உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
அமெரிக்க ஜனாதிபதியின் மகளால் பாதுகாப்பு அதிகரிப்பு.! ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு எதிர்வரும் 28ஆம் திகதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் கலந்து கொள்கிறார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வருகிறார். ஹைதராபாத்தில் இவர் 3 நாட்கள் தங்குகிறார். இவாங்கா ட்ரம்ப் …
-
- 5 replies
- 630 views
-
-
பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையின் சீற்றம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, இன்னும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. எரிமலைக்கு தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களது கால்நடைகளை விட்டுவர விரும்பவில்லை. இரண்டாம் நாளாக பாலி விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். ரத்து செய்…
-
- 1 reply
- 320 views
-
-
சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்ட மோடி பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:- டிசம்பர் 4-ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். தேசத்துக்கும், பூமியின் பெருங்கடல்களுக்கும் இடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது. நாம் வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப…
-
- 1 reply
- 550 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் நீர்மூழ்கி கப்பலுக்கு என்ன ஆனது? படத்தின் காப்புரிமைEPA காணாமல் போன அர்ஜென்டினா கடற்படை நீர்மூழ்கி கப்பல் பற்றி மேலும் தகவல் கிடைத்துள்ளன. நீர்ழூழ்கி கப்பலுக்கும் காற்றை உள்ளிழுத்த…
-
- 0 replies
- 288 views
-
-
மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் பலி எதிரொலி - பாதுகாப்பு சட்டங்களை பலப்படுத்த எகிப்து நாடாளுமன்றம் தீவிரம். அமெரிக்க நடிகை மெகன் மார்க்கெலை அடுத்த ஆண்டு திருமணம் செய்கிறார் பிரிட்டிஷ் இளவசர் ஹேரி. அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் தங்கம் விற்பனைக்கு வரி - துபை அரசின் திட்டத்தால் தங்க வியாபாரிகள் கவலை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 347 views
-
-
ரஷ்யா விமானப்படை தாக்குதலில் 53 சிரியர்கள் பலி கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு கண்காணிப்பு குழு தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று காலை நடைபெற்ற இத்தாக்குதலில் பலியானவர்களில் 21 குழந்தைகள் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என கண்காணிப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார். ஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், மேலும் தீவிரவ…
-
- 0 replies
- 312 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ஏமன் வந்த ஐ.நா உதவி கப்பலுக்கு அனுமதி படத்தின் காப்புரிமைEPA சௌதி தலைமையிலான கூட்டணி கடந்த மூன்று வாரங்களாக ஏமன் மீது நீட்டித்து வந்த தடையை தளர்த்தியதையடுத்து, உணவு பொருட்களை கொண்டு வந்த ஐ.நா உதவி கப்பல் ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள துறைமுகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடையினால் லட்சக் கணக்கான மக்கள் பட்டினியில் தவிக்கும் அபாயம் ஏற்பட்டது. சௌதி அரேபியா மீதான ஏவுகணை தாக்குதலையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 454 views
-
-
உலகின் மிக மோசமான நீர்மூழ்கி கப்பல் விபத்துகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPUBLIC DOMAIN Image captionயூஎஸ்எஸ் த்ரெஷர் காணாமல் போன ஏ ஆர் ஏ சான் ஹுவான் என்ற அர்ஜென்டினாவின் நீர்முழுகி கப்பலில் 44 பேர் உள்ளனர். காணாமல் போனதற்கான காரணம் இன்னும் தெளிவுபடாத நிலையில், நீர்முழுகிக் கப்பல் வெடித்து சிதறியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். விளம்ப…
-
- 0 replies
- 720 views
-
-
பாலி எரிமலை சீற்றம்; விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY இந்தோனீஷியாவின் பாலி தீவிலுள்ள, அகுங் எரிமலை சீற்றத்தில் வெளியேறும் சாம்பல் நான்கு ஆயிரம் மீட்டர் வரை செல்வதால், விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இந்த வாரத்தில் இந்தோனிஷ தீவுகளிலிருந்து இரண்டாவ…
-
- 0 replies
- 409 views
-
-
டைம் இதழின் 'இந்த ஆண்டுக்கான மனிதர்' பட்டத்தைப் பெற மறுத்தாரா டிரம்ப்? அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற 'டைம்' இதழ் ஆண்டுதோறும் வழங்கும் 'பெர்சன் ஆஃப் தி இயர்' (இந்த ஆண்டுக்கான மனிதர்) சிறப்பிதழுக்கு தாம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கான நேர்காணலுக்கு தாம் மறுத்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதற்கு அந்த இதழ் மறுப்பு தெரிவித்துள்ளது. டைம் இதழில் இருந்து தமக்கு அழைப்பு வந்ததாகவும், 'ஒருவேளை' இந்த ஆண்டும் அவர் இந்த ஆண்டுக்கான மனிதர் பட்டத்துக்கு தேர்வு செய்யப்படலாம் என்று தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், அந்தப் பட்டத்துக்கானவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள…
-
- 0 replies
- 239 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்டில் இல்லாதது, இந்தியாவில் உள்ளது எது தெரியுமா? கடந்த வாரம் நான் முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (யுஏஇ) சென்றிருந்தேன். அதிகம் நேரம் துபாயில் செலவிடட்டேன். துபாயின் நவீன மற்றும் உலகத் தர கட்டுமானங்களை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். வானளாவிய கட்டடங்கள், உலகின் மிக விலையுயர்ந்த கார்கள் பரவலாக பயன்படுத்தப்படுவது, அசர வைக்கும் அழகு கடற்கரைகள் ஆகியவை பலரையும் முற்றிலும் வியப்புக்குள்ளாக்கும். இன்னும் சொல்லப்போனால், துபாய் பல்கலாசார சமூகமாக உள்ளது. பலரும் ஒன்று கலக்கிற இடமாக இடமாக இது உள்ளது. உள்ளூர் அரேபியரை விட வெளிநாடுகள் பலவற்றை சேர்ந்த மக்கள் அதிகமாக இங்கு வாழ்ந்து, வேலை செய்து வ…
-
- 2 replies
- 566 views
-
-
செளதி இளவரசரை 'முதிர்ச்சியற்றவர்' 'சிந்திக்காதவர்' எனக் கடுமையாக விமர்சித்த இரான் இரானின் அதி உயர் தலைவர் அயத்தொல்லா அலி கொமெனியை மத்திய கிழக்கின் 'ஹிட்லர்' என விவரித்த செளதி அரேபியாவின் இளவரசர் முகமத் பின் சல்மானை 'முதிர்ச்சியற்றவர்' என இரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இரானுக்கும் சௌதிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்க, சௌதி இளவரசர் முகமத் பின் சல்மான், பிராந்திய சர்வாதிகாரிகளின் 'தலைவிதியை' புரிந்து கொள்ள வேண்டும் என இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. செளதியின் செயல்முறை ஆட்சியாளர் முகமத் பின் சல்மான், இரானுக்கு எதிராக கடும்போக்கு நிலையை எடுத்துள்ளார். இரானின் செல்வாக்கு பரவுவதை செளதி அனுமதிக்காது எ…
-
- 0 replies
- 392 views
-
-
லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம் லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/51346
-
- 2 replies
- 532 views
-
-
ஜேர்மனியில் அரசியல் நெருக்கடிக்கு வாய்ப்பு புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள், ஜேர்மனியில் நேற்று (20) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜேர்மனியில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், புதிதாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படக்கூடும். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மன், அடுத்த சில வாரங்களுக்கு - சில வேளைகளில் மாதங்களுக்கு - அதிகாரமற்ற அரசாங்கம் போன்று செயற்பட வேண்டியுள்ளது. எனவே, முக்கியம…
-
- 3 replies
- 461 views
-
-
எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA விளம்பரம் அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போல…
-
- 2 replies
- 416 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தும் அமெரிக்கா படத்தின் காப்புரிமைAFP சிரிய குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை அமெரிக்கா நிறுத்த உள்ளதாகத் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் ரெசீப் தையிப் எர்துவான் உடனான தொலைப்பேசி அழைப்பில் டொனால்டு ட்ரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் சவூஷாவ்லூ கூறினார். குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குகிறது என்பது துருக்கியின் நீண்டகால குற்றச்ச…
-
- 0 replies
- 256 views
-
-
பாலியல் வல்லுறவு, மாதவிடாய் இல்லாமை - இதுதான் வடகொரிய ராணுவத்தில் பெண்களின் நிலை உலகின் நான்காவது பெரிய ராணுவத்தில் ஒரு பெண்ணாக பணிபுரிவது அவ்வளவு சுலபமானது இல்லை. பல பெண்களுக்கு இளம் வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. அதுமட்டுமல்ல, அவருடன் ராணுவத்தில் பணியாற்றிய பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்கிறார் அந்த ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் சிப்பாய். படத்தின் காப்புரிமைSIPA PRESS/REX/SHUTTERSTOCK விளம்பரம் பிபிசி வட கொரியா ராணுவத்திலிருந்து தப்பி அண்டை நாடுகளில் அடைக்கலமான லீ சோ இயோனிடமும் வேறு சிலரிடமும் நேர்காணல் எடுத்தது. அதன் தொகுப்பு. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு, லீ சோ இயோன், இருபத்தி நான்குக்கும் மேற்பட்ட பெண்…
-
- 2 replies
- 3k views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 24/11/17 ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார் எமர்சன் முனங்காக்வா - ஆனால் , ஊழல் , வேலைவாய்ப்பின்மைக்கு புதிய தலைமை முடிவு கட்டுமா ? செளதி பட்டத்து இளவரசரால் கைது செய்யப்பட்ட இளவரசர்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்போதைய நிலை என்ன ? சிறை வைக்கப்பட்டுள்ள ஆடம்பர ஹோட்டலுக்கு பிரத்யேகமாகச் சென்றது பிபிசி நேபாள நாடாளுமன்றம் ,சட்டப்பேரவைகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் - புதிய அரசியலமைப்பு உருவான பிறகு நடத்தப்படும் முதலாவது வாக்கெடுப்புக்கு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு வேட்டை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 334 views
-
-
ஒஸ்கர் பிஸ்டோரியஸ்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஒஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் பிஸ்டோரியசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு …
-
- 0 replies
- 459 views
-
-
தீவிரவாதி ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் இருந்து விடுதலை : அமெரிக்கா அதிருப்தி!!! பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 அன்று கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் குண்டுகளை வெடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு மூளையாக இருந்து செயல்படுத்தியவர் ஹபீஸ் சயீத். லஷ்கர் தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர் அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். ஹபீஸ் சயீத்தும் அவரது நண்பர்கள் 4 பேரும் பாகிஸ்தான்…
-
- 0 replies
- 337 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் பாகிஸ்தானில் லஷ்கர் தலைவர் விடுதலை படத்தின் காப்புரிமைAFP Image captionஹஃபீஸ் சயீத் கடந்த 2008-ஆம் ஆண்டு 160க்கும் மேலானவர்கள் உயிரிழந்த மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என இந்திய புலனா…
-
- 0 replies
- 372 views
-
-
முகபேவின் அரசியல் பாதையும், ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த பொருளாதாரச் சரிவும்! ஒரு நாட்டின் பொருளாதாரம்தான் அங்கு வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வாதாரமாக அமையும். நாட்டை நேசிப்பதற்கும் வெறுப்பதற்கும் பொருளாதாரம் மட்டுமே காரணமாக இருக்கும். அந்தப் பொருளாதாரத்தில் சிக்கிச் சின்னாபின்னமான ஜிம்பாப்வே நாட்டின் தற்போதைய நிலை என்ன. பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபர் முகபே கொண்டுவந்த கொள்கை என்ன. வாங்க பார்ப்போம்! யார் இந்த ராபர்ட் கேப்ரியல் முகபே? : தெற்கோத்சியாவில் (ஜிம்பாப்வே நாட்டின் முந்தைய பெயர்) உள்ள `குட்டமா' எனும் சிற்றூரில், கேப்ரியல் - போனா தம்பதிக்குப் பிறந்தவர்தான் ராபர்ட் கேப்ரியல் முகபே. அந்த ஊரில் வாழும் மக்கள், கிரு…
-
- 0 replies
- 446 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 22/11/17 மனுஸ் தீவு முகாமை அதிகாரப்பூர்வமாக மூடியது ஆஸ்திரேலிய அரசு - அகதிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை வெளியேற்றுவதால் பதற்றம் சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க, டிரம்ப் அறிவித்த பெருஞ்சுவர் திட்டம் - சொந்த கட்சியிலேயே ஆதரவு குறைவதால் நிறைவேறுவதில் சிக்கல் டங்கல் பாலிவுட் பட பாணியில் பாகிஸ்தானில் வாழும் மல்யுத்த சகோதரிகள் - தாய்நாட்டுக்காக பதக்கங்களைக் குவித்து சாதனை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 239 views
-
-
ஐ.நா நீதிமன்றம்: இந்தியாவிடம் தோற்ற பிரிட்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மையான சட்டப் பிரிவு. நெதர்லாந்து நாட்டின் தி ஹேக்-இல் அமைந்துள்ள இதன் முக்கிய பணி நாடுகளுக்கு இடையெ உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதுதான். படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionநீதிபதிகள் தேர்தலில் வாக்களிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர்…
-
- 0 replies
- 410 views
-
-
‘மனித கசாப்புக்காரன்’ மிலாடிக் குக்கு சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பொஸ்னியாவின் மனித கசாப்புக்காரன் எனப்படும் ரெட்கோ மிலாடி( Ratko Mladic) க்கு ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. 1992- 1995 காலப்பகுதியில் செபர்னிக்காவில் நடந்த இனப்படுகொலையில் பொஸ்னியாவின் அப்போதைய இராணுவத் தலைமையாக இருந்த ரொட்கோ மிலாடி இனப்படுகொலையின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மிலேச்சத்தனமான படுகொலைகளில் ரொட்கோ மிலாடி போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது குற்றத்தை உறுதிசெய்து ஐ.நாவின் சர்வதேச நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கித்…
-
- 2 replies
- 564 views
-