உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26879 topics in this forum
-
மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த போது, குறித்த இலங்கையர் குண்டுப் புரளியை ஏற்படுத்தி சக பயணிகளை அச்சமடையச் செய்துள்ளார். தம்மிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் கூறி குறித்த இலங்கைப்பயணி விமானியின் அறையை நோக்கிப் பிரவேசிக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை காரணமாக விமானம் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கே திரும்பிச் சென்றுள்ளதாகவும் குற…
-
- 3 replies
- 713 views
-
-
அண்டார்டிக் பனிப்பிளவு முக்கியத் திருப்பம் அண்டார்டிகாவில், 'லார்சன் சி' பனியடுக்கில் (Ice shelf) ஏற்பட்டுள்ள பிளவில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளம்பரம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பனித் தகர்வு ஏற்படுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கும் பனிப் பிளவு, ஆச்சரியப்படும் வகையில் திசை மாறியிருக்கிறது. "அந்தப் பிளவு மேலும் 16 கிலோமீட்டர் பெருகி, பனியடுக்கின் விளிம்பில் இருந்து அதன் மூக்கை வலப்புறமாக குறிப்பிடத்தக்க அளவு வெளிப்படையாக 13 கிலோமீட்டர் அளவு திரும்பிவிட்டது," என்று ஸ்வான்சீ பல்கலைக்கழக பேராசிரியர் அட்ரியன் லுக்மன் கூறுகிறார். பனித் தகர்வு இனி எப்போது வே…
-
- 0 replies
- 965 views
-
-
காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம், பாரிஸ் ஒப்பந்தம் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிப்பு; பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் சூதாட்ட நிலையத்தின் மீது துப்பாக்கிதாரி தாக்குதல்! குறைந்த்து முப்பத்தியாறு பேராவது பலி இது குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் பிரிட்டனின் இளம் வாக்காளர்கள் தகவல்களுக்காக இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கியிருப்பது அதிகரித்துள்ள நிலையில் பொய் செய்திகளுக்கான வாய்ப்பும் அதிகரிக்குமா? என்பதை ஆராயும் பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 310 views
-
-
மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியில் தீவிரவாதத் தாக்குதல் : 30 க்கும் மேற்பட்டோர் பலி - காணொளி இணைப்பு பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவிலுள்ள களியாட்ட விடுதியொன்றுக்குள் புகுந்த ஆயுததாரியொருவர் திடீரென துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பின்னர் குறித்த ஆயுததாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் உரிமைகோராத நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்குதலாக இருக்கலாமென மணிலா பொலிஸ…
-
- 1 reply
- 360 views
-
-
சஹாரா பாலைவனத்தில் பழுதான லாரியில் இருந்த 44 பேர் தாகத்தால் உயிரிழப்பு கானா மற்றும் நைஜீரியாவில் இருந்து சஹாரா பாலைவனப் பகுதி வழியாக பயணம் மேற்கொண்ட 44 பேர் தாகத்தினால் உயிரிழந்துவிட்டதாக, ஒரு தொலைதூர கிராமத்தை சென்றடைந்த ஆறு பெண்கள் தெரிவித்தனர். படத்தின் காப்புரிமைAFP இதுதொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த ஆப்பிரிக்க குடியேறிகள், லிபியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றனர். பொதுவாக வடக்கு ஆப்ரிக்க பகுதிகளுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவது வழக்கம். அங்கிருந்து மத்தியதரைக் கடலை கடந்து அவர்கள் ஐரோப்பா செல்வார்கள். டிரக்குகளில் செல்லும் இவர்கள் குடிப்பதற்…
-
- 0 replies
- 769 views
-
-
பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒரு புதிய உடன்படிக்கையை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தை நடத்த அல்லது மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் இருந்தால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் ஒப்புக்கொள்ளும் என்று வெள்ளை மாளிகளியில் பேசியபோது டிரம்ப் தெரிவித்தார். '' அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது…
-
- 4 replies
- 750 views
-
-
இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம் அமெரிக்கா வீசாவை எதிர்பார்க்கும் வௌிநாட்டவர்களுக்கு, அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வௌியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இது குறித்த சட்டத்துக்கு, கடந்த 23ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கத்ததால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்துக்கு அமைய, வீசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 வருட காலத்தில் பயன்படுத்திய சமூக ஊடகங்கள் தொடர்பான தகவல், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். …
-
- 1 reply
- 689 views
-
-
’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்! ’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இதுவரை சந்திக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ட்ரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்த அமெரிக்கத் தலைவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து நேற்று பேசிய ரஷ்யாவின் புதின், ‘எனக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக, எதையும் வெளிப்படையாகக்…
-
- 0 replies
- 292 views
-
-
* அமெரிக்கா நிராகரிக்குமானால் காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற புது வியூகம் வகுக்க சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சி, * வங்கதேசத்தை தாக்கிய புயல்; இலங்கையில் பெய்த பெருமழை! பலர் பலி; பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிப்பு மற்றும் * உலகின் தனித்துவமான புகைப்படங்கள்; உலகின் பிரபல புகைப்பட இல்லத்திலிருந்து வரும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 202 views
-
-
அவுஸ்திரேலியாவுடன் மலபார் போர் ஒத்திகை : மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு விருப்பம் தெரிவித்திருந்த அவுஸ்திரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டிருந்தது. குறித்த கூட்டு கடற்படை பயிற்சியானது இந்துசமுத்திற கடல் எல்லையிலிருந்து கிழக்கே பசுபிக் கடல் எல்லை வரை நீடித்திருந்தமையால், கடற்படை பயிற்சியானது சீனாவை…
-
- 0 replies
- 336 views
-
-
ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெர்லின்: வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு இந்திய நேரப்படி நேற்றிரவு சென்றடைந்தார். …
-
- 4 replies
- 639 views
-
-
* ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டது குறித்த செய்தித் தொகுப்பு * வட கொரியாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க மிகப்பெரும் செலவில் ஏவுணை தடுப்பு திட்டம் ஒன்றை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு * இலங்கையில் சீன முதலீடும் இலங்கை பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் குறித்தும் ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 316 views
-
-
அதிர்ந்தது காபூல் ; 80 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இராஜதந்திர அலுவலகங்களுக்கான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரக் ஒன்றைச் செலுத்திவந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர், தன்னைத் தானே வெடிக்க வைத்து, இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த பல மாதங்களில், காபூலில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அதிர்ந்தது-காபூல்---80-பேர்-பலி/50-197704
-
- 2 replies
- 646 views
-
-
மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு படத்தின் காப்புரிமைGREATER MANCHESTER POLICE பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் அரங்கத்தில் இரவில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொலை செய்த தற்கொலை குண்டுதாரி சல்மான் அபெடியின் சிசிடிவி புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதக் குற்றங்களை இழைத்ததான சந்தேகத்தின் பேரில், 11 ஆண்கள் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடந்த இரண்டு மணி நேரத்தில் அபெடியின் அடையாளம் அறியப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் அச்சுறுத்தல் நிலை நெருக்கடி என்ற கட்டத்த…
-
- 7 replies
- 609 views
-
-
* அடுத்த வாரம் நடைபெறவுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் தெரீஸா மேயும் தொழில்கட்சித்தலைவர் ஜெரிமி கோர்பினும் முதல் முறையாக ஒரே மேடையில் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். * ஆயிரம் மடங்கு வீரியமிக்க புதிய நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு, செயலிழந்த மருந்தை மாற்றியமைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை. * வியட்நாமின் கலாச்சார உணவான பன்றி ரத்த உணவு பெரும் நோயை தோற்றுவிப்பதாக கூறப்படுவது குறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு. ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 264 views
-
-
மாடுகளை இறைச்சிக்காக விற்க தடைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விதித்த தடைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மத்திய அரசு மாடுகளை விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த மே 23ஆம் தேதியன்று விதித்தது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான எஸ். செல்வகோமதி என்பவர் மத்திய அரசு கொண்டுவந்த கால்நடை விற்பனை குறித்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்கு …
-
- 0 replies
- 483 views
-
-
வெறுப்புப் பதிவுகளை நீக்காவிட்டால் 50 மில்லியன் யூரோ அபராதம்: ஜெர்மனி சட்டத்தால் ஃபேஸ்புக் அதிருப்தி சமூகவலைதளங்களில் வெறுப்புப் பதிவு மற்றும் பொய் செய்திகள் நீக்கப்படாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்ற ஜெர்மனி நாட்டின் புதிய சட்ட மசோதாவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வெறுப்புப் பதிவுகளை எதிர்கொள்ள சரியான முறையல்ல என கருத்து தெரிவித்துள்ளது. நெட்வொர்க் அமலாக்க சட்டம் (The Network Enforcement Act) என்ற இந்த சட்ட மசோதா பயனர்களைத் தாண்டி, அந்தந்த சமூக வலைதளங்களை நேரடியாகத் தண்டிக்க வகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மனி அமைச்சரவை ஏப்…
-
- 0 replies
- 270 views
-
-
பங்களாதேஷை சூறையாடி வரும் மோரா சூறாவளி..! இந்துசமுத்திரத்தின் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது மோரா சூறாவளியாக வலுவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியதால் சுமார் 10 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோரா சூறாவளியானது பங்களாதேஷின் சிட்டாகொங் (CHITTAGONG) நகரத்திலிருந்து தெற்கு-தென்மேற்காக 630 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலைகொண்டிருந்த நிலையில் நேற்று அமைதியாக தென்கிழக்கு பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளியின் அபாய அளவு 10ஐ தொடவே, சுமார் 10 இலட்சம் மக்கள் உடனடியாக பாதிப்பு பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முக…
-
- 0 replies
- 416 views
-
-
நாட்டில் ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்ததை மறைக்க இந்தியா முயன்றதா? இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் மூவர் கொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை இந்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளதாக வெள்ளிக்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் (டபுள்யூஹெச்ஓ) தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTSCIENCE PHOTO LIBRARY Image captionகொசுவினால் பரவும் ஜிகா வைரஸ் தொற்று 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் நெருக்கமான சுற்றுப்புறம் இருந்த பகுதியில் மூவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக குஜராத்தை சேர்ந்…
-
- 0 replies
- 369 views
-
-
மான்செஸ்டர் குண்டுவெடிப்பு உருவாக்கியிருக்கும் சவால்கள் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் அரங்கில் மே 22-ல் நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பு அந்நாட்டையே அதிரவைத்திருக்கிறது. தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. தாக்குதலை நடத்திய உட்பட 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 59 பேர் காயமடைந்திருக்கிறார்கள். சல்மான் அபிதி, லிபியாவைப் பூர்விகமாகக் கொண்ட பிரிட்டன் குடிமகன். கடந்த மூன்று ஆண்டுகளாகவே, பயங்கரவாதிகள் மேற்கத்திய நகரங்களில் தாக்குதல்கள் நடத்தி குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்துவருகிறார்கள். மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இவை. இதன் மூலம், இன, மதரீதியான பதற்றத்…
-
- 0 replies
- 313 views
-
-
பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. புதுடெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாமியார் சந்திராசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன், இந்த வழக்கில் சாமியார் சந்திராசாமியிடம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது அறிக்க…
-
- 4 replies
- 2.1k views
-
-
இன்றைய (29/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸின் மௌத்தே தீவிரவாதிகள் வசம் இருந்த தெற்கு நகரான மராவியின் பெரும்பாலான பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் அறிவிப்பு; ஆனால், சண்டை தொடர்கின்றது. * தகவல் தொழில்நுட்ப கணினி கட்டமைப்புப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விமான சேவைகளை இயல்புநிலைக்கு கொண்டுவர பிரிட்டிஷ் ஏர்வேஸ் தொடர்ந்து முயற்சி; பகிரங்க மன்னிப்பு கோரினார் தலைமை அதிகாரி. * தாவர உலகின் நல்லது, கெட்டது அனைத்தையுமே பாதுகாக்க வேண்டுமென வனஉயிரி பாதுகாப்பு நிபுணர்கள் கோரிக்கை.
-
- 0 replies
- 279 views
-
-
கோப்புப்படம் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகள் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #திராவிடநாடு (#dravidanadu) என்ற ஹேஷ்டேக் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதலே ட்ரண்டாகிவருகிறது. சென்னையளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டாகிவருகிறது. தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு என்ற கருத்துகளை முன்வைத்து பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்து வருகின்றனர். அதேவேளையில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள…
-
- 3 replies
- 530 views
-
-
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் தொடர் இல்லை! : இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அதிரடி! பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இருதரப்பு கிரிக்கெட் தொடரை முன்னெடுக்கப் போவதில்லையென இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையில் தொடரொன்ரை நடத்துவது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் இன்று டுபாயில் பேச்சுவார்த்தை நடத்துவதை தொடர்ந்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கருத்து தெரிவிக்கையில் "பாகிஸ்…
-
- 0 replies
- 243 views
-
-
ஜப்பான் கடலில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் | படம்: கேசிஎன்ஏ உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி மீண்டும் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பான் மற்றும் கொரிய கடல் பகுதிக்கு இடையில் ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், இதனை வடகொரியாவின் அதிபர் கிங் ஜோங் உன் பார்வையிட்டதாகவும் தென் கொரியா மற்றும் ஜப்பான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனை 280 மைல்கள் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக் கூடியது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வடகொரியா நடத்திய …
-
- 0 replies
- 325 views
-