Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அதானி-ஹிண்டன்பெர்க் அறிக்கை: அமித் ஷா பேட்டி - "மறைக்க ஒன்றுமில்லை, பயப்பட எதுவுமில்லை" 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணலில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்துப் பேசியுள்ளார். ராகுல் காந்தியின் சமீபத்திய கருத்துகள், அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சை, 2024 தேர்தல் போன்ற பல விஷயங்களில் அமித் ஷா தனது கருத்தைத் தெரிவித்தார். மத்திய அரசாங்க அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அமித் ஷா, "எதிர்க்கட்சிகள் ஏன்…

  2. எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! 3 செயற்கைக்கோள்களை இணைத்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட்டை, விண்ணில் வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ செலுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ரொக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்ட…

  3. "நேரு மிகப்பெரியவர் என்றால் குடும்பப் பெயரில் சேர்க்க அஞ்சுவது ஏன்?" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV RAJYA SABHA "நேரு மற்றும் காந்தி" என்ற பெயரில் காங்கிரஸ் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்திய போதிலும், அவர்களில் யாரும் நேரு குடும்பப்பெயரை ஏன் பயன்படுத்தவில்லை என்று காந்தி குடும்பத்தினரை கடுமையாகச் சாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோதி பேசினார். மாநிலங்களவையில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோதி பதிலளித்தார். அப்போது அவர், நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸ் டோக்கனிசத்தை மட்டுமே கடைப்…

  4. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் எழுப்பிய பாகிஸ்தானை கடுமையாக சாடியது இந்தியா By VISHNU 09 FEB, 2023 | 12:45 PM ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்காக பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. இஸ்லாமாபாத் ஆழ்ந்த பாதுகாப்பின்மையைக் கொண்டுள்ளது மற்றும் அதன் அண்டை நாடு மற்றும் அதன் மதச்சார்பற்ற நற்சான்றிதழ்கள் மீதான வெறுப்பை தூண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியதற்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுவர் ராஜேஷ் பரிஹார் கூறுகையில், இஸ்லாமாபாத் இந்தியாவைப் பற்றி மீண்டும் மீண்டும் பொய்களைப் பேசுகிறது என…

  5. மாநிலங்களவையில் நரேந்திர மோதி: "எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சியை கலைத்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள திமுக" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV RAJYA SABHA ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து எவ்வளவு அதிகமாக சேற்றை வாரி வீசினாலும் அதை விட அதிகமாக தாமரை சிறப்பாக மலரும் என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இன்றைய உரையின்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திமுகவினரை பார்த்துப் பேசிய மோதி, "தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் அரசை காங்கிரஸ் கலைத்…

  6. மனதை படிக்கும் சக்தி - சர்ச்சை சாமியாருக்கு சவால் விட்ட மூடநம்பிக்கை ஒழிப்பாளர் கீதா பாண்டே பிபிசி 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FB/BAGESHWARDHAMSARKAROFFICIAL இந்தியாவில் மதகுருக்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் சமீப நாட்களில் ஒரு சர்ச்சைக்குரிய சாமியார் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் பெயர் திரேந்திர கிருஷ்ண ஷாஸ்திரி. அவரை பாகேஷ்வர் தாம் சர்கார் என்ற பெயரில் அழைக்கின்றனர். அவரின் ஆதரவாளர்கள் அவருக்கு 'தெய்வீக சக்தி' உள்ளது என்ற…

  7. அதானி வணிகத்தை மேம்படுத்துவதே இந்திய வெளியுறவு கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI அதானி குழுமத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி தவறான வழியில் உதவியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். அதானி குழுமம் பங்குச் சந்தையில் பெரிய அளவில் திருகு வேலை செய்தது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற சந்தை ஆய்வு நிறுவனம். இதையடுத்து அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு மோசமான சரிவை சந்தித்தது. …

  8. பசு கடத்தல் புகாரில் முஸ்லிம் இளைஞர் கொலை? ஹரியாணா போலீஸ் மீது என்ன சந்தேகம்? பிபிசி கள ஆய்வு அபிநவ் கோயல் பிபிசி செய்தியாளர், நூஹிலில் இருந்து 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBCHINDI படக்குறிப்பு, பசுப் பாதுகாவலர்கள் என அழைத்துக்கொள்ளும் நபர்களின் பிடியில் ஜனவரி 28-ம் தேதி காணப்பட்ட வாரிஸ், நஃபீஸ், ஷௌகீன். ஹரியாணாவில் பசுக்காவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு கும்பல் மூன்று முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து வைத்துத் தாக்கியதாக காட்ட…

  9. அதானி என்றால் அதானி அல்ல முன்பெல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆசீர்வாதம் பெற்ற கட்சி ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டு தேர்தலில் வெல்லும். காங்கிரஸுக்கு அப்படி புரவலர்களாக முதலாளிகள் இருந்தார்கள். பெரும் பணத்தை காங்கிரஸ் தலைமை தன் குடும்பத்துக்குள்ளும் வைத்துக்கொண்டது. அதைத் தக்க வைக்கவே வாரிசு அரசியலைப் பண்ணியது. ஆனால் பாஜக புரட்சிகரமாக ஒரு மாற்றத்தை செய்தது - அதுவே கார்ப்பரேட் முதலீட்டியமாகியது. அதுவே தேசிய வங்கிகளின் பணத்தை எடுத்து வியாபாரம் பண்ணி, கட்டமைப்புத் திட்டங்களை தானே எடுத்துப் பண்ணி, பொருளாதார முடிவுகளை, வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களை தனக்கேற்ப அமைத்துக் கொண்டு மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து உலகின் முதல் பத்து…

  10. ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறப்பு! ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஆலையில் முதற்கட்டமாக இலகுரக ஹெலிகொப்டர்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள ஆயிரம் ஹெலிகொப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆலை மூலம் 6 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1323386

  11. பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு கட்டுரை தகவல் எழுதியவர்,அபிநவ் கோயல் பதவி,பிபிசி செய்தியாளர் 17 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவணப்பட திரையிடலின் போது மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் கல் வீச்சுக்குப் பிறகு ஜே.என்.யூ. வாயில் வரை பேரணியாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் யார்? கற்களை வீசியது யார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. கல்வீச்சில் சில மாணவர்கள் காயமடைந்தனர். சஃ…

  12. ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு! அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாறைகள், 6 கோடி ஆண்டுகள் பழமையானவையாகும். ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை. நேற்று (வியாழக்கிழமை) இந்த பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர். நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்த…

  13. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை முழு விவரம் - நேரலை பட மூலாதாரம்,ANI 1 பிப்ரவரி 2023, 04:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையை ஏற்றுக் கொண்டவர்கள், அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறவும் முடிவும். எதிர்பார்க்கப்பட்டபடியே, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கான நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்ய முன்னுரிமை …

  14. நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு! இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு, ஜி-20 உச்சி மாநாடு உட்பட பல உலகளாவிய செயல்பாடுகளுக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அழைப்பு தனித்துவமானது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2023/1322740

  15. பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF நிறைவேற்றுச் சபை அனுமதி By SETHU 31 JAN, 2023 | 05:26 PM பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது. கடந்த வருடம் பங்களாதேஷில் ஒரு நாளில் 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிபபிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியதின் கடனுதவியின் கீழ் பங்களாதேஷ் அரசுக்கு உடனடியாக 476 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது. எனினும், இது வரி அதிகரிப்பு மற்றும் வங்கித்துறையில் மீட்கப்பட முடியாத கடன்…

  16. பாலியல் வல்லுறவு வழக்கில் குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2013ஆம் ஆண்டில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு குஜராத் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த பாலியல் சம்பவத்தில் 81 வயதான ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குப்தா பிபிசியிடம் தெரிவித்தார். இதேவேளை இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஆசராமின் மனைவி உட்பட…

  17. காந்தியின் கொலையை காவல்துறை தடுத்திருக்க முடியாதா? ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 30 ஜனவரி 2020 புதுப்பிக்கப்பட்டது 30 ஜனவரி 2023 பட மூலாதாரம்,GEORGE RINHART / GETTY காந்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து அவர் மீது மொத்தம் ஆறு கொலை முயற்சிகள் நடைபெற்றன. காவல்துறையினருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், சதித்திட்டத்தின் வேரை கண்டுபிடிக்கவில்லை. 1949 பிப்ரவரி 10இல், டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். செங்கோட்டைக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் காந்தி படுகொலை தொடர்பான தீர்…

  18. ஹுமாயுன் வரலாறு: பழைய கோட்டை படிக்கட்டுகளில் கால் தவறி இறந்த மன்னனின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஹுமாயூன் பற்றிய ஒரு கதை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. அவரது தந்தை பாபர் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, 'அல்லாஹ், உயிருக்கு ஈடாக உயிரைக் கொடுக்க முடியுமானால், என் மகன் ஹுமாயூனின் உயிருக்கு ஈடாக பாபரான நான் என் உயிரைக் கொடுப்பேன்' என்று கூறி பிரார்த்தனை செய்தார். ”அந்த நாளில் இருந்து …

  19. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்…

  20. காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்பு பட மூலாதாரம்,ANI 20 நிமிடங்களுக்கு முன்னர் ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஞாயிறன்று உயிரிழந்தார். முன்னதாக, பிற்பகலில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த நாப் கிஷோர் தாஸை அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்டார். ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க நபா கிஷோர் தாஸ்சென்றிருந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை, பாதுகாப்பு பணியில் ஈ…

  21. 43 லட்சம் இந்தியர்கள் சாக வின்ஸ்டன் சர்ச்சில் காரணமானது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜூபைர் அகமது பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROLI BOOKS பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர் இரண்டாம் உலக போரின் நாயகனாக நினைவு கூரப்படுகிறார். ஹிட்லர் போன்ற சக்தி வாய்ந்த சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடி தோற்கடித்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். அவர் பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக பார்க்கப்படுகிறார் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பிரிட்டனின் காலனித்த…

  22. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கே சவால் விட்ட கிராமத்து பெண்கள்: பள்ளிக்கே செல்லாமல் வங்கி தொடங்கிய கதை கட்டுரை தகவல் எழுதியவர்,அம்ருதா துர்வே பதவி,பிபிசி மராத்தி 28 ஜனவரி 2023, 09:40 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், பெண்களாகவே தொடங்கி, பெண்களுக்காகவே நடத்தப்படும், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா! அப்படியொரு வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. மான் தேஷி மகிளா கூட்டுறவு வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியைத் தொடங்கியது படிப்பறிவில்லாத…

  23. கெளதம் அதானி: பிரதமர் மோதியுடனான நெருக்கம், வாழ்வின் நான்கு திருப்புமுனை குறித்து சொன்னது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கெளதம் அதானி 30 நிமிடங்களுக்கு முன்னர் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்டிடிவியின் எதிர்காலம் முதல் பிரதமர் நரேந்திர மோதியுடனான நெருக்கம் பற்றி வெளிவரும் செய்திகளுக்கு தனது முதல் எதிர்வினையை அளித்துள்ளார். அதானி குழுமம் சமீபத்தில் என்டிடிவி என்ற செய்தி சேனலை வாங்கியது. இந்த பங்குகள் கொள்முதல் ஊடக உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக என்டிடிவி மேம்பாட்டாளர்களான…

  24. உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்! உலகின் முதல் மூக்கு வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசு தினமான நேற்று (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த மருந்துகளை வாங்குவதற்காக தனியார் மருத்துவமனைகள் முன்கூட்டிய…

  25. நீதித்துறை Vs மோதி அரசு: தொடரும் கசப்புணர்வு, சர்ச்சைக்கு தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே நிலவும் மோதல் அதிகரித்துள்ளது. மத்திய சட்ட அமைச்சரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருவதைப்பார்க்கும்போது பிளவு மேலும் அதிகரித்து வருவது போலத்தெரிகிறது. நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்ற விவகாரத்தில் கொலீஜியம் என்பது அரசியலமைப்பிற்கு புறம்பான ஒரு ஏற்பாடு என்று அரசு கூறுகிறது. அதே நேரத்தில் நீதிபதிகள் நியமன விஷயத்தில் அரசின் தலையீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை உண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.