Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யா பக்கம் சாய்ந்த சவுதி அரேபியா.. அமெரிக்கா-வின் 2014 விலை போருக்கு பதிலடி..! ரஷ்யா - உக்ரைன் போரைத் தாண்டி தற்போது கச்சா எண்ணெய் தான் இன்று உலக நாடுகளின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒருபக்கம் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதித்துள்ள நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 131 டாலரை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியா உடன் அமெரிக்க மிகவும் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்…

    • 0 replies
    • 256 views
  2. ரஷ்யா மீது... மேற்குலக நாடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயு தடைகளை அறிவித்தன ! உக்ரைன் ஆக்கிரமிப்பை அடுத்து, ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிப்பதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய பொருளாதாரத்தை இலக்குவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எரிசக்தி ஏற்றுமதி ரஷ்யாவிற்கு வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளதுபோதும் இந்த நடவடிக்கை மேற்கத்திய நாடுகளை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகின்றது. இதற்கிடையில் மெக்டொனால்ட் மற்றும் கொக்க கோலா ஆகிய பிரபல நிறுவனங்களும் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள…

  3. வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால்... தனது பொறுப்பை செய்ய தவறும் ஐ.நா : ஜி4 நாடுகள் குற்றச்சாட்டு! வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூர்த்தி செய்யவில்லை என இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து ஐ.நா சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் இந்தியா, ஜெர்மனி, பிரேஸில், ஜப்பான் உள்ளிட்ட ஜி4 நாடுகள் சார்பில், ஐ.நாவுக்கான ஜப்பான் தூதா் கிமிஹிரோ இஷிகானே மேற்படி குற்றசாட்டினை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ” வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்…

  4. உக்ரைன் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்தது ரஷ்யா! உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டுமென சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வலியுறுத்திய நிலையில், இந்த விசாரணைக்கு ரஷ்யா தனது பிரதிநிதியை அனுப்பவில்லை. இந்த விசாரணையில் பங்கேற்க தங்கள் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என நெதர்லாந்துக்கான ரஷ்ய தூதர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார். ‘உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்களான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் ஆகியவற்றில் இனப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. …

    • 3 replies
    • 313 views
  5. உக்ரைனிலிருந்து தப்பி வரும் அகதிகளை... பிரித்தானியாவுக்குள் வர, அனுமதிக்க புதிய திட்டம்? உக்ரைனில் மோதலில் இருந்து தப்பி வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்க புதிய திட்டத்தை அமைக்க விரும்புவதாக பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரிதி படேல் தெரிவித்துள்ளார். தி சன் செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில், ‘நான் இப்போது ஒரு மனிதாபிமான பாதையை உருவாக்குவதற்கான சட்ட விருப்பங்களை ஆராய்ந்து வருகிறேன். இதன் பொருள், உக்ரைனில் உள்ள மோதலில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவுடன் தொடர்பு இல்லாத எவருக்கும் இந்த நாட்டிற்கு வர உரிமை உண்டு’ என கூறினார். பிரித்தானியா ஏற்கனவே நாட்டில் குடும்பம் அல்லது விருப்பமுள்ள ஆதரவாளர்களுக்கு விசா திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால…

  6. அமெரிக்காவுக்கு ரொக்கெட் இன்ஜின்களை வழங்க மாட்டோம். அந்த நாட்டு விண்வெளி வீரர்கள் இனிமேல் துடைப்பத்தில்தான் பறக்க வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் திமித்ரி ரகோஜின் தெரிவித்துள்ளார். உக்ரேன் போர் காரணமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவின் விண்வெளி துறை நேரடியாக பாதிக்கப்படும் என்று அமெரிக்கஅதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலடியாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர்திமித்ரி ரகோஜின் கூறியிருப்பதாவது: ரஷ்யாவின் ரொக்கெட் இன்ஜின்களே உலகத்தில் மிகச் சிறந்தவையாக போற்றப்படுகின்றன. கடந்த 1990 முதல் அமெரிக்காவுக்கு 122 ரொக்கெட் இன்ஜின்களை விநியோகம் செய்துள்ளோம். அவற்றில் …

  7. உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக பொருளாக இருக்கிறது எண்ணெய். அதன் விலை நமது வீட்டு பட்ஜெட்டை மாத்திரமல்ல, உலகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதா, இனி ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் உணர்த்தக்கூடியது. அவ்வப்போது எண்ணெய் விலை உயரும் போதுதான் என்றல்ல, விலை குறைந்தாலும் அது அசாதாரணமான நிலைக்கான அறிகுறியாகவே கவனிக்கப்படுகிறது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது அப்படியொரு சூழலை உலகம் எதிர்கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் 140 டாலர்களைத் தொட்டிருக்கிறது. காரணம் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு. யுக்ரேன் விவகாரம் தொடங்கியதில் இருந்தே எண்ணெய் விலை வேகமாக உயரத் தொடங்கியது. உலக நாடுகள் பலவும் எண்ணெய் விலையின் தாக்கத்தை உணரத் தொடங்கிவிட்டன.…

  8. 8 ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் தகர்ப்பு ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது. உக்ரேனில் நேற்று 11-வது நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின. அந்த வகையில் உக்ரேனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷ்ய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் அந்த நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட வின்னிட்சியாவை அவர்கள் …

    • 1 reply
    • 282 views
  9. உக்ரைனுக்கு... 74 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி! ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் கிட்டத்தட்ட $100m (£74m) உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் அறிவித்துள்ளது. உக்ரைனிய நலன், ஓய்வூதியம் மற்றும் பொதுத்துறை சம்பளம் வழங்குவதற்கு இந்த நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 290 மில்லியன் டொலர்களுக்கு கூடுதலாக பணம் செலுத்துவதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிதி உலக வங்கியின் பல நன்கொடையாளர் அறக்கட்டளை மூலம் விநியோகிக்கப்படும். https://athavannews.com/2022/1270743

  10. "கீவ்" மீது... முழுவீச்சில் தாக்குதல் நடத்த, ரஷ்யா தயாராகி வருகின்றது: உக்ரைன் தகவல்! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் கீயவ் நகரத்தின் மீதான தாக்குதலுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், டாங்கர்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படை பிரிவுகள் மூலம் கீவ் நகரின் இர்பின் பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் உக்ரைன் ராணுவத் தளபதி கூறியுள்ளார். ரஷ்ய ராணுவ கமாண்டர்கள் எரிபொருளை கப்பல் மூலம் தங்கள் படைகளுக்கு, பெலாரூஸிலிருந்து செர்னோபிள் விலக்கு மண்டலம் வழியாக அனுப்பி வருகின்றனர் என்று…

  11. Whoever does not miss the Soviet Union has no heart Whoever wants it back has no brain -VLADIMIR PUTIN

    • 0 replies
    • 380 views
  12. மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை நடத்த... ரஷ்யாவும், உக்ரைனும் தீர்மானம்! போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக உக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவு…

  13. உக்ரைன் மீதான போர் நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா இந்த போர் நிறுத்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வௌியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, கடந்த மாதம் 24-ந் திகதி அந்த நாட்டின் மீது …

  14. கார்கிவ்வில் பணயக் கைதிகளாக வெளிநாட்டவர்கள் சிறைபிடிப்பு: புட்டின் மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரேன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை ஏற்கெனவே, வெளியிட்ட போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது ரஷ்ய ஜனாதிபதி தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, இந்திய மாணவர்கள் உட்ப வெளிநாட்டவரை உக்ரேன் பணயக் கைதிகளாக பிடித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டவரை உக்ரேன் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ளது எனக் கூறியுள்ளார். ரஷ்ய பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் நேற்று (03) மாலை பேசிய ஜனாதிபதி பு…

    • 0 replies
    • 260 views
  15. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் எட்டாம் நாள்: கள நிலவரம் ( இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியைத் தோற்கடித்த வீரர்களுடன் சேர்ந்து வரலாற்றில் இடம்பிடிக்கும் “மாவீரர்கள்” என்று உக்ரைனில் போரிடும் ரஷ்யப் படைகளை கிரெம்ளின் பாராட்டியுள்ளது. ——————————————————————————————————————————————————– உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அதன் அண்டை நாடு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அட்லாண்டிக் இராணுவக் கூட்டணியில் சேராமல் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். ——————————————————————————————————————————————————– …

    • 2 replies
    • 446 views
  16. இந்திய இராசதந்திர சங்கடமும் உக்ரைன் போரும். (Opinion பக்கத்தில் The Hindu வெளியிட்ட எனது கருத்து ) * இந்திய இராசதந்திரம் தனது கோட்டைகளை அணிசேரா நாடுகள் என்கிற கற்பனையில் கட்டுகிறது. அதானால் இலங்கையோ அல்லது உக்ரைனோ எங்கானாலும் இந்தியா தனது எதிரிகளின் - சீனாவின் நிலைபாட்டையா எடுக்கிறது. அதனால் தனது உண்மை நண்பர்களை இழக்கிறது. அதனால் இந்திய இராசதந்திரம் தொடர்பாக விஞான பூர்வமான மீழாய்வு அவசியம். - .V.I.S.JAYAPALAN POET AND ACTOR * MY COMMENTS ON THE DILEMMA OF INDIAN DIPLOMACY (The Hindu - Opinion) Discussion …

  17. ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு... மேற்குலக நாடுகள், உரிமம் வழங்குகிறார்கள்: உக்ரைன் ஜனாதிபதி காட்டம்! உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ‘ரஷ்யப் படையெடுப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள். இந்நிலையில், உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க மறுப்பதன் மூலம் நகரங்கள், மாநகரங்கள் மீது குண்டு வீச புடினுக்கு அவர்கள் உரிமம் வழங்குகிறார்கள்’ என்று குற்றம்சாட்டினார். …

  18. உக்ரேனியர்களுக்கு உதவ... பொதுமக்களிடம், நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்! தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழுவால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் சேவ் தி சில்ட்ரன் உள்ளிட்ட பதினைந்து பிரித்தானிய உதவி நிறுவனங்கள், பொதுமக்களிடம் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றன. உக்ரைனில் வீடுகள் அழிக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களுக்கு அவசரமாக உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவை என்று தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், மொத்தம் 20 மில்லியன…

  19. இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்து சீன அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது கொழும்பில் இருக்கும் சீன அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக கொழும்பிற்கு கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதிலிருந்து விலகியிருக்க பெய்ஜிங் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கூறப்படுகிறது. இரண்டாவது காரணம், சர்ச்சைக்குரிய சீன…

  20. ஐரோப்பாவின்... மிகப்பெரிய அணுமின் நிலையத்தில், தீ விபத்து! தீயணைப்பு வீரர்களை அனுமதிக்க உக்ரைன் கோரிக்கை! ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள எனர்ஹோடர் நகரின் மேயர் டிமிட்ரோ ஓர்லோ ‘(அணு உலையின்) கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால்’ இது ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அணுமின் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி டூஸ், ரஷ்ய படைகள், ‘கடுமையான தாக்குதலை நிறுத்த வேண்டும்,’ என்று சமூக ஊடகங்களில் கேட்டுக் கொண்டார். மேலும், ‘ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில், அணு ஆற்றல் அபாயத்தின் உண்மையான அச…

  21. இந்தாள் ஒரு பெரிய நாட்டுப்பற்றுள்ள மனிதந்தானப்பா. தனது உக்ரேன் மீதான வலுத்தாக்குதலுக்கான (offense) மெய்யான மிகச் சிறந்த ஏரண விளக்கத்தை அந்த ஊடகவியலாளர்க்கு கொடுக்கின்றார். தனது வீட்டின் வாசலில் எவனேனும் பாரிய ஆயுதங்களைக் கொண்டு வந்து குவித்து விட்டு நான் உன்வீட்டின் மீது படையெடுப்பேன் என்றால் 'முந்துபவன் வெல்வான்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முந்திச் செயல்பட்டு தன் நாட்டைக் காத்துள்ளதான தொனியில் விளக்கம் அளிக்கின்றார். அவர்தம் மேலும் பல விளக்கங்களைக் காண கீழுள்ள நிகழ்படத்தை சொடுக்குக. 👌

  22. உக்ரைன்- ரஷ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி: புடினை நேரில் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி! உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்தையில் துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனுக்குத் தேவையான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் நான்கு நாட்களில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) கூடினர். உக்ரைன் தரப்பில் போர்நிறுத்தம் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் என இரு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. ஆனால், பல மணிநேர பேச்சுவார்த்தையின் போது, பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ம…

  23. ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோரிக்கை! அதிபர் ஜெலன்ஸ்கி திட்டம்தான் என்ன? கீவ்: போர் தொடர்பாக பெலராஸ் நாட்டில் உக்ரைன்- ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்தது. இந்தப் போர் 4 நாட்களைக் கடந்த 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக அங்கு வான்வழி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டினரைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் தீவிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.