Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்…

  2. ஈழத்திற்கான மூன்றாம் கட்டப்போராட்டம்: தமிழக மாணவர்கள் அறிவிப்பு இலங்கை இனப்படுகொலையை நடத்திய மஹிந்த இலங்கை ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டு சேர்த்தவர்கள் மாணவர்கள். அரசியல் கட்சிகளின் எந்த ஒரு ஆதரவும் இன்றி தனித்தே போராடி வருகின்றனர் மாணவர்கள். இவர்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 8 கோடி தமிழர்களை சந்திக்கும் வகையில் 5 பகுதிகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி மே 12ஆம் திகதி அன்று காலை புறப்படுகின்றனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரிய…

    • 0 replies
    • 1.8k views
  3. ஏப்ரல் 29, 2013 தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக கூறினார். கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என கூறிய ஸ்டாலின், அதுபற்றி கேட்டால் திமுகவினர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். நீலகிரியில் போதிய நீர்நிலைகள் இல்லாத பகுதியில் 7ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எவ்வாறு மின் திட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறு திட்டம் போடுவதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக ப…

    • 1 reply
    • 475 views
  4. ஏப்ரல் 25, 2013 நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ருபாய் செலவில் நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். விதி எண் 110 ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகளுடன் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஓடும், குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே நிறுவப்படவுள்ள நீர் தேக்கத்தை பயன்படுத்தி 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புனல் மின் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டம் 8 முதல் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர, மின்…

  5. 29 ஏப்ரல் 2013 வேலூரில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட ஒருவர், பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 52). தங்க நகைகளின் பேரில் கடன் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சுமதி (வயது 44), விக்னேஷ்வரன் (வயது 19), சந்திரகாந்தன் (வயது 17) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு மகன்களுடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சுமதி சென்று விட்டார். வீட்டில் சிவராமன் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த 7…

  6. 27 ஏப்ரல் 2013 விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 3 வயது சிறுமி, நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த சிறுமி திடீரென காணாமல் போனாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக சென்று பார்த்தனர். அப்போது அங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவன் சிறுமிய…

  7. 29 ஏப்ரல் 2013 திருச்சியை அடுத்த நங்கவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காவிரியில் நீர் எடுக்க வந்தபோது மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உமாவதி (35), இவரது மகள் தீபா (13), சிறுவன் ஜீவானந்தம்(10) மற்றும் பிரவீணா (18) ஆகியோர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியாகினர். ஞாயிறன்று சவரிமேடு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா சடங்குகளுக்காக அருகில் உள்ள காவிரியில் நீர் எடுக்க வந்துள்ளனர். கரை அருகே தண்ணீருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் திடீரென இவர்கள் தண்ணீருக்குள் மூழ்கினர். மணற்கொள்ளையால் கரையை ஒட்டிய பகுதிகளில் நீருக்கடியில் பெரிய பெரிய ஆள் விழுங்கிக் குழிகள் தோன்றியுள்ளன. இதில்தான் இந்தக் …

  8. 29 ஏப்ரல் 2013 செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் விடுதலையை எதிர்நோக்கி உண்ணாவிரதம் இருந்து வந்துள்ள நிலையில் சசிதரன் என்ற 21 வயது தமிழ் அகதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக சசிதரன் கடிதம் எழுதிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சசிதரன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளில் சிலரை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ப…

  9. இந்திய எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. அது பற்றி மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அணு உலை அச்சத்தினால் போராடும் மக்கள் மீது வழக்கு போட்டு வருகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். ராதாபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி செயலாளராக இருப்பவர் கணேசன். கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்ற இவர் கைது செய்யப்பட்டு பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பேசினார். மேலும் சிறையில் உள்ள கட்சி பிரமுகர்கள் சத்தியபிரபாகரன், மோகன்ராம், முத்துராமலிங்கம் ஆகியோரையும் சந்தித்து வழக்கு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வெளிவே வந்த சீமா…

  10. சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந் நிலையில் ‘சென்னையில் நடைபெறுவதாக இருந்த ‘பிளே–ஆஃப்’ சுற்று போட்டிகளை டெல்லியில் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசனுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்த மாறுதல் முடிவு எடுக்கப்பட்டதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் …

  11. முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. செங்கோட்டையன் நேற்று இரவு குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அப்போது இரவு 9.30 மணி அளவில் போயஸ்கார்டனில் இருந்து திடீர் அழைப்பு மணி அடித்தது. உடனே செங்கோட்டையன் செல்போனை ஆன் செய்து பேசினார். எதிர்முனையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது முதல்- அமைச்சர், கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆணையிட்டதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்ய சொன்னது செங்கோட்டையனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து இன்று அதிகாலை அவர் கார் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றா…

    • 0 replies
    • 786 views
  12. தேமுதிக தலைவர் விஜயகாந்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் திடீரென்று சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் போது மரக்காணம் கலவரம் குறித்து விஜயகாந்துடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். மரக்காணம் கலவரத்திற்கு பாமக தான் காரணம் என்று திருமாவளவன் ஏற்கனவே கூறியுள்ளார். கலவரப் பிரச்சனையில் பாமகவிற்கு எதிராக இதர கட்சிகளை அணி சேர்க்க திருமா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14328:vijayakanth-suddenly-grow-with&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 467 views
  13. சிவகாசி அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. 4 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது நாரயணாபுரம். இங்கு பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இதன் உரிமையாளராக சிவகாசியை சேர்ந்த விஜயகுமார் உள்ளார். இந்த பட்டாசு ஆலையை பால்ராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த ஆலையில் சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். ஒரு அறையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென்று தீப்பிடித்தது. பட்டாசுகள் டமார்... டமார்.…

  14. நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தை மீறி 2001ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். தான் தாக்கல் செய்த வேட்புமனு ஒவ்வொன்றிலும் 2 தொகுதிகளுக்கு மேல் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், இனிமேலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் உண்மையை மறைத்து உறுதிமொழி அளித்தார். தேர்தல் அதி…

    • 0 replies
    • 490 views
  15. கரூர் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி முத்துலட்சுமியை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன கருவியுடன் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பயன் கிட்டவில்லை. எனவே மறுபடியும் ஆழ்துளை கிணறு அருகே துளையிட்டு மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆள்துளை கிணற்றில் மண் சரிந்து விழுந்த காரணத்தினால் மீட்புப் பணியில் சிரமமும் ஏற்பட்டுள்ளது. பாதிரிப்பட்டி என்ற இடத்தில் தந்தை முத்துப்பாண்டியுடன் முருங்கைக் காய் பறிக்க அந்த சிறுமி சென்றபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். 7 வயதாகும் சிறுமி முத்துலட்சுமி, கிட்டதட்ட 12 அடி பள்ளத்தில் சிக்கிக்கொண்டாள்.அந்த ஆழ்துளை கிணறு 600 அடி ஆழம் கொண்டது..…

  16. பூரண மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியிலிருந்து தொடங்கிய நடைபயணத்தின் 11ம் நாள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் புதுவலசு என்னும் கிராமம் வழியாக வரும்போது நடைபயணம் சென்றவர்களின் ஐந்தரை அடி நீளமுள்ள பச்சைப்பாம்பு குறுக்கே வந்தது. அப்போது மறுமலர்ச்சி மாணவர் அணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் அந்தப் பாம்பைப் பிடித்தார். அதன் வாயை அழுத்தியவுடன் சுழன்றது பாம்பு. பாம்பைப் பிடித்த தொண்டர்கள் உற்சாகமாக இருந்தாலும், வைகோ மட்டும் பதற்றமாகவே இருந்தார் அருகில் இருந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அந்தப் பாம்பை நந்தனிடமிருந்து வாங்கி, கழுத்துப்பகுதியைப் பிடித்து அரை கி.மீ. தூரம் நடந்து வந்தார். பின்னர் பசுமையான காட்டுப்பகுதியை அடைந்தவுடன் வைகோ அவரிடம் “ஒரு உயிரைக் கொல்வது …

    • 7 replies
    • 1k views
  17. 25 ஏப்ரல் 2013 காஞ்சிபுரத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுகவினர் தோல்விகளைக் கண்டு துவண்டு போவதில்லை என்றும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனையை மனதில் கொண்டு வரும் தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறினார். அவ்விழாவில் அவர் பேசியதாவது, சீர்திருத்த திருமணங்கள் என்றால் 1967க்கு முன்னர் கேளியாகவும், கிண்டலாகும் பார்த்தனர். அத்திருமணங்களுக்கு அங்கீகாரமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறிஞர் அண்ணா சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். திமுகவைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் அமைச்சர்களாக முடியும், எம்.பி, எம்.எல்.ஏக…

  18. காவிரி ஆற்றின் படுகைப் பகுதியில் மெதேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும், இத்திட்டத்தால் விளை நிலங்கள் பாழாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்பட்ட காவிரி ஆற்றுப் படுகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில், புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி, நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடியின் தெற்குப் பகுதிவரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும், மெதேன் வாயுவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எரிவாயுத் தேவைக்காக மெதேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈஸ்டெர்ன் எ…

  19. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி கொடுத்துவிட்டால் கூடங்குளம் அணு மின் நிலையம் மே முதல் வாரத்திலேயே செயல்பட தொடங்கிவிடும் என சென்னையில் உள்ள ரஷிய துணைத் தூதர் நிகோலோய் லிஸ்தபதோவ் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட முதல் யூனிட் அமைக்கும் பணிகள் முடிந்து உற்பத்திக்கு தயாராக உள்ள நிலையில் மற்றொரு 1000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது யூனிட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த முதல் யூனிட்டில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகே மின் உற்பத்தியைத் தொடங்க முடியும். …

  20. 25 ஏப்ரல் 2013 மாமல்லபுரத்தில் பாமக நடத்தும் சித்திரைத் திருவிழாவிற்குச் சென்ற பாமகவினர் மரக்காணத்தில் பொதுமக்களுடன் சண்டையிட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேருந்துகள் மற்றும் கடைகள் உட்பட 5 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சித்திரை முழுநிலவுத் திருவிழா - வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்த பாமகவினருக்கும், பொதுமக்களுக்குமிடையே திண்டிவனம் அருகே உள்ள மரக்காணத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 5 அரசு பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகள் உட்பட 5 வீடுகளு‌ம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் அந்தப்பகுதி போர்கள…

  21. 25 ஏப்ரல் 2013 சிவகாசி அருகே அனுப்பங்குளம் கிராமத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் இருவர் பலியாயினர். அனுப்பங்குளம் பராசக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று பிற்பகல் அங்கு வெடிமருந்து கலவை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மருந்து உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு தீ பற்றியது. பின்னர் அனைத்து பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இதனால் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், பணியில் இருந்த ரவி, கோபால் ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜேந்திரன் என்பவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு…

  22. நாடாளுமன்றத் தேர்தலில், சுப்பிரமணிய சாமி மீண்டும் மதுரையில் போட்டி? மதுரை: மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. 1998ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சுப்பிரமணிய சாமி மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார். அந்தத் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராம்பாபுவை தோற்கடித்தார். தேர்தலில் வெல்லும் முன் மதுரையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்றெல்லாம் புருடா விட்டார். ஆனால், மதுரைக்கு உருப்படியாக எந்த வேலையையும் செய்யவில்லை. மாலையில் காரில் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, முகத்துக்கு நேராக போகஸ் லைட் அடித்துக் கொண்டு, கருப்புப் பூனைப் படையினரின் சைர…

  23. கூடங்குளம் அணுமின் நிலையம் யூனிட் 1 இல் இருந்து 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று மத்திய அரசின் அணுசக்தித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத்துக்கு (MADITSSIA), மத்திய அரசின் அணுசக்தித் துறை சார்புச் செயலர் அனுப்பியுள்ள கடிதத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப் போக்கும் வகையில் தேவையான மின்சாரத்தை வழங்கவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் சார்பில் 2012 டிசம்பர் 11இல் டெல்லி நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் பிரதமர் அலுவலகத்…

  24. வேலூர் மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்றதொரு நிலைதான், அண்டை மாவட்டமான திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நீடிக்கிறது. வெப்பம் நிறைந்த மாவட்டமாக கருதப்படும் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதனால் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகியிருக்கிறது. மாவட்டத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. முறையாக குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முன்வைக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிநீருக்காக…

  25. தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது. கோவை, திருப்பூர், அரியலூர், திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சென்னையில் சுமாரான மழை பெய்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடுமையான சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்ததால், மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஒரு சில இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போகம்பட்டியில் மழை காரணமாக கோழிப்பண்ணை தரைமட்டமானது. இதில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன. இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழையால், ஆங்காங்கே சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மின் கம்பங்களும்,மரங்களும் சாய்ந்தன. திண்டுக்கல்லில் கடும் சூறாவளி காற்றுடன் மழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.