உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26877 topics in this forum
-
அகதிகள் 50 பேர் அரபிக் கடலில் மூழ்கியுள்ளதாக அச்சம் சோமாலியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அரபிக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யேமனை நோக்கிப் படகில் பயணித்த அவர்களை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த படகில் எத்தனைபேர் இருந்தார்கள் என்பதை துல்லியமாக கணிப்பிட்டுக் கூற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனை நோக்கிப் படகு சென்றுகொண்டிருந்த வேளை, பாதுகாப்பு அதிகாரிகள் படகினை அண்மித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை பண…
-
- 0 replies
- 401 views
-
-
இரு தட்டு பஸ் விபத்து : 9 பயணிகளை வைத்தியசாலையில் (காணொளி இணைப்பு) லண்டன் தென்மேற்குப் பகுதியில் இரு தட்டு பஸ் ஒன்று விற்பனை நிலையம் ஒன்றுடன் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விபத்தில் பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து பிரயாணம் செய்த இருவர் விற்பனை நிலைய பெயர் பலகைக்குள் சிக்கியுள்ளனர். சிக்குண்ட இருவரையும் மீட்கும் பணிகள் அந் நாட்டு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, குறித்த விபத்தினால் காயமடைந்த சாரதி உட்பட 9 பஸ் பயணிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/22991
-
- 0 replies
- 318 views
-
-
‘ராகுல் காந்தியை காணவில்லை’ லக்னோ மாவட்டத்தின் அமேதி நகரத்தில், “ராகுல் காந்தியைக் காணவில்லை” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது தொகுதி எம்.எல்.ஏ அல்லது எம்.பிக்கள், தொகுதியைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தால், தேர்தல் வரை காத்திருக்காத வாக்காளர்கள், இது தொடர்பாக பதாதை எழுதி ஒட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தொகுதிப் பக்கம் தலையைக் காட்டாத மக்கள் பிரதிநிதிகளை, காணவில்லை” என்று, அடிக்கடி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, அவரது எம்.பி தொகுதியான அமேதியில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் பதாதையி…
-
- 6 replies
- 914 views
-
-
பாரிஸின் புறநகர் பகுதியில் இராணுவ பாசறை ஒன்றுக்கு வெளியே கார் ஒன்று படையினர் மீது வேண்டுமென்றே மோதியது! ஆறு படையினர் காயம், இருவர் கவலைக்கிடம்! அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் குவாமில் ஏவுகணை வீசுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை! அதிபர் டிரம்பின் காட்டமான மிரட்டலை அடுத்து இது வெளிவந்துள்ளது மற்றும் ஆப்பிரிக்காவில் தந்தத்துக்காக யானைகளை இலக்கு வைக்கும் சட்டவிரோத வேட்டைக்காரர்களை எதிர்கொள்ளும் வன அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் இராணுவம் பயிற்சி வழங்குவது குறித்த பிரத்யேக செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 447 views
-
-
80 நாடுகளுக்கு இலவச விசா ; கட்டார் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு இலங்கை தவிர 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை கட்டார் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. குறிப்பிட்ட பட்டியலில் இலங்கை,சவுதி,குவைட்,அமீரகம்,யெமென் போன்ற பல நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது. கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 434 views
-
-
பாரிஸில் படையினர் மீது காரால் மோதி பயங்கரவாதத் தாக்குதல் ; 6 படையினர் காயம் பிரான்ஸின் பாரிஸில் படையினர் மீது காரால் மோதி பயங்கவரவாதத் தாக்குதல் மேற்கொண்டதில் 6 படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, படையினரை மோதி தாக்குதல் மேற்கொண்ட பி.எம். டபிள்யூ. வகை காரையும் தீவிரவாதத் தாக்குதலை முன்னெடுத்த கார் சாரதியையும் பாரிஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாரிஸ் தி வேர்டன் லெவல்லொயிஸ் எனும் இடத்திலுள்ள படையினர் முகாமிற்குள் இருந்து அணிவகுப்பிற்காக படையினர் வெளிவந்த போதே பி.எம். டபிள்யூ. காரில் வந்த தீவிரவாதி படையினரை மோதி விட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார். குறித்த சம்பவ…
-
- 0 replies
- 360 views
-
-
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத ரணம் ஆண்ட்ரூ ஒயிட்ஹெட்பிபிசி முன்னாள் செய்தியாளர் காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் முதல் பாகம் இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES டெல்லிக்கும், இஸ்லாமாபாதுக்கும் இடையே இருப்பதென்னவோ விமானப் பயணத்தில் விரைந்து கடந்…
-
- 5 replies
- 3.3k views
-
-
கென்ய தேர்தலில் ஆயிரக்கணக்கானோர் வாக்களிப்பு பற்றிய செய்தி, கொரிய தீபகற்பத்தின் நிலைமைகள் மோசமடைய அமெரிக்காவே காரணம் என்று வடகொரியா குற்றச்சாட்டு! அங்கு அமெரிக்க உளவு விமான நடவடிக்கைகளை பிபிசி நேரில் பார்த்தது மற்றும் மருத்துவ ரீதியிலான தேவை இல்லாமல் சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது உலக அளவில் அதிகரித்துள்ளது. பெண்கள் ஏன் அநாவசிய அறுவைச் சிகிச்சைகளை நாடுகிறார்கள்? - பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 233 views
-
-
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாட யோக்கியதை இருக்கிறதா ? ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நம்முடைய நாம் நாட்டை போராடி அவர்களை கையில் இருந்து மீட்டோம். இன்றைய இந்தியா எப்படி உள்ளது? உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? இந்திய நாட்டுக்கு நடத்த நல்லது மற்றும் கேட்ட விஷயங்கள். இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும். சுதந்திரம் எந்த அளவுக்கு பறந்து விரிந்துள்ளது. மேலும் பல கேள்விகளும், விடைகளும்.
-
- 0 replies
- 402 views
-
-
இமானுவெல் மக்ரோன் , மனைவிக்கு முதல் பெண்மணி அந்தஸ்த்தை வழங்க எடுக்கும் முயற்சிகள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தனது மனைவிக்கு பிரான்ஸின் முதல் பெண்மணி அந்தஸ்த்தை வழங்குவதற்கு எதிர்கொண்டுள்ளார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் பிரான்ஸ் அரசியலில் குடும்பங்களின் ஆதிக்கத்தை ஓழிப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி தற்போது தனது மனைவியை உத்தியோகபூர்வ முதல் பெண்மணியாக அறிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதன் மூலம் தான் ஓரு ஏமாற்று பேர் வழி என்பதை நிருபித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்ரோனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 200.00…
-
- 0 replies
- 266 views
-
-
உலக அளவில் தனி நாடு கோரிக்கைகளின் அடிப்படை காரணங்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பல…
-
- 0 replies
- 477 views
-
-
புதிய தடைகள் குறித்து அமெரிக்கா பாரிய விலையை செலுத்த நேரிடும்.! வட கொரிய அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் புதிய தடைகளுக்கான பிரேரணையை முன்னெடுத்தமை தொட ர்பில் அமெரிக்காவுக்கு பாரிய விலையை செலுத்தும் வகையில் கடும் பதிலடியைக் கொடுக்கப்போவதாக வட கொரியா நேற்று சூளுரைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் பாது காப்பு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மேற்படி தடைகள் தொடர்பான பிரேரணையானது தமது நாட்டின் இறைமையை மீறும் செயல் என வட கொரிய உத்தியோகபூர்வ செய்தி முகவர் நிலையமான கே.சி.என்.ஏ. தெரிவித்தது. இந்நிலையில் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில…
-
- 0 replies
- 297 views
-
-
-
அணுஆயுதத் திட்டம் தொடர்பில், தமக்கு எதிராக அமெரிக்கா- ஐ நாவில் முன்னெடுக்கும் தடைகளுக்கு- பதிலடி கொடுக்க வடகொரியா சூளுரை! இஸ்லாமிய அரசு எனக் கூறிக்கொள்ளும் குழுவினாரால் வட இராக்கில் கடத்தப்பட்ட யாசிடிப் பெண்களை காப்பாற்ற முயலும் நால்வருடன் உரையாடியது பிபிசி! மற்றும் பெரும் ஊதியத்தை துறந்து விவாசயத்தின் பக்கம் திரும்பியுள்ள ஜப்பானியப் பெண்ணொருவர் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 242 views
-
-
எண்ணெய் விலை வீழ்ச்சி: சுற்றுலாவை மேம்படுத்த செளதி அரேபியா முயற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைKINGDOM OF SAUDI ARABIA Image captionசெளதி மேற்கு கடற்கரையில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு, செங்கடல் வளர்ச்சி திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது ஐம்பது தீவுகள் மற்றும் செங்கடலில் உள்ள பிற பகுதிகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றும் மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்ட…
-
- 0 replies
- 572 views
-
-
இது வெறும் ட்ரெயிலர் தான் கண்ணா இனித்தான் மெயின் பிக்சரே ஆரம்பம் விரைவில் பாரத தேசமே அதிசயிக்கும் வகையில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகும் என ரூபாவின் கண்ஜாடையில் இயங்கும் டீம் கதைக்கிறதாம். சசியின் வீடியோவும் சரியான நேரத்தில் மீடியாக்களுக்குப் போய்ச் சேருமாம்! இது வெறும் ட்ரெயிலர்தான் மெயின் பிக்சர் விரைவில் வரும் என்பதுபோல் "தில்" ரூபா டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் திகில் கிளப்பப் போகிறதாம்! கர்நாடக சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் தங்கியிருப்பதாகவும் அதற்காகச் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு இண்டு கோடி ரூபா தரப்பட்டிருப்பதாகவும தவுசண்ட் வாலா சரவெடியை கிள்ளிப் போட்டார் டி.ஐ.ஜி. ரூபா. இது அனைத்துத் தரப்பிலும் அனல…
-
- 0 replies
- 616 views
-
-
பிரக்சிற்றின் நெருக்கடியை எதிர்கொள்ள பிரிட்டன் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த விவகாரத்தினால் எழுந்துள்ள நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்காக பிரிட்டன் தனது உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் தீர்மானிக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிகள் தடைப்பட்டால் பிரிட்டன் நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிவரும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் உணவுப்பொருட்களை இறக்குமதியில் தங்கியிருப்பத…
-
- 0 replies
- 312 views
-
-
வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க கத்தார் பரிசீலனை கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலருக்கு நிரந்தக் குடியுரிமை வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கே.யூ.என்.ஏ தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது வளைகுடா நாடுகளில் நடைமுறையில் இல்லை. இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துவிட்டாலும், சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த மசோதாவின்படி, கத்தார் நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துக்கொள்ளும் வெளிநாட்டவரின் குழந்தைகள் மற்றும் சிறப்பாகப் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு, கத்தாரில் வசிக்க நிரந்தர அனுமதி வழங்கப…
-
- 0 replies
- 603 views
-
-
ரான்சம்வேரிலிருந்து உலகைக் காப்பாற்றிய இளைஞரை அமெரிக்கா கைது செய்தது ஏன்? #Ransomware இங்கிலாந்தைச் சேர்ந்த 'சைபர் அட்டாக் ஹீரோ' மார்கஸ் ஹட்சின்ஸ் (Marcus Hutchins) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன், உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியான வான்னாக்ரை ரான்சம்வேர், மேலும் பரவாமல் தடுத்ததில் இவரின் பங்கு மிக முக்கியமானது. வான்னாக்ரை : கணினிகளைத் தாக்கி தீங்கு ஏற்படுத்தும் மென்பொருள்களை மால்வேர் என்றழைப்பார்கள். இந்த மால்வேரில் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ரான்சம்வேர். வான்னாக்ரை என்ற ரான்சம்வேர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து, இந்தியா உள்ளிட்ட சுமார் 150 நாடுகளுக்குப் பரவியது. ஆந்திர காவல்துறை உள்ளிட்ட…
-
- 0 replies
- 523 views
-
-
ஆமதாபாத், குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பனாஸ்காந்தாவில் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுலுக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனால் கார் கண்ணாடி உடைந்து உள்ளது. ராகுல் காந்திக்கு அதிர்ஷ்டவசமாக எந்தஒரு காயமும் ஏற்படவில்லை. விரைவில் ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டி…
-
- 3 replies
- 348 views
-
-
பிரிட்டிஷ் கணினி நிபுணர் அமெரிக்காவில் கைது, உலக அளவில் சைபர் தாக்குதலை நிறுத்த உதவியதாக போற்றப்பட்டவர் இவர் ; குடியேறிகள் முகாம்களில் தடுமாறும் மக்கள்! அரசியல் தஞ்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரான்ஸில் முடங்கியுள்ள அகதிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் சாதித்த நாசாவின் சோதனை விமானிகள்! ஐம்பதுகளில் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களும் துணிச்சலும் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 289 views
-
-
ஏவுகணைச் சோதனையில் தப்பிய பிரான்ஸ் பயணிகள் விமானம் உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்தி வருகிறது வடகொரியா. இந்நிலையில், வட கொரியா ஏவுகணைசோதனை நடத்தியபோது அந்த வழியாக பயணித்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் இருந்து தப்பியுள்ளது. 330 பயணிகளுடன் ஏர் பிரான்ஸ் விமானம்டோக்கியோவில் இருந்து பாரிஸ்க்கு வட கொரியாவின் ICBM பாதை வழியாக பயணித்துள்ளது. அப்போது, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹுவாசாங் 14 என்ற ஏவுகணையை வட கொரியாசோதித்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் இடைவெளியில் விமானமும், ஏவுகனையும் மோதுவதிலிருந்து தப்பித்துள்ளன. ஏவுகனை விழுந்த கடல் பகுதியை ஏர் பிரான்ஸ் வி…
-
- 0 replies
- 510 views
-
-
டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும் ரோர்ச் ரவரில் தீவிபத்து டுபாயின் மெரினா பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும் 79 மாடிகளை கொண்ட ரோர்ச் ரவர் ( torch tower ) இல் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் 9-ஆவது மாடியில் பற்றிய தீ, தொடர்ந்து எரிந்து அடுத்தடுத்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு சென்று அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தினால ; ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என…
-
- 1 reply
- 374 views
-
-
பாகிஸ்தான்: பெண்களுக்காக ஆங்கில பத்திரிக்கை தொடங்கிய தாலிபான் படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெண்கள் மற்றும் ஆண்கள் வழிதவறாமல் இருக்க, அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவிடவேண்டும் என்று தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானின் முக்கியத் தலைவர் ஃபஜ்லுல்லாஹ்வின் மனைவி கருத்து தெரிவித்துள்ளார். ஜிகாதின் வழியில் பெண்களை ஈர்ப்பதற்காக தாலிபான் வெளியிடும் பத்திரிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தாலிபான் பெண்களுக்காக ஒரு ஆங்கில பத்திரிகையை வெளியிட்டுள்ளது, அதன் முதல் பதிப்பு அண்மையில் வெளியானது. அதில், 'ஜிகாதியாக' விரும்பும் ஆறு வயது சிறுமியின் கதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 'சுன்னத்-இ-குலா' என்ற அந்த பத்திரிக…
-
- 0 replies
- 395 views
-
-
விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனை! பரம்பரை நோய்களை தடுப்பதற்காக மனித கருவின் மரபணு திருத்தப்பட்டுள்ளது! ரஷ்ய அமெரிக்க உறவுகளின் எதிர்பார்ப்புகள் முடிவுக்கு வருகின்றன என்கிறது ரஷ்யா. புதிய தடைகள் சட்டமூலத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து வெளிவந்த கருத்து! மற்றும் கடந்தகாலத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள்! அலாஸ்கா புகைப்பட முன்னோடிகள் எடுத்த படங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 176 views
-