தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்கக் கோரும் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். வரும் 25-ம் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ராஜீவ் கொலை குற்ற வழக்கில் 25-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவ…
-
- 0 replies
- 504 views
-
-
தமிழர் விரோத போக்கு... உங்க ஓனரே வந்தாலும் பேட்டி தர முடியாது: "டைம்ஸ் நவ்"க்கு வைகோ பதிலடி!! விருதுநகர்: தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதால் டைம்ஸ் நவ் ஆங்கில சேனலுக்கு பேட்டியளிக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் மதிமுக ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்துள்ள தகவல்: வைகோ நேற்று விருதுநகரில் இருந்து சூரன்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இடையில் வழிமறித்த டைம்ஸ் நவ், பத்திரிகை பெண் நிருபர் வைகோவிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பேட்டியளிக்க வைகோ மறுப்பு தெரிவித்துவிட்டார். தொலைக்காட்சி உரிமையாளரே வைகோவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள…
-
- 0 replies
- 875 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் வெளியாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்று வரும் மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் 25 ஆம் திகதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். …
-
- 0 replies
- 470 views
-
-
சென்னை: பணத்திற்காக கட்சியை கார்த்திக் விற்றுவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ள அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியினர், கார்த்திக்கைவிட கருணாஸ் சிறந்த சமுதாய தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளனர். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ''நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் இருந்து நாங்கள் பணியாற்றியது சமுதாய மக்களை திறம்பட வழி நடத்துவதற்காதான். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினோம். அதில், எங்கள் கட்சிக்கு ஒரு இடம் கொடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை முன்வந்தது. ஆனால், நிற…
-
- 5 replies
- 1k views
-
-
சென்னை: ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. …
-
- 0 replies
- 571 views
-
-
புலிகளை அழித்ததால் இந்தியாவுக்கு என்ன லாபம்??
-
- 0 replies
- 1.1k views
-
-
நடிகர் ரஜினிகாந்தை, வீட்டில் சந்தித்தார் நரேந்திர மோடி!! சென்னை: சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக நரேந்திர மோடி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியைச் சந்திக்கத் தவறுவதில்லை. தமிழக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்றவர்கள், ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினியின் ஆதரவு எங்களுக்கே என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை தந்தார். கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானத்…
-
- 14 replies
- 1.6k views
-
-
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று மீண்டும் மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான். 160 அடி ஆழம் குழந்தை சுஜித் விழுந்துள்ள ஆள்துளை கிணறு அமைந்துள்ள இடம் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த ஆழ்துளை கிணறு 160 அடி ஆழம் உடையது என்றும், குழந்தை சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ள நிலையில், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்…
-
- 0 replies
- 393 views
-
-
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே 400 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். மாலை 4 மணிக்கு சிறுவன் மீட்பு மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் (ரோபோ) மூலம் சிறுவன் மாலை 4 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக சங்கரன்கோவில் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டான். சிறுவன் மீட்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கருணாகரன், "மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு எந்திரம் மூலம் சிறுவன் மீட்கப்பட்டான். தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புப்பண…
-
- 5 replies
- 1.7k views
-
-
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசியுள்ளார். கடந்த 6ஆம் தேதி நடந்த இந்த சந்திப்பு குறித்த படத்தை ம.தி.மு.க தற்போது வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று மாலை பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த 24 மணி நேரத்திற்குள் ரஜினிகாந்த்தை வைகோ சந்தித்து பேசியதாக ம.தி.மு.க இரண்டு பேர் ஒன்றாக இருக்கும் படத்தை இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இல்லம் சென்றார் என்றும், அப்போது, ரஜினிகாந்த், வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு …
-
- 0 replies
- 477 views
-
-
இதற்கு மேலும் பேசினால்..; கருணாநிதிக்கு வைகோ எச்சரிக்கை! கூட்டணி என்பதற்காக எல்லாவற்றுக்கும் உடன்பட்டு போக மாட்டோம். எங்கே உடன்பட வேண்டுமோ அங்கே மட்டும் உடன்படுவோம் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து வைகோ சனிக்கிழமை பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நமக்கான நீதி கிடைக்கும். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, இலங்கையுடனான மீனவர் பிரச்சினை என பல்வேறு …
-
- 1 reply
- 577 views
-
-
வேலூர்: வேலூரில் நேற்று 106 டிகிரிக்கு வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர். வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதி வெயில் 100 டிகிரியை தாண்டியது. பின்பு படிப்படியாக வெயிலின் அளவு 104 டிகிரி உயர்ந்தது. நேற்று காலை முதலே வெயில் கடுமையாக இருந்தது. அனல் காற்று மக்களை திணற வைத்தது. நேற்றைய வெயில் அளவு 106.3 டிகிரி. மாலை வரை வெயில் கொளுத்தியதால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதற்கிடையில் அங்கு அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக மேலும் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் மூடியபடியு…
-
- 0 replies
- 473 views
-
-
அலை செய்திகளின் புதிய முயற்சியாக மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு விவாதக்களம் ! மாணவர்கள் பங்கேற்ற இந்த விவாதக்களத்தில் தொலைக்காட்சியில் பேச முடியாத பல விடயங்கள் இதில் அலசப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் அரசியல் அறிவை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு மாணவர்கள் மிக நேர்த்தியாக தங்கள் பதிலை முன்வைத்து உள்ளனர். ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் ஆய்வாளருக்கு நிகராக மாணவர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். தமிழக அரசியல், இந்திய அரசியல், சர்வதேச அரசியல் என அனைத்து மட்டங்களிலும் மாணவர்கள் தங்கள் பார்வையை அகலப்படுத்தி உள்ளனர் என்பதற்கு இந்த காணொளியே சான்று . இதில் மாணவர்கள் பேசிய தலைப்புகள் வருமாறு ௧. காங்கிரஸ் வீழ்ச்சி மற்றும் அரசியல…
-
- 0 replies
- 813 views
-
-
லோக்சபா தேர்தல் பிரசாரத் திற்காக, இன்று மாலை, சென்னை வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர். ரஜினி வீட்டில் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார். மோடி வருகை, ரஜினி சந்திப்பு காரணமாக, தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் உள்ள கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., - புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக பா.ஜ., வலியுறுத்தல்: இந்த கட்சிகள் சார்பில், 39…
-
- 0 replies
- 661 views
-
-
தமிழ் இனத் துரோகிகளைத் தோற்கடியுங்கள்! தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு... ஓவியர் வீர சந்தானம் வேண்டுகோள்! அன்புமிக்க தமிழக மக்களே! எதிர்வரும் 24.04.2014ஆம் நாள் இந்தியநாடு தனது 16-ஆம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. நமது தமிழ்நாட்டில் அந்தத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்து அதன் அடிப்படையில் வாக்குவேட்டைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் இந்தத் தேர்தலில், நமது தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாக இருக்கும் புதுச்சேரியிலும் யார் யாருக்கு வாக்களித்து அவர்களை நாடாளுமன்றத்திற்கு, அனுப்பப் போகிறோம் என்பதில் நாம் மிக மிக கவனமாக, மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. யார் யார் வெற்றிபெற வேண்டும் எ…
-
- 1 reply
- 489 views
-
-
தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான்! டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் ஜெயந்தி நடராஜன்தான். அவருக்கு அடுத்த பெரிய பணக்காரர் ப.சிதம்பரம். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வாங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகி, ரூ. 10.73 கோடியாக காட்டப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற மத்திய அமைச்சர்களின் சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர…
-
- 1 reply
- 424 views
-
-
புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர். அவருக்கு மாலை அணிவித்து உற்சாகப்படுத்தி, தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும் தொண்டர்கள் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், அடையாளம் தெரியாத ஒரு நபர், கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்தபடியே, 'பளார்' என்று அவரது கன்னத்தில் இரண்டு …
-
- 5 replies
- 648 views
-
-
மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய யாருடனும் 'கை' குலுக்க தயார்: கருணாநிதி. சேலம்: நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய யார் கை கொடுத்தாலும் அவர்களோடு கை குலுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: கருணாநிதி தனியாக நிற்கிறார்; அவரை கைவிட்டு விட்டனர் என சிலர் கூறுகின்றனர். யாரும் என்னை கைவிடவில்லை. எதிர்காலத்தில் நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களை கை குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன். ஜாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளோடு சிறுபான்மையின மக்களுக்கு …
-
- 3 replies
- 968 views
-
-
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தியாகதுருகம் அருகே உள்ள பள்ளகசேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை ஆகியோரின் 3 வயது மகள் மதுமிதா. இன்று காலை 9 மணிக்கு ராமச்சந்திரன் தனது மகள் மதுமிதாவுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தோட்டத்தில் மதுமிதா விளையாட சென்றுவிட்டார். ராமச்சந்திரன் தனது வேலையை பார்க்க சென்று விட்டார். மூடப்படாத ஆழ்துளை கிணறு இந்நிலையில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மதுமிதா, மூடப்படாத நிலையில் இருந்த 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். மகளின் அலறல் சத்தம் கேட்டு ராமச்சந்திரன் ஓடிவந்துள்ளார். மகள் ஆழ்து…
-
- 3 replies
- 692 views
-
-
காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழருவி மணியன் திறந்த மடல்! காலம் முழுவதும் கொடிகள் கட்டியும், சுவரொட்டி ஒட்டியும், மேடை போட்டும், கோஷங்கள் இட்டும் களைத்துப்போய்விட்ட என் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களுக்கு… வணக்கம்! கர்த்தர் தன்னுடைய சீடர்களுக்குக் கதைகள் சொல்லி உண்மையை விளக்கினார். பரமஹம்சர் கதைகளின் மூலமே பரம்பொருள் தத்துவத்தை எளிதாக உணர்த்தினார். நானும் முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல முயல்கிறேன். ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஓர் அந்தரங்க ஊழியன் பக்கத்திலிருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சில நாட்களாக அரசன் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்திருப்பதைக் கண்டு, அதற்கான காரணம் கேட்டான் அந்த உண்மை ஊழியன். ‘சகல சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய ஓர் இளைஞனின் அழகான ம…
-
- 2 replies
- 759 views
-
-
ராஜீவ் கொலை வழக்கு-சில நியாயங்கள்! சில தர்மங்கள்! ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும் அவர்களின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. கூடுதலாக தண்டனை அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களுடன் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையிலிருப்பவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததையும் அதன்…
-
- 0 replies
- 644 views
-
-
சென்னை: தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதே இந்தநிலை என்றால் கடும் கோடை ஏப்ரல், மே மாதங்களில் வாய் நனைக்கக் கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். வழக்கமாக கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பஞ்சம் இந்த ஆண்டு இப்போதே தலை தூக்கிவிட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஆறுகள், ஏரிகள் வற்றிப் போய் விட்டன. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் குடிநீருக்கு மக்கள் அல்லல் படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 912 செமீ மழை பெய்ய வேண்டும். வானிலை மாற்றம் காரணமாக …
-
- 1 reply
- 1.6k views
-
-
White Tigers in Vandalur Zoo வெள்ளை புலிகளின் தாயகம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளாகும். வெள்ளை புலிகளும் சாதாரணமாக காடுகளில் காணப்படும் வங்கப்புலி இனமும் ஒரே இனம் தான். ஆனால் மரபணு நிற குறைபாடு காரணமாக வெள்ளை புலிகள் உருவாகின்றன. இந்திய பூங்காக்களில் சுமார் 100 வெள்ளை புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை பெண் புலியுடன் மஞ்சள் நிற புலி (வங்கப்புலி) கலப்பின சேர்க்கையால் கர்ப்பம் அடைந்த வெள்ளைபுலி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 அழகான புலி குட்டிகளை ஈன்றது. ஆனால் வெள்ளை பெண் புலிக்கு பிறந்த குட்டிகள் இரண்டும் மஞ்சள் நிறத்தில் இருந்ததால், இந்த குட்டிகளுக்கு தாய் வெள்ளை புலி பால் தராமல் ஒதுக்கி வைத்…
-
- 0 replies
- 766 views
-
-
விருதுநகர்: மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது இரு கட்சியினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சியினரும் மாறி மாறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். விருதுநகரில் பா.ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அதுபோல் அதிமுக சார்பில் சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை இருவரும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தனர். இதையடுத்து வைகோவுக்கு காலை11 மணிக்கும், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு …
-
- 0 replies
- 610 views
-
-
டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் ஜனவரி 18ல் தீர்ப்பு அளித்திருந்தது. கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு செய்ய பல ஆண்டுகள் ஆனதால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=85794
-
- 2 replies
- 691 views
-