தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
சின்னம்மா ச(தி)சிகலா அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆவாரா? தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் "வர்தா" புயல் சென்னை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இரண்டு தாக்கங்களிலிருந்தும் இதுவரை மக்கள் மீளவில்லை. ஜெயலலிதாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான்! அந்த இழப்பு தற்போது அ.தி.மு.க. வுக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கட்சியின் பிரதான பதவியான பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பது தான் அந்தப்பிரளயமாகும். அடுத்த பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோ…
-
- 0 replies
- 1k views
-
-
'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' -அப்போலோ தலைவர் வேதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே.... ''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக…
-
- 0 replies
- 378 views
-
-
'எனக்கு இந்த சம்பவத்தால் எவர் மீதும் ஆத்திரமோ வெறுப்போ இல்லை' - வைகோ உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை காவேரி மருத்துவமனைக் சென்றிருந்தார். அப்போது, அங்கு அவருக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருணாநிதியை சந்திக்காமலே வைகோ திரும்பினார். இந்நிலையில் இதுகுறித்து, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, "நவம்பர் திங்களில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என அறிந்த மாத்திரத்தில், சகோதரி கனிமொழியிடம் தலைவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியாகவும்…
-
- 1 reply
- 450 views
-
-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்து 11 நாட்கள் ஆகிவிட்டன. அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "முதல்வரின் மரணம் குறித்த அறிவிப்பு முதல் அடக்கம் செய்யப்பட்டது வரையில் அனைத்தும் துல்லியமான திட்டப்படியே நடந்தன. ஒரு சாதாரண மனிதனாக இவற்றைக் கடந்து போக முடியவில்லை" என குமுறுகிறார் சீமான். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆளும்கட்சியின் ஏழு நாள் துக்க அனுசரிப்பு நிகழ்வுகள் முடிந்து போய்விட்டன. புதிய முதல்வராக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என அ.தி.மு.கவின் சீனியர்கள் பேசி வருகின்றனர். " 2020-ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால், இப்படி வேறு ஒருவரை…
-
- 11 replies
- 1.6k views
-
-
சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது! 2011 டிசம்பர் மாதம் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. சசிகலாவோடு அவரது உறவுகளையும் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். எல்லாம் மூன்று மாதங்கள்தான். 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி சசிகலாவிடம் இருந்து அதிரடியாக வந்தது ஓர் அறிக்கை. ‘‘என் உறவினர்கள் அக்காவுக்கு துரோகம் செய்தது எனக்குத் தெரியாது. அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’’ என்றெல்லாம் சசிகலா வெளியிட்ட அந்த அறிக்கையை அரசியல் மேகங்கள் மாறியிருக்கிற சூழலில், 5 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தால் சிரிப்புதான் வருகிறது…
-
- 5 replies
- 1.5k views
-
-
சென்னை: எம்.எல்.ஏக்களை பிரித்து அதிமுகவை உடைக்கும் திறமை தன்னிடம் இருப்பதாகவும், அது தமிழக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இல்லை என்றும் கூறியுள்ள பாஜக ராஜ்யசபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 'தி இந்து' நாளிதழுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்பு பேட்டியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால்தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும் என்று தெரிவித்துள்ள சுவாமி, "சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, நர்சுகளுடன் அவர் பேசியதாக சொல்லப்பட்டது, உண…
-
- 1 reply
- 521 views
-
-
சசிகலாவுக்கு 'செக்' வைத்தாரா ஜெயலலிதா? -அ.தி.மு.க உறுப்பினர் அட்டை மர்மம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஜெயலலிதா தலைமையில் நடந்த கடைசி செயற்குழு கூட்டத்திலும் சசிகலா பெயர் இல்லை. அவருக்கு உறுப்பினர் அட்டையையே முதல்வர் வழங்கவில்லை' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக, போயஸ் கார்டனில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் சசிகலா. பொதுக்குழுவை எங்கே நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் …
-
- 0 replies
- 440 views
-
-
'வார்தா' விளைவு: கும்மிடிப்பூண்டி முகாமில் அடிப்படை உதவிகளுக்கு ஏங்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமில் சேதமடைந்துள்ள வீடு | படம்: இரா.நாகராஜன். "எங்களுக்கு பாய், போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டிகள் கிடைத்தால் உதவியாக இருக்கும். வீடுகளை சீரமைக்க வழியின்றி தவிக்கிறோம்." 200 மரங்கள் விழுந்தன | 7 பேர் படுகாயம் | 200 வீடுகள் சேதம் வார்தா புயலினால், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 200 மரங்கள் விழுந்தன. இதனால், 7 பேர் படுகாயமடைந்தது மட்டுமல்லாமல், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அடிப்படை உதவிகளுக்காக முகாமில் வாழும் மக்கள் க…
-
- 1 reply
- 335 views
-
-
பேசும் படம்: ரஜினியை 'தலைமை'க்கு அழைக்கும் ரசிகர்கள்! பல ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு அழைப்பதை அவரது ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களின் பல்வேறு சூழல்களில் அந்த அழைப்பு அழுத்தமாகத் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், சென்னை - மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி நோக்கி அமைதி ஊர்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதையொட்டியும், ரஜினியை அரசியலுக்கு வறுமாறும் சென்னையில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர் மன்றத்தினரால் போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. "1996-க்கு பிறகு 2016 …
-
- 1 reply
- 564 views
-
-
ஜெயலலிதா உயில் சர்ச்சை இருக்கட்டும்... எம்.ஜி.ஆர். உயில் பற்றி தெரியுமா?! தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது அரசியல் வாரிசு யார் என்பதும், சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என சொல்லப்படும் சசிகலா தான் அரசியல் வாரிசு என சொல்லப்படும் நிலையில், அவரது சொத்துகளுக்கு யார் வாரிசு என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் துவங்கி அவரது சொத்துகள் யாருக்கு போகும் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஜெயலலிதா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா உயில் குறித்து தொடர்ச்சிய…
-
- 0 replies
- 810 views
-
-
பொதுச் செயலாளராக நியமிக்க தடை கோரி சசிகலா புஷ்பா எம்.பி. வழக்கு: சசிகலா, அதிமுக, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் சசிகலா | கோப்புப் படம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழியான சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும். அவருக்கு சாதகமாக கட்சி விதி களில் திருத்தம் கொண்டுவர தடை விதிக்க வேண்டும்’’ என்று அதில் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக் காக எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி கே.கல்யாணசுந்தரத்திடம் சசிகலா புஷ்பா சார்பில் மூத்த வழக் கறிஞர் கே.எம்.விஜயன் நேற்று காலை முறையீடு செய்தார். இதை யட…
-
- 0 replies
- 331 views
-
-
வர்தா புயல் வீழ்த்திய பறவைகளின் எதிர்காலம் கடந்த வாரத்தில் சென்னையை 130கிமீ வேகத்தில் தாக்கிய வர்தா புயலால் பெருமளவு பாதிப்பை மனிதர்களை விட பறவைகள் சந்தித்துள்ளன என்ற கருத்து எழுந்துள்ளது. வர்தா புயலால் தமிழகத்தில் 16 பேர் உயிரிழந்தனர்; 15,000க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வுக்கு ஆளாகினர்; ஆயிரக்கணக்கில் மரங்கள் சாய்ந்தன என்று கூறி தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.1,000 கோடி தேவை என கோரிக்கை வைத்துள்ளது. இந்த செய்திகளுக்கு பின் சென்னையில் பறவைகள் தங்களது உணவுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை பற்றி விவாதிக்கப்படவில்லை என்கிறார்கள் சூழலியலாளர்கள். புயலில், பறவைகள் இளைப்பாறுவதற்கான மர…
-
- 0 replies
- 360 views
-
-
'சசிகலாவை முன்னிறுத்தினால், அ.தி.மு.கவுக்கு ஆபத்து!' - பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த திட்டம் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. "பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வரவிடாமல் தடுப்பதற்கான சட்டரீதியான வேலைகள் தொடங்கிவிட்டன. சசிகலா எதிர்ப்பாளர்களையும் சந்திக்க இருக்கிறார் அமித் ஷா" என்கின்றனர் பா.ஜ.க. நிர்வாகிகள். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்டத் தலைமை குறித்த விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. 'மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அ.தி.மு.கவை வழிநடத்த சசிகலாவின் தலைமை அவசியம்' என சீனியர்கள் பேசி வருகின்றனர். அ.தி.மு.கவின் பொதுக்குழு கூடி புதிய தலைமையை தேர்வு செய்ய இருக்கிறது. இந்நிலையில், …
-
- 9 replies
- 2.1k views
-
-
சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா? நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும், சசிகலாவிடம் தலைமைப் பதவியை ஏற்கச் சொல்லி அவர்கள் மன்றாடியத…
-
- 0 replies
- 423 views
-
-
ரிசர்வ் வங்கி டூ சேகர் ரெட்டி! - சி.பி.ஐ வலையில் தமிழக அமைச்சர்கள் அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டைத் தொடர்ந்து, அவருக்கு பணத்தை மாற்றிக் கொடுத்த வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர். 'வருமான வரித்துறையில் பிடிபட்ட சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை சி.பி.ஐயின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. எப்போது வேண்டுமானாலும் அதிரடி நடவடிக்கைகள் பாயலாம்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம் குமார் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித…
-
- 0 replies
- 342 views
-
-
போயஸ் கார்டனுக்குள் அதிகாரிகளுக்கு நோ என்ட்ரி! - கோட்டையில் கோலோச்சும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. அதே சமயம், 'முதல்வர் மரணம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சை எழுப்புவதால், மிகப் பொறுமையாகவே காய் நகர்த்தி வருகிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, 'அ.தி.மு.கவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்' எனக் கட்சியின் சீனியர்கள் பேசி வருகின்றனர். 'இதற்காக அ.தி.மு.கவின் உட்கட்சி விதிகளையும் தளர்த்துவோம்' என நேற்று பேட்டி அளித்தார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன். "ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம், இப்போது சசிகலா…
-
- 0 replies
- 427 views
-
-
“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லையா? அப்போ அப்போலோ CCTV காட்சிகளை வெளியிடுங்கள்!” - சசிகலா புஷ்பா அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக விளம்பரப்படுத்திக்கொள்ளும் சசிகலாவை எதிர்த்தும், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் சசிகலா புஷ்பாதான் இப்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத காரியத்தைத் தைரியத்துடன் செய்திருக்கும் சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த சிறப்பு பேட்டி. ‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறீர்களே?’’ ‘‘அம்மாவின் மரணத்தில் ஏதோ ஒன்று மக்களுக்குத் தெரியக…
-
- 0 replies
- 536 views
-
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி சுப்பிரமணியன் சுவாமி. | கோப்புப் படம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து? மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த ப…
-
- 0 replies
- 314 views
-
-
பெருங்கனவோடு காத்திருந்த நான்..! ஜெ. மறைவால் பேரறிவாளன் கண்ணீர் கடிதம் ஜெயலலிதாவின் கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன் என்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் தொடக்கத்திலேயே உருக்கமாக எழுதியுள்ளார். "அழாதீர்கள் அம்மா..! உங்கள் மகன் உங்களுடன் சேரப்போகிறாரே..! கலங்காதீர்கள்..!"- என எனை ஈன்றவள் கரம்பற்றி ஒருதாயின் பரிவோடு கண்ணீர் துடைத்துவிட்ட 'அம்மா', எம்மை துயரக்கடலில் தள்ளிவிட்டு வங்கக்கடலோரம் ந…
-
- 0 replies
- 440 views
-
-
சசிகலாவிடம் கேட்க வேண்டிய 25 கேள்விகள்
-
- 5 replies
- 940 views
-
-
சென்னை அருகே கரையைக் கடக்கிறது 'வார்தா' புயல் சென்னை அண்ணாசாலை | படம்: எல்.சீனிவாசன் செயற்கைக்கோள் புகைப்படம் | 12.12.2016 காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்டது. அதிதீவிர புயலான வார்தா, இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள், தங்குமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. * திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுத…
-
- 20 replies
- 3.2k views
-
-
கெளதமி மோடிக்கு எழுதிய கடிதத்தின் முழு தமிழாக்கம்! தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிர் இழந்தார். அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணம் அடைந்த நாள் வரை பல மர்மங்கள் இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பான கேள்விகளை யாரிடம் கேட்பது என மக்கள் புரியாத நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில், ஜெயலலிதா-வுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகை கெளதமி இது குறித்து பதில் அளிக்கும் படி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்ததின் சாராம்சம் இது... ‘‘இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அவர்களுக்கு... அன்புடையீர், நான், இந்தக் கடிதத்தை ஒரு சாதாரண இந்திய பிரஜையாக எழுதுகிறேன…
-
- 13 replies
- 2.9k views
- 1 follower
-
-
இப்போதே முதல்வர் ஆகிவிட்டாரா சசிகலா? கடித சர்ச்சை! கச்சத்தீவில் புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியார் தேவாலயத்தின் தொடக்க விழாவில் தமிழக மீனவர்கள் 100 பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டிருப்பது, சசிகலா இப்போதே முதல்வர் ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவானது, இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது செல்லாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில், அவரது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கு தொடர்…
-
- 4 replies
- 894 views
-
-
‘அம்மா’ வுக்குப் போட்ட அதே 45 டிகிரி கும்பிடு! - சசிகலாவை கிடுகிடுக்கச் செய்த அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுப்பட்டதோ அதை அச்சுப் பிசாகாமல் தமிழக அமைச்சர்கள் சசிகலாவுக்கும் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவர், உயிரோடு இருக்கும் வகையில் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகவில்லை. இதனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்தக்கட்சியை யார் வழிநடத்துவது என்பதில் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் நிழலாக அவரது தோழி சசிகலா போயஸ் கார்டனில் இருந்தார். தற்போது, ஜெயலலிதாவின் இடத்தில், அதாவது அ.தி.மு.கவின் பொது செயலாளராக சசிகலாவை ஒர…
-
- 0 replies
- 602 views
-
-
“அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என பயந்தார்கள்!” உண்மைகளை உடைக்கும் தீபா ஜெயலலிதா உயிருடன் இருக்கு வரையில் அவரை சந்திக்க முயன்று தோற்றுப் போனவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ‘‘அப்போலோ தொடங்கி ராஜாஜி ஹால் வரையில் பெரிய போராட்டத்தையே நடத்திவிட்டேன். கடைசியாக அவரிடம் ஒரு வார்த்தை பேசக் கூட முடியாமல் போய்விட்டதே’’ என உருகுகிறார் தீபா. ஜூ.வி-காக அவரிடம் பேசினோம். ‘‘அப்போலோவிலே உங்களை அனுமதிக்கவில்லை. அஞ்சலி செலுத்த எப்படி போனீர்கள்?’’ ‘‘அத்தையின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தபிறகு அப்போலோவில் இருந்து கார்டனுக்கு போனேன். அங்கே நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரையில் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தேன். அத்தையைப் பார்க்கவிடவில்ல…
-
- 1 reply
- 2.4k views
-