உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26583 topics in this forum
-
04 Nov, 2025 | 10:28 AM ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமை (03) மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து, நேற்று மதியம் 2.14 மணியளவில் அப்பக்குதியில் ரிக்டர் 6.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
காபூல், மசூதியில்... குண்டுத்தாக்குதல்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகரின் மேற்கில் உள்ள கலீஃபா சாஹிப் மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உட்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பெஸ்முல்லா ஹபீப் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ரமழானின் போது பொதுமக்கள் இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் இது சமீபத்தியது. சன்னி மசூதியில் வழிபாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஜிக்ர் என்று அழைக்கப்படும் ஒரு சபைக்…
-
- 0 replies
- 97 views
-
-
18 Nov, 2025 | 04:41 PM ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதிய…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
01 JUL, 2025 | 12:56 PM யு.எஸ்.எயிட். நிறுவனம் நேற்றுடன் தனது நீண்டவரலாற்றை முடித்துக்கொண்டுள்ள அதேவேளை அந்த நிறுவனத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூடியதை முன்னாள் ஜனாதிபதிகள் பராக் ஒபாமா ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆறு தசாப்த காலமாக மனிதாபிமான அபிவிருத்தி அமைப்பாக செயற்பட்ட யுஎஸ்எயிட்டின் இறுதி நாள் நேற்றாகும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன்கென்னடி வெளிநாடுகளில் செழிப்பையும் நல்லெண்ணத்தையும் அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அமைதியான வழிமுறையாக இந்த அமைப்பை உருவாக்கியிருந்தார். யுஎஸ்எயிட்டினை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளதாக இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார். இந்…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
கனடாவில் 4 குழுக்கள் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பு: சொத்துகள் முடக்கம்! கனடாவில் இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் 764, மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult), Terrorgram Collective (டெரர்கிராம்) மற்றும் Islamic State–Mozambique (மொசாம்பிக்) ஆகிய நான்கு புதிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நடவடிக்கை மூலம், இந்த அமைப்புகளின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, அவற்றிற்கு நிதி அல்லது சேவைகள் வழங்குவது குற்றமாகிறது. குறிப்பாக, 764, Maniac Murder Cult, மற்றும் Terrorgram Collective ஆகியவை எல்லை தாண்…
-
- 0 replies
- 96 views
-
-
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு 07 Sep, 2025 | 04:05 PM ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்ட…
-
- 0 replies
- 96 views
-
-
12 Nov, 2025 | 04:06 PM அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார். நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230168
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் கோப்புப் படம் கட்டுரை தகவல் ஜேக் க்வோன் சியோல் கேவின் பட்லர் சிங்கப்பூர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. இந்த "தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு" அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எரிபொருள் ஆதாரங்களில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. அணு ஆயுதம் தாங்கிய வட கொரியா மற்றும் மேற்கில் …
-
- 0 replies
- 94 views
- 1 follower
-
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர் 13 Sep, 2025 | 09:48 AM இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த வார தொடக்கத்தில…
-
- 0 replies
- 94 views
-
-
25 Oct, 2025 | 10:40 AM அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த நிறுவனத்தின் சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் (website) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) ஆகியவற்றின் விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்ட…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
உக்ரேனுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார். வொஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், உக்ரேனுக்கு எத்தனை அமைப்புகள் அனுப்பப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முன்பு அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உக்ரேனில…
-
- 0 replies
- 93 views
-
-
அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு 05 Dec, 2025 | 12:10 PM அமெரிக்காவில் பணியாற்றச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி மற்றும் எச்-4 விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை மறைத்த நிலையில் வைக்காமல், பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியவாறு “பப்ளிக்” ஒப்ஷனை தெரிவுசெய்து, பொதுவில் வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்…
-
- 0 replies
- 93 views
-
-
தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் ‘மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
"பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது" - டிரம்ப் குற்றச்சாட்டு : பாகிஸ்தான், சீனா மறுப்பு 04 Nov, 2025 | 10:43 AM ரஷ்யா மற்றும் சீனா மட்டுமின்றி, வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் ஆசியப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அங்கு அணு ஆயுதச் சோதனை நடத்தப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், "ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் இது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேச…
-
- 0 replies
- 93 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 JUL, 2025 | 12:42 PM பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
வர்த்தகப் போருக்கு மத்தியில் தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார். தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும். அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது. சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய…
-
- 0 replies
- 92 views
-
-
Published By: Vishnu 07 Oct, 2025 | 09:35 PM இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 7, 2025) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 254 பேரில், 12 அமெரிக்கர்களும் அடங்குவர். இன்றுவரை, அமெரிக்க குடிமக்களான இத்தாய் சென் மற்றும் ஓமர்…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் ஈரான் தயார்! அமெரிக்காவுடன், மீண்டும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் என, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்தார். அணுசக்தி பயன்பாடு தொடர்பில், அமெரிக்காவுடன், ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததுடன் யுரேனியம் செறிவூட்டலை 4 சதவீதத்திற்குள் குறைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. காரணம், யுரேனியத்தை 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டினால், அதை அணு ஆயுதமாக மாற்ற முடியும். இதற்கிடையே, அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அதைத் தொடர்ந்தே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் எதிர்கொண்டது. இந்நிலையில், “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளித்தால், அண…
-
- 0 replies
- 92 views
-
-
23 ஜூலை 2025 விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார். 56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தி…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது. குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு …
-
- 0 replies
- 92 views
-
-
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு! அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன. இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து. மேலும், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட இரு நட்பு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தகப் போரை தவிர்த்தது. ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையேயான சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அனைத்து ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கும் 15% அமெரிக்க வரியை விதிக்க கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இது ஆகஸ…
-
- 0 replies
- 91 views
-
-
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வ…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
போர்த்துக்கல் - லிஸ்பனில் ரயில் கேபிள் கார் விபத்து ; 15 பேர் பலி! 04 Sep, 2025 | 09:30 AM போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் எனும் ரயில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…
-
- 1 reply
- 90 views
-
-
ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KATERYNA TYSHCHENKO - 9 நவம்பர், 20:06 உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 3185 - ஐரோப்பிய ஒன்றியம் அதன் 20வது ரஷ்ய தடைகள் தொகுப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், இது ஒரு மாதத்திற்குள் தயாராகும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து லாபம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் உக்ரைனிய குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ள நபர்களைச் சேர்க்க முன்மொழிந்துள்ளது. மூலம்: ஜெலென்ஸ்கியின் மாலை உரை மேற்கோள்: " எங்கள் EU கூட்டாளர்களுடன் ச…
-
- 0 replies
- 90 views
-
-
துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு. துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர். இந்நிலையில் ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் ம…
-
- 0 replies
- 90 views
-