காட்சி ரிப்பீட் ஆனது. ஜெ. இல்லாத பொதுக்குழுவுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய குஷன் நாற்காலியையும் டீப்பாயையும் காரில் பத்திரமாகக் கொண்…

  6. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை: துவங்கியது புதிய சர்ச்சை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க அறிவுறுத்திஉள்ளது. ஜெயலலிதாவின் மறைவில், மர்மம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. இந்நிலையில், ஜெ.,க்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர், அப்பல்லோ மருத்துவ மனையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்பது கேள்விகள் கேட்டிருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு, அப்பல்லோ …

  7. எம்.எல்.ஏ., பதவியை துறக்கிறார் மந்திரி உதயகுமார்ராஜினாமா? :திருமங்கலம் தொகுதியில் போட்டியிட சசி திட்டம்:சென்னை ஆர்.கே.நகரில் தினகரனை களமிறக்க முடிவு அ.தி.மு.க., பொதுச்செயலராகி உள்ள சசிகலா, திருமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றிய, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், அவருக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அத்துடன், கட்சியில் பொதுச்செயலருக்கு அடுத்த இடத்திற்கு, தினகரனை கொண்டு வர வசதியாக, அவரை ஆர்.கே.நகரில் களமிறக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வராக இருந…

  8. “ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்” என்று சொல்கிறார், இந்த அணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளாரே?” “கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணன் வைகோ அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மக்கள் நலக் கூட்டணியை மிகச் சிறப்பா…

  9. ‘செல்லாக்காசு’... விரிசல் விழுந்த ம.ந.கூ. அ.தி.மு.க., தனது புதிய தலைமையைத் தேர்வு செய்துள்ளது. தி.மு.க தனது தலைமையை உறுதிசெய்கிற முடிவில் இருக்கிறது. இத்தகைய அரசியல் சூழலில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதாக, அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வைகோ விலகலுக்கு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கை தொடர்பான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் வேறு! ஒருங்கிணைப்பாளர் பதவி ‘நோ’! கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முதலில் எடுத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன். இந்த முழக்கத்தை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகள…

  10. ’மக்களால் நான்... மக்களுக்காக நான்... அம்மா வழியில் பயணம்!’ - பொதுச் செயலாளர் சசிகலா உரை! (ஆடியோ) "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசினார் சசிகலா. அப்போது, ஜெயலலிதாவின் மறைவை குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத்தார். மேலும், அவரது முதல் குரலை கேட்க இந்த ஆடியோவை க்ளிக் செய்யவும்..! http://www.vikatan.com/news/tamilnadu/76442-…

  11. ராம மோகன ராவ் அதிரடி! என்ன பின்னணி? ரெய்டு... துணை ராணுவம் குவிப்பு... கோட்டையில் சோதனை... மருத்துவமனை அட்மிட் என தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை சுற்றி நடந்த நிகழ்வுகளின் க்ளைமாக்ஸ் பிரஸ்மீட்டில் முடிந்திருக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கொளுத்திப் போட்ட திரி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களின் பின்புலங்கள் என்ன? உதய் திட்டம், காவிரிப் பிரச்னை, மதுரவாயல் - துறைமுகத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் எல்லாவற்றுக்கும் ஜெயலலிதா இல்லாத நிலையில் ‘மத்திய அரசுக்கு ஆமாம் சாமி’ போட்டு வந்தது அ.தி.மு.க. அரசு. தலைமைச் செயலாளரின் தலையை உருட்டியதோடு கோட்டையில் புகுந்து சோதனை …

  12. “சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால்... அம்மா இருந்திருக்க மாட்டார்!” ‘‘சசிபாரதம் ஆரம்பம்!” அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இருந்து கழுகார் அனுப்பிய தலைப்பு இதுதான். அடுத்த சில மணி நேரத்தில் அலுவலகத்தில் லேண்ட் ஆனார் கழுகார். ‘‘இதுவரை அம்மா தி.மு.க-வாக இருந்தது. இனி, அது சின்னம்மா தி.மு.க. ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். புரட்சித் தலைவி அம்மாவை மதிப்புக்குரிய சின்னம்மா வடிவில் கண்டு, கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவோம்’ என்று சூளுரைத்துள்ளார்கள். ‘அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில்கொண்டு சின்னம்மா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்…

  13. ஜெ. மரணம்... - ரிச்சர்ட் பியெலுக்கு 12 கேள்விகள்! செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கி மூன்று மாதங்களாக அப்போலோவில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டது. அதுவரை ‘சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என சொல்லி வந்தார்கள். டிசம்பர் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்ட ’எக்மோ’ உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் அன்றிரவு 11:30-க்கு ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப் படிதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது’ என அப்போலோ நிர்வாகம் சொல்லியது. பரபரப்பான அந்தக் கடைசி இரண்டு நாட்க…

  14. மீண்டும் காலில் விழும் கலாசாரமா முதல்வர் மீது அமைச்சர்கள் கோபம் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா காலில் விழுந்து வணங்கியது, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காணும் போதெல்லாம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி கள், அவரது காலில் விழுந்து வணங்குவர். எதிர்க்கட்சியினர் கிண்டலடித் தாலும், காலில் விழும் பழக்கத்தை, அ.தி.மு.க.,வினர் கைவிடவில்லை. ஜெ., மறைவை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார்.பொதுசெயலர் பதவிக்கு அவர் போட்டியிடுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்; ஆனால், அவர் சசிகலாவை முன்னிறுத்தினார். மற்ற அமைச்சர்களும்,…

  15. மன்னார்குடியின் மாயவலையில் சிக்கி மாண்டாரா ஜெ "ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளை யர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்... 20 வருடங்களுக்கு முன் வலம்புரிஜான் தேநீர் விற்றவர் இந்தியாவின் பிரதமரானதையும் செருப்பு தைத்தவரின் மகன் அமெரிக்க ஜனாதிபதியானதையும் ஜனநாயகம் என்று பெருமை கொண்ட எம்மால் தற்போது பணிப்பெண்ணாக வந்த ஒருவர் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளராக மாறியுள்ளதோடு முதல்வராகும் துடிப்பில் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதை ஏனோ உள் மனம் ஏற்றுக்கொள்ள…

  16. சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா சசிகலா?' கேள்வி எழுப்பும் அப்துல் கலாமின் உதவியாளர் அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை வாழ்த்தியும் தனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் பற்றியும் அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனரான பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், முதற்கண், தனது 33 ஆண்டு கனவை நனவாக்கி, அஇஅதிமுக பொதுசெயலாளாராக பொறுப்பு ஏற்றிருக்கும் திருமதி V.K. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய அதிமுகவில் உங்களை விட்டால் வேறு எவரும் சிந்தாமல், சிதறாமல் கட்டிக்காத்து ஒற்றுமையாக வழி நடத்தக்கூடிய தலைவர்களை செல்வி ஜெயலலிதா அவர்கள் உருவாக்கவில்லை என்பது கண்கூடாக நீரூப…

  17. ஜெ., அண்ணன் மகள் தீபா புத்தாண்டில் புது முடிவு சென்னை:''அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை, ஜன., 2ல் அறிவிப்பேன்,'' என, அ.தி.மு.க., தொண்டர்களிடம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உறுதி அளித்தார். ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர் சசிகலா; அவரது குடும்பத்தி னரை, ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் சேர்க்க வில்லை. சசிகலாவிற்கு எந்த பதவியும் வழங்கவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந் ததும், அவரால் விலக்கப்பட்ட சசிகலா குடும்பத்தி னர் அனைவரும் ஒன்றாகினர். கட்சியை தங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு வர, தொடர் நடவடிக் கைகள் எடுத்தனர். இதனால், சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ளார…

  18. அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட அடுத்த நாளே, மன்னார்குடி சொந்தங்கள், தங்களின் மிரட்டல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மின் வாரிய டெண்டர்களை, ஆதரவாளர்களுக்கு கொடுக்கும்படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்து உள் ளனர். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று, டெண்டர் படிவம் சமர்ப்பிக்க, மற்ற ஒப்பந்ததாரர்களை போலீசார் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மன்னார்குடி சொந்தங்கள் தலையீட்டால், ஏற்கனவே திட்டமிட்டபடி மின் வாரிய ஊழியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நடக்கவில்லை. வெளிப்படையாக நடக்க விரு ந்த இந்த நேர்காணல் நிறுத்தப்பட்டதால், அதற் காக விண்ணப்பித்தவர்…

  19. 2017-ல் சசிகலாவை வரவேற்கும் சவால்கள்! அ.தி.மு.க-வையும், ஆட்சியையும் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. சசிகலா, 'சின்ன அம்மா' என அழைக்கப்படுவது... திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி, பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி; எம்.ஜி.ஆருடன் அரசியல் தொடர்பில் இருந்து; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பொதுக்கூட்டங்களில் பேசி; மக்களோடு மக்களாகக் கலந்து; பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து; அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஜெயலலிதா. கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் தமிழகத்துக்கும், அ.தி.மு.க-வுக்கும் …

  20. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா! அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா இன்று பொறுப்போற்றுக்கொண்டார். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும்,…

  21. புரட்சித் தலைவி வழியில் புதுமைத் தலைவி! -சரண்டர் ஆனாரா ஓ.பன்னீர்செல்வம்? அண்ணா தி.மு.கவின் ஆறாவது பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் வி.கே.சசிகலா. 'கட்சிப் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தாலும் ஆட்சி அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்விதான் தலைமைக் கழகத்தில் வலம் வருகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 1972 அக்டோபர் மாதம் அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அ.தி.மு.கவின் முதல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றவர், ஜூன் 1978-ம் ஆண்டு வரையில் இருந்தார். அதன்பிறகு, நாவலர் நெட…

  22. அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு செய்து, நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதி உள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். நாகர்கோவில்: தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவர், பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொள்கிறார்…

  23. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்: முதல்வர் ஓபிஎஸ் தகவல் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை பொதுக்குழு தேர்வு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் வி.கே.சசிகலா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடைசி தீர்மானமாக, முதமைச்சர் அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு, சின்னம்மாவுடைய தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்போம். சின்னம்மா வி.கே.சசிகலாவிடம் கழ…

  24. ‘சுரங்கம்’ சேகர் ரெட்டி- நெட்வொர்க் - 1 தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த ரெய்டு இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. அதிகாரிகளில் உச்சபட்ச அதிகாரியான தலைமைச் செயலாளர் அலுவலகத்திலேயே சோதனை போட்டிருக்கிறார்கள் வருமானவரித் துறையினர். இந்த சோதனையின் ஆணிவேர் சேகர் ரெட்டிதான். அவர் வீட்டில் நடந்த சோதனைக்குப் பிறகுதான் ராம மோகன ராவ் வளைக்கப்பட்டார். ரெட்டியும் ராவும் மட்டும் கூட்டணி போட்டு நடத்திய விஷயம் இல்லை. இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அந்த நெட்வொர்க் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பக்கங்களில் பார்ப்போம். முதலில் சேகர் ரெட்டி! போயஸ் கார்டனில் இருந்து, சசிகலா 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியேற்றப்பட்டார். அந்த சசிபெயர்ச்சி…

  25. ஊட்டி: ஊட்டியில், உறைபனி விழத் துவங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது; குறைந்தபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் ஆனதால், குளிர் வாட்டுகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரு நாட்களாக வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவுகிறது; தாழ்வான பகுதிகள் உட்பட புல்வெளிகள், மைதானங்கள், தேயிலை தோட்டங்களின் மீது, நேற்று முன் தினம் இரவு, வெள்ளை கம்பளம் விரித்தது போன்று, உறைபனி விழுந்தது.அதிகபட்ச வெப்பநிலை, 16 டிகிரி செல்சியசாக இருந்த போதும், குறைந்தபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்சியசாக குறைந்தது; குளிர், உடலை நடுங்க செய்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. செடிகளுக்கு பாதுகாப்பு : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.