உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
சகோதரர்களுடனான பிரச்சினையால் சர்ச்சை: சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் சிங்கப்பூர் பிரதமருக்கும் அவரது 2 சகோதரர்களுக்கும் இடையிலான பிரச்சினை பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்காக நாட்டு பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார். அதி காரத்தை தவறாக பயன் படுத்தியதாக கூறப்படும் குற்றச் சாட்டையும் அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து மக்கள் செயல் பாட்டு கட்சியின் (பிஏபி) தலைவரும் பிரதமருமான லீ சீயன் லூங் வீடியோ மூலம் விடுத்த அறிக்கை யில் கூறும்போது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக வரும் ஜூலை 3-ம் தேதி நாடாளுமன்றத் தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதன்மீது எம்.பி…
-
- 0 replies
- 410 views
-
-
மருமகனுக்கு பதிலாக மகனை முடிக்குரிய இளவரசனாக்கினார் சௌதி அரசர்! மாற்றியமைக்கப்பட்ட வாரிசுரிமையின் பின்னணித் தகவல்கள்!! இஸ்ரேலில் குடியேறிய யெமேனிய யூதக்குழந்தைகள் சிலருக்கு என்ன நடந்தது? இன்றும் பதில் தேடும் பெற்றோரின் கண்ணீர்க் கதைகள், மற்றும் இத்தாலிய பூகம்பத்தில் சிதைந்த கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் பலன் தருமா? என்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 315 views
-
-
சவுதிஅரேபியாவில் மன்னர் மகன் பட்டத்து இளவரசர் ஆனார் சவுதிஅரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக மன்னர் மகன் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ரியாத்: சவுதிஅரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆக முகமது பின் நயீப் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மன்னர் சல்மானின் மகன் முகமது பின் சல்மான் (31) புதிய பட்டத்து இளவரசர் ஆனார். அதற்கான உத்தரவை மன்னர் சல்மான் இன்று பிறப்பித்தார். ஏற்கனவே இவர் துணை பிரதமராகவும், ராணுவ மந்திரியாகவும் இருக்கிறார். பட்டத்து இளவரசர் ஆனதன் மூலம் சவுதிஅரபியாவின் அடுத்…
-
- 1 reply
- 493 views
-
-
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள்: முதலாம் நாளிலேயே பின்வாங்கியது ஐ.இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) பேச்சுவார்த்தைகள், நேற்று ஆரம்பித்த நிலையில், முதலாவது நாளிலேயே, தனது நிலைப்பாட்டிலிருந்து, ஐ.இராச்சியம் பின்வாங்கிக் கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெறுகின்றன. இதன்போது, எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், “விவாகரத்தை” பூரணப்படுத்துவதற்கு, ஐ.இராச்சியம் ஏற்றுக் கொண்டது. பிரெக்சிற் செயலாளரான டேவிட் டேவிஸ், தனது நிலைப்பாடான, எதிர்கால வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும…
-
- 0 replies
- 348 views
-
-
வடகொரியாவிலிருந்து கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் மரணமடைந்திருப்பது குறித்த செய்தி; கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள் குறித்த நேரடித்தகவல்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 246 views
-
-
அமெரிக்காவில் 17 வயதுடைய நப்ரா ஹுசைன் என்ற முஸ்லிம் மாணவியொருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிவாசலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேஸ் போல் மட்டையினால் பலமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 22 வயதுடைய மார்ட்டின் டொரஸ் எனும் இளைஞனொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் வேர்ஜினியாவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/21061
-
- 0 replies
- 562 views
-
-
வடகொரியாவை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்: வீடு திரும்பிய ஒரே வாரத்தில் மரணம் அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் ( கோப்புப் படம் ) வடகொரியாவை உளவு பார்த்ததாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின் உடல் நிலை மோசமடைந்ததால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் மரணமடைந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது. இந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இக்குற்றத்தை ஒப்புக் கொண்ட வார்ம்பி…
-
- 0 replies
- 290 views
-
-
3 இரான் ராணுவ உயரதிகாரிகளை கைது செய்தது சௌதி ராணுவம் இரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படை என்ற பிரிவின் மூன்று பேர், சௌதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக சௌதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைATTA KENARE/AFP/GETTYIMAGES Image captionகோப்புப்படம் வெள்ளிக்கிழமையன்று, சௌதி அரேபியாவின் கடற்பரப்பிலுள்ள மார்ஜான் எண்ணெய் வயலை நெருங்கி வந்த ஒரு படகில் இரான் படையின் உயரதிகாரிகள் இருந்தனர் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது. மூன்று படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வயல் மீதான தீவிரவாத தாக்குதல் முயற்சி தோ…
-
- 1 reply
- 459 views
-
-
பிரான்ஸ்: காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதிய மர்மநபர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார். இதையடுத்து, மர்மநபர் வந்த …
-
- 1 reply
- 320 views
-
-
லண்டன் மசூதிக்கு அருகே நடந்த வேன் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக விசாரிக்கிறது காவல்துறை! ஒருவர் பலி பத்துபேர் காயம்!! பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அறுபது சதவீத இடங்களைக் கைப்பற்றிய மெக்ஹாங்க் கட்சி! பிரெஞ்சு அரசியல் புரட்சியின் தொடக்கமா? மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளிகளை நெகிழவைக்கும் இன்னிசைக் கச்சேரி! மற்ற மருத்துவமனைகளுக்கும் முன்னுதாரணமாகுமா? இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 252 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது பா.ஜ.க! ஒன்றுகூடுகிறது எதிர்க்கட்சிகள் பா.ஜ.க சார்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஜூலை 17ஆம் தேதி, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க அமைச்சர்கள் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நி…
-
- 1 reply
- 516 views
-
-
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழுப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது அதிபர் மெக்ரான் கட்சி. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக 39 வயதான இமானுவேல் மெக்ரான் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் எம்பி-க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 எம்பி., எண்ணிக்கைகள். அதிபர் மேக்ரானின் கட்சி மொத்தம் உள்ள 577 இடங்களில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த பொருளா…
-
- 0 replies
- 287 views
-
-
நேபாளத்தின் நெருக்க நண்பன் சீனா! நேபாள அரசியலில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சீனா. இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான அம்சமாக இருக்கும் மதம் கலாச்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்த நினைக்கிறது இந்தியா. மத்திய அரசில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே நேபாளத்தின் மலை மாவட்டங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இந்து உணர்வைப் பரப்ப ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் சார்பு அமைப்புகளும் முயற்சி செய்கின்றன. கோரக்நாத் ஆலயத்தின் தலைமைப் பூசாரியாகக் கருதப்படும் யோகி ஆதித்யநாத்தை உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கைகள் வேகம் பெ…
-
- 0 replies
- 373 views
-
-
150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி செய்யும் அல்-தானி குடும்பம் பாரசீக வளைகுடாவின் 'சீரழிந்த குழந்தை' என்று கத்தாரை சிலர் குறிப்பிடுகிறார்கள். கடந்த 150 ஆண்டுகளாக கத்தாரை ஆட்சி புரியும் அல்-தானி குடும்பம், 'அண்டை நாட்டினருக்கு தொல்லை கொடுக்கும் குடும்பம்' என்றும் சிலர் சொல்கிறார்கள். கத்தார் தனது அண்டை நாடுகளுடன் ஒரு ராஜாங்கரீ தியான சிக்கலை தற்போது எதிர்கொண்டுள்ளது. செளதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகள், கத்தார் மீது சில புகார்களை எழுப்பியதோடு, ராஜாங்க உறவுகளையும் துண்டித்துவிட்டன. தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவி…
-
- 0 replies
- 607 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டுமா, நீடிக்க வேண்டுமா என்று மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு (பிரெக்ஸிட்) நடந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்த டேவிட் கேமரூன் விலக நேர்ந்தது. அவருக்குப் பிறகு பிரதமர் பதவியில் அமர்ந்த தெரசா மே, தன்னுடைய அரசியல் நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். இது அவர் எதிர்பார்த்தபடி வெற்றியைத் தருவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலுவைக்கூட எட்ட முடியாமல் செய்துவிட்டது. தெரசா எப்படியோ பிரதமராகப் பதவியில் தொற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று மாதங்களுக்குள் மூன்று பயங்கரவாதத் தாக்குதலை பிரிட்டன் சந்தித்துள்ளது. சமீப காலங்களி…
-
- 0 replies
- 455 views
-
-
லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிற்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். இது ஒரு "பெரிய சம்பவம்" என போலிசார் தெரிவிக்கின்றனர். செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதிக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் நேரப்படி இரவு 12.20 மணிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டனர் என பெருநகர போலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் இஸ்லாமிய கவுன்சில், அந்த வேன் "வேண்டுமென்றே" வழிபாட்டாளர்கள் மீது மோதியதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் ரமலான் நோன்பை முடித்துவிட்டு தொழுகைக்காக வந்தவர்கள் என நம்பப்படுகிறது. லண்டன் அவசர …
-
- 1 reply
- 446 views
-
-
போர்த்துகலில் இடம்பெற்ற காட்டுத் தீ விபத்தில் 62 பேர் பலி போர்த்துக்கலில் இடம்பெற்ற காட்டுத் தீ விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான காட்டுத் தீ விபத்து இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய அனர்த்தம் காரணமாக போர்த்துக்கல் நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர் சிறுமியரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக் கணக்கான தீயணைப்புப் படையினர் பல வழிகளில் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மிகப் பெரிய துயரச் சம்பவம் இதுவென பிரதமர் அன்டன…
-
- 0 replies
- 349 views
-
-
கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா? இறையாண்மை மிக்க அரபு நாடான கத்தார், செளதி அரேபியா தலைமையில் அதன் வளைகுடா கூட்டாளி நாடுகளால் முன்னுதாரணமற்ற பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES தொடர்ச்சியாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்து வருவது , பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கத்தார் மீது பொருளாதார மற்றும் இராசதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கத்தார் இந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. இதனால் தற்போது, வான்பரப்பு அதற்கு மூடப்பட்டுள்ளது, இறக்குமதிகள் எல்லைப் பகுதியில் நிற…
-
- 0 replies
- 449 views
-
-
இரான் பெண்கள் புதன்கிழமை தலையில் வெள்ளைத்துணி அணிவது ஏன்? புதன்கிழமைகளில் பெண்கள் தலையில் வெள்ளைத்துணி அணியும் முறையைக் கட்டாயப்படுத்துகின்ற ஒரு சட்டத்திற்கு எதிரான புதியதொரு சமூக ஊடகப் பரப்புரை இரானில் வேகமாக பரவி வருகிறது. படத்தின் காப்புரிமைMY STEALTHY FREEDOM எதிர்ப்பை வெளிப்படுத்துவதன் அடையாளமாக, தலையில் வெள்ளைத் துணியை அல்லது வெள்ளைத் துண்டை அணிந்து தங்களின் புகைப்படங்களையும், காணொளிகளையும் #whitewednesdays (#வெள்ளைபுதன்கிழமைகள்) என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்தி இரான் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பரப்புரை, கட்டாய ஆடைமுறைக்கு எதிரான ஆன்லைன் இயக்கமான 'மை ஸ்டீல்த்தி ஃபீரீடம்' என்பதை நிறுவிய மஷிக் அலிநஜத்…
-
- 1 reply
- 569 views
-
-
அமெரிக்க யுத்தக்கப்பல் - பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தானது யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காணாமல்போக கடற்படையினரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tags http://www.virakesari.lk/article/20959
-
- 1 reply
- 338 views
-
-
ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்முட் கோல் காலமானார் பெர்லின்: ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெ ல்முட் கோல் காலமானார் கடந்த 1982 முதல் 1998 வரையில் இப்பதவியில் இருந்துள்ளார். கடந்த சில காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கிழக்கு மேற்கு என இரண்டாக பிரிந்திருந்த ஜெர்மனியை ஒருங்கிணைக்க பாடுபட்டுள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1791979
-
- 1 reply
- 457 views
-
-
உளவுபார்ப்பதற்கான மேற்குலக தொழில்நுட்பம் மத்திய கிழக்கில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு உதவுகிறதா? பிபிசியின் புலனாய்வுச் செய்தி; லண்டன் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரிப்பு! உயிரிழந்த சிலரை அடையாளம் காண முடியாமலே போகலாமென காவல்துறை எச்சரிக்கை மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இசை பயிற்றுவிக்கும் இஸ்ரேலிய இசைக்கலைஞர் குறித்த சிறப்புச் செய்தி தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 287 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் கத்தியுடன் ஒருவர் கைது பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியுடன் உலாவிய நபரொருவரை பிரித்தானியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அண்மைக்காலங்களில் லண்டனில் இடம்பெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதையடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20956
-
- 0 replies
- 253 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கடந்த மே மாதம் 28 ஆம் திகதி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=92451
-
- 1 reply
- 894 views
-
-
ஒட்டுமொத்த தமிழர்களை கண்கலங்க வைத்த நவீனின் மரணம் ; கொலையின் உள்நோக்கம் என்ன? மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புக்கிட் குளூக்கோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் உணவு வாங்க சென்றிருந்த நவினையும் அவருடைய நண்பர் பிரவினையும் ஐவர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்து தாக்கியது. குறித்த கும்பலில் நவின் படித்த பாடசாலையின் முன்னால் மாணவர்கள் இருவர் இருந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பிரவின் கடுமையான காயங்களுடன் தப்பியோவிட்டார். குறித்த குழுவினரிடம் சிக்குண்ட நவீன் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலமாக தாக்கப்பட்டுள்ளார். பின்னர் வைத்தியசாலையில் ஐந்து நாள்கள் கோமாவிலேயே இருந்த பின்னர் நவினின் சுயநினவுக்கு வராமலேயே மூளைச் சா…
-
- 1 reply
- 650 views
-