Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. திருமணத்திற்கு பின் ஆபாசாமான உரையாடலில் ஈடுபட கூடாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்த…

  2. ஹோலி பண்டிகையின் போது 7 பள்ளி மாணவர்கள் மீது இரசாயண பொடி வீச்சு – 4 பேரின் நிலை கவலைக்கிடம். நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது. அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம்,…

  3. 300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள் March 13, 2025 2:45 pm மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து, 130 தலித் குடும்பங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை முதல் முறையாக பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் சிவன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கட்வா துணைப்பிரிவில் உள்ள கித்கிராம் கிராமத்தின் தஸ்பாரா பகுதியைச் சேர்ந்த தாஸ் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு (நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்) காலை 10 மணியளவில் கோவில் படிகளில் ஏறி, சிவலிங்கத்தின் மீது பால் மற்றும் தண்ணீரை ஊற்றி…

      • Haha
    • 4 replies
    • 241 views
  4. பாகிஸ்தான் ரயிலில் பயங்கரவாத தாக்குதல்: 104 பணயக்கைதிகள் மீட்பு! பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலைத் தாக்கி, அவர்களில் பலரை பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்நட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்தன. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் விடுதலைப் படை (BLA) துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைத் தாக்குவதற்கு முன்பு தண்டவாளத்தில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், 58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உட்பட 104 பயணிகளை பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிகரமாக மீட்டு…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES 17 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேச ராணுவத்திற்குள் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி ஏற்பட்டதாக இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளிதழான எகனாமிக் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. வங்கதேச ராணுவத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைசூர் ரஹ்மான் வேறு சில ஜெனரல்களின் ஆதரவுடன் தற்போதைய ராணுவத் தளபதியாகச் செயல்பட்டு வரும் வகார் உஸ் ஜமானை நீக்க முயன்றதாகவும், ஆனால் போதிய ஆதரவில்லாத காரணத்தால் தோல்வியடைந்ததாகவுவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என வங்கதேச ராணுவம் இப்போது நிராகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, வங்கதேசத்தின் இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டரே…

  6. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,தர்மேந்திர பிரதான் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்பிக்கள் 10 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வின் முதல் நாளான நேற்றே, தேசிய கல்விக் கொள்கை பிரச்சனையால் விவாதங்களுடன் தொடங்கியது. தமிழ்நாடு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கும் போது, தமிழ்நாடு எம்பிக்களை நோக்கி ஒரு வார்த்தையால் குறிப்பிட்ட பிரதான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்தி வைக்க நேர்ந்தது. அமர்வின் இரண்டா…

  7. இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்! இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும் எனவும், இதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில்கள் இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் ஒரு முக்கிய கட்டமாக விளங்குகிறது. நிலையான போக்குவரத்து, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன…

  8. மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு. மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை பெற்று தருவதாகக்கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சியும், பணய கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்க…

  9. 09 Mar, 2025 | 10:07 AM பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (42)இ தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த‌ டேனியல் ஜேம்ஸ் (23) ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (27) சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண் இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர…

  10. முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை 09 Mar, 2025 | 12:51 PM இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இத…

  11. பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தாகவும் குழு கூறியது. எனினும், இராணுவம் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை. இரண்டு தற்கொலை …

      • Thanks
      • Like
    • 5 replies
    • 280 views
  12. லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி! லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார். மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சர…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 4 மார்ச் 2025, 01:42 GMT 1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. ஔரங்கசீப்பின் வரலாற்றைக் கூறும், 'ஔரங்கசீப், தி மென் அண்ட் தி மித்' (Aurangzeb, the Man and the Myth) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆட்ரே ட்ருஸ்ச்கே, "அந்த படை, முகாம்கள், சந்தை, மன்னரின் வாகனம், பணியாட்கள், அதிகாரிகளுடன் முன்னோக்கி நகர்ந்தது." என்று குறிப்பிட்டுள்ளார். "ஔரங்கசீப், பழைய முகலாய பாரம்பரியத்தையே பின்தொடர்ந்தார். முகலாய மன்னர்களுடன் அவர்களின் தலைநகரும் சேர்ந்தே நகரும் என்பது தான் …

  14. அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்துள்ளார் எனவும், இதன்போது தனது பராமரிப்பில் இருந்த 4 வயதுக் குழந்தைக்கு அவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும், அப்போது துரதிஷ்டவசமாக அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தினையடுத்து அப்பெண் அபுதாபி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ச…

  15. தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாளர்கள்! தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்புறம் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் கசிவை சரிசெய்ய சில தொழிலாளர்கள் உள்ளே சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. விபத்தினை அடுத்து சுரங்கத்தில் சிக்கி பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். எனினும், எட்டு தொழிலாளர்கள் இன்னும் சுரங்கத்தில் சுக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மீட்புப…

  16. உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மோடியின் சஃபாரி! உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) காலை குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சஃபாரி சென்றுள்ளார். இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, நான் கிரில் ஒரு சஃபாரிக்குச் சென்றேன், இது நாம் அனைவரும் அறிந்தபடி, கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார். வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது மோடி, அவற்றின் வசீகரிக்கும் அழகினை கையில் இருந்த கமரா மூலம் புகைப்படம் எடுத்தார். இந்த பயணித்தின் போது, ஆசிய சிங்கத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூக…

  17. மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி! மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகிறார். உடலில் பல காயங்கள், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுவன் சிறுமியை தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், வன…

  18. உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்! உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 57 பேர் பனியின் கீழ் சிக்கிக்கொண்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பனிச்சரிவு இடையூறாக உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான சாலையும் மூடப்பட்டுள்ளது. சாமோலியின் மானா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிக்கியவர்கள் கட்டிட தொழிலாளர்கள் ஆவர். மீட்பு பணிகளில் இந்தோ திபெத்திய எல்லைக் பொலிஸாரும், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், மாநில பேரிடர் மீட்புப் படையும், தேசிய பேரிடர் மீட்பு படையும் சம்பவ இடத்திற்குச் செல்லவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் 57 பேர் பனியின் கீழ் சிக்கியிருப்பதை சாமோலி அனர்த்…

  19. பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை (28)நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக கைபர் பக்துன்க்வா பொலிஸாரின் தகவல்களை மேற்கொள்காட்டி பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெஷாவருக்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் (35 மைல்) தொலைவில் உள்ள அகோரா கட்டாக்கில் உள்ள தார்-உல்-உலூம் ஹக்கானியா பள்ளியில் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு பதிலளிக்கும் விதமாக, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 45 நிமிடங்க…

  20. உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உத்தர பிரதேசத்தின் தூத்வா புலிகள் காப்பகத்தில் இரண்டு வயது பெண் புலி ஒன்று கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சையத் மோசிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்வா புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்றை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அந்தப் பெண் புலி தாக்கியதால் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள மலனி என்ற பகுதியில் மற்றொரு புலி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தூத்வா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான டி. ரங்கராஜு இந்த இரண்டு விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பத…

  21. அதிகாலையில் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்! நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், இமயமலைப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தின் பைரப் குண்டாவைச் சுற்றி அதிகாலை 2.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை அளந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் 5.5 என அதன் அளவை மதிப்பிட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது, குறிப்பிடத்தக்க ச…

  22. 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க …

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2025 "எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். 'ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?' என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார். இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எனது சகோதரர் அவர் விரும்பும் ந…

  24. பட மூலாதாரம்,CCTV படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை ஜனவரி மாதம் சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், எத்திராஜன் அன்பரசன் பதவி, பிபிசி உலக சேவை, தெற்காசிய ஆசிரியர் 26 பிப்ரவரி 2025, 03:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொண்ட வங்கதேச குழு ஒன்று சீனாவுக்கு 10 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. அவர்கள் சீன அரசு அதிகாரிகளுடனும், அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்துவார்கள் என அந்த குழுவில் இடம்பெற்ற தலைவர் ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்தார். பல்வேறு விவகாரங்களில் …

  25. இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா நிகழ்வு! மகா கும்பமேளா நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக நிறைவடைகிறது, இறுதி அமிர்த ஸ்நானத்திற்காக பக்தர்கள் குவிந்தனர் மகாசிவராத்திரியை முன்னிட்டு மகா கும்பமேளா நிகழ்வில் இறுதிப் புனித நீராடலுக்காக புதன்கிழமை (26) பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மகாசிவராத்திரி என்பது சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக சங்கமத்தை குறிக்கிறது மற்றும் கும்பமேளாவின் பின்னணியில் ஆழமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மற்றும் பக்தர்களுக்கு ‘மோட்சம்’ வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்துக்களால் புனித தலமாக போற்றப்படும் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் புனித சங்கமத்திற்கு ஏராளமான பக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.