Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: கச்சத்தீவு குறித்த மத்திய அரசின் பிரமாணப்பத்திரம் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத்தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது; அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒ…

  2. புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவனுக்கு, குற்றம் நடந்தபோது 17 வயது என்ற காரணத்தால், அவனுக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதித்துள்ளது போதுமானது அல்ல என்று அம்மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த மாணவியின் சகோதரர், குற்றவாளி மீது நீதிமன்றம் மிகவும் கனிவாக நடந்துகொண்டுள்ளதாகவும், இந்த தண்டனை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார். "எனது சகோதரி இறந்ததை நான் பார்த்தேன். சிறுவன் என குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த குற்றவாளிதான் எனது சகோதரியிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டான். அவள் தினமும் ஆயிரம் முறை செத்…

  3. சென்னை: சென்னை சேலையூரில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதாக தொடர்ப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் இருவரை தேடிவந்ததாகவும் அவர்கள் இருவரும் சேலையூரில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்றும் சென்னை போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://tamil.oneindia.in/news/2013/08/31/tamilnadu-2-…

    • 2 replies
    • 448 views
  4. உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தில் மாணவர்களின் சைக்கிள் பரப்புரை பயணம். மார்ச் மாத போராட்டத்தின் போது திருச்சியில் காங்கிரஸ் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கிய இடத்திலிருந்து சென்னை நோக்கி 50 மாணவர்கள் 10 நாள் பரப்புரை பயணம். பயணத்தின் முடிவில் 50 சைக்கிள்களும் புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி முகாம் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும். பயண மற்றும் சைக்கிள் செலவுகளுக்கு நிதி திரட்ட, உணர்வாளர்கள் அனைவரின் பங்கு இருக்க வேண்டி வரும் ஞாயிறு செப்.1ம் தேதி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய 'உச்சிதனை முகர்ந்தால்' சிறப்புக்காட்சி திரையிடப்படும். இடம் : சென்னை ஆல்பர்ட் திரையரங்கம். நேரம் : காலை 8:45. டிக்கெட் விவரங்களுக்கு : 91 500 400 91 மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொ…

  5. சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்.. அதற்காக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் இன்று அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ போஸ் ஆகியோரது இல்ல திருமணங்களை நடத்தி வைத்தார் ஜெயலலிதா. இந்த திருமண நிகழ்ச்சியில்ஜெயலலிதா பேசியதாவது: எந்த அரசியல் இயக்கமும் கடைபிடிக்காத அளவுக்கு குடும்பப் பாசத்துடன் கட்சியை கட்டிக் காப்பாற்றியவர் பேரறிஞர் அண்ணா. இதனை பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பின் இன்று வரை கட்டிக் காக்கின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். இங்கு நடைபெறுவது கழகக் குடும்பங்களின் விழா. பல்வேறு…

  6. சென்னை: ஐ.நா. வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளைக் கண்டு அறிய, தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, கொடுந்துயருக்கு ஆளானவர்களைச் சந்தித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சிங்கள அமைச்சர் மெர்வின் சில்வா என்பவன், ‘நவநீதம் பிள்ளையை வேண்டுமானால் நான் திருமணம் செய்து கொள்கிறேன்; இலங்கையைச் சுற்றிக் காட்டுகிறேன்' என்று கொச்சைப்படுத்தி இருக்கிறான். நீதிக்காகவே வாழ்கின்ற, போற்றத்தக்க மாதரசியான நவநீதம் பிள்ளை அவர்களை, இப்படி இழிவுபடுத்தி சிங்கள அமைச்சர் ஒருவன் பேசுகிறான் என்றால், ஏராளமான தமிழ்ப் பெண்களை, சிங்களவர்கள் கற்பழித்துக் கொன்ற கொடூரத்தின் பிரபதிபலிப்புத்தானே மெர்வின் சில்வாவின் இந்தத் திமிர்ப் பேச்சு? சிங்களவர்க…

  7. சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் சென்னையில் இன்று சந்தித்துப் பேசினார். லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு கைப்பற்றும் என்றுதான் ஜெயலலிதா தொடர்ந்து பேசிவருகிறார். சென்னையில் இன்று கூட நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலலிதா, 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று பேசியிருந்தார். இருப்பினும் அதிமுகவுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைக்கக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த…

  8. ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில்வேபீடர் ரோடு பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. வெளிநோயாளிகள், பரிசோதனை மற்றும் டாக்டர்கள் அறை புதிய கட்டிடங்களில் இயங்கி வருகிறது. ஆனால் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுகள், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதில் ஆண் நோயாளிகள், பெண் நோயாளிகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கான வார்டுகள் என மூன்று பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில் ஆண் நோயாளிகள் வார்டில் 22 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதிலும் இருந்து பக்தர…

  9. சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி ஜனவரி 28ம் தேதி தமிழகத்தில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். தமிழகத்தில் முஸ்லீம்க…

  10. திருச்சி அரச சட்டக்கல்லூரி மாணவர்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் சிறீலங்காவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு நடை பெறக்கூடாது என்றும் அதற்கு தேவையான நடவடிக்கையில் இந்திய அரசு உடனடியாக ஈடுபடவும், இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கடந்த மூன்று நாட்களாக சட்டக் கல்லூரி முன்பாக பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று 11:00 மணியளவில் மாணவர்கள் சிலர் திருச்சி டி வி எஸ் டோல்கேட் பகுதியில் சாலை மறியல் செய்தனர். இதனால் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்…

  11. சென்னை: செனனை அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சேலையூர் அருகே உள்ளது சந்தோஷபுரம். இங்கு அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு விக்னராஜபுரத்தை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மனைவி ரீட்டாமேரி (39) என்பவர் விஷேச நாட்களில் உணவு தயார் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி அன்று தேதி ஆலயத்தில் சாம்பல் புதன் கொண்டாடப்பட்டது. அப்போது, பக்தர்களுக்கு உணவு கொடுக்கும் பணியில் ரீட்டாமேரி ஈடுபட்டார். இரவு வெகு நேரமாகி விட்டதால் சர்ச் பாதிரியார் அவரை மறுநாள் வரச் சொன்னதாக கூறப்படுகிறது. மறுநாள் பக்தர்களுக்கு உணவு கொடுத்த…

  12. சென்னை: தமிழகத்தில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அதனை எதிர்த்து தமிழகத்திலே ஜனநாயகத்திலே அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலை தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/29/tamilnadu-pmk-writes-dmk-on…

  13. சென்னை: லோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றுவிடும் என்ற நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் தேமுதிகவை தமது அணிக்கு கொண்டு வர மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாஜக சார்பில் தமிழருவி மணியன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தாலும் அனேகமாக இடதுசாரிகளை அரவணைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்தான் இப்போதைக்கு அழைத்துவரப்பட வேண்டிய தோழமைக் கட்சி. ஆனால் தேமுதிகவோ என்ன செய்வதென்று குழம்பினாலும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தம்மால் முடிந்த அளவுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தில் மதிமுகவை மிகவும் அதி…

  14. சென்னை: அண்மைக்காலமாக ஓய்ந்திருந்த நில அபகரிப்பு சிக்கலில் மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது. சென்னை போலீசில் கொடுக்கப்பட்டிருக்கும் நில அபகரிப்பு புகாரில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் காசி கார்டன் குமரப்ப முதலில் தெருவில் 20 கிரவுண்ட் நிலம், அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானது. இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 16 கிரவுண்ட் நிலம் செல்வியின் மருமகனின் சகோதரி உமா மகேஸ்வரி பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை ரூ8 கோடிக்கு பேசியிருக்கின்றனர். அட்வான்ஸாக ரூ1 கோடியே 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். பின்னர் இதில் ர…

  15. தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகேயுள்ள பெரியதாழையில் கடல் தாதுமணல் ஏற்றி வந்த லாரியை மீனவமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவி மினரல்ஸ், பி.எம்.சி உள்ளிட்ட கடல்தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் சிறப்பு ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடல்தாது மணல் குவாரிகளிலும் மணல் எடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளவிளை கடல் பக…

  16. தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இந்திய கரையோரப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்தப்படக் கூடுமென்ற புலனாய்வு பிரிவு எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூன்று முக்கிய துறைமுகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி மற்றும் என்னூர் ஆகிய துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் அச்சுறுத்தல்களை முறியடிக்கத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாத குழுவொன்று இலங்கையைக் களமாகக் கொண்டு தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அநாமேதய தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுக்கப…

  17. NaamTamilar Tirupur SamaranBala பகிர்ந்துள்ளார். வேகமாக வளரும் மனை வணிகம். விரைவாக கைவிட்டு போகும் தமிழர் நிலங்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா ? ஒரு இனம் வாழ வேண்டுமெனில் அதற்கு முக்கியமான தேவை அந்த மக்கள் வாழ்வதற்கான மண். அந்த மண் இல்லாவிட்டால் அந்த மக்கள் அகதிகள் ஆகிவிடுவார் . ஈழத்தில் மண்ணை இழந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனது நாம் எல்லோரும் அறிந்ததே. அதனால் தான் உலகில் பல இனங்கள் தங்கள் மண்ணை உயிர் கொடுத்தேனும் பாதுகாத்து வருகின்றனர். உலகில் தொன்மை இனமான தமிழினம் பல காலகட்டங்களில் தனது மண்ணை பாதுகாத்து வந்துள்ளது. இம்மண்ணை ஆண்ட மன்னர்கள் அந்நியர்களின் படையெடுப்பை கடுமையாக எதிர்த்து போரிட்டு வந்துள்ளனர் . எனினும் தமிழர் மண்ணை வேற்றின மக்கள் ஆளாமல் இல…

    • 2 replies
    • 552 views
  18. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமெனக் கோரியுள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் ஜெயலலிதா, குருவிக்காரர்கள் எனவும் அழைக்கப்படும் அம்மக்களைப் பழங்குடியினராகக் கருதி, அதற்கான பட்டியலில் அவ்வினம் இடம்பெறவேண்டுமென கடந்த ஆண்டு ஜூலையிலேயே மத்திய அரசிடம் கோரியதாக நினைவுகூருகிறார். ஜெயலலிதா வல்லுநர்களின் ஆலோசனையின்பேரில் இந்திய பதிவாளர் நாயகமும் அக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருக்கிறார், மத்திய அரசின் பழங்குடியினர் துறையும் இது குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் தலையிட்டு, மேலுங்காலந்தாழ்த்தாமல் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவை நிறைவே…

  19. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் சிங்கள பெளத்த இனவெறி அரசியலின் முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. ராவண பலய்யா என்ற அந்த சிங்கள பெளத்த இன வெறி அமைப்பின் பின்னால் இருப்பது மகிந்த ராஜபக்சாவின் இனவெறி அரசுதான் என்பது இலங்கை அரசியலை புரிந்தவர்கள் நன்கு அறிவார்கள். கொழும்புவில் உள்ள ஐ.நா. தூதரக அலுவலகத்திற்குள் இந்த அமைப்பைச் சேர்ந்த புத்த பிக்குகளும் சிங்கள இன வெறியர்களும் உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்த முயன்றுள்ளனர். எப்போதெல்லாம் தமிழர்களுக்கு நியாயம் வழங்கும் நிலை உருவாகிறதோ அப்போதெல்லாம்…

  20. பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணிக்கும் ஒன்று பட்ட இலங்கையை பேசும் அய்யோக்கிய 13வது சட்டதிருத்ததை எரித்தும் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என வலியுறுத்தியும் பின்வரும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கதின் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகள்:- 1) தனித்தமிழீழ கோரிக்கையை சிதைக்க இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை புறக்கணிக்கின்றோம். 2)தனித்தமிழீழத்திற்கான ஒரே தீர்வான பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமூகமே உடனே நடத்து. 3) இனப்படுகொலையை மறைக்கும் பொருட்டு இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் கூட்டுச்சதியால் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது. 4) காமன்வெல்…

  21. சென்னை: இதுவரை இல்லாத புதுமையாக தமிழக அரசியல் தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து புதுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. மூத்த தலைவர் கருணாநிதிக்கோ அல்லது வேறு யாருக்குமே இதுவரை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பழக்கப்பட்டவரில்லை ராகுல் காந்தி. ஆனால் முதல் முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பி புதுப் புதுக் கதைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ராகுல் காந்தி.61வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் விஜயகாந்த். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பேக்ஸ் அனுப்பியிருந்தார் ராகுல் காந்தி.ராகுல் காந்தி இப்படி தமிழக தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது இதுதான் முதல் முறையாம். க…

    • 6 replies
    • 2.5k views
  22. ஈரோடு: எந்தக் கட்டத்திலும் மதிமுக அதன் இலட்சியங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை என்று வைகோ கூறியுள்ளார். மாற்று அரசியலுக்கான இளையதலைமுறையின் கருத்துக்களம் என்ற தலைப்பில் ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் கூறியதாவது. என்னை அழைத்தபோது கரிகால் சோழன் புத்தகத்தை அளித்தீர்கள். அது பொருத்தம்தான். என்னை கரிகால் சோழனாக சித்தரித்து அல்ல, உங்களுக்கு பொருத்தமாக அந்த நூல் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் நீதியை நிலைநாட்டிய வரலாறு நமக்குள்ளது.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் என்ற சிலப்பதிகாரம் நீதியை நிலைநாட்டிய நூலாகும். இளையன் இவன் என்று எண்ணி விடாதே. ஆகவே, இளையவர்களாம் இணையதள நண்பர்கள் …

    • 1 reply
    • 675 views
  23. சிவகாசி: சிவகாசி அருகே திங்கள்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் தேசிங்குராஜன் என்பவருக்கு பட்டாசு ஆலை உள்ளது. அந்த பட்டாசு ஆலையில் இன்று பட்டாசுகளை தயாரித்து பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். பட்டாசுகளை பேக்கிங் செய்யும்போது, ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திரிசங்கு (38), முருகேஸ்வரி, தமிழ்செல்வி, அழகுமணி, வீரம்மாள் ஆகிய 5 பெண்களுக்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பெண்களும் உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு ச…

  24. இராமேஸ்வர மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 4 படகுகளில் சென்ற இவர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது எல்லையை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். 35 பேரும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகளும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.sankathi24.com/news/32549/64/35/d,fullart.aspx

  25. தமிழ்நாடு - பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இலங்கை அகதிகள் 3 பேரை பொலிஸார் நேற்று (25) அதிகாலை திடீரென கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையை சேர்ந்த சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் உள்ளிட்ட 8 பேர் கடந்த ஓராண்டாக அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமில் இருந்த செந்தூரான் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து அகதிகள் சந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, மகேஷ்வரன் ஆகியோர் தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்ற கோரி கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உண்ணாவிரதத்தை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.