அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு. மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை பெற்று தருவதாகக்கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சியும், பணய கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்க…
-
- 0 replies
- 99 views
-
-
09 Mar, 2025 | 10:07 AM பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (42)இ தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸ் (23) ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (27) சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண் இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர…
-
- 1 reply
- 133 views
- 1 follower
-
-
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை 09 Mar, 2025 | 12:51 PM இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இத…
-
- 0 replies
- 208 views
-
-
பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தாகவும் குழு கூறியது. எனினும், இராணுவம் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை. இரண்டு தற்கொலை …
-
-
- 5 replies
- 299 views
-
-
லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி! லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார். மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சர…
-
- 4 replies
- 217 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 4 மார்ச் 2025, 01:42 GMT 1680-ஆம் ஆண்டு முகலாய பேரரசர் தென்னிந்தியாவுக்கு தன்னுடைய முழு படையுடன் கிளம்பினார். அவருடைய ஒரு மகன் தவிர்த்து, மூன்று மகன்களுடன் ஒரு பெரிய படை தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. ஔரங்கசீப்பின் வரலாற்றைக் கூறும், 'ஔரங்கசீப், தி மென் அண்ட் தி மித்' (Aurangzeb, the Man and the Myth) என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆட்ரே ட்ருஸ்ச்கே, "அந்த படை, முகாம்கள், சந்தை, மன்னரின் வாகனம், பணியாட்கள், அதிகாரிகளுடன் முன்னோக்கி நகர்ந்தது." என்று குறிப்பிட்டுள்ளார். "ஔரங்கசீப், பழைய முகலாய பாரம்பரியத்தையே பின்தொடர்ந்தார். முகலாய மன்னர்களுடன் அவர்களின் தலைநகரும் சேர்ந்தே நகரும் என்பது தான் …
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்துள்ளார் எனவும், இதன்போது தனது பராமரிப்பில் இருந்த 4 வயதுக் குழந்தைக்கு அவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும், அப்போது துரதிஷ்டவசமாக அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தினையடுத்து அப்பெண் அபுதாபி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு ச…
-
- 0 replies
- 180 views
-
-
தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாளர்கள்! தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்புறம் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் கசிவை சரிசெய்ய சில தொழிலாளர்கள் உள்ளே சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. விபத்தினை அடுத்து சுரங்கத்தில் சிக்கி பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். எனினும், எட்டு தொழிலாளர்கள் இன்னும் சுரங்கத்தில் சுக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மீட்புப…
-
- 2 replies
- 165 views
- 1 follower
-
-
உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மோடியின் சஃபாரி! உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) காலை குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சஃபாரி சென்றுள்ளார். இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, நான் கிரில் ஒரு சஃபாரிக்குச் சென்றேன், இது நாம் அனைவரும் அறிந்தபடி, கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார். வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது மோடி, அவற்றின் வசீகரிக்கும் அழகினை கையில் இருந்த கமரா மூலம் புகைப்படம் எடுத்தார். இந்த பயணித்தின் போது, ஆசிய சிங்கத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூக…
-
- 0 replies
- 106 views
-
-
மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி! மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகிறார். உடலில் பல காயங்கள், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுவன் சிறுமியை தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், வன…
-
- 0 replies
- 124 views
-
-
உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்! உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (28) ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 57 பேர் பனியின் கீழ் சிக்கிக்கொண்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பனிச்சரிவு இடையூறாக உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான சாலையும் மூடப்பட்டுள்ளது. சாமோலியின் மானா கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிக்கியவர்கள் கட்டிட தொழிலாளர்கள் ஆவர். மீட்பு பணிகளில் இந்தோ திபெத்திய எல்லைக் பொலிஸாரும், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், மாநில பேரிடர் மீட்புப் படையும், தேசிய பேரிடர் மீட்பு படையும் சம்பவ இடத்திற்குச் செல்லவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் 57 பேர் பனியின் கீழ் சிக்கியிருப்பதை சாமோலி அனர்த்…
-
- 0 replies
- 152 views
-
-
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை (28)நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக கைபர் பக்துன்க்வா பொலிஸாரின் தகவல்களை மேற்கொள்காட்டி பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெஷாவருக்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் (35 மைல்) தொலைவில் உள்ள அகோரா கட்டாக்கில் உள்ள தார்-உல்-உலூம் ஹக்கானியா பள்ளியில் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு பதிலளிக்கும் விதமாக, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 45 நிமிடங்க…
-
- 0 replies
- 78 views
-
-
உத்தர பிரதேசத்தில் 2 வயது பெண் புலியை அடித்தே கொன்ற கிராம மக்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உத்தர பிரதேசத்தின் தூத்வா புலிகள் காப்பகத்தில் இரண்டு வயது பெண் புலி ஒன்று கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், சையத் மோசிஸ் இமாம் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்வா புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்றை கிராம மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அந்தப் பெண் புலி தாக்கியதால் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அதே புலிகள் காப்பகத்தில் உள்ள மலனி என்ற பகுதியில் மற்றொரு புலி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தூத்வா புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரான டி. ரங்கராஜு இந்த இரண்டு விவகாரம் தொடர்பாகவும் வழக்குப் பத…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
அதிகாலையில் நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்! நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், இமயமலைப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது. பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தின் பைரப் குண்டாவைச் சுற்றி அதிகாலை 2.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை அளந்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் 5.5 என அதன் அளவை மதிப்பிட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது, குறிப்பிடத்தக்க ச…
-
- 0 replies
- 115 views
-
-
100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க …
-
- 0 replies
- 62 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2025 "எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். 'ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?' என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார். இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எனது சகோதரர் அவர் விரும்பும் ந…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,CCTV படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் தௌஹித் ஹொசைன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை ஜனவரி மாதம் சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், எத்திராஜன் அன்பரசன் பதவி, பிபிசி உலக சேவை, தெற்காசிய ஆசிரியர் 26 பிப்ரவரி 2025, 03:08 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கொண்ட வங்கதேச குழு ஒன்று சீனாவுக்கு 10 நாள் பயணத்தை தொடங்கியுள்ளது. அவர்கள் சீன அரசு அதிகாரிகளுடனும், அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்துவார்கள் என அந்த குழுவில் இடம்பெற்ற தலைவர் ஒருவர் பிபிசியிடம் உறுதி செய்தார். பல்வேறு விவகாரங்களில் …
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா நிகழ்வு! மகா கும்பமேளா நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக நிறைவடைகிறது, இறுதி அமிர்த ஸ்நானத்திற்காக பக்தர்கள் குவிந்தனர் மகாசிவராத்திரியை முன்னிட்டு மகா கும்பமேளா நிகழ்வில் இறுதிப் புனித நீராடலுக்காக புதன்கிழமை (26) பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மகாசிவராத்திரி என்பது சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக சங்கமத்தை குறிக்கிறது மற்றும் கும்பமேளாவின் பின்னணியில் ஆழமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மற்றும் பக்தர்களுக்கு ‘மோட்சம்’ வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்துக்களால் புனித தலமாக போற்றப்படும் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் புனித சங்கமத்திற்கு ஏராளமான பக்…
-
- 0 replies
- 84 views
-
-
சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்! பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார். PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர…
-
- 1 reply
- 159 views
-
-
மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை வர்த்தகர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422447
-
- 0 replies
- 124 views
-
-
20 FEB, 2025 | 12:29 PM முகநூலில்அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தளம் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறியதாவது: இந்திய கடற்படை குறித்த தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு குழு திரட்டி வருவதாக எங்களுக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தீபக் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் கார்வார் அருகேயுள்ள கடம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஆகாஷ் நாயக் வேதன் தண்டேல் ஆகிய இருவர் பற்றிய தகவல் பற்றிய தகவல் கிடைத்தது. இந்த இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூல…
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
தலைநகர் டெல்லியில், காலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறவேண்டுமெனில், ‘நிலநடுக்கத்தின் மையம் (epicentre)’ டெல்லி தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த ஸ்ரீஜன் பால் சிங், நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெல்லியில் இருந்ததால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதற்குமுன் இதற்குமுன் இதுபோன்ற நிலநடுக்கத்தை உணர்ந்ததில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயத்தில், டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரி…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
16 FEB, 2025 | 07:20 AM புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் சனிக்கிழமை (பிப்.15) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டெல்லியில் உள்ள புகையிரத நிலையத்தில் ரயிலில் பயணிக்க வேண்டி திரண்ட காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் புதுடெல்லி புகையிரத நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. உயிரிழந்தந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதை டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார். பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜுக்குச…
-
- 1 reply
- 156 views
- 1 follower
-
-
தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட எலோன் மஸ்க்கை வியாழக்கிழமை (13) சந்தித்தார். வொஷிங்டனில் அமைந்துள்ள பிளேர் ஹவுஸில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார். சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள மோடி, “இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ பற்றி தொழில்நுட்ப பில்லியனருடன் விவாதித்ததாக பதவிட்டார். அத்துடன், விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம…
-
- 0 replies
- 235 views
-
-
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள்! திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து 491.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் சங்கமம்) நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 8.54 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை மாத்திரம் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல் துறை சுட்டிக்கட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாத பெளர்ணமியில் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வ…
-
- 0 replies
- 295 views
-