உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலிய- பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டுக் கொள்கையை கைவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஐநா விமர்சனம். * காவலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கறுப்பின இளைஞர் குற்றஞ்சாட்டியதை அடுத்து பாரிஸ் நகரில் பெரும் போராட்டம்; பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் குதித்தனர். * இங்கிலாந்தில் ஐம்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நீராவி ரயில் பயணம்.
-
- 0 replies
- 269 views
-
-
பாரிஸ் காவலர்கள் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் செய்துள்ள கருப்பின இளைஞருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானவர்கள் பாரிஸ் நகர தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் வெளியானதில் இருந்து பாரிஸ் புறநகர் பகுதிகளில் பதட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு காவலர் மீது பாலியல் புகாரும் மூவர் மீது தாக்குதல் புகாரும் பதியப்பட்டுள்ளது. ஆனால் அதனால் பாரிஸ் தெருக்களில் வெளிப்படும் கோபத்தைக் குறைக்கமுடியவில்லை.
-
- 0 replies
- 372 views
-
-
100 வருடத்தில் இல்லாமல் போகும் 10 நாடுகள் நெதர்லாந்து முதலிடத்தில்
-
- 0 replies
- 626 views
-
-
இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையில் தனி நாடு தீர்வு மட்டும் அமைதிக்கு வழியல்ல: டிரம்ப் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் பிரச்சனையில், தனி நாடு தீர்வு மட்டும் அமைதிக்கு வழியல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை தொடர்பான இரு மாநில தீர்வை பாதுகாக்க அனைத்தும் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்று பொதுச் செயலாளர் அந்தோனிய கட்டாரஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடை…
-
- 1 reply
- 419 views
-
-
பிரெக்சிற் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை பிரெக்சிற் விவகாரம் தாம் வசிக்கும் நாடுகளில் தமது உரிமைகளை கட்டுப்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களை பாதிக்குமா என்பது குறித்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம்) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி கணக்கெடுப்பின் பிரகாரம், 83 சதவீதமானோர் பெரும் கவலை வெளியிட்டுள்ள அதேவேளை 3.8 சதவீதமானோர் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நாடு…
-
- 1 reply
- 294 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் தந்தையின் மறுதார மகனான கிம் ஜாங் நாமின் மரணம் தொடர்பில் ஒரு பெண்ணை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். * அட்லாண்டிக் நாடுகளுக்கான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்; நேட்டோ நாடுகளின் இராணுவ செலவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல். * லார்ஸ் மைதானத்தின் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் தனது மின்சாரத்தேவைக்கு நூறு சதவீதம் புதிப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியை பயன்படுத்தவுள்ளது.
-
- 0 replies
- 240 views
-
-
வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் படுகொலை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் யுன்-இன் ஒன்றுவிட்ட சகோரதரான கிம் ஜாங் நாம், மலேசியாவில் வைத்து, இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, தென் கொரிய ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளன. கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படும் வழிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று, மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/191556/வட-க-ர-ய-ஜன-த-பத-ய-ன-சக-தரர-பட-க-ல-#sthash.IYMKZXC0.dpuf
-
- 1 reply
- 477 views
-
-
வானொலி நேரலை நிகழ்வின்போது இரு ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை வானொலி நேரலை நிகழ்ச்சியொன்றின்போது ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் டொமினிக்கன் குடியரசு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்கொலையுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். மற்றையவர் அதை முகநூல் பக்கம் மூலம் நேரலையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒலிபரப்பு அறைக்குள் புகுந்த மூவர் தொகுப்பாளரைச் சுடத் தொடங்கினர். திடீரென நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், முகநூலில் நேரலை ஒளிபரப்புச் செய்தவர் பயந்து அலறத் தொடங்கினார். இதனால், தாக்குதல்தாரிகள் அவர் பக்கம் திரும்பி …
-
- 0 replies
- 359 views
-
-
ஒரு போனுக்கு இவ்வளவு அக்கப்போரா? அதிகாரிகளிடம் அடம் பிடிக்கும் ட்ரம்ப் உலகமயமாக்கல் காரணமாக இன்று ஸ்மார்ட்போன்கள் கிராமங்களுக்கும் வந்துவிட்டன. மொபைல் வாங்கிய கொஞ்ச நாட்களில், அப்டேட்டோடு புதிதாக இன்னொரு மொபைல் சந்தைக்கு வந்து நம்மை கடுப்பேற்றும். இன்னும் சில பேர் கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கி விடவேண்டுமென்ற கொள்கையோடு இருப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, உலகின் வல்லமை பொருந்திய பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மொபைல் எளிதாக ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பது தான் அதற்குக் காரணம். அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அளிக்கும் பலவிதமான என்க்ரிப்சன் சமா…
-
- 0 replies
- 632 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒருமாதம்கூட ஆகவில்லை. ஆனால் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி துறக்கிறார். அதிபர் டிரம்புடன் பேச்சு நடத்த இஸ்ரேலிய பிரதமர் வாசிங்டன் வந்துள்ளார். சர்ச்சைக்குரிய இஸ்ரேலிய குடியிருப்புக்க்ள் குறித்தும் அவர்கள் பேசலாம். சட்டத்தை மீறும் நாய் உரிமையாளர். நாய்களின் அசுத்தங்களை அகற்றாத அதன் உரிமையாளர்களை கண்டுபிடிக்க புதிய டீ.என்.ஏ சோதனைத் திட்டம்.
-
- 0 replies
- 326 views
-
-
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீரென பதவி விலகினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் ரஷ்ய தூதரோடு மேற்கொண்ட தொலைபேசி தொடர்புகளில் நிர்வாகத்திற்குதவறான தகவல்களைத் வழங்கினார் என்று எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னரே, அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட…
-
- 1 reply
- 551 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஐநா பாதுகாப்புச் சபை விவாதிக்க தயாராகிறது. அதேவேளை வடகொரியா குறித்த கொள்கை பற்றி அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன. மத்திய கிழக்கின் மதக் கொள்கைகளுக்கு சவுதியின் புதிய சவால்.பெட்ரோலில் தங்கியிருப்பதையும் குறைக்க நினைக்கிறது அந்த நாடு. அணு மின் உற்பத்தியை கைவிட நினைக்கிறது தாய்வான். பதிலாக தூய எரிசக்தியை நோக்கி அது பயணிக்கிறது.
-
- 0 replies
- 336 views
-
-
எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ? கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்! அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, ராஜதந்திரரீதியிலான பிரச்சினைகளைக் கையில் எடுத்திருக்கிறார் ட்ரம்ப். முதலில், அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் சுவர் எ…
-
- 0 replies
- 491 views
-
-
ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் தெரிவு ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் சபையால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமூக ஜனநாயகவாதியான இவர், ஜேர்மனியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்க முன்பு ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வால்ட்டருக்கு ஆதரவாக 931 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நி…
-
- 0 replies
- 465 views
-
-
வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.இந்த நிலையில் தடையை மீறி நேற்று மீண்டும் வட கொரிய…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவின் ‘துரோகி’யை ட்ரம்புக்குப் பரிசளிக்கவிருக்கிறாரா புட்டின்? அமெரிக்காவுடனான நட்பைப் புதுப்பிக்கக் காத்திருக்கும் ரஷ்யா, அதற்குப் பரிசாக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க உளவாளி எட்வர்ட் ஸ்னோடென்னை அமெரிக்காவிடம் கையளிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்காவின் கண்காணிப்புப் பொறிமுறைகள் பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களைக் கசியவிட்டவர். அமெரிக்க அரசின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார் ஸ்னோடென். தற்போது ரஷ்யாவிலேயே தங்கியிருக்கும் ஸ்னோடென் பற்றி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட ட்ரம்ப், ஸ்னோடென்னை துரோகி என்று…
-
- 1 reply
- 541 views
-
-
21 பில்லியன் டொலர் செலவில் உருவாகவுள்ள அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் திட்டத்திற்கு சுமார் 21 பில்லியன் டொலர் செலவாகும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தச் சுவரை நிர்மாணிக்கும் பணிகள் சுமார் மூன்றரை வருட காலங்கள் நீடிக்கும் என்றும், சுவர்கள் மட்டுமல்லாது, இடையிடையே முட்கம்பி உட்படப் பலதரப்பட்ட வேலிகளும் அமைக்கப்படும் என்றும் தெரியவருகிறது. சர்ச்சைக்குரிய சுவர் நிர்மாணம் பற்றி தனது தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட ட்ரம்ப், இதற்காக சுமார் 12 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால்…
-
- 1 reply
- 454 views
-
-
டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது: அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு 7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை நீக்க முடியாது என அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் ஒன்று, அகதிகள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தது. மற்றொரு உத்தரவு ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடையாக அமைந்தது.…
-
- 0 replies
- 462 views
-
-
பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக 16 வயது யுவதி உட்பட 4 பேர் கைது பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின்பேரில் 16 வயது யுவதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் கடந்த இரண்டு ஆண்டுகளான அடுத்தடுத்து நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், தெற்கு பிரான்சின் மோன்ட்பெல்லியரில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் 16 வயது இளம்பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர். …
-
- 0 replies
- 431 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், சீன அதிபருடன் முதன்முறையாக தொலைபேசியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் தைவானும் சீனாவின் ஒரு அங்கம் என்று வலியுறுத்தும் ''ஒரே சீனம்” என்கிர கொள்கையை ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது குறித்த செய்திகள். * யேமனில் டொனால்ட் டிரம்ப் ஆணையிட்ட முதல் இராணுவ நடவடிக்கையின் பின்விளைவுகளை காட்டும் பிரத்யேகக் காணொளி. * கடுமையான குளிர்காலத்துக்கு பேர் போனது மாஸ்கோவின் பெருங்குளிரில் அவதியுறும் வீடில்லாதோரின் அவலம் குறித்த பிபிசியின் நேரடி படப்பிடிப்பு ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 412 views
-
-
டென்மார்க் : இரு பள்ளிகளை தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக சிறுமி ஒருவர் மீது குற்றச்சாட்டு டென்மார்க்கில் பதினாறு வயது சிறுமி ஒருவர் இரு பள்ளிகளை வெடிகுண்டு மூலம் தகர்க்க சதித்திட்டம் தீட்டினார் என்று அங்குள்ள அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கோப்புப்படம் அந்த சிறுமி தகர்க்க நினைத்ததாக கூறப்படும் இரு பள்ளிகளில் ஒன்று யூத பள்ளியாகும். இஸ்லாம் மதத்திற்கு மாறிய அந்த சிறுமி வெடிகுண்டுக்கு தேவையான பொருட்களை தயார் செய்தார் என்று வழக்கறிஞர் லிஸே லோட்டி நிலாஸ் கூறியுள்ளார். 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட அதே சமயத்தில் அந்த சிறுமி எவ்வித குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டார். சிரியாவுக்கு இருமுறை செ…
-
- 0 replies
- 329 views
-
-
தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 2 பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் பாரியளவில் தேடுதல் வேட்டையொன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் 450 ஜெர்மனிய விசேட காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்த தேடுதல் வேட்டையில் பங்கேற்றிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும் எந்தவொரு இடத்தை தாக்குவதற்கு திட்டமிட்டமை பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. 27 வயதான அல்ஜீரிய பிரஜை ஒருவரும், 23 வயதான நைஜீ…
-
- 0 replies
- 241 views
-
-
ஈஃபிள் டவரை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கண்ணாடி சுவர் இந்த வருடத்தின் இறுதிக்குள், சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை பாதுகாக்க, அதனைச் சுற்றி வலிமையான கண்ணாடி சுவர் நிறுவப்படவுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த யூரோ 2016 கால்பந்து போட்டி நடைபெற்றபோது நிறுவிய உலோக வேலிகளுக்கு பதிலாக இந்த இரண்டரை மீட்டர் சுவர் அமைக்கப்படும் என நகரின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகரத்தின் மிக மதிப்பிற்குரிய இடங்கள் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத் துறையின் துணை மேயர் ஷான் ஃப்ரான்சுவா மார்த்தின் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 380 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானில் தன் பணிகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச்சங்கம்; அதன் வாகனத்தொடரணி மீதான தாக்குதலில் பணியாளர்கள் ஆறுபேர் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவு. கடலிலுள்ள உணவுப்பொருட்கள் கரையில் இறக்குவதற்குத் தடை; ஏமெனின் அரச ஆதரவுப்படைகளின் துறைமுகத் தடையால் பட்டினியில் வாடும் பல லட்சம் மக்கள். அழகா? ஆபத்தா?? பிரிட்டன் கடற்கரை நகரை அச்சுறுத்தும் கடற்பறவைகளை சமாளிப்பது எப்படி என்று நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம்.
-
- 0 replies
- 474 views
-
-
பிரெக்ஸிட் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு: பிரதமர் தெரசா வெற்றி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமோக ஆதரவுடன் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரெக்ஸிட் தொடர்பான மசோதாவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்த மசோதாவிற்கு 494 பாராளுமன…
-
- 0 replies
- 316 views
-