Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: கடற்கரையோரங்களில் தோரியம் என்னும் தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை, அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சத்தியமங்கலம்- மைசூர் இடையே ரயில் போக்குவரத்திற்கு அனுமதித்தால் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்படும…

  2. பெங்களூர்: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை உடனே தொடரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணையின் முடிவில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா நியமித்துக் கொள்ள அனுமதித்தது. இந்த நிலையில் தம் மீதான வழக்கு விசாரணையை உடனடியாக தொடரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக…

  3. Started by SUNDHAL,

    ”மதச்சார்பற்றவர் என்று கலைஞர் சொல்லிக்கொண்டு ரம்ஜானுக்கு மட்டும் நோன்புக்கஞ்சி குடிக்கிறாரே? பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை சாப்பிடத் தயரா?” என்று இந்துமுன்னணி இராம. கோபாலன் ஒருமுறை சவால் விட்டார். “இராம. கோபாலன் கொடுத்தால் கொழுக்கட்டை சாப்பிடத் தயார்” என்று கலைஞர் பதிலளித்தார். அடுத்து வந்த விநாயகர் சதுர்த்தியின்போது இராம. கோபாலன் கொழுக்கட்டையோடு அறிவாலயம் சென்றார். கலைஞரும் ஒரு பிடி பிடித்தார். :d

  4. நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். இந்த ரயில் நிலையங்கள் ரயில்வேதுறைக்கு வரும் வருமான அடிப்படையில் தற்போது ஏ கிரேடு ரயில் நிலையமாக உள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையம் மூலம் ரயில்வேதுறைக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் 26 கோடி 27 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. http://tamil.oneindia.in/news/2013/09/08/tamilnadu-nagerkovil-railway-station-extension-works-are-stagnant-183011.html

  5. சென்னை: ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அனுசரணையாக இல்லாமல் இலங்கைக்கே மத்திய அரசு அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவி…

  6. இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது.மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு. ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தத் தமிழ்ப் பதிப்புக்கு காமதேனு என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஒருபேச்சு உலவுகிறது. ஆனால் இந்தப்பெயர் மக்களிடம் எடுபடாது என்று இன்னொரு பேச்சும் அடிபடுவதால் அதிகாரப்பூர்வமாக தனது பெயரை இன்னும் அறிவிக்காமல்உள்ளது ஹிந்து. புதன்கிழமையன்று ஹிந்துவில் இந்தப் பத்திரிக்கை குறித்த விளம்பரம் வெள…

  7. இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கினால் தமிழகம் கொந்தளிக்கும் : ராமதாஸ் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக இரு போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போர்க் கப்பல்கள் வரும் 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிவடைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் வீடின்ற…

  8. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால், தமிழ்நாட்டில் உள்ள செய்யூர் அனல் மின் நிலைய பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. -இந்திய சுற்றுச் சூழல் அமைச்சர் செயந்தி நடராசன் - தமிழ்நாட்டிலிருந்து வெற்றிபெற்று மத்திய அமைச்சரானவர்.. செய்யூர் மின் நிலையத்திக்கு அனுமதி கிடைத்து விட்டால் மொத்தம் 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ( தமிழ்நாட்டிக்கு வெறும் 1600 மெகாவாட் தான்.),.... அது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் இன்னும் அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார்..... - இத்தனை அதிகாரமிக்க செயலலிதா என்ன செய்யவேண்டும்??? சுற்றுச் சூழல் அமைச்சர் செயந்தி நடராசனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவேண்டும்.. அவர் வீடு , அலுவலகம் முன்பாக தொடர் போராட்டங்கள் நட…

  9. சென்னை: சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்யூட்டர்களுடன் லாரி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை இரவு 2 கண்டெய்னர் லாரிகளில் கம்ப்யூட்டர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஒரு லாரியில் மட்டும் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் இருந்தன. இவைகளை மாதவரத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவரம் பால்பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் சந்திப்பில் டிரைவர் லாரியை நிறுத்தி வைத்திருந்தார். வியாழன்று காலையில் இந்த லாரியை திடீரென காணவில்லை. டிரைவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை. இது பற்றி மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாயமான கண்டெய்னர் லாரிய…

  10. நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல். கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன - குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வெள…

  11. நாகர்கோவில்: தே.மு.தி.க.வில் இருந்து விலகிய ஆஸ்டின், கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின் தேமுதிகவில் மாநில துணைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார். 2009-ல் லோக்சபா தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். 2011-ல் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டும் தோற்றார். தேமுதிகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கட்சிட்க் பணிகள் எதிலும் ஈடுபடாமல் விலகி இருந்து வந்த ஆஸ்டின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலானவர்கள் தி.மு.க.வில் சேர வலியுறுத்தினர்…

  12. சென்னை: சென்னை விமானநிலையத்தின் சரக்கு குடோனில் பயங்கர கதிர்வீச்சு கருவி ஒன்று 5 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகில் சரக்கு விமான போக்குவரத்து அலுவலகம் மற்றும் குடோன் உள்ளது. அங்கு உயிருக்கு உலை வைக்கும் பயங்கர கதிர் வீச்சு கருவி ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருவி அங்கு இருந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த விமான நிலைய எல்லைக்குள் இந்த கருவி ‘கார்கோ' பகுதியில் நீண்ட காலமாக யாரும் எடுத்து செல்லாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி விமான நிலைய அதிகாரிகளுக்கோ, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கோ தெரிவிக்கவில்லை. சென்னை விமான நிலையம் பாதுகாப்பு எச்சரிக்கையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சயத்தில் கதிர்வீச…

  13. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் கடலில் சங்கு குளிக்கவும், கச்சத்தீவில் அபூர்வ செடி, கொடிகளை எடுத்துக் கொள்ளவும் கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த குத்தகை ஆவணங்களை, ராமநாதபுரம் மன்னரின் வாரிசு தமிழக அரசுக்கு அனுப்பினார். ராமேசுவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சின்னஞ்சிறிய கச்சத்தீவு. இந்தியாவிடம் இருந்து பெற்ற இந்த தீவுப்பகுதியில் இந்திய மீனவர்களையே மீன்பிடிக்க விடாமல் இலங்கை அடாவடி செய்து வருவதால், கச்சத்தீவு பிரச்சினை இப்பொழுது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு பூர்வீக பாத…

  14. சென்னை: காவிரி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் அணைகள் நிரம்பி உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரினால் மேட்டூர் அணை நிரம்புகிறது. இவ்வாறு உபரிநீராக தமிழகத்திற்கு திருப்பி விடப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அரு…

  15. சென்னை: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, கலியுக மணிமேகலை என திமுக தலைவர் கருணாநிதி சொன்னாலும் சொன்னார், ஃபேஸ்புக், டுவிட்டரில் கமெண்ட் போட்டு தாக்குகின்றனர். சிலப்பதிகார காப்பியத்தில் கோவலன்- மாதவிக்கு பிறந்தவர் மணி மேகலை. துறவரம் பூண்டு மக்களின் பசியை போக்க ஆண்டனை வேண்டிய காரணத்தால் மக்களின் பசியை போக்கும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அமுதசுரபி மணிமேகலைக்கு கிடைத்தது. அதன் மூலம் அனைவருக்கும் உணவு அளித்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோடிட்டு காட்டியுள்ளார். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை மணிமேகலையோடு ஒப்பிட்டு பாராட்டுவதா என்று கொதித்த இணைய போராளிகள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் தோராணங்களால் கட்டி தொங்க விடுகின்றனர் சாம…

    • 2 replies
    • 3k views
  16. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்றவற்றை வகுப்பறைக்கு அணிந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது என்று டி ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து வரவேண்டும். மாணவிகள் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் ஷர்ட் அணியக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று உத்தரவில…

  17. தமிழக முதல்வரின், போயஸ் கார்டன் வீடு அருகில் சுற்றித் திரிந்த, இலங்கைப் பெண்ணை, பாதுகாப்புப் பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் கார்டன் பகுதியில், நேற்று முன்தினம், 53 வயது பெண் ஒருவர், சுற்றிக் கொண்டிருந்தார். மாலையில் அவர், முதல்வர் வீடு அருகில் வந்தார். அப்போது திடீரென பாதுகாப்பு போலீசாரை மீறி, முதல்வர் வீடு இருக்கும் பகுதியில் நுழைய முயன்றார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பெண்ணைப் பிடித்து, தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர், இலங்கை, கொழும்பு, முகமதியாபுரம், மண்டல் பட்டு ரோட்டைச் சேர்ந்த, பரிமளா காந்தி, 53, என்பது தெரியவந்தது. இலங்கையில் இருந்து, கடந்த ஜூ…

  18. கோவை: கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தன. 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. கூடவே சூறாவளியும் கைகோர்த்துக்கொண்டது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை பெய்த கனமழை காரணமாக கொடுங்கு பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் 5 மீட்டர் தூரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 கிராம மக்களும் தங்கள் கிராமங்களுக்குள் முடங்கும் நிலை ஏற்ப…

  19. டெல்லி: கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தமானது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளதாக ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்தார். கச்சத்தீவு பிரச்னை குறித்து ராஜ்யசபாவில் இன்று மைத்ரேயன் பேசினார். அப்போது அவர், 1974 ஆம் ஆண்டு ஜூன் 26ல் கச்சத்தீவு இலங்கையிடம் அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி- இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது என்றும் மைத்ரேயன் கூறினார். இந்திரா காந்தி- ஸ்ரீமாவோ ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்று கூறிய மைத்ரேயன், கச்சத்தீவை இலங்கையிடம் அளித்தது தொடர்பாக அரசியல் சட்ட திருத்தமும் செய்யப்படவில்லை என்றார். எனவே கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க ம…

  20. டெல்லி: வாசன் கோஷ்டிக்கு 15 சீட், ப.சிதம்பரம் கோஷ்டிக்கு 8, தங்கபாலுவுக்கு 5, இளங்கோவனுக்கு 3, நாராயணசாமி சொல்லும் நபருக்கு 1, குலாம் நபி ஆசாத் கோட்டாவுக்கு 2... இப்படித்தான் தேர்தல்களில் தமிழக காங்கிரஸ் கட்சியில் சீட் ஒதுக்குவார்கள். ஆனால், இந்த கோட்டை சிஸ்டத்துக்கு முடிவு கட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளாராம். ஒழுங்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ராகுல் காந்தி, சட்டமன்ற- நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட விண்ணப்பிக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு 5 பக்க கொஸ்டீன் பேப்பரைத் தரச் சொல்லியிருக்கிறாராம். அதில், போட்டியிட விரும்புவோரின் சுய அறிவு, தொகுதி குறித்த அறிவு, பொது அறிவு ஆகியவற்றை சோதிக்கும் கேள்விகளு…

  21. சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகர், சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என்று பன்முகம் கொண்ட அனிதா குப்புசாமி, அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தற்போது ஜெயா டிவியில் சமையல் தொடர்பான நிகழ்ச்சியி்ல அனிதா குப்புசாமி பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். நாட்ட…

  22. சென்னை: ஈரோட்டிலும், தஞ்சாவூரிலும் புதிய ரயில்வே போக்குவரத்து மேம்பாலங்களைக் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய மேம்பாலங்கள் அங்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெருமளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது... தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் பல இடங்களில், ரயில்வே இருப்புப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ் பாலங்கள் இல்லாத இடங்களில், வாகனங்கள் ரயில்வே கடவுகளில் அதிக நேரம் காத்திருந்து பயணங்களை தொடர வேண்டியுள்ளதால், பயண நேரம் அதிகமாதல், காலவிரயம் ஏற்படுதல், எரிபொருள் விரயம் மற்றும் விபத்துகள் ஏற்படுக…

  23. சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றாமல் கைவிட்டால், நாம் அவர்களைக் கைவிடும் நிலை ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் பொன்விழா நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு கருணாநிதி ஆற்றிய உரை...: சேது சமுத்திரத் திட்டம் ரூ.2,457 கோடியில் தொடங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இந்தத் திட்டம் நிறைவேறும் சூழலில், முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். இது தமிழர் நலன் மீது அக்கறை உள்ள செயல் இல்லை. ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய அரசு இன்னும் இ…

  24. ஈரோடு: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோ்டில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படிப் பேசினார் ஈவிகேஎஸ். அவர் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. நேரு பிரதமராக இருந்ததில் இருந்து இன்று வரை இலங்கை தமிழர்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பாடுபடுகிறது. தற்போது கூட இலங்கையில் தமிழர்கள்…

  25. சென்னை: கச்சத்தீவு குறித்த மத்திய அரசின் பிரமாணப்பத்திரம் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத்தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.