அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
பட மூலாதாரம்,ANI 23 ஏப்ரல் 2025, 16:14 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். "தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார். அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு…
-
-
- 18 replies
- 877 views
-
-
அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி! அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர். இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்…
-
- 0 replies
- 145 views
-
-
மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்! மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார். அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னணியைப் பயன்படுத்தி” ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 91 views
-
-
ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்! மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் யாகூப் ஹபீபுதீன் டூசி, ஷம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். முகலாயப் பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளர் எ…
-
- 0 replies
- 111 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 14 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ வேண்டுகோளின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி மீது குற்றம் சாட்டப்பட்டது. பெல்ஜியத்தில் இருந்து தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த இந்திய ஏஜென்சிகள், அமலாக்க…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்! குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட இந்திய ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக குஜராத் ஏடிஎஸ் பகிர்ந்து கொண்ட தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையின் ஒரு கப்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சர்வதேச கடல் எல்லைப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒரு படகை கடலோர…
-
- 0 replies
- 141 views
-
-
14 APR, 2025 | 05:06 PM மியன்மாரில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஒப்பரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதலால் விமானத்தின் விமானிகளுக்கு தவறான தகவல்கள் கிடைக்க தொடங்கியது. இதனால் விமானிகள் குழப்பம் அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட விமானிகள், அவசரகால சிக்னல்களை ப…
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
26/11 மும்பை தாக்குதல்; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா! 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா (Tahawwur Hussain Rana), புதன்கிழமை (9) அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார். 64 வயதான அவர் சிறப்பு தனி விமானம் மூலம் இந்தியாவின் டெல்லிக்கு அழைத்து வரப்படவுள்ளார். அவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) காவலில் எடுத்து விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்…
-
- 2 replies
- 172 views
-
-
ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு April 10, 2025 11:50 am எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாவது உலக போரில் ஜெர்மனியும் அப்போதைய சோவியத் யூனியனும் கடுமையாக மோதிக் கொண்டன. பின்னர் 1945-ம் ஆண்டு சோவியத் யூனியன் தாக்குதலை சமாளிக்க முடியாத ஜெர்மனியின் நாஜி படைகள் சரணடைந்தன. அதன்படி 80-வது ஆண்டு தின விழாவை அடுத்த மாதம் 9-ம் திகதி பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றி தின விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார் என்று …
-
- 0 replies
- 152 views
-
-
பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா! பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்ததை நடத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்சிடம் இருந்து இந்திய பெறுமதியில் 63,000 கோடி ரூபாய் செலவில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்…
-
- 0 replies
- 73 views
-
-
காற்று, சோலார் மின் உற்பத்தியில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா! கடந்த 2024ம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு உலகின் 3வது பெரிய நாடாக மாறியது. புவி வெப்பமயமாதல் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, காற்று மின்சாரம் சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சாரம் ஆகியவற்றுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சோலார் மின் உற்பத்திக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனம் எம்பர், தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய மின்…
-
- 0 replies
- 190 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் கத்வி பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
தாய்லாந்து, இலங்கைக்கான பயணத்திற்கு முன் மோடியின் அறிக்கை! இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்துக்கு முன்னதாக பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) தாய்லாந்து புறப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 26% தள்ளுபடி பரஸ்பர வரிகளை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் மோடி இந்த விஜயம் அமைந்திருந்தது. மோடிக்கும் வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் மொஹமட் யூனுஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அல்லது சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்து தாய்லாந்து பயணத்தின் போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தைத் திட்டமிடுவது குறித்து நன்கு அறிந்தவர்கள், ம…
-
- 0 replies
- 94 views
-
-
குஜராத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து -13 பேர் உயிரிழப்பு. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த தொழிற்சாலையில் 15 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது திடீரென ஏற்பட்டவெடிவிபத்தினால் பட்டாசுத் தொழிற்சாலை முழுவதும் தீ மளமளவென பரவியதோடு தொழிற்சாலையின் மேற்கூரையும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், 4 பேர் காயமடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன…
-
- 0 replies
- 170 views
-
-
அமைச்சர்களின் சம்பளத்தை 24 வீதம் உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம். முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. …
-
-
- 2 replies
- 174 views
-
-
ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு: 6 பேர் உயிரிழப்பு ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சிலநாட்களாக நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, மரமொன்று வேருடன் சாய்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குல்லு மாவட்டத்தில் உள்ள மணிகரன் என்ற பகுதியிலேயே நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அப்பகுதியில் காணப்பட்ட மிகவும் பழமையான மரமொன்றே இவ்வாறு வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 120 views
-
-
இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்! இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் 11 பேர் வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவுவது உள்ளிட்ட நீண்டகால வழிகளை மத்திய அரசு கண்டுபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் மனிதாபிமா…
-
- 0 replies
- 94 views
-
-
பட மூலாதாரம், ALLAHABADHIGHCOURT.IN படக்குறிப்பு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலிருந்து எரிந்த நிலையில் அதிகளவிலான பணம் கண்டெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், உமாங் போடார் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் நேற்று, மார்ச் 22 அன்று அதுதொடர்பான அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. யஷ்வந்த் வர்மா குறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளியிட்ட அறிக்கை மற்றும் அதற்கு வர்மா அளித்துள்ள பதிலறிக்கை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. எரிந்த நிலையில் இருந்த பணம் தொடர்பாக டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட புகைப்படங…
-
- 1 reply
- 188 views
- 1 follower
-
-
மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு! மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. எனவே சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது. இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் நேற்று மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தோ-மியான்மர் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியான்மார் அதிகாரிகளிடம் ஒப்ப…
-
- 0 replies
- 91 views
-
-
எலோன் மஸ்க்கின் எக்ஸ்... இந்திய அரசாங்கம் மீது வழக்கு தொடர்வு! எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் டுவிட்டர் என்று அழைக்கப்பட்டது), இந்திய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலைத் தொடங்கியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதன் தணிக்கை திறன்களை சட்டவிரோதமாக விரிவுபடுத்துவதாகக் குற்றம் எக்ஸ் சாட்டியுள்ளது. மார்ச் 5, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட சட்டப் பாதுகாப்புகளைத் தவிர்த்து, உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான ஒரு இணையான அமைப்பை புது டெல்லி உருவாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறது. பில்லியனர் தனது ஏனைய உயர்மட்ட முயற்சிகளான ஸ்டார்லிங்க் மற்றும் டெஸ்லாவை இந்தியாவில் தொடங்கத் தயாராகி வருவதாகக் கூறப்ப…
-
- 0 replies
- 106 views
-
-
ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை! மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த விவகாரம் பாரிய பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும் அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை …
-
- 0 replies
- 171 views
-
-
சிங்கப்பூரில் 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டிய தனியார் வீடுகளின் விற்பனைவாசிப்புநேரம் - 1 நிமிடம் (படம்: envato.com) வெளியீடு : 17 Mar 2025 07:39PM சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை, சென்ற மாதம், 13 ஆண்டு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து சென்ற மாதம் கிட்டத்தட்ட 1,600 புதிய தனியார் வீடுகள் விற்பனை ஆகின. நகரச் சீரமைப்பு ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது. சென்ற மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு பிப்ரவரியைப் போல் சுமார் 10 மடங்கு. மாத அடிப்படையில் சென்ற மாதம் 45.4 விழுக்காடு வளர்ச்சி காணப்பட்டது. ஜனவரியில் சுமார் 1,100 வீடுகள் விற்கப்பட்டன. ஆதாரம் : CNA
-
- 0 replies
- 217 views
-
-
கோத்ரா கலவரம், ஆர்எஸ்எஸ், காந்தி, சீனா - அமெரிக்க பாட்காஸ்டர் கேள்விக்கு மோதி பதில் என்ன? பட மூலாதாரம்,ANI 17 மார்ச் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரீட்மேனின் யூடியூப் சேனலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேர்காணல் வழங்கியுள்ளார். இந்த மூன்று மணி நேர 17 நிமிட பாட்காஸ்டில், தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து ராஷ்ட்ரா, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோதி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குஜராத் கலவரம் குறித்தும் அவர் பேசியுள்ளார். தவிர, சீனா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உடனான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களை தடை செய்ய வேண்டும் – சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பரிந்துரை! கேதார்நாத் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரகண்டின் பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமான்ற உறுப்பினர் ஆஷா நௌடியல் (Asha Nautiyal) கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் அல்லாத சிலர் மத தலத்தின் புனிதத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக கேதார்நாத் சட்டமான உறுப்பினர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் பொறுப்பு அமைச்சர் சவுரப் பகுகுணா அண்மையில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் நௌடியல் குறிப்பிட்டார். இதன் போது சில பங்கேற்பாளர்கள், இந்து அல்லாத நபர்கள் கேதார்நாத் தாமின் நற்பெயரு…
-
- 0 replies
- 142 views
-