Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு! அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல், இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். என் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால…

  2. கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி 13 August 2025 https://cdn.hirunews.lk/Data/News_Images/202508/1755055895_189253_hirunews.jpg கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 513 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் பட்டினியால் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 குழந்தைகள் உட்பட 227 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/414332/89-people-killed-in-israeli-strikes-on-gaza-i…

  3. துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு. துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர். இந்நிலையில் ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் ம…

  4. கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 11:39 AM அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர். சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10 பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழ…

  5. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 09:38 AM இத்தாலியின், லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது. லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர். ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலிய கடற்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகி…

  6. ஜி 20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை – USA உறுதி! தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவ.23ம் திகதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி சிரில் ராமபோசா அமெரிக்காவை பற்றி எதிர்மறையாக பேசுகிறார் எனவும் இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட எங்களது குழுவினர் ஏற்கவில்லை எனவும் இதனால் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இதேவேளை, ஏற்கனவே, ”தென் ஆ…

  7. ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்! உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை (05) சந்தேகங்களை எழுப்பினர். இது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரங்களுக்கான பெரிய சோதனையாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தை மீட்டெடுக்கவும் அதன் வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் அவசியம் என்று ஜனாதிபதி கூறிய இறக்குமதி வரிகளை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துவது குறித்து பல பழமைவாதிகள் உட்பட பெரும்பான்மையான நீதிபதிகள் சந்தேகங்களை இதன்போது வெளிப்படுத்தினர். ட்ர்பின் வரி விதிப்பானது பல சிறு வணிகங…

  8. விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உலகில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும், பணமாக்கவும் அமெரிக்கா எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரையறுக்கப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை தனது “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் (£750,000) செலுத்தக்கூடிய செல்வந்த வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்…

  9. பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா 30 August 2025 பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்ட…

  10. 01 Oct, 2025 | 03:12 PM இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் 'அல் கோஜினி' (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 91 மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கட்டடப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள மசூதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடத்தின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 13 வயது சிறுவன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 99 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

  11. அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு! அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெர…

  12. இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை! நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது. பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது. எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாட…

  13. Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 02:26 PM இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள். பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்ப…

  14. உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை மீள்பரிசீலனை செய்து அந்த நாட்டுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்- ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர் வேண்டுகோள் Published By: RAJEEBAN 16 JUL, 2025 | 11:02 AM இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகள் என்…

  15. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது” ‘பிர…

  16. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு! பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே,140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப…

  17. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் : உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 05 Sep, 2025 | 09:47 AM ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை(நேற்று) இரவு 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது நிலநடுக்கமாக இது ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. குறித்த நிலநடுக்கம் அந்த நாட்டு நேரப்படி 20.56 அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் இருப்பதுடன், அந்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதி…

  18. ஒரு புதிய ரஷ்யா-சீனா-அமெரிக்கா நெட்வொர்க் எவ்வாறு செயல்பட முடியும் டேனியலா செஸ்லோ மற்றும் கிசெல்லே ருஹிய்யி எவிங் ஆகியோரால் 12/10/2025 04:36 PM EST வாஷிங்டனில் பரவி வரும் ஒரு புதிய யோசனை, மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, தற்போதுள்ள G7 க்கு மாறாக, ஒரு புதிய "கோர் 5" குழுவை நிறுவுவதை முன்மொழிகிறது. | சிப் சோமோடெவில்லா/கெட்டி இமேஜஸ் டேனியல் லிப்மேனின் உதவியுடன் இங்கே குழுசேரவும் | டேனியலாவுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் | ஜிகிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் இந்த வாரம் வாஷிங்டனைச் சுற்றி ஒரு தொலைதூர யோசனை பரவி வருவதால், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் புதிய "கோர் 5" குழுவை அமெரிக்கா உருவாக்க முடியும் - இது பாரம்பரிய எதிரிகளை நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் தற்போதுள்ள G…

  19. Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 02:15 PM ஜப்பானின் ஆளும் பழமைவாதக் கட்சியான லிபரல் டெமோகிரடிக் பார்ட்டி (LDP) அதன் புதிய தலைவராக சனே தகைச்சியை (Sanae Takaichi) தேர்ந்தெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 64 வயதான சனே தகைச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷிகெரு இஷிபாவுக்குப் பதிலாக புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, ஒக்டோபர் 15ஆம் திகதி அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் மோசமாக இருக்கும் ஒரு நாட்டில், ஜப்பானின் நீண்டகாலமாக ஆளும் பழமைவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முதல் பெண் தலைவராக தகைச்சி வரலாற்றைப் படை…

  20. ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை! உக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரேன் படையினர் வெளியேற வேண்டும், இல்லையெனில் மொஸ்கோ குறித்த பகுதியை கைப்பற்றும் என்று என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார். அதேநேரம், உக்ரேனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த எந்தவொரு சமரசத்தையும் அவர் நிராகரித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம், இல்லையெனில் உக்ரேனிய படைகள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும் – என்றார். டான்பாஸின் 85% பகுதியை மொஸ்கோ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டான்பாஸ் பகுதியை விட…

  21. உக்ரைன் போர் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று ஜெர்மனியின் மெர்ஸ் எச்சரிக்கிறார் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் விரைவில் போர்நிறுத்தம் எட்டப்படலாம் என்ற மாயையில் தான் இருப்பதாகவும், ஆனால் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் அதிபர் மெர்ஸ் கூறுகிறார். அனடோலு ஊழியர்கள் |31.08.2025 - புதுப்பிப்பு : 31.08.2025 பெர்லின் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் இராஜதந்திர முன்னேற்றத்தை அடைவது குறித்து சந்தேகம் இருப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார், மோதல் நீண்ட காலத்திற்கு தொடரக்கூடும் என்று எச்சரித்தார். பொது ஒளிபரப்பாளரான ZDF-க்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்த போதிலும், ர…

    • 0 replies
    • 75 views
  22. Published By: DIGITAL DESK 3 11 AUG, 2025 | 10:23 AM துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது. துருக்கி உள்விவகார அமைச்சர் அலி யெர்லிகாயா, "இடிபாடுகளுக்குள் சிக்கிய 81 வயது முதியவர் மீட்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமாக இல்லை. இந்த பூகம்பத்தில் சிந்திர்கி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றில் நான்கு குடியிருப்புகளும், நகர மையத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடங்களும் அடங்கும். …

  23. வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ கட்டுரை தகவல் வனேசா புஷ்லூட்டர் லத்தீன் அமெரிக்கா ஆசிரியர், பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தீவிரமடைந்ததன் ஒரு பகுதியாக, டிசம்பர் 10 அன்று, தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டி, வெனிசுவேலா கடற்கரையில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போதைப் பொ…

  24. 30 Aug, 2025 | 11:29 AM மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில, 100 பேர் காணாமல்போயுள்ளனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புகலிடக்கோரிக்கையாளர்களாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின்றன. இந்நிலையில், மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் ஐரோப்ப…

  25. 01 JUL, 2025 | 04:31 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.