Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி! இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்…

  2. Published By: RAJEEBAN 13 APR, 2023 | 12:54 PM மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம் category 5 என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது தென்பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளcategory 4 இல்சா தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வேகமானதாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14 வருடங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய மிகவும் ஆபத்தான சூறாவளியாக இது காணப்படும். மரங்கள் விவசாயம் இயற்கைக்கு பெரும்…

  3. கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி…

  4. இங்கிலாந்தில்... புதிதாக 71பேருக்கு, குரங்கு காய்ச்சல்: பிரித்தானியாவில் மொத்த எண்ணிக்கை 179ஆக உயர்வு! இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 71 தொற்றுகள் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது பிரித்தானியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 179ஆகக் கொண்டு வந்துள்ளது என்று பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல் வைரஸ் உள்ள எவரும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்போது உடலுறவில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்துகிறது. முன்னெச்சரிக்கையாக நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு எட்டு வாரங்களுக்கு ஆணுறைகளைப் பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கான ஆபத்து குறைவாக …

  5. உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சு வார்த்தை எவ்வித உடன்பாடுளும் எட்டப்படாமல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து மற்றும் பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர் 6 நாட்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைனின் தலைநகர் கிவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், போரை முடிக்கு கொண்டு வர உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நேற்று பெலாரஸ் ந…

  6. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட செனட்டர் பதவி விலகுகிறார் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதனது மனைவியுடன் அல் ஃபிரான்கன் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமெரிக்காவின் ஜனநாயக …

  7. Published By: RAJEEBAN 03 MAR, 2025 | 11:01 AM காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதை ஐநாவும் ஏழு அராபிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன. காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல்தடைவிதித்துள்ளது. ஹமாஸ் உணவுப்பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை திருடி அவற்றை விற்பனை செய்து தன்னை நிதிரீதியாக பலப்படுத்துகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்தத்தை நீடிப்பதற்கான அமெரிக்காவின் யோசனையை நிராகரித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். எனினும் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்தினை மலினமான பயமுறுத்தும் நடவடிக்கை என தெரிவித்துள்ள ஹமாஸ் பேச்சாளர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதி என தெரிவித்துள்ளார…

  8. காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் ! காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக …

  9. யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா 27 Aug, 2025 | 11:30 AM அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல்களின் பின்னணி அவுஸ்திரேலிய பாதுகாப்பு புல…

  10. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பான தகவல் ஐ.நா. கிளை அமைப்புகளான ஐ.நா., பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும், சிறுமிகளும் பாலின அ…

  11. தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் மரணம்! தலைநகர் காபூலில் புதன்கிழமை (11) நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அகதிகளுக்கான ஆப்கானிஸ்தானின் அமைச்சர் கலீல் ஹக்கானி (Khalil Haqqani) கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கானி தனது அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது, நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. இவர், ஹக்கானி நெட்வொர்க் என்று அழைக்கப்படும் தலிபானின் சக்திவாய்ந்த பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தார், மேலும் அவர் அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார். இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) அமைப்பு பொறுப்பேற்றது. …

  12. உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு... ஐரோப்பிய ஒன்றியம் தான், முட்டுக்கட்டை போட்டுள்ளது: ரஷ்யா குற்றச்சாட்டு! உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், ‘உக்ரைனிலிருந்து தானியங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை ரஷ்யா தடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறோம். உண்மையில், எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம்தான் உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது’ என கூறினார். தற்போதைய போர் காரணமாக, உக்ரைனில் உற்பத்தியாகியுள்ள 2 கோடி டன் தானியங்களை அந்த நாட்டு விவசாயிக…

  13. பாகிஸ்தானில் பலரை பணய கைதிகளாக வைத்திருந்த 33 தீவிரவாதிகளை கொன்று காவல் நிலையத்தை மீட்ட படையினர் 20 டிசம்பர் 2022 பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பணய கைதிகளாக வைத்திருந்த தீவிரவாதிகள் 33 பேரைக் கொன்று அந்த இடத்தை மீட்டிருக்கிறார்கள். வட மேற்கு பன்னு மாவட்டத்தில் உள்ள இந்த காவல் வளாகத்தை அதனுள்ளே இருந்த பாகிஸ்தான் தாலிபன் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் அதனுள்ளே இருந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், தீவிரவாதிகளால் பணயக்கைதி…

  14. 16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அரசியலில் நுழைய இரோம் ஷர்மிளா திட்டம் இந்தியாவின் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களின் ஒருவரான இரோம் ஷர்மிளா, தான் 16 வருடமாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரோம் ஷர்மிளா மேலும், தான் அரசியலில் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2000-ஆம் ஆண்டில், தனது சொந்த மாநிலமான மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் 10 பொது மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். மணிப்பூர் மற்றும் வேறு சில வட கிழக்கு இந்திய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய ப…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தும் கொள்கைகளால் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சைமன் ஜாக் & டாம் எஸ்பினர் பதவி, பிபிசி வணிக ஆசிரியர் & செய்தியாளர் அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும…

  16. அமெரிக்க சிறைச் சாலையிலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளால் பரபரப்பு! அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் (New Orleans) சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் நேற்றையதினம் (16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியில் காணப்படுகின்றமையினால் இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைதிகளை கைது செய்வதற்கு அந்நாட்டு பொலிசார்…

  17. இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட பாலத்தீனர்களின் உடல்கள், காஸாவில் அடக்கம்; ஆஸ்திரேலியா வந்த வெளிநாட்டு வீரர்களில், டஜன் கணக்கானோர் தலைமறைவு; நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்களின் பயிற்சிக்கு உதவிய பிளாஸ்டிக் உடற்கூறு மாதிரிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்

  18. ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படப்போவது எப்படி? டேவிட் பிரௌன் பிபிசி நியூஸ் விஷுவல் ஜர்னலிசம் குழு 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபர் 16ஆம் தேதி பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கட்சியில் இரண்டு முறை மட்டுமே பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்ற விதி கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் பொதுச் செயலாளர்…

  19. காசாவில் இன அழிப்புக்கு எதிராக ட்ரம்புக்கு ஐ.நா.தலைவர் எச்சரிக்கை! காசாவில் இனச் சுத்திகரிப்புகளை மேற்கொள்ளும் திட்டங்களை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்தார். பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் திட்டத்தினை அமெரிக்க ஜனாதிபதி செவ்வாயன்று (04) வெள்ளை மாளிகையில் முன்மொழிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீர்வுக்கான தேடலில், நாம் பிரச்சினையை மோசமாக்கக் கூடாது. சர்வதேச சட்டத்தின் அடிப்பகுதிக்கு உண்மையாக இருப்பது இன்றியமையாதது. இனச் சுத்திகரிப்பு எந்த வகையிலும் தவிர்க்கப்பட வே…

  20. லொறி ஓட்டுநர்களின் முற்றுகையை கைவிடுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு! அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 19:00 மணிக்கு அமுலுக்கு வந்தது. ஒன்ராறியோவின் வின்ட்சரை மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நகருடன் இணைக்கும் அம்பாசிடர் பாலம் ஐந்து நாட்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும் நடந்து வருகின்றன. வின்ட்சர் நகரம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியா…

  21. சிரிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு, 63 பேர் காயம்! சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 63 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (22) மாலையில் ட்வீலா பகுதியில் உள்ள எலியாஸ் நபியின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் ஒரு நபர் ஆயுதத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் வெடிகுண்டு உடையை வெடிக்கச் செய்ததாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் ஜிஹாதி குழுவான இஸ்லாமிய அரசு (IS) உடன் தொடர்புடையவர் என்றும் அது கூறியது. அந்தக் குழுவிடமிருந்து உடனடியாக எந்த உரிமைகோரலும் இல்லை. தேவாலயத்தின் உள்ளே இ…

  22. சீனச் சறுக்கல் ராஜதந்திரத் துறையில், சர்வதேச அளவில் ஒரு பெரும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது சீனா. “தென் சீனக் கடல் மீது சீனாவுக்கு வரலாற்றுபூர்வமான உரிமை ஏதும் கிடையாது, தனது செயல்கள் மூலம் பிலிப்பின்ஸ் நாட்டின் இறையாண்மை உரிமையை மீறியிருக்கிறது” என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா அசரவில்லை. முதலில் “இந்த வழக்கே ஒரு கேலிக்கூத்து” என்றது. அடுத்து, “இந்தத் தீர்ப்பு தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கு இருக்கும் உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது. எந்த நேரத்திலும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து கடற்படையை இயங்குவோம். தீர்ப்பு ந…

  23. பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, பூச்சாவின் விட்செஸ் சுமார் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு ஆகும். கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் பதவி, கிழக்கு ஐரோப்பா நிருபர், பூச்சா 48 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேனில் உள்ள பூச்சா (Bucha) நகரத்தில் இருள் சாயும் வேளையில் தான் இந்தக் குழு பணியைத் துவங்குகிறார்கள். ஏனெனில் இரவில் தான் ரஷ்யா இந்த நகரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தத் துவங்கும். இந்தக் குழு கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு. அவர்கள் தங்களை 'பூச்சாவின் சூனியக்காரிகள்' (The Witches of Bucha) என்று…

  24. பிரதமர் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு ஒப்புதல் கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்! கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்டத் தளத்தை ப…

  25. தாய்லாந்து தேர்தலில் ஜனநாயக ஆதரவு கட்சிகள் வெற்றி Published By: Sethu 15 May, 2023 | 10:39 AM தாய்லாந்து பொதுத் தேர்தலில் இராணுவ ஆட்சியை நிராகரிக்கும் வகையில் மக்கள் வாக்ளித்துள்ளனர். இன்று வெளியான தேர்தல் பெறுபேறுகளில் ஜனநாயக ஆதரவான கட்சிகளுக்கு ஆதரவான இரு எதிர்க்கட்சிகள்; முன்னிலையில் உள்ளன. 500 ஆசனங்கள் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 251 ஆசனங்கள் தேவை. இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வெளியான பெறுபேறுகளின்படி, 42 வயதான பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான எம்.ஈ.பி. கட்சி 151 ஆசன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.