Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பருவநிலை மாற்றத்தால் சென்னையில் பேய் மழை: - இயற்கை வழித்தடங்களை மறைத்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். விஞ்ஞானிகள் தகவல் [ சனிக்கிழமை, 05 டிசெம்பர் 2015, 07:08.39 AM GMT ] வரலாறு காணாத அளவுக்கு பெய்த பேய் மழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்ததற்கு விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய டைரக்டர் சுனிதா நாராயணன் இதுபற்றி கூறியதாவது:– பருவ நிலை மாற்றத்தால் சில இடங்களில் எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரிய அளவில் மழை பெய்ததற்கு இதுதான் காரணம். இந்திய துணை கண்டம் முழுவதுமே இது போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்திய நகரங்களில் இயற்கையான நீரமைப்ப…

  2. விமானங்களில் விஷ ஜந்துக்கள்: "சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் துவங்க காலதமாதமாகும்" சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார். விமான நிலையத்தின் ஓடுத்தளங்களில் வெள்ளம் வடிந்துள்ளபோதும், அதன் முழுமையான பாதுக்காப்புத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே சேவைகள் தொடங்கப்படும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்களில், பாம்புகள் உள்ளிட்ட எண்ணற்ற விஷப்பூச்ச…

  3. சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன? சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது. விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான…

  4. கர்நாடக அரசின் ரூ. 5 கோடி நிதியுதவியை தமிழக அரசு மறுத்தது சரிதானா? சென்னை/பெங்களூரு: ஒருபுறம் கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 5,000 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மறுபுறம் கர்நாடக அரசு அளிக்க முன்வந்த 5 கோடி ரூபாய் நிதியுதவியை பெற மறுத்துவிட்டதாக வெளியாகி உள்ள தகவல் பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. கடந்த 10 தினங்களுக்கும் மேலாக பெய்து வந்த கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. சென்னையின் பல இடங்களில் மழை வெள்ளம் இன்னும் வடியாமல் பல்லாயிரக்கணக்கானோர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகி…

  5. சென்னையின் நுழைவாயில் சைதாப்பேட்டையின் "மறைமலை அடிகள் பாலம்" இன்றைய (02-12-2015) மழை வெள்ளத்தால் மூழ்கும் அபாயம்! மூன்று வருடத்திற்கு முன் இப்பாலம்.. இன்று இப்பாலம்..

  6. சென்னை விமான நிலையம் பகுதி அளவில் திறக்கப்படுகிறது கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம், பகுதி அளவில் சனிக்கிழமை(5.12.15) முதல் செயல்படத் தொடங்கும் என தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்ஸா கூறியதாக பிடிஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளத்தால் சென்னை விமான நிலையம் சுமார் ஒரு வாரம் மூடப்பட்டது சனிக்கிழமை காலை முதல், சென்னை விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனை முறையில் விமானப் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ஆகியவை முன்னெடுக்கப்படும் எனவும், முதல் கட்டமாக நிவாரண உதவிகளை கொண்டு வரும் விமானங்களே தரையிறக்கப்படும் எனவும் தேசிய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூற…

  7. நிவாரண பொருட்களை பறித்து ஜெயலலிதா ஸ்டிக்கர்... ஆளுங்கட்சியினரின் அராஜகம்! கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தமிழகத் தலைநகர் இத்தகைய இடர்பாட்டினை எதிர்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல்விட்ட அரசு, நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ள…

  8. சென்னையில் மீண்டும் மழை: மக்கள் அதிர்ச்சி! சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், மாடிகளிலும், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், பெரும்பாலான பகுதிகளிலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன…

  9. வெள்ளத்தால் மின்வெட்டு? சென்னை தனியார் மருத்துவமனையில் 14 பேர் பலி ( காணொளியின் சில பகுதிகள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்) சென்னையில் 14 நோயாளிகளின் சடலங்கள், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து, ராயப்பேட்டை அரச மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. கடும் வெள்ளம் காரணமாக மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவுக்கு மின்சார விநியோகம் இல்லாத காரணத்தினாலேயே, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த சிலர் இறந்துவிட்டதாக, இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். சென்னை மியாட் மருத்துவமனையிலிருந்து அந்த சடலங்கள் கொண்டுவரப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் மியாட் மருத்துவமனையின் அதிக…

  10. இளம் நடிகர்களின் கள நிவாரணப் பணிகளும் கமல்ஹாசனின் ஜன்னலோர வேடிக்கையும்! சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, கமல்ஹாசன் | கோப்புப் படம் சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல இளம் திரையுலக பிரபலங்கள் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி இரவு, பகல் பார்க்காமல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கமல் ஒரு பேட்டியில் ''ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார். நடிகர்களின் களப் பணி …

  11. சென்னை புறநகரில் ஒரேநாளில் வெள்ளத்தில் மிதந்த 98 சடலங்கள் மீட்பு.... சென்னை: வெள்ளம் மூழ்கடித்த சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 98 சடலங்கள் மீட்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர், கிழக்கு தாம்பரம், முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்கள்தான் பெருமளவு வெள்ளத்தால் இன்னமும் மூழ்கியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் 30,000 கன அடி நீர் திறக்கப்பட ஒட்டுமொத்தமாக முடிச்சூர், மேற்கு தாம்பரம் பகுதிகளை அப்படியே மூழ்கடித்தது. இந்த வெள்ள நீர் அடையாற்றின் மூலம் கடலுக்கு செல்வதால் சென்னையின் பல பகுதிகளிலும் வெள்ள…

  12. சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளிக் குழந்தைகளை மீட்கும் பணியில் இசையமைப்பாளர் இளையராஜா ஈடுபட்டார். அந்த குழந்தைகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சென்னையில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தி வருகின்றனர். மீட்பு பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காவல்துறையினர், ராணுவம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல தமிழ்ப்பட இசையமைப்பாளர் இளையராஜா நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டு அருகே லிட்டில் ஃப்ளவர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த குழந்தைகள் வெளியே வர முடியாமல் சிக்க…

    • 1 reply
    • 464 views
  13. மக்கள் கொந்தளிப்பு: ஜெ. தொகுதியில் "நத்தம்" உட்பட அமைச்சர்கள் ஓட்டம்! அதிமுக செயலருக்கு சரமாரி அடி!! சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் மழைவெள்ளத்தில் சிக்கிய தங்களை உடனே மீட்காதது ஏன் என பொதுமக்கள் கொந்தளித்ததால் எந்த நேரத்திலும் தாக்கப்படக் கூடும் என அஞ்சி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, செல்லூர் ராஜூ ஆகியோர் தப்பி ஓடியிருக்கின்றனர். புழல் ஏரியில் அதிக அளவு திறந்துவிடப்பட்டதால் வடசென்னை முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி தருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டுவிட்டு 'அகதி'களைப் போல வெளியேறி வருகின்றனர். தென்சென்னையில் மேற்கொண்டதைப் போல முழு அளவில் மீட்புப் பணிகள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை என்ற கொந்தள…

  14. மழை கொடுமையைவிட இவிங்க கொடுமை பெருங்கொடுமை! சென்னை: தமிழக தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், பல சடலங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவர் நெல்லையில் வைத்துள்ள கட்-அவுட் மக்களின் கடும் கோபத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் என்பவர் வைத்துள்ளதாக கூறி ஒரு கட்-அவுட் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த கட்-அவுட்டில், நீரில் மூழ்கியபடி ஜெயலலிதா ஒரு குழந்தையை தனது கையில் பிடித்து நீரில் மூழ்காமல் காப்பது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளது. அந்த குழந்தைதான் தமிழகம் என்ற அர்த்தத்தில், அந்த கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி…

  15. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விமானம்; பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மக்கள் பல்வேறு துயரங்களை எதிர் கொண்டுள்ளனர். இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பஸ் போக்குவரத்து, ரயில் போக்குவரத்துக்கள் உட்பட விமான சேவைகளும் முடங்கியுள்ளன. அத்துடன் தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் டிசம்பர் 6-ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மீனம்பாக்கத்தில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்ப்ஸ்ட்ரீம் விமானம், பல அடி தூரம் வெள்ளநீரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளத…

  16. சென்னையில் படிப்படியாக வெள்ளம் வடியத் தொடங்கியது... ஆனாலும் மழை தொடர்கிறது சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அடையாற்றில் வௌ்ளம் குறையத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஜாபர்கான் பேட்டை, கேகேநகர், சிஐடிநகர் , அ.சோக்நகர் சைதாப்பேட்டை பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வடியத்துவங்கியுள்ளது. எனினும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் சிக்கல் உருவாகியுள்ளது. சென்னையில் திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளநீர் ஆறுகளில் கட்டுக்கடங்காமல் பாய்ந்து குடியிருப்புகளை கபளீகரம் செய்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் ப…

  17. போதும் மழையே.. பொறுத்தருள்வாய்! - மன்றாடும் படங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் முற்றிலும் மூழ்கிப்போன குடியிருப்புகள். | படங்கள்: காஞ்சி கோ.கார்த்திக் செங்கல்பட்டு நீஞ்சல் மடுவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மகாலட்சுமி நகர் பகுதியில் முதல்மாடியை நெருங்கி வரும் வெள்ளநீர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர்-தேவாதூர் கிராமத்தில் விவசாய நிலங்களை மூழ்கடித்த வெள்ளம். கொளவாய் ஏரியின் வெ…

  18. சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை லட்சுமி படகு மூலம் மீட்பு சென்னை: சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்த சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தற்போது மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று வேறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பார்க்கும் இடம் எல்லாம் வெள்ளமாக உள்ளதே இதில் மேலும் மழை பெய்தால் நாம் எல்லாம் என்ன செய்வது என்று சென்னை மக்கள் கவலையில் உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்…

  19. தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.64 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.அதன்பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில், வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே, கன மழை பெய்யும் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். …

  20. சென்னையில் நிர்வாகமே இல்லை.. மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல் காரசார கேள்வி சென்னை: வெள்ள நிவாரணத்திற்காக மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது அரசு, இதுவரை வரியாய் செலுத்திய மக்கள் பணம் எங்கேபோனது என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை. சென்னைக்கே இந்த நிலை சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின்…

  21. அரக்கோணத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்! சென்னை: மழை வெள்ளம் காரணமாக கடந்த இரு தினங்களாக நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்து நாளை (4-ம் தேதி) அரக்கோணத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால், வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக நேற்று (2-ம் தேதி) சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இன்று ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடற்கரையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையும் நாளை (4-ம் தேதி) முதல்…

  22. தமிழகத்திற்கு மேலும் ரூ. 1000 கோடி நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு! சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மேலும் 1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வ…

  23. தங்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சென்னையை ஒட்டிய ஏரிகளின் மதகுகளைத்திறந்துவிட்டதாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் சென்னைவாசிகள் புகார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் சென்றடையவில்லை என்றும் விமர்சனம் https://www.facebook.com/bbctamil/videos/10153130219990163/?pnref=story

  24. சென்னை வெள்ளம் : பெருமளவிலான மீட்பு நடவடிக்கைகள் துவங்கின சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான மிகப்பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தினரால் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகுகள் மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டுச்செல்லும் பணியில் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கான ரயில் சேவைகளும் பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவி…

  25. 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் l டெல்லி: அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் ராத்தோர் கூறுகையில், "அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர தமிழக பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் உள்ளிட்ட தெற்கு பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு மழை தாக்கம் குறையும். இருப்பினும், மழை முற்றாக நிற்காது. 6 நாட்களாவது மழையின் தாக்கம் தொடரும்". இவ்வாறு அவர் தெரிவித்தார். அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. Read more…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.