Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈராக்-அமெரிக்க கூட்டுப்படைகளின் முக்கிய விமானத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல்! மேற்கு ஈராக் மாகாணமான அன்பரில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளத்தின் மீது, ரொக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்கதலின்போது, குறித்த விமானத் தளத்தின் மீது 10 ரொக்கெட்டுகள் வீழ்ந்துள்ளதாக ஈராக்கின் அமெரிக்கத் தலைமையிலான கூட்டுப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் வெய்ன் மரோட்டோ இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈராக்-சிரியா எல்லையில் ஈரான் ஆதரவுப் போராளிகளின் இலக்குகளை அமெரிக்கப் படைக்ள தாக்கிய நிலையில், இதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாப்பரசர் பிரான்சிஸ் இன்னும் இரண்டு நாட்களில் ஈர…

  2. கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என்று உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ் தொலைக்காட்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வலையமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நிலைய இயக்குநர் சல்மாய் லதிபி தெரிவித்தார். “அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர்கள் அலுவலகத்திலிருந்து கால்நடையாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் ”என்று லதிபி கூறினார். துப்பாக்…

  3. ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜோ பைடனின் கோரிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். http://athavannews.com/அலெக்ஸி-நவல்னியை-கொலை-செ/

  4. குமுறத் தொடங்கியுள்ள இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை இந்தோனேஷியாவின் மவுண்ட் சினாபுங் என்ற எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதுடன் செவ்வாயன்று 5 கிமீ (3.1 மைல்) உயரத்தில் சூடான சாம்பலை வான் நோக்கி வெளியேற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அதன் முதல் பெரிய வெடிப்பின் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் மவுண்ட் சினாபுங்கின் குமுறல் செயல்பாடு அதிகரித்துள்ளது. அதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் எரிமலை வெடிப்புக்கான எச்சரிக்கை மிக உயர்ந்த மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் ஒரு அதிகாரி முன்பு எரிமலையின் பள்ளத்திலிருந்து குறைந்தது 3 கி.மீ தூரத்திற்கு அப்பால் மக்களை வெளியேறுமாறு …

  5. எனக்கு என்ட் கார்டே கிடையாது...2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.! வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பிறகு தலைநகர் வாஷிங்டனில் முதன்முறையாக பொது மேடையில் பேசிய டொனால்டு டிரம்ப், மாற்றங்களை ஏற்படுத்துவதாக கூறி கொண்டு அதிபரின் கடமைகளை ஜோ பிடன் மீறி வருவதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 2024 அதிபர்…

  6. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு! ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோசி குற்றவாளியென நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு வருட தண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசிக்கு வழங்கப்பட்ட தண்டனையின் ஒரு வருடத்தை சிறையில் கழிக்கத் தேவையில்லை என்றும், வீட்டில் இருந்தவாறே ஒரு மின்னணு வளையலை அணிந்து தண்டனையை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த சார்க்கோசி, தேர்தல் பிரசார நிதிப் பயன்பாடு…

  7. இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு 28 Views இத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். இங்கு கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடியுள்ளது. இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ 4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லா…

  8. மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இதுவரையில்18 பேர் உயிரிழப்பு மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து, மியன்மாரின் ஆட்சியதிகாரத்தைக் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் கைப்பற்றியது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இராணுவம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடு…

  9. ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்: அமெரிக்கா தகவல் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, அமெரிக்காவின் வொஷங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசாங்கத்தையும் அந்நாட்டு மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோக்கி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார். அப்போது அவர் கொடூரமான முற…

  10. நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம் நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். பதிவு: பிப்ரவரி 26, 2021 15:54 PM அபுஜா, நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போத…

  11. அர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/armenian-president-Nikol-pashinyan-reuters-720x450.jpg அர்மீனியாவில் தனது தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் முயற்சிப்பதாக அந்த நாட்டு பிரதமர் நிகோல் பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளார். நகோர்னா-கராபக் பிராந்தியத்தில் அசர்பைஜானுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் அர்மீனியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நிகோல் பாஷின்யனும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்திய நிலையில் அவர் இவ்வாறு…

  12. மொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இது சிறை முகாமாக இருக்கலாம் என்று அவரது வழக்கறிஞரும் உரிமை அமைப்பின் உறுப்பினரும் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய விமர்சகரான நவல்னி, இந்த மாத தொடக்கத்தில் பரோல் மீறல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக அவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய மனித உரிமைகள் ரஷ்ய நீதிமன்றின் இத் தீர்ப்பானது சட்டவிரோதமானது என்று கூறி விமர்சித்துள்ளதுடன், காவலில் இருக்கும் நவல்னிய…

  13. ஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்! ஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு அனுப்பிய ஒருவரை அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அவர், பன்டெஸ்ரக்கின் கட்டத்தின் மின்சார உபகரணங்களைப் பராமரிப்பதற்காக அனுமதியளிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதுடன் தனது பணியின்போது குறித்த கட்டடத்தின் திட்டங்களுடன் கூடிய கோப்புகளைப் பெற்றிருந்தார் என அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சட்ட வல்லுனர்களின் …

  14. கொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ், அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.526 என அழைக்கப்படும் புதிய மாறுபாடு, நவம்பர் மாதம் நியூயோர்க் நகரில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தொடர்ந்து உருவாகி வருவதால், தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பென் மாநில பல்கலைக்கழகத்தின் பரிணாம நுண்ணுயிரியலாளர் டாக்டர் ஆண்ட்ரூ ரீட் கூறினார். கலிஃபோர்னியாவில் விரைவாக பரவும் புதிய வைரஸை விட நியூயோர்க்கில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் மாறுபாட்டைப் பற்றி ஆய்வுகளில் ஈடுபட்ட டாக்டர் நுசென்ஸ்வீக் இதுகுற…

  15. சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண் 24 பிப்ரவரி 2021 பட மூலாதாரம்,TODAYONLINE,COM படக்குறிப்பு, காயத்ரி தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது. சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு …

  16. ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/116992093_gettyimages-1228368442-2-720x450.jpg தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த இரு தரப்பு கைதிகளிடையே மோதல் வெடித்தது. தெற்கு பகுதியில் குயெங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கலவரமாக வெடித்தது. இதுதவிர ஈகுவடாரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லடகுங்கவா நகரில் உள்ள …

  17. அமெரிக்காவில் 3ஆவது கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர கால சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் …

  18. அணுசக்தி மையங்களில் ஐ.நா. கண்காணிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அமுல்படுத்தியது ஈரான்! ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐஏஇஏ), தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களில் மேற்கொண்டு வரும் கண்காணிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்படாவிட்டால், ஐஏஇஏ-வுடனான தங்களது ஒத்துழைப்பு நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கையை இதன் மூலம் ஈரான் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. எனினும், சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஐ.நா. கண்கா…

  19. ரொரண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நிதி உதவி.! ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக 175,000 கனேடிய டொலர் நிதி உதவியை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்தி தமிழ் வளர்க்கப்படும் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும்வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் ஐந்து கோடி ரூப…

  20. ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஜேர்மனி ஆதரவு! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/ger-720x450.jpg ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், புதிய பொருளதார தடைகளை விதிக்க முழு ஆதரவினை வழங்குவதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹைக்கோ மாஸ் கூறுகையில், ‘கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்துள்ளது அந்த நாடு மனித உரிமைகளை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. எனவே, ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அமுல்படுத்துவதற்கு மட்டுமின்றி, தடைவிதிப்புக்கு உள்ளாகும் தனிநபர்களின் பட்டியலையும் தயாரிப்பதற்கு ஜேர்மனி ஆதரவாகவே உள்ளது’ என கூறின…

  21. சீனா உய்குர் இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது- தீர்மானம் நிறைவேற்றியது கனடா சீனா தனது நாடடின் உய்குர் சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது என தெரிவிக்கும் தீர்மானமொன்றை கனடாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி பொதுச்சபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு 266 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனாவில் ஒரு மில்லியன் உய்குர் இனத்தவர்களும் டேர்கிக் முஸ்லீம்களும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல் அவர்களிடமிருந்தும் நேரில் பார்த்தவர்களிடமிர…

    • 2 replies
    • 625 views
  22. கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் உட்பட மூவர் இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு! கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலிய தூதர் நாட்டின் கிழக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிராந்திய தலைநகர் கோமாவுக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ள கன்யாமஹோரோ நகருக்கு அருகே இன்று (திங்கட்கிழமை) காலை 10.15 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் லூகா அட்டனசியோவுடன் பயணித்த ஒரு இத்தாலிய இராணுவ பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்றாவது நபரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட மூன்றாவது நபர் ஒரு சாரதி என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக தூதர் காயமடைந்ததாக க…

  23. நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, நடுவானில் பற்றி எரிந்த போயிங் 777 ரக விமான எஞ்சின் அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கின் 777 ரக விமானத்தின் எஞ்சின் எரிந்து நடுவானில் அதன் பாகங்கள் வெடித்துச்சிதறிய சம்பவம் காரணமாக, அத்தகைய இயந்திர கோளாறு சாத்தியம் மிகுந்த 777 ரகத்தைச் சேர்ந்த 128 விமானங்களை தரையிறக்க போயிங் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை டென்வரில் இருந்து ஹோனோலூலு நகர் நோக்கி யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 777 ரக விமானம் 231 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் எஞ்சின் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனால், அ…

  24. 2022 இன் தொடக்கத்தில் கொவிட் தாக்கம் முடிவடையும் - உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை கொரோனா வைரஸ் பரவலானது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவடையும் என்று தான் நம்புவதாக ஐரோப்பாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். எனினும் 2021 ஆம் ஆண்டில் கொவிட்-19 இன்னும் பரவலாக இருக்கும் என்றும் அவர், டென்மார்க்கின் ஒலிபரப்புக் கூட்டுத்தானத்திடம் தெரிவித்துள்ளார். மோசமான சூழ்நிலைகள் இப்போது முடிந்துவிட்டதாகக் கூறிய அவர், 2020 ஐ விடவும் 2021 இல் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தை யாரும் முன்கூட்டியே அறிய முடியாது என்று அவர் எச்சரித்தார்…

  25. ஈரான் தயாரித்துள்ள தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக அறிவிப்பு! உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை, மனிதர்களிடையே பரிசோதித்துப் பார்த்ததில் 90 வீதம் பயனளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கோவ்-ஈரான் பரேகற் (COV-Iran Barekat) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியானது, பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக, குறித்த தடுப்பூசிப் பரிசோதனையின் தலைமை அதிகாரி மொஹமட் ரெசா சலேஹி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தத் தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்றவர்களில் 90 வீதத்தினர், நோய் எதிர்ப்பு சக்திக்கான சான்றுகளை வெளிப்படுத்துகிறார்கள் என ஆரம்ப முடிவுகள் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, மேலும் துல்லியமான முடிவுகளுக்கு அதிக பரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.