அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3287 topics in this forum
-
படக்குறிப்பு, பகிடெரு கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கர்க்கிபட்டி உமாகண்ட் பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீரானது கிணறுகள், கடல் நீர் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகின்றது. தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. மோட்டார்களோ, வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். "இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெர…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
இந்த கிராமத்தில் அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டும். எந்த கிராமம்? இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்சால்மரில் உள்ள ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் கட்டாயம் இரண்டு திருமணங்களை செய்து கொள்வார்களாம். இதனை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னால் அதிர வைக்கும் காரணம் ஒன்றும் உள்ளது. நமது நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி பலதர மணம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த கிராமத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்கின்றனர். அதாவது…
-
- 0 replies
- 318 views
-
-
மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்! கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால், மத்தியப் பிரதேசத்தின் மைஹார் எல்லையில் உள்ள பொலிஸார், பிரயாக்ராஜ் நோக்கி நகர முடியாது என்று தெரிவித்தனர். நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பிரயாக்ராஜின் போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். கடுமையான போக்குவரத்து நெ…
-
- 0 replies
- 124 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயார…
-
-
- 22 replies
- 1.2k views
- 1 follower
-
-
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! 8 Feb 2025, 3:24 PM புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 08) தோல்வியடைந்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. பாஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவை சந்தித்தார். ஆனால், அடுத…
-
- 3 replies
- 202 views
- 1 follower
-
-
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி, இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மீனவர்களுக்கு நீதி கிடைக…
-
- 0 replies
- 132 views
-
-
ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்! இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருந்தது. இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். அத்துடன் 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81…
-
- 0 replies
- 155 views
-
-
ஷேக் ஹசீனாவின் வீட்டை தீக்கிரையாக்கிய பங்களாதேஷ் எதிர்ப்பாளர்கள்! பங்களாதேஷில் எதிர்ப்பாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் குடும்ப வீட்டையும், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களின் வீட்டையும் நாசப்படுத்தி, தீ வைத்து எரித்தனர். கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அவரை வெளியேற்றியதில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஹசீனா இந்தியாவில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் நாட்டிற்கு உரையாற்றுவார் என்ற செய்தியால் இந்த அமைதியின்மை ஏற்பட்டது. 20 ஆண்டுகளாக பங்களாதேஷின் பொறுப்பில் இருந்த 77 வயதான ஹசீனா, ஒரு சர்வாதிகாரியாகக் முத்திரை குத்தப்பட்டார். இந்த நிலையில் புதன்கிழமை (06) மாலை எதிர்ப்பாளர்கள் டாக்காவில் அமைந்துள்ள ஹசீனாவின் மறைந்த…
-
- 0 replies
- 145 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 1 பிப்ரவரி 2025, 03:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். "அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திர…
-
- 3 replies
- 257 views
- 1 follower
-
-
தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு January 25, 2025 11:56 am மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து அவதானித்து வருகிறது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடலின் ஆரோக்கியமான செல் பகுதிகளை தாக்குவதே கில்லியன் பேர் சிண்ட்ரோம் ஆகும். இந்த நோய் முதலில் தசைகளை இயக்கும் நரம்புகளை பாதிக்கிறது. பின் கை, கால் தசைகள் வலுவிழக்கும். தொடர்ந்து தசை செயலிழப்பு ஏற்படும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் எடுத்த…
-
- 2 replies
- 220 views
- 1 follower
-
-
உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி) அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டதில் நிறுவப்பட்ட தடைகள் உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க ஏராளமான அம்பியூலன்ஸகள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் 15 உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆர…
-
- 0 replies
- 125 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் இந்திய பங்குச் சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பங்குகளை வாங்குவோரைவிட விற்பவர்களின் அளவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டுமே கடும் சரிவைக் கண்டுள்ளது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21-ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரி…
-
-
- 2 replies
- 239 views
- 1 follower
-
-
மகா கும்பமேளா விழாவில் வைரலான காந்தக் கண்ணழகி மோனாலிசா போஸ்லே! இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளரான மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) பிரயாக்ராஜில் நடந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா விழாவின் போது எதிர்பாராத விதமாக புகழ் பெற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வைரலானார். அவர் தற்போது போலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிஸ்ரா மோனாலிசாவை அவரது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கும்பமேளா விழாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்கும் 16 வயதான மோனாலிசாவின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பின்னர், இணைய நட்சத்திரமாக அவரது பயணம் தொடங்கியது…
-
- 0 replies
- 337 views
-
-
கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். 4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார். முன்னதாக, நேற்று (ஞாய…
-
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ., கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்கள் பெற்றதில் முறைகேடு, அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த…
-
- 0 replies
- 122 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் பேசிய வீடியோ ஒன்று ரெட்டிட் வலைதளத்தில் வைரலாக பரவியது. வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும், ஞாயிறு அன்றும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். அமெரிக்காவைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் சீனர்கள் பணியாற்றுவது போன்று வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் எல் & டி நிறுவன ஊழியர்களிடம் பேசியுள்ளார். அது விமர்சனங்களுக்கு வழி வகை செய்தது. …
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் விவசாயி ஒருவரின் வயலில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது திடீரென வேகமாக நீர் வெளியேறியது. கட்டுரை தகவல் எழுதியவர், திரிபுவன் பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் நடந்த ஒரு சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. ஜெய்சல்மரில் உள்ள மோகன்கரை சேர்ந்த விக்ரம் சிங் பதி என்பவரின் பண்ணையில் பாசன வசதி இல்லாததால், ஆழ்துளைக் கிணறு தோண்டத் தொடங்கினார். 800 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வராததால், மேலும் ஆழமாகத் தோண்ட முடிவு செய்தார். இதற்குப் பிறகு, அதிகாலையில் பூமியில் இருந்…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு! திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாள்ளையோட்டி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச தரிசன அனுமதி சீட்டு விநியோகம் இடம்பெற்றுள்ளது இந்த இலவச தரிசன அனுமதி சீட்டுக்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com…
-
- 0 replies
- 173 views
-
-
இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்! இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் செய்து வருகிறது. இன்னிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக வி. நாராயணனை (தமிழகம் குமரி மாவட்டம் ) மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது. வரும் 14-ம் திகதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். இவர் இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக தற்போது உள்ளதுடன் இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய…
-
- 1 reply
- 198 views
- 1 follower
-
-
திபெத்திய பீடபூமியின் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணைத் திட்டமானது இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. திபெத்தில் உருவாகும் நதி யார்லுங் சாங்போ. இந்த நதி திபெத்தை விட்டு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் இறுதியாக வங்காளதேசத்திலும் பாயும் போது பிரம்மபுத்திரா நதியாக மாறுகிறது. இந்த யார்லுங் சாங்போ நதியைத் தடுத்து மிகப்பெரிய அணையை கட்ட சீனா முயற்சித்து வருகிறது. முன்னதாக, 2020ம் ஆண்டில், சீனாவில் உள்ள பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப் என்ற நிறுவனம், தன்னாட்சி பெற்ற திபெத்தில் உற்பத்தியாகும் யார்லுங் சாங்போ ஆற்றில் அணை கட்…
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
07 JAN, 2025 | 12:44 PM சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் குரூப் (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 3இ500 வீரர்கள் உள்ளனர். டிஆர்ஜி படைப் பிரிவு வீரர்கள்இ வனப்பகுதிகளில் முகாம் அமைத்து நக்சல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு முதல் …
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்புக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. குறித்த நிர்வாக அலகுகளில் சில இடங்கள் இந்திய – லடாக்கின் அதிகார வரம்புக்குட்டவை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 நிர்வாக அலகுகளை உருவாக்கும் அறிவிப்பை அண்மையில் சீனா வெளியிட்டது. இதற்குச் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு ஒப்புதல் அளித்தது. இது தொடர்பில் டெல்லியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்…
-
- 3 replies
- 257 views
-
-
பயிற்சியின் போது விழுந்து நொறுங்கிய ஹெலிகொப்டர் இந்தியாவில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகொப்டர் விழுந்தது நொறுங்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மதியம் 12:10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகொ…
-
- 0 replies
- 154 views
-
-
எல்லையில் பாக்- தலிபான் மோதல் -முழுமையான யுத்தம் குறித்து அச்சம் Published By: Rajeeban இ01 Jan, 2025 | 02:20 PM https://www.telegraph.co.uk/ பாக்கிஸ்தானிய படையினரை இலக்குவைத்து ஆப்கானின் தலிபான்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக முழுமையான யுத்தம் குறித்து அச்சநிலையேற்பட்டுள்ளது. பாக்ஆப்கான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தானின் பலநிலைகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள தலிபான் பாக்கிஸ்தான் பதில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்த்து எல்லைக்கு தனது ஆயுதமேந்திய உறுப்பினர்களை அனுப்பிவைத்துள்ளது. ஆப்கானின் தலிபானிற்கு நெருக்கமான தெஹ்கீர…
-
- 0 replies
- 217 views
-
-
திருப்பதி காணிக்கை பணத்தில் 100 கோடி ரூபா மோசடி. திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒருவர், தனது உள்ளாடைக்குள் மறைத்து உண்டியலிலிருந்த பணங்களை திருடியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் இது அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. சுமார் நூறு கோடி வரை இங்கு திருட்டு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று ம…
-
- 0 replies
- 183 views
-