அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
இந்திய அரசின் 2000, 500, 200 ரூபாய் தாள்களை பயன்படுத்த வேண்டாம் என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசு, உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை விலக்கிக் கொண்டது. அதன் பிறகு இந்தியா வெளியிட்ட புதிய தாள்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுள்ளது. 2016 நவம்பர் 8ம் தேதியன்று இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரூபாய் தாள்கள் புழக்கத்தை தடை செய்யும் நேபாள அரசின் அறிவிப்பு பலருக்கும் வியப்பளிப்பதாக இருக்கிறது. …
-
- 0 replies
- 939 views
-
-
கோவில் பிரசாதத்தில்... பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? 12 பேர் பலி. பின்னணியில்... 2 பேர் கைதுகர்நாடக மாநிலத்தில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு 12 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்புற கர்நாடக மாவட்டம் சாம்ராஜ்நகர். இங்கு கொள்ளேகால் தாலுகாவில் உள்ள சுளவாடி என்ற கிராமத்திலுள்ள மாரம்மா என்ற அம்மன் கோயிலில் கோபுரம் கட்ட ஊர்கமிட்டி முடிவு செய்தது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பூஜைகள் முடிவடைந்ததும், பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்று பிரசாதம்…
-
- 1 reply
- 642 views
-
-
படத்தின் காப்புரிமை DASSAULT RAFALE பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் விதத்தில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை பிரான்சின் டஸ்ஸோ நி…
-
- 0 replies
- 351 views
-
-
மோடியின் வெளிநாடுகளுக்குப் பயணங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபா செலவு December 14, 2018 கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018, டிசம்பர் 3-ம் திகதிவரை பிரதமர் மோடி 84 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார் எனவும் இதற்கான செலவு 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அதிகமான வெளிநாடுகளுக்குப் பயணம் செல்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்திவந்தநிலையில் இது தொடர்பில் விளக்கமளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தப் பயணத்தின் போது, உலகத் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜி ஜின்பி…
-
- 0 replies
- 323 views
-
-
தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் மீண்டும் பதவியேற்பு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெரும்பான்மை பெற்றதையடுத்து, சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன்போது தெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்து வாழ்த்து தெரிவித்தார். குறித்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். முதல்வரின் பதவியேற்பு காரணமாக ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். இதனால் போக்கு…
-
- 0 replies
- 455 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய அரசு சட்டரீதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்…
-
- 6 replies
- 746 views
-
-
நான் இந்தியாவின் மகன்... தலாய் லாமா தடாலடி ! டெல்லி: நான் இந்தியாவின் மகன் என்று புத்த மத துறவியும், திபெத்திய ஆன்மீக தலைவருமான தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவின் மிரட்டலுக்கு அடிபணியாமல், அந்த நாட்டை எதிர்த்து அமைதி வழியில் போராடி வருபவர் தலாய் லாமா, இந்தநிலையில், சீனா மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தான் இந்தியாவின் மகன் என்றார். எனது சிந்தனைகள் அனைத்தும் உலகிற்கே அறிவொளியை தந்த நாளந்தா பல்கலைக்கழகத்துடையது. அதே போன்று, இந்தியாவின் பருப்பு சப்பாத்தி மற்றும் தோசைகள் தான் உயிரோட்டம் தருகிறது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் இந்திய நாட்டைச் சேர்ந்தவன். அதனால் தான் நான் ஒரு இந்தியாவின்…
-
- 0 replies
- 434 views
-
-
722 கோடி ரூபாய் செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம்..! உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று (புதன்கிழமை) இரவு மும்பையில் ஆடம்பரமாக திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்ததுடன், மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்ததுடன் பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி காணப்படதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்குமான செலவு…
-
- 0 replies
- 488 views
-
-
செளதிக் பிஸ்வாஸ் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவை ஆளும் இந்து தேசிய கட்சியான பா.ஜ.க தனது முக்கிய இரண்டு மாநிலங்களில் தோல்வி அடைந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் இழுபறி நிலவி வருகிறது. அப்படியானால், இந்தியாவின் மூத்…
-
- 1 reply
- 665 views
-
-
இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ் இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் சட்டசபைக்களுக்கு இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கின்றது சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியபிரேதசம் தெலுங்கானா மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளிற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டுள்ளன இந்நிலையில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் ராஸ்டிரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கின்றது. மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கின்றது. ராஜஸ்தான் மாநிலத்திலும் ச…
-
- 1 reply
- 405 views
-
-
5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடி…
-
- 3 replies
- 712 views
-
-
கருணாநிதி, ஜெ.க்கு கிடைத்த அதே வாய்ப்பு.. கைகூடி வருகிறது.. டெல்லியில் விட்டதை பிடிப்பாரா ஸ்டாலின்? தேசிய அரசியலில் திமுக மூலம் தமிழகத்தை மீண்டும் கோலோச்ச செய்ய பெரிய வாய்ப்பு ஒன்று ஸ்டாலினுக்கு கிடைத்து இருக்கிறது. டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கலந்து பெரிய சந்திப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கைகூடி வந்துள்ளது.இந்த சந்திப்பில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது. 40 எம்.பி தொகுதிகளை கொண்டு இருக்கும் தமிழகத்தின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே கூட்…
-
- 0 replies
- 275 views
-
-
தெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல் December 7, 2018 தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகின்ற நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றதுஇ காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்திவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நில…
-
- 0 replies
- 382 views
-
-
டாலருக்கு கெட்-அவுட் சொன்னது இந்தியா.. யுஏஇ.யுடன் இனி ரூபாயில்தான் வியாபாரம்.. அமெரிக்கா ஷாக் அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து விலக தொடங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முதலில் ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தது, பின் சீனாவுடன் நெருக்கம் காட்டுவது, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வது என்று இந்தியா தொடர்ந்து அமெரிக்காவை மறைமுகமாக சீண்டி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவை அதிர வைக்கும் வகையில் டாலர் வர்த்தகத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவும் அரபு அமீரகமும் போட்டு இர…
-
- 0 replies
- 447 views
-
-
இறைச்சிக்காகக் கடத்தப்படும் நாய்கள்! - திரிபுராவில் தொடரும் அதிர்ச்சி சம்பவம் சீனாவில், ஆண்டுதோறும் நாய்க்கறி திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தத் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமாக நடைபெறுகிறது. இதே கலாசாரம் தற்போது வட இந்தியாவிலும் அதிகம் பரவிவருகிறது. அசாம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் உள்ள விலங்குகள் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இருந்தும் கள்ளச் சந்தையில் நாய்க்கறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. PhotoCredits : china Associated Press …
-
- 2 replies
- 1.4k views
-
-
போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொலை - பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்தோர் கைது படத்தின் காப்புரிமை YOGESH KUMAR SINGH Image caption சுபோத் குமார் சிங் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் மாவட்டத்தில் மத அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் தாக்கியதில் காவல்துறை அதிகாரி சுபோத் கே சிங் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், நான்கு பேரை விசாரித்து வருகின்றனர் என்று மூத்த காவல் அதிகாரி பிரசாந்த் குமார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? இந்தும…
-
- 1 reply
- 1.1k views
-
-
உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை! உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன. இதனால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி…
-
- 0 replies
- 962 views
-
-
சபரிமலை பகுதியில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு December 1, 2018 சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 4-ம் தினதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனால், ஐயப்பன் கோவில் அமைந்திருக்கும் சபரிமலையை சுற்றியுள்ள உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் திகதிp வரை நீடித்து பத்தினம்திட்டா கலெக்டர் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். http://globaltamilnews.net/2018/10…
-
- 0 replies
- 862 views
-
-
டிரம்ப் டுவீட்டுக்கு குட்டு வைத்து டுவீட் போட்ட மாணவி. அப்பப்பா... என்ன போடு போடுது இந்த ஸ்னோ.... புவி வெப்பமாதலுக்கு என்னப்பா நடந்தது என்று போட்டார் ஒரு டுவிட்.... வேற யாரு நம்ம டிரம்ப்.... புவி வெப்பமாதல் எல்லாம் சும்மா பீலா என்று கருதும் டிரம்ப், ஸ்னோவ் அதிகமாக விழுவதை அதனுடன் கோர்த்து விட பார்த்தார். இந்த இந்திய மாணவியோ, 'நான் உன்னிலும் பார்க்க 54 வயது குறைவு. இப்பதான் ஏதோ ஒரு மாதிரி உயர் பாடசாலை பரீட்ச்சை எழுதி முடித்துளேன். ஆனாலும், இரண்டாம் வகுப்பில் படித்ததை வைத்து சொல்கிறேன். புவி வெப்பமாதல் வேறு, காலநிலை வேறு. (WEATHER IS NOT CLIMATE) இது புரியாவிடில், நான் இரண்டாம் வகுப்பில் படித்த encyclopedia வை அனுப்பி வைக்கிறேனே, உதவியாக இருக்கும் என்று டுவ…
-
- 1 reply
- 702 views
-
-
படத்தின் காப்புரிமை REHANA FATHIMA Image caption ரெஹானா ஃபாத்திமா சபரிமலைக்கு செல்ல முயற்சித்து தோல்வியடைந்த ரெஹானா ஃபாத்திமா, அங்கு செல்லும்போது, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடை தெரியுமாறு புகைப்படம் வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைத்தொடர்பு பிரிவில் பணியாற்றிய 32 வயதான ரெஹானா ஃபாத்திமா ஒரு செயற்பாட்டாளர் மற்றும் மாடல் ஆவார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, அங்கு செல்ல முயன்ற அவர், போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அக்டோபரி…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாடாளுமன்றம் நோக்கி ஒரு லட்சம் விவசாயிகள் பேரணி.. உச்சகட்ட பரபரப்பில் டெல்லி. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 29 மாநில விவசாய சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி செல்ல உள்ளனர். நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.இதில் பங்கேற்பதற்காக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். "கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா" என்பது இவர்களின் முழக்கமாகும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கைய…
-
- 0 replies
- 330 views
-
-
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து பயங்கரவாத வழக்கு ஒன்றுடன் தொடர்புப்படுத்தி மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் இடம்பெற்ற முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத், பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளைச் சுமத்தியது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியைக் கைது செய்ததாகத் தீவிர…
-
- 0 replies
- 458 views
-
-
சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம்.. நம்பிக்கையுடன் இருப்போம்.. அந்தமான் டிஜிபி வெளியுலக தொடர்பை விரும்பாத ஆதிவாசிகள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் சவாலான காரியம் என்றும் நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் டிஜிபி தீபேந்திர பதாக் தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ஆலன் சாவ் (26). இவர் கிறிஸ்துவ மத போதகர். இவர் வெளியாட்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் ஆதிவாசிகளை கிறிஸ்துவ மதத்துக்கு மாறுமாறு பிரசாரம் செய்ய சென்றார். இதற்காக 7 மீனவர்களுக்கு லஞ்சம் கொடுத்து படகில் சென்று இறங்கினார். அப்போது அவரை திரும்பி செல்லுமாறு ஆதிவாசிகள் சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. எனினும் அதை மதி…
-
- 0 replies
- 291 views
-
-
உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை! உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் அவானிஷ் அவாஸ்தி இதனை உறுதி செய்துள்ளார். ”ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீற்றர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீற்றரிலும், பீடம் 50 மீற்றரிலும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பீடம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ”இந்த வே…
-
- 5 replies
- 720 views
-
-
உலகிலேயே மிக உயரமானது.. குஜராத்தில் இன்று திறக்கப்படுகிறது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை! குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இந்த நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும். இதற்கான விழா ஏற்பாடுகள் மிகவும் பெரிய அளவில் செய்யப்பட்டு இருக்கிறது. விடுதலை போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிலை திறக்கப்படுகிறது. கடந்த 2013 அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் மோடி இந்த சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். இந்த ந…
-
- 16 replies
- 3.1k views
-