Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராகுல் Vs மோடி - இதயச்சந்திரன் அண்மையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், இந்த இருதுருவ அரசியல் மோதல் இந்திய நாடாளுமன்ற அதிகாரத்திற்கான போட்டி போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் மாறிவரும் பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல் என்பது ஆழமான பங்கினை வகிப்பது போலுள்ளது. மோடியின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் அதானியின் மீதும், அவர் உருவாக்கிய அதானி குழும சாம்ராஜியத்தின் மீதும், மேற்குலக ஹின்டன்பேர்க் நிகழ்த்திய தாக்குதலும், கிடப்பில் போடப்பட்டிருந்த குஜராத் படுகொலை ஆவணங்களைத் தூசிதட்டி வெளியிட்ட மேற்குலகின் பழம்பெரும் பிபிசி ஊடகத்தின் நகர்வும், அடுத்து வரப்போகும் பூகோள அரசியலின் இராஜதந்திர மோதல்களுக்கு அடித்தளம…

  2. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை! “மோடி சாதி..” சர்ச்சை கருத்து! மோடி குறித்து சர்ச்சை கருத்து பற்றிய கிரிமினல் அவதூறு வழக்கில் நீதிமன்றம், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதன்படி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது! இந்த வழக்கின் முழு பின்னணியை பார்க்கலாம். ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணியை பார்க்கலாம். …

  3. 'காந்தி சட்டம் பயிலவில்லை' - ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சொல்வது உண்மையா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “மகாத்மா காந்தி எந்தப் பல்கலைக்கழக பட்டமும் பெறவில்லை, சட்டக்கல்வி பட்டம் பெற்றவர் இல்லை” என்றும் “உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே முடித்துள்ளார்” என்றும் வியாழக்கிழமையன்று தெரிவித்தார். மேலும், காந்தி சட்டப்படிப்பு பயின்றவர் என்ற தவறான எண்ணம் படித்தவர்களிடம்கூட இருப்பதாகவும் ஆனால் காந்திஜியிடம் எந்தப் பட்…

  4. புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: உச்ச நீதிமன்றத்தில் காங்., திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு Published By: RAJEEBAN 24 MAR, 2023 | 02:41 PM புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி 14 இந்திய எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை செய்கிறது. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிஐ, அமலாக்கத் துறை, போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், பாஜகவில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுகிறது…

  5. காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜக்தர் சிங் பதவி,பிபிசி 24 மார்ச் 2023, 12:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் `நான் என்னை ஒருபோதும் இந்தியனாக கருதியது இல்லை. நான் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன் என்பதற்காக என்னை நீங்கள் இந்தியன் என கூற முடியாது. என்னை பொருத்தவரை அது ஒரு பயண ஆவணம் மட்டுமே` இந்த வார்த்தைகள் அம்ரித்பால் சிங் கூறியது. இவர் காலிஸ்தான் ஆதரவாளர் மற்றும் `வாரிஸ் பஞ்சாப் டி` என்ற பஞ்சாப் இயக்கத்தின் தலைவர். சீக்கியர்களுக்கு …

  6. 'அரசை விமர்சிப்பவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்': இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட மனித உரிமை அறிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 'மனித உரிமை மீறல் சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. சிறுபான்மை சமூக மக்கள், அரசை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்படுகின்றனர்' என்று இந்தியா குறித்து அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு இந்தியா இன்னும் பதில் அளிக்கவில்லை. பதில் கிடைத்தவுடன் அது இந்த அறிக்கையில் சேர்க்கப்படும். ”இந்தியாவில் அதிகரித…

  7. "மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவு, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை." - மத்திய அரசு இந்தியாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல்கள் என்பவை நாள்தோறும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வழக்குகள் பதிவுசெய்யப்படுமளவுக்கு, அவற்றில் எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர் என்பது வெளியில் தெரிவதில்லை. தாக்குதல் சித்திரிப்புப் படம் இந்த நிலையில், 2018 முதல் 2021 வரையில், பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல் த…

  8. ஜாலியன்வாலா பாக் படுகொலை: 21 ஆண்டுகள் காத்திருந்து உதம் சிங் பழிவாங்கியது எப்படி? பட மூலாதாரம்,WWW.SHAHEEDKOSH.DELHI.GOV.IN கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 21 மார்ச் 2023, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 21 மார்ச் 2023, 05:01 GMT மாரியோ புஸோவின் The God Father என்ற ஆங்கில நாவலில், "ரிவென்ஜ் இஸ் எ டிஷ் தாட் டேஸ்ட்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் கோல்ட்” என்ற ஒரு வசனம் வரும். 'பழிவாங்கல் என்பது ஆறவைத்து பரிமாறப்படும்போது மட்டுமே எல்லாவற்றையும் விட சுவையாக இருக்கும் ஒரு உணவு பதார்த்தம் போன்றது' என்பது அதன் பொருள். 1…

  9. அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து Published By: RAJEEBAN 16 MAR, 2023 | 02:35 PM அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:15 மணியளவில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. https://www.virakes…

  10. ரூ.70500 கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் - இந்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் Published By: RAJEEBAN 17 MAR, 2023 | 10:25 AM இந்தியபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.70500 கோடி மதிப்புக்கு மேலான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்படி ராணுவத்துக்கு 307 நவீன பீரங்கிகள் (ஏடிஏஜிஎஸ்) ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்திடம் (டிஆர்டிஓ) வாங்கப்படவுள்ளன. கடற்படை பயன்பாட்டுக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணைகள் ரூ.56000 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் போர் கருவிகள் வாங்கவும் ஒப்புதல…

  11. உத்தரப்பிரதேசத்தில் ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் என்கவுண்ட்டர்கள்! உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில், 10 ஆயிரம் முறை பொலிஸார், எதிர்பாரா தாக்குதல் அல்லது என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. கொடிய ரவுடிகள் உள்பட 178 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கிட்டதட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் குற்றவாளிகள், மாபியா கும்பல்களை சகித்துக் கொள்வதிலும் அரசு கருணை காட்டாது என்று யோகி ஆதித்யநாத திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். https://atha…

  12. இம்ரான் கானை கைது செய்ய வந்த போலீஸ், தொண்டர்கள் கல் வீசியதால் கண்ணீர் புகை குண்டு வீச்சு - பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கட்டுரை தகவல் எழுதியவர்,ஷுமைலா ஜாஃப்ரி பதவி,பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 26 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் ஹானை கைது செய்ய போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் தொண்டர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்ந…

  13. பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலை அனுமதிக்க முடியாது: இந்தியா பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் மற்றும் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகளை அனுமதிக்க முடியாது என இந்தியா தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்தியா வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையில், சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இருநாடுகள் இடையிலான பிரச்னைகள் முடிவுக்கு வரவில்லை என்றாலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதையே இந்தியா விரும்புவதாகவும், எல்லையில் ஊடுருவல், மற்றும் போர்நிறுத்த மீறல்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. htt…

  14. இந்திய கடற்படையின் ட்ரோபெக்ஸ் பயிற்சியில் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள், 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு Published By: VISHNU 13 MAR, 2023 | 12:41 PM இந்தியக் கடற்படையின் மிகப் பெரிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சியான 'ட்ரோபெக்ஸில்' சுமார் 70 கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 75க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்கின்றன. மேலும் இந்த பயிற்சிக்கு 21 மில்லியன் சதுர கடல் மைல்களை உள்ளடக்கியுள்ளதாக கடற்படை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். கடற்படையின் கிட்டத்தட்ட அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கிய சிக்கலான பயிற்சிகள் மற்றும் சூழ்ச்சிகளின் தொடர் 'தியேட்டர் லெவல் ஆப்பரேஷனல் ரெட…

  15. இஸ்லாமுக்கு ஆபத்து என்பதால் நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதா? பட மூலாதாரம்,IMAGEBROKER/ALIYAH கட்டுரை தகவல் எழுதியவர்,சுகத் முகர்ஜி பதவி,பி பி சி ட்ராவல்ஸுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு குளிர்காலக் காலையில் அடர்ந்த பனிமூட்டம் படர்ந்திருந்தது. குதிரை வண்டிகளை முந்திக்கொண்டு எங்கள் கார் மெதுவாக முன்னேறியது. பிஹாரில் இன்னும் குதிரை வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. வண்டியை இழுக்கும் குதிரையும் அதன் பின்னால் தலைப்பாகை அணிந்த வண்டிக்காரரும் மூடுபனியில் நிழல்கள் போல் தெரிகிறது. இருப்பினும், புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, அதிக…

  16. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது: அடுத்து கேஜ்ரிவால் என்கிறது பாஜக பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மணீஷ் சிசோடியா 26 பிப்ரவரி 2023, 14:16 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவந்தது. மணீஷ் சிசோடியா மீதான ஊழல் வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்துகொண்டிருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை அவரை சிபிஐ வி…

  17. அதானிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் சீனாவின் சாங் சுங்-லிங் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி குழுமத்தின் நடவடிக்கைகளில் சீன நாட்டவர் ஒருவருக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது' என்றும் ஏதேனும் முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இவரை குழு சேர்த்திருக்கிறதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தை நடத்திய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. "சாங் சுங்-லிங்குடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வடகொரியாவிற்கு பெட்ரோலியம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபை விதித்த தடைகளுக்கு எதிரானது. 2005 ஆம் ஆண்டில் சாங் சுங்-லிங் தன…

  18. கர்ப்பிணிகளுக்காக இந்து அமைப்பு நடத்தும் 'கர்ப் சன்ஸ்கார்' அறிவியல் பூர்வமானதா? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசிலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக 'கர்ப் சன்ஸ்கார்' என்ற பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) அமைப்பின் பெண்கள் பிரிவாகும். சம்வர்த்தினி நியாஸின் தேசிய அமைப்புச் செயலாளர் மாதுரி மராத்தே, "கர்ப்பிணிப் பெண்களுக்காக கர்ப் சன்ஸ்கார் என்ற பிரசாரம் தொட…

  19. பெரியார் சொன்னபோது மறுத்த சமூக நீதி பாதையை காங்கிரஸ் இப்போது கையில் எடுக்க என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 7 மார்ச் 2023, 05:05 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது. கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்…

  20. கடலில் கூடுகிறது இந்திய கடற்படைத் தளபதிகள் மாநாடு Published By: RAJEEBAN 06 MAR, 2023 | 10:51 AM இந்திய கடற்படைத் தளபதிகளின் மாநாடு, நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று தொடங்குகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''2023-ம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் இன்று தொடங்குகிறது. கடற்படைத் தளபதிகள் மட்டத்தில் ராணுவ-பாதுகாப்பு உத்தி போன்ற விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதுமையாக, கமாண்டர்கள் மாநாட…

  21. இந்திய மக்கள் மீதே குண்டு மழை பொழிந்த இந்திய விமானப் படை – இந்திரா காந்தி ஆட்சியில் என்ன நடந்தது? ரெஹான் ஃபஸல் பிபிசி நிருபர் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NIRMAL NIBEDAN இது ஜனவரி 21, 1966 அன்று நடந்த நிகழ்வு. இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்க இன்னும் மூன்று நாட்களே இருந்தன. மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) தலைவர் லால்டெங்கா, இந்தோனேசிய அதிபர் சுகர்னோவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். இந்தக் கடிதத்தில் மிசோ வரலாற்றைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருப்பதாவது, "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நாம் சுதந்திரம் இல்லாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தோம். …

  22. கொவிட்-19 ஐ ஒத்த வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பரவுகிறது! கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர் இருமல் ஆகியவை இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக இந்திய சுகாதாரத் துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குழுவைச் சேர்ந்த H3N2 உப பிறழ்வு வகை என அடையாளம் காணப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/243387

  23. மலேசியா மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கோலாலம்பூர் : மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் …

    • 0 replies
    • 181 views
  24. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்! பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர…

  25. சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 03:39 PM சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா ல் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/149641

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.