உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்க இராணுவம் இல்லையென்றால்... 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை. அமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மிஸ்ஸிசிப்பி மாநிலம் சவுத்எவன் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் உறியற்ரிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். மேலும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானை மிகவும் பிடிக்கும், ஆனால் அமெரிக்கா தான் அவரை பாதுகாக்கின்றது என தெரிவித்தார். அமெரிக்கா இல்லாமல், அவரால் இரு வாரம் கூட பதவியில் இருக்க முடியாது என்று சவூதி மன்னர் சல்மானை அவர் எச்சரித்தார். சவுதி அரேபியாவுடன் டிரம்ப் நட்பு பாராட்டி வந்த நிலையில், அவர் இவ்வாறு பேச,…
-
- 0 replies
- 458 views
-
-
இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு எமனாகும் கஞ்சா: கனேடிய ஆய்வு கஞ்சா புகைப்பது, மதுஅருந்துவதைவிட இளைய தலைமுறையினரின் மூளை வளர்ச்சிக்கு பெரும்தீங்கு விளைவிக்கக் கூடியதென மொன்றியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிந்தனை திறன், ஞாபகசக்தி மற்றும் நடத்தைமீது இளவயது மதுபாவனை செலுத்தும் தாக்கத்தைவிடவும் கஞ்சா அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மதுஅருந்துதல் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞர்களின் கவனம்செலுத்தும் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் கற்றல் செயல்திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. ஆனாலும் கஞ்சாபுகைத்தல், மதுஅருந்துவதைவிட அதிக அளவில் தாக்கத்த…
-
- 1 reply
- 513 views
-
-
சீனாவின் மூலோபாய முதலீடுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் – ஜப்பானுக்கான அமெரிக்க தூதுவர் சீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார், ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் வில்லியம் எவ் ஹகேற்றி. சீனாவின் ஒரு பாதை ஒரு அணைத் திட்டம் தொடர்பாக, ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு, கருத்து வெளியிட்டுள்ள அவர், “சீனாவின் மூலோபாய முதலீடுகள் சந்தை நோக்கத்தைக் கொண்டதல்ல. இது நிலையற்ற கடன்மட்டத்தைக் கொண்டு வரும். இதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும். மலேசியா, சிறிலங்கா, பாகிஸ்தான் போன்ற உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 436 views
-
-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது அமெரிக்க இளைஞர்களுக்கு 'கடினமான' மற்றும் 'மோசமான' காலம் என்று கூறி உள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில் டிரம்ப் இவ்வாறாக கூறி உள்ளார். தாம் நியமித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், 'பழிவாங்கல்' வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறி இருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிபதி பிரெட் கவனோவுக்கு அளிக்கும் ஆதரவுதான் விசாரணையை தாமதப்படுத்துவதாக எஃப்.பி.ஐ கூறி உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர்…
-
- 0 replies
- 381 views
-
-
தென் சீனக் கடலில் பயணித்த அமெரிக்க போர்க் கப்பல் தமது பயணப் பாதையை மாற்றிச் செல்லும்படி செய்தது சீனப் போர்க்கப்பல். தம்முடைய கப்பலுக்கு மிக அருகிலும், தொழில்முறையற்ற தன்மையோடும் சீனக் கப்பல் பயணித்து வந்ததாகவும் அதனால் அமெரிக்கக் கப்பல் பாதையை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது அமெரிக்க கடற்படை. இந்த சம்பவம் நடந்தபோது சீனா உரிமை கொண்டாடிவரும் சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள கேவன் மற்றும் ஜான்சன் பாறைத் தொடர்களைக் கடந்து யு.எஸ்.எஸ். டிகாடர் போர்க்கப்பல் சென்றுகொண்டிருந்தது. அப்போது சீனாவின் லுயாங் போர்க்கப்பல் டிகாடரை நெருங்கி வந்ததது. அப்போது டிகாடருக்கும் லுயாங் கப்பலுக்கும் வெறும் 41 மீட்டர் தொலைவே இருந்தது என்றார் அமெரிக்க கடற்படை கமா…
-
- 0 replies
- 346 views
-
-
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – செரீனா வில்லியமஸ் மேலாடையின்றி பாடினார்… October 1, 2018 1 Min Read மார்புக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் காணொளி தற்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது. ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.”ஐ றச் மை செல்ப்’” (I Touch Myself ) பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறி…
-
- 12 replies
- 1.2k views
-
-
கொரிய தீபகற்பத்தின் பதற்றம் தணிகிறது: கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன! கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு, வட மற்றும் தென்கொரிய எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய தமது எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை தென்கொரிய படையினர் அகற்றி வருகின்றனர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், கொரிய நாடுகளுக்கிடையில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Joint Security Area எனப்படும் இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் த…
-
- 0 replies
- 319 views
-
-
"லேசர்" தொழில் நுட்பத்தில், புதிய சாதனை.. 3 பேருக்கு நோபல் பரிசு. 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் இணைந்து இந்த பரிசைப் பெறுகின்றனர். இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் நேற்றில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெரார்ட் மெளரு, கனடாவின் டோனோ ஸ்டிக்லேன்ட் ஆகியோருக்கு…
-
- 1 reply
- 620 views
-
-
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் குவியல் குவியலாக பிணங்கள் கரையில் குவிந்துள்ளன. சுமார் 1200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக இந்தோனேசீய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், பல இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுலவேசி தீவில் உள்ள பல ஹோட்டல்களில் பூட்டப்பட்ட அறைகளில் மக்கள் உயிருடன் இருப்பார்களா என்ற அச்சம் நிலவுகிறது என இந்தோனீசியாவில் வசிக்கும் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த விசாகன் மைலாச்சலம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். வணிகரீதியாக சென்னைக்கும் இந்தோனீசியாவுக்கும் அடிக்கடி பயணம் செய்யும் விசாகன் சுனாமி ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக சென்னைக்கு வந்திருந…
-
- 0 replies
- 442 views
-
-
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்! நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து மீளாத இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. சுமார் 750,000 மக்கள் வசிக்கும் சும்பா தீவின் 40 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 5.9 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தோனோசியாவின் சுலவெசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினையடுத்து, 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அது…
-
- 1 reply
- 580 views
-
-
புற்றுநோய் சிகிச்சையில் நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சையை கண்டுபிடித்த இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு October 1, 2018 1 Min Read புற்றுநோய் சிகிச்சையில் நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சையை கண்டுபிடித்தமைக்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன்(James P. Allison) மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ (Tasuku Honjo) ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை மேலும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோய்க்கட்டி செல்களை தீவிரமாகத் தாக்கும் சிகிச்சையில் புதிய பாதைத் திறப்பை இவர்கள் இருவரும் மேற்கொண்டுள்ளனர். நம் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அமைப்பில்…
-
- 0 replies
- 558 views
-
-
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டில் ஆரஞ்சுப் பழம் நீல ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரின் வீட்டில் ஆரஞ்சுப் பழம் நீல நிறத்தில் மாறியது ஏன் என்பதற்கான காரணம் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளது. பிரிஸ்பேனைச் சேர்ந்த நெட்டி மாஃபீட் எனும் பெண் தனது இரண்டு வயது மகன் ஒரு பகுதி மட்டுமே உண்ட ஆரஞ்சுப் பழம் அறுத்த சற்று நேரத்திலேயே நீல நிறமாக மாறியதால், ஆபத்தான உடல் நலக் கோளாறு ஏதும் உண்டாகலாம் என்று எண்ணி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு நிறம் மாறியதன் காரணங்கள் தெரிய வந்ததாக குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைமை வேதியியலாளர் ஸ்டீவர்ட் கார்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ஆரஞ்சுப் பழங்களில் இயற்கையாகவே இருக்கும் ஆன்தோசியானின் (anthocya…
-
- 2 replies
- 888 views
-
-
நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை தாக்கியது சுனாமி! (2 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருந்த நிலையில் சுனாமி தாக்கியுள்ளது. சுமார் 2 மீட்டர் உயரத்தில் (6.6) சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது சுமூகமான நிலை காணப்படுவதால் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!( 1 ஆம் இணைப்பு) இந்தோனேஷியாவின் சுலாவேசி பிராந்தியத்தில் 7.5 ரிச…
-
- 6 replies
- 1.5k views
-
-
ரோஹிஞ்சா: ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது. மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியத…
-
- 3 replies
- 1.2k views
-
-
நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம் – எழுவர் கைது நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டனர் என்னும் சந்தேகத்தின் பேரில் ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு பெரியளவிலான தாக்குதல் முயறிச்யை மேற்கொள்ள இவர் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஏகே47 ரக துப்பாக்கிகள், எறிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 627 views
-
-
நிசாம்தீன் பிணையில் விடுதலை அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான 25 வயதுடைய மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/41313
-
- 0 replies
- 667 views
-
-
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக முன்மொழிந்த ப்ரெட் கெவன்னாவிடம் விசாரணை, லிபியாவில் ஆயுக்குழுவினரிடம் சிக்கி அலைகழிக்கப்படும் ஆஃப்ரிக்க குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 826 views
-
-
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட சம்பவம் ; மூவருக்கு அபராதம் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கிய குற்றவாளிகளான கலைமுகிலன், வீ. பாலமுருகன், ரகுநாதன் ஆகியோருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் உட்பட நான்கு குற்றங்களை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்ட விரோத கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட குற்…
-
- 0 replies
- 426 views
-
-
இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுக்க ஒத்துழையுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் டிரம்ப் பேச்சு படத்தின் காப்புரிமைSPENCER PLATT/GETTY IMAGES Image captionஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய டிரம்ப், இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளுடன் ஒத்துப்போக மறுப்பவர்கள் கடும் பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். 2015 …
-
- 3 replies
- 1.5k views
-
-
உணவக கழிப்பறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 17 வயது பெண் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். பாலியல் வல்லுறவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் ஆப்ரிக்காவில் உணவக விடுதியில் 17 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார் என்று எழுந்த குற்றச்சாட்டு அந்நாட்டு மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இருபது வயது இளைஞர் கழிப்பறைக்கு சென்றுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து பலவந்தமாக இழுத்து ஆண்கள் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்தார் என்று கூறப்படுவதாக காவல் துறை தெரிவிக்கிறது. படத்…
-
- 0 replies
- 422 views
-
-
ஐ.நா. கூட்டத்தில் அமெரிக்கா, இரான் இடையே வார்த்தைப்போர் தீவிரம், உலகை கொந்தளிக்கச் செய்த சர்ச்சை புத்தகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 445 views
-
-
ட்ரம்ப் ஒரு முடிவுக்கு வந்தால் எரிபொருள் விலை குறையும் : மக்ரோன் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்காவிட்டால் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஐ.நா பொதுச் சபை அமர்வில் தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கண்டனத்திற்கே மக்ரோன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். “ட்ரம்ப் தனது தர்க்கத்திலிருந்து விடுபட்டு ஒரு முடிவுக்கு வருவாராயின் ஈரான் மசகு எண்ணெய்யை விற்பனை செய்யும் அதனூடக எரிபொருட்களின் விலைகள் தொடர்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் இதுவே பொருளாதார யதார்த்தம்” என மக்ரோன் மேலும் தெரிவித்தார். htt…
-
- 0 replies
- 750 views
-
-
’16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன்’: தொலைக்காட்சி தொகுப்பாளர் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். 16 வயதில் பாலியல் வல்லுறவு படத்தின் காப்புரிமைAXELLE/BAUER-GRIFFIN/GETTY நான் 16 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானேன் என அமெரிக்க தொகுப்பாளர் பத்மா லட்சுமி தெரிவித்துள்ளார். நாற்பத்து எட்டு வயதான பத்மா நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் ஒரு புத்தாண்டு தினத்தன்று தன் நண்பரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய இரண்டு பெண்கள்…
-
- 0 replies
- 751 views
-
-
ஐ.நா வில் ட்ரம்ப் அதிரடி முடிவு தனது நாட்டுடன் நட்பு பாராட்டும் மற்றும் மதிப்பளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்கா நிதியுதவி வழங்குமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமானது. முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர் “ஐக்கிய நாடுகள் சபையை சகல மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகின்றது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு : இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் போர்த்துக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் லிஸ்பனின் புறநகரான கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் நறுமணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு போரத்துக்கல்லிற்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது. இந் நிலையில் மூழ்கிய கப்பல் கடந்த 3ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமணப் பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள், போர்த்துக்கேயர் பயன்படுத்தும் ஆடை அலங்கார கருவிகள், சீன…
-
- 4 replies
- 1.4k views
-