அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3264 topics in this forum
-
கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு! வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபா நிவாரணமாக வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதேவேளை, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ள…
-
- 1 reply
- 91 views
- 1 follower
-
-
டெல்லியின் பொருளாதாரத்தை உலுக்கிய இண்டிகோ விமான நெருக்கடி! இண்டிகோவில் நடந்து வரும் செயல்பாட்டு நெருக்கடி விமான நிலைய முனையங்களுக்கு அப்பால் அலைமோதத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இது டெல்லியின் பொருளாதாரத்தில் பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிறுவனத்தின் பெரிய அளவிலான விமான இரத்துகள் ஏற்கனவே தலைநகரின் வர்த்தகம், தொழில், சுற்றுலா மற்றும் கண்காட்சித் துறைகளுக்கு சுமார் 1,000 கோடி இந்திய ரூபா வரையிலான வணிக இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மதிப்பிட்டுள்ளது. தினசரி விமானப் போக்குவரத்து இடையூறுகள் வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகளின் இயக்கத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால், நகரம் முழுவதும் சந்தை நடவடிக்கைகளில் கூர்மையான சரிவு …
-
- 1 reply
- 88 views
-
-
ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பத்தாண்டுக்குள், இந்திய மன்னர்களின் ராணுவத் திறன் விரைவாக அதிகரித்து வருவதையும், பிளாசி போன்ற வெற்றியை மீண்டும் பெறுவது கடினம் என்பதையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் உணர்ந்தனர். ஐரோப்பியர்களின் ராணுவத் தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக இந்திய சுதேச சமஸ்தானங்கள் வர வெறும் பத்தாண்டுககள் மட்டுமே ஆனது. 1760-களின் நடுப்பகுதிக்குள், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ராணுவ பலத்தின் இடைவெளி …
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
எர்ணாகுளம்: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப், அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இன்று (டிச.8) விடுவிக்கப்பட்டார். 8 ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 8) எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிபதி ஹனி எம். வர்கீஸ், இந்த வழக்கில் நடிகர் திலீப்பை குற்றங்களில் இருந்து விடுவித்தார். ஒன்று முதல் ஆறு வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபரான நடிகர் திலீப்பை விடுவித்தார்.இந்த வழக்கில் முதல் குற்றவாளி என்.எஸ். சுனில் எனும் 'புல்சர் சுனில்'. இரண்டாவது குற்றவாளி மார்ட்டின் ஆண்டனி, மூன்றாவது குற்றவாளி பி. மணிகண்டன், நான்காவது குற்றவ…
-
- 1 reply
- 112 views
-
-
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம் 06 Dec, 2025 | 11:20 AM பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எதிர்கொண்ட கடும் பின்னடைவை அடுத்து, பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப…
-
- 0 replies
- 35 views
- 1 follower
-
-
புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று! புது டெல்லிக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அரசு முறைப் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய ஜனாதிபதியை நேற்று (04) மாலை வரவேற்றார். பழைய நண்பரை உற்சாகத்துடன் கட்டிப்பிடித்து, இறுக்கமான கைகுலுக்கினார் மோடி. இன்று தனது பயணத்தின் இரண்டாம் நாளில் புட்டின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், அனைத்து வருகை தரும் தலைவர்களைப் போலவே, அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாத…
-
- 2 replies
- 117 views
-
-
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்சை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர்…
-
- 2 replies
- 178 views
- 1 follower
-
-
புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல சிரமங்களுக்கு மத்தியிலும் இந்தியாவும் ரஷ்யாவும் உறவில் இணக்கத்தைப் பேணி வருகின்றன. கட்டுரை தகவல் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்தப் பயணத்தில் இருந்து இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது என்ன?" - இந்தக் கேள்வியை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டேன். "நாங்கள் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். தற்போது நாங்கள் ரஷ்யாவிடம் அதிகமாக வாங்குகிறோம், ஆனால் மிகக் குறைவாகவே விற்கிறோம். இது ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. அதைச் சரிசெய்ய விரும்பு…
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்! பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது. ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ…
-
- 0 replies
- 103 views
-
-
பட மூலாதாரம், Imran Qureshi கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக 23 நவம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், விசாரணை சரியான திசையில் இருப்பதாகக் கூறினார். மேலும், மீதமுள்ள தொகை மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள…
-
- 0 replies
- 51 views
- 1 follower
-
-
சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார் புட்டபர்த்தி, நவ. 19: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார். சாய்பாபாவின் நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். https://makkalkural.net/news/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/
-
- 0 replies
- 65 views
-
-
சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு! சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பல பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிகாரிக…
-
- 3 replies
- 244 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த மே மாதம் நடந்த இந்தியா, பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது (கோப்புப் படம்) 4 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் மேலாதிக்கம் செலுத்தியதாகவும், சீனா தனது ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கவும் அவற்றை ஊக்குவிக்கவும் இந்த மோதலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால், இந்த நான்கு நாள் மோதலில், பாகிஸ்தான் எல்லையில் இருந்த பல "பயங்கரவாத கட்டமைப்புகளை" அழித்ததாகவும், இந்த ராணுவ மோதலில் இந்திய ராணுவம் "வெற்றி அடைந்ததாகவும்"…
-
- 1 reply
- 147 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANUSH KOTTARY படக்குறிப்பு, புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தியில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார். புகார்தாரரான இவர் இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதி…
-
- 4 replies
- 275 views
- 1 follower
-
-
18 Nov, 2025 | 07:03 PM இந்தியா - ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தற்போது எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் ஜெய…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்…
-
- 0 replies
- 52 views
-
-
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! கடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ளது. ஹசீனா இல்லாத நிலையில் நடத்தப்பட்ட பல மாத கால விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆகஸ்ட் 5, அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்தபோது நாடுகடத்தப்பட்டு டெல்லியில் வசித்து வரும் 78 வயதான அவாமி லீக் கட்சித் தலைவர், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தல் மற்றும் மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியின் போது அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல் ஆகிய மூன்று குற்றச்சா…
-
- 4 replies
- 201 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், VEERU SINDHI 10 நவம்பர் 2025, 14:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது) டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்த வெடிப்பில் சிலர் உயிரிழந்ததை டெல்லி காவல் ஆணையர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை. மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SAJJAD HUSSAIN/AFP via Getty Images பட மூல…
-
-
- 16 replies
- 816 views
- 1 follower
-
-
15 நவம்பர் 2025, 04:21 GMT பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, ஃபீல்ட் மார்ஷல் முனீர், இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார். பாகிஸ்தான் ராணுவ தளபதியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு புதிய அதிகாரம் கொடுத்தும், கைது மற்றும் வழக்குகளிலிருந்து வாழ்நாள் விலக்கு அளித்தும் அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். வியாழக்கிழமை சட்டமாக ஆக்கப்பட்ட 27-வது அரசியலமைப்பு திருத்தம், நாட்டின் உயரிய நீதிமன்றங்கள் செயல்படும் முறையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த முடிவை ஆதரிப்பவர்கள், இது ஆயுதப் படைகளின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்றும், நீதி…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், ANI 14 நவம்பர் 2025, 01:29 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பகல் 12 மணி நிலவரப்படி, பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. மகா கூட்டணி 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் ம…
-
- 1 reply
- 96 views
- 1 follower
-
-
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு! ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம்காவல் நிலையத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். காவல் நிலையத்தில் திடீரென வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். குறித்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பரிதாபாத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கையாளும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை,…
-
- 1 reply
- 93 views
- 1 follower
-
-
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்! பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கியமான தீர்ப்பு இன்று (13) வெளியாகவுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்களாதேஷ் தீ வைப்பு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களால் அதிர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் கொந்தளிப்பான மற்றும் இரத்தக்களரியான மாணவர் தலைமையிலான போராட்டங்களை நினைவுபடுத்துகிறது. அண்மைய அரசியல் கொந்தளிப்பு டாக்காவில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தீ வைப்பு, பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் தலைநகரைத் தாண்டி காசிபூர் மற்றும் பிரம்மன்பாரியா போன்ற நகரங்களுக்கும் பரவியுள்ளதாக தி டெய்லி ஸ்டாரில் ஒரு செய்தி வெளியா…
-
- 0 replies
- 50 views
-
-
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே நடந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டது. கட்டுரை தகவல் சையத் மொஸீஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நவம்பர் 10 ஆம் தேதி மாலை, டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் வெடித்து, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கார் வெடிப்புக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தில் பலரை கைது செய்தது. மேலும் பலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார் குப்தா இதுகுறித்து கூறுகையில், "இது, கடந்த 15 நா…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் குண்டு வெடிப்பை 'இந்தியா ஆதரிக்கும் குழு நடத்தியது' - ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images 11 நவம்பர் 2025, 13:08 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார். "நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்பட…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத…
-
- 0 replies
- 63 views
-