யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
My name is Paddapi. I was born in Tamil eelam but actually i don't know and how would it look like. So i came here to find out more from you. Here in SounthAfrica we have always been functions to promote Tamils freedum fight. Therefore i am so proud to join with your site and willing to do some community work for you while living in South Africa. I can read tamil language but not as godd as yours but sure I can contibute to write something. Sorry.Thanks.
-
- 15 replies
- 2.4k views
-
-
ஏன் என்னால் கருத்துக்கள் எழுமுடியவில்லை 2 மாத விடுமுறையின் பின் இணைந்துள்ளேன் என்னை அனுமதிக்கவும் .நான் தவறான முறையில் கருத்துக்கள் எதுவும் எழுதவில்லையே
-
- 7 replies
- 1.8k views
-
-
-
வணக்கம். தாயகச் சூடு தணியாத இதயத்தின் தேடல்களோடு உங்களுடன் பயணிக்க வந்துள்ளேன். இணையத்தளங்களில் பல கருத்துக்களங்களைத் தரிசித்திருந்தாலும் இங்கேயே தாய்மடிச்சூட்டின் இதம் தெரிகிறது. அன்புள்ள உறவுகளாக, துணைநிற்கும் தோழர்களாக, கருத்தாடும் எதிரிகளாக இங்கு உலவும் நட்புள்ளங்களே!, இந்தக்களத்தில் என்னையும் வரவேற்பீர்களா?
-
- 27 replies
- 3.9k views
-
-
யுத்தம் இறுதித்தீர்வாகாது என்பதை மீண்டும் வலியுறுத்த வந்திருக்கும் எனது அன்பான வணங்கள் யாழ்கள உறவுகளுக்கு...
-
- 21 replies
- 3.8k views
-
-
-
In English தமிழில் எனது பெற்றோர்கள் மலேசியாவிலே பிறந்தார்கள். நான் தமிழீழத்தில் பிறந்தேன். இந்தியாவிற்கு சென்றது கிடையாது, ஆனால் மலேசியாவிற்கு சென்றுள்ளேன். இப்போது Nortel Networks இல் Web Application Developer ஆக வேலை பார்க்கிறேன். நான் ஒரு தமிழ்ப் பற்றாளன். அதற்காக நான் என்ன செய்திருக்கின்றேன் என்று கேட்காதீர்கள். ஏதும் சொல்வதளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. நான் ஒரு கடும் போக்க வதி [hardliner]. இருக்கு அல்லையேல் இல்லை என்று தான் வாதிடுவேனே தவிர, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று வாதிடுபவன் அல்ல. வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது. சகலதையும் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு முடிவு எடுத்தே…
-
- 22 replies
- 3.4k views
-
-
Vanakkam i am raatha.i am happy to be a member here.any one please help me to write in tamil.and how can i change my id in tamil ???? thanks raatha
-
- 32 replies
- 4.3k views
-
-
-
வணக்கம் கள உறவுகளே
-
- 30 replies
- 4.2k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! நண்பி மூலமாக யாழை வந்தடைந்தேன். (நன்றி நண்பிக்கு) இன்று.. நானும் உங்களில் ஒருத்தியாக இணைய ஆசைப்படுகிறேன்.. "இவளை"யும் உங்களோடு ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளுவீர்களா?? களத்தை சுற்றி பார்த்ததில் உங்களோடு இணைய எனக்கும் தகுதி இருக்கென்று நினைக்கிறேன். பாருங்க.. நான் நல்லா கதைப்பன்! (தமிழ் இன்னும் கற்றுக்கணும் என்று ஆசை) நல்லா சண்டை போடுவன்! நல்லா வாக்குவாதம் செய்வன்! நல்ல அன்பாகவும் இருப்பன் :P வேறென்ன தகுதிகள் வேண்டும் உங்களோடு இணைய?? இப்படிக்கு, இவள்
-
- 24 replies
- 3.4k views
-
-
யாழ்கள உறுப்பினர்களுக்கு, பல மாதங்களாக உங்கள் ஆக்கங்களை அறிந்து வைத்திருந்தாலும், ஈழம் வசப்படும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு வலுப்பட்டதால் மிக்க ஆர்வத்தோடு இணைகிறேன்... புலம் பெயர்ந்து வந்து தேஜே-விலே குடியிருந்த பெற்றோருக்கு பிறந்த எனக்கு, இதுவரை என் தாய்நாடு எப்படி இருக்குமென்றே தெரியாது.. எப்போதுமே எண்ட அப்பா அம்மா தனி ஈழம் அமைந்த பிறகு அங்கே சென்றே குடியிருக்க வேணும் என்று அடிக்கடி பழைய நினைவுகளைக் கதைப்பார்கள்... என் தந்தையின் ஊக்கத்தால்தான் புலம் பெயர்ந்துஇருந்தாலும், தமிழ்கற்றுக்கொண்டேன்... உங்களுடன் இணைந்து இருப்பதில் பெருமை..
-
- 35 replies
- 5.1k views
-
-
-
-
வணக்கம் என்னையும் உறவுகளுடன் இணைத்துக்கொள்வீர்களா...
-
- 31 replies
- 4.1k views
-
-
வணக்கம், நான் ஜேர்மனி இல் இருந்து யாழ் உடன் இணைகிறேன். நான் யாழ் இந்துவின் பழைய மாணவன். உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வு அடைகிறேன்.
-
- 22 replies
- 3.4k views
-
-
என் பெயர் தமிழ்வாணன், நான் சிங்கப்பூரில் வேலைசெய்து வருகிறேன். எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்த நேரம், நான் 3 வயதில் இருக்கும் போது எனது அப்பா, அக்கா, அண்ணா மூவரும் ஒரே நாளில், அத்துலத்த்முதலி போட்ட தார்பீப்பா குண்டில் சிக்கி மரணம் அடைந்தார்கள். அவர்களின் அவலச்சாவினை என் அம்மா எப்படி ஜீரணித்தால் என்பதினை நான் எண்ணி எண்ணி அழுவதுண்டு. அப்போது கூட எனக்குத்தெரியும் 3 பேரினதும் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. என் அம்மா என்னை தன் ஒரு கையால் தூக்கிவைத்தபடி அழுது கதறியது. இன்று என் அம்மா என் பக்கத்தில் இருந்து ஆதரவுதர நான் இந்த யாழ் களத்தில் சில உண்ர்வுமிக்க ஆக்கங்களினை தந்து, எம்மைப்போல எத்தனையோ குடும்பங்களின் சோகமான யுத்த வடுக்களை மற்றவர்களும் தெரிந்து உணர்ந்த…
-
- 30 replies
- 5.5k views
-
-
வணக்கம் தமிழ்ச்சகோதர, சகோதரிகளே, உங்களின் தமிழ் அறிவுக்கு முன்னால் என்னைப்போன்ற ஒரு சிறு தமிழ் சிட்டுக்குருவி ஒன்று சிறகடித்து தமிழ் வளர்க்க களம் நோக்கிபறந்து வருகிறது. என் கடன் பணி யாழ் கள பணி செய்து கிடப்பதே!. வணக்கம். நன்றிகள். பி.குறிப்பு என்னிடம் லிமிட்டட் இன்ரநெட் பாவிக்கதான் வசதி அதனால் எப்படி வீட்டில கம்பியூட்டர் இன்டநெற் பாவிக்காம தமிழில ரைப் பண்ணி பிறகு இங்க கொண்டுவாரது என்று யாரும் உதவி செய்வீர்களா?
-
- 29 replies
- 4.5k views
-
-
வந்துவிட்டன் வந்துவிட்டன் நாரதா. வனக்கம் வனக்கம்... துள் கிளைப்ப
-
- 29 replies
- 4.5k views
-
-
எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு, 83 கலவரத்தின் போது, என் பள்ளியிலே அகதிகளாக வந்து படித்த ஈழத்தமிழ் மாணவர்களுடன் மிகுந்த அன்புடன் பழகியவன் என்ற முறையிலும், பள்ளி மூடப்பட்ட நீண்ட விடுமுறைக் காலங்களிலே ,தன் வகுப்பிலே மாணவனாகப் படித்த ஈழத்தமிழ் மாணவனும் அவனது தம்பியும் போக இடமின்றித் தவித்த போது, தன் வீட்டிற்குக் கூட்டிச்சென்று தன் குடும்ப சகிதமாக அன்புடன் பராமரித்த ஒரு எளியவரின் மகன் என்ற முறையிலும், ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை சிறு வயது முதலே உன்னிப்பாகக் கவனித்து அந்த மக்களுக்காக பரிதாபம் மட்டுமே பட முடிந்ததே என்ற வருத்தத்தில் இருப்பவன் என்ற முறையிலும் தமிழ்ப்போராளிகள் வெல்லும் செய்திகளை மிகுந்த கழிப்புடன் படித்து வருபவன் என்ற முறையிலும் எங்க…
-
- 35 replies
- 4.5k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! வெற்றிச்செய்திகள் வரத்தொடங்கிய இந்நாட்களில்,இன்று எனது அறிமுகத்தைச் செய்கின்றேன். எனது பெயர் சிறி. தமிழீழத்தின் தென்பகுதியைச்சேர்ந்தவன். தமிழீழம் உருவாவதற்கோ அல்லது தமிழர்கள் மற்றைய இனங்களைபோல் சிறிதளவாவது சுயமரியாதயுடன் வாழ்வதற்கோ எதிராக முழு உலகமுமே திரண்டெழுந்து நிற்கும் போதுதான் எதிர்காலதமிழீழத்தின் மகோன்னதம், உலகுடனான சிறப்பான பங்கு போன்றவைகளை உணர்ந்து நம்பிக்கையுடன் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை வென்றெடுக்க முழுமூச்சாய் செயற் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஏனெனில் இலங்கையின் சகல தேசிய இனங்களின் சிறப்பான வாழ்வுக்கும் ஏன் பிராந்தியத்தின் ஒருமைப் பாட்டுக்கும் தமிழீழமே திறவுகோல். நன்றி சிறி
-
- 16 replies
- 1.9k views
-
-
என் இனிய தமிழீழ நண்பர்களே, சென்ற வருடமே யாழில் பதிவு செய்திருந்த போதிலும் தமிழில் எழுதும் முறையை தற்போதுதான் அறிந்துகொண்டேன். இனிமேல் அடிக்கடி வந்து உஙகள் எல்லாருடனும் கூடிக்குலாவுவேன். எனது பிறப்பிடம் அல்வாய் மாலிசந்தி. சிறுவயதில் திருகோணமலயில் வசித்தேன். திருகோணமலை கோணேஸ்வர வித்தியாலயத்தில்(தற்போது கோணேஸ்வரா இந்துக்கல்லூரி என்று அழைக்கிறார்கள்) ஆரம்பக்கல்வியும் பின்பு ஆறாம் வகுப்பிலிருந்து பருத்திதுறை ஹாட்லிக்கல்லூரியிலும் பயின்றேன். எனது பால்ய நண்பர்கள் பலரது தொடர்புகள் இல்லாமலே போய்விட்டது. எனது சுயசரிதையை பின்பு பார்ப்போம். மீண்டும் வருவேன். நண்றி, வணக்கம்.
-
- 26 replies
- 3.5k views
-
-
திருஞான சம்பந்தன் என்னுடைய பெயர். ஊர் திருநெல்வேலி. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் தீவிர பக்தன். அவருடைய பெயராலே அவர் எழுதிய கட்டுரைகள், மற்றும் சைவ சமயத்தைப் பற்றியும் நம்முடைய தளத்தில் பதிய விரும்புகிறேன்.
-
- 21 replies
- 3.1k views
-