உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26881 topics in this forum
-
எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ? கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்! அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, ராஜதந்திரரீதியிலான பிரச்சினைகளைக் கையில் எடுத்திருக்கிறார் ட்ரம்ப். முதலில், அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் சுவர் எ…
-
- 0 replies
- 494 views
-
-
ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் தெரிவு ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் சபையால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமூக ஜனநாயகவாதியான இவர், ஜேர்மனியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்க முன்பு ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வால்ட்டருக்கு ஆதரவாக 931 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நி…
-
- 0 replies
- 473 views
-
-
வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.இந்த நிலையில் தடையை மீறி நேற்று மீண்டும் வட கொரிய…
-
- 0 replies
- 456 views
-
-
அமெரிக்காவின் ‘துரோகி’யை ட்ரம்புக்குப் பரிசளிக்கவிருக்கிறாரா புட்டின்? அமெரிக்காவுடனான நட்பைப் புதுப்பிக்கக் காத்திருக்கும் ரஷ்யா, அதற்குப் பரிசாக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க உளவாளி எட்வர்ட் ஸ்னோடென்னை அமெரிக்காவிடம் கையளிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்காவின் கண்காணிப்புப் பொறிமுறைகள் பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களைக் கசியவிட்டவர். அமெரிக்க அரசின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார் ஸ்னோடென். தற்போது ரஷ்யாவிலேயே தங்கியிருக்கும் ஸ்னோடென் பற்றி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட ட்ரம்ப், ஸ்னோடென்னை துரோகி என்று…
-
- 1 reply
- 547 views
-
-
21 பில்லியன் டொலர் செலவில் உருவாகவுள்ள அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் திட்டத்திற்கு சுமார் 21 பில்லியன் டொலர் செலவாகும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தச் சுவரை நிர்மாணிக்கும் பணிகள் சுமார் மூன்றரை வருட காலங்கள் நீடிக்கும் என்றும், சுவர்கள் மட்டுமல்லாது, இடையிடையே முட்கம்பி உட்படப் பலதரப்பட்ட வேலிகளும் அமைக்கப்படும் என்றும் தெரியவருகிறது. சர்ச்சைக்குரிய சுவர் நிர்மாணம் பற்றி தனது தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட ட்ரம்ப், இதற்காக சுமார் 12 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால்…
-
- 1 reply
- 457 views
-
-
டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது: அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு 7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை நீக்க முடியாது என அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் ஒன்று, அகதிகள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தது. மற்றொரு உத்தரவு ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடையாக அமைந்தது.…
-
- 0 replies
- 466 views
-
-
பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக 16 வயது யுவதி உட்பட 4 பேர் கைது பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின்பேரில் 16 வயது யுவதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்சில் கடந்த இரண்டு ஆண்டுகளான அடுத்தடுத்து நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், தெற்கு பிரான்சின் மோன்ட்பெல்லியரில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த காவல்துறையினர் 16 வயது இளம்பெண் உள்பட 4 பேரை கைது செய்தனர். …
-
- 0 replies
- 434 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. *அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், சீன அதிபருடன் முதன்முறையாக தொலைபேசியில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் தைவானும் சீனாவின் ஒரு அங்கம் என்று வலியுறுத்தும் ''ஒரே சீனம்” என்கிர கொள்கையை ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது குறித்த செய்திகள். * யேமனில் டொனால்ட் டிரம்ப் ஆணையிட்ட முதல் இராணுவ நடவடிக்கையின் பின்விளைவுகளை காட்டும் பிரத்யேகக் காணொளி. * கடுமையான குளிர்காலத்துக்கு பேர் போனது மாஸ்கோவின் பெருங்குளிரில் அவதியுறும் வீடில்லாதோரின் அவலம் குறித்த பிபிசியின் நேரடி படப்பிடிப்பு ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 415 views
-
-
டென்மார்க் : இரு பள்ளிகளை தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக சிறுமி ஒருவர் மீது குற்றச்சாட்டு டென்மார்க்கில் பதினாறு வயது சிறுமி ஒருவர் இரு பள்ளிகளை வெடிகுண்டு மூலம் தகர்க்க சதித்திட்டம் தீட்டினார் என்று அங்குள்ள அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கோப்புப்படம் அந்த சிறுமி தகர்க்க நினைத்ததாக கூறப்படும் இரு பள்ளிகளில் ஒன்று யூத பள்ளியாகும். இஸ்லாம் மதத்திற்கு மாறிய அந்த சிறுமி வெடிகுண்டுக்கு தேவையான பொருட்களை தயார் செய்தார் என்று வழக்கறிஞர் லிஸே லோட்டி நிலாஸ் கூறியுள்ளார். 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட அதே சமயத்தில் அந்த சிறுமி எவ்வித குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டார். சிரியாவுக்கு இருமுறை செ…
-
- 0 replies
- 333 views
-
-
தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 2 பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் பாரியளவில் தேடுதல் வேட்டையொன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் 450 ஜெர்மனிய விசேட காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்த தேடுதல் வேட்டையில் பங்கேற்றிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும் எந்தவொரு இடத்தை தாக்குவதற்கு திட்டமிட்டமை பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. 27 வயதான அல்ஜீரிய பிரஜை ஒருவரும், 23 வயதான நைஜீ…
-
- 0 replies
- 246 views
-
-
ஈஃபிள் டவரை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கண்ணாடி சுவர் இந்த வருடத்தின் இறுதிக்குள், சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை பாதுகாக்க, அதனைச் சுற்றி வலிமையான கண்ணாடி சுவர் நிறுவப்படவுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த யூரோ 2016 கால்பந்து போட்டி நடைபெற்றபோது நிறுவிய உலோக வேலிகளுக்கு பதிலாக இந்த இரண்டரை மீட்டர் சுவர் அமைக்கப்படும் என நகரின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகரத்தின் மிக மதிப்பிற்குரிய இடங்கள் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத் துறையின் துணை மேயர் ஷான் ஃப்ரான்சுவா மார்த்தின் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 382 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானில் தன் பணிகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச்சங்கம்; அதன் வாகனத்தொடரணி மீதான தாக்குதலில் பணியாளர்கள் ஆறுபேர் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவு. கடலிலுள்ள உணவுப்பொருட்கள் கரையில் இறக்குவதற்குத் தடை; ஏமெனின் அரச ஆதரவுப்படைகளின் துறைமுகத் தடையால் பட்டினியில் வாடும் பல லட்சம் மக்கள். அழகா? ஆபத்தா?? பிரிட்டன் கடற்கரை நகரை அச்சுறுத்தும் கடற்பறவைகளை சமாளிப்பது எப்படி என்று நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம்.
-
- 0 replies
- 478 views
-
-
பிரெக்ஸிட் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு: பிரதமர் தெரசா வெற்றி ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமோக ஆதரவுடன் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் மசோதா குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரெக்ஸிட் தொடர்பான மசோதாவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்த மசோதாவிற்கு 494 பாராளுமன…
-
- 0 replies
- 321 views
-
-
பாகிஸ்தானுக்கு வழங்கிய இலங்கை விமானத்தை பின்தொடர்ந்த இங்கிலாந்து போர் விமானங்கள் : அநாமதேய தொலைபேசியால் வந்த விளைவு இலங்கை விமான சேவை பணியாளர்களுடன் குத்தகை அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட இலங்கை விமானம் ஒன்று இங்கிலாந்து வான் பரப்பில் செல்லும் போது அவசரமாக நேற்று மாலை இங்கிலாந்தில் தறையிறக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குத்தகை அடிப்படையில் இலங்கையால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட பிகே757 என்ற விமானம் தற்போது பாகிஸ்தானால் சர்வதேச விமான சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த விமானம் 150 பயணிகளுடன் லாகூரிலிருந்து இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்துள்ளது. இதன்போது குறித்த …
-
- 0 replies
- 449 views
-
-
ஒபாமாவின் நம்பிக்கையைத் தகர்த்த கைதி! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் விடுவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கைதியொருவர் மீண்டும் அதே குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1992ஆம் ஆண்டு, ரொபர்ட் எம்.கில் (68) என்பவர் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்த பொதுமன்னிப்பின் பேரில் 1,385 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் இவரும் ஒருவர். இந்த நிலையில், கடந்த வாரம் 500 கிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதை மருந்தை வினியோகிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ர…
-
- 2 replies
- 480 views
-
-
*ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக நீதிமன்றத்தால் குற்றங்காணப்பட்டார்; அதிபர் பூட்டினுக்கு எதிராக அடுத்த தேர்தலில் இவர் போட்டியிட முடியாமல் போகலாம். *இரான் - இராக் எல்லையில் உயிர்வாழ கடத்தலில் ஈடுபடுவோரின் சோகக்கதை; உறைபனிக்கிடையில் உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்து பிழைப்பவர்கள் குறித்த நேரடி படப்பிடிப்பு. *அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நமது பெரும்பாலான வேலைகளை ரோபோக்கள் பறித்துவிடலாம் என்கிறார்கள் லண்டன் தொழில்நுட்ப நிபுணர்கள்; இது மனிதர்களுக்கு கவலை தரும் விஷயமா?
-
- 0 replies
- 269 views
-
-
இன்றைய செய்தியறிக்கையில், * சிரியாவில் போர்க்குற்றத்துக்கான ஆதாரம்; கொலைக்களமாக அறியப்படும் இராணுவச் சிறையில் பதின்மூவாயிரம் பேர் ரகசியமாக கொல்லப்பட்டதாக அம்னஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு. * அமெரிக்காவின் ஒரு இருண்ட பக்கம்; பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்பட்ட சிறுமிகளை மீட்கும் லாஸ் ஏஞ்செலீஸ் காவல்துறையின் நடவடிக்கை குறித்த பிபிசியின் பிரத்யேகச் செய்தி. * கனவை நிஜமாக்கிய இந்தோனேசிய மாணவர்கள்; சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத காரை வடிவமைத்தவர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.
-
- 0 replies
- 364 views
-
-
சவூதியில் வரலாற்று சம்பவம் : பெண்களுக்கு கிடைத்த கௌரவம்! ஆணாதிக்க சமூக முறையை கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில், வரலாற்றில் முதல் முறையாக மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. மகளிர் தின கொண்டாட்டத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பெண்களும், பங்குபற்ற உள்ளதாக அந்நாட்டு கலாச்சார மையம் தகவல் பகிர்ந்துள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் பங்குகொள்ளும் மன்னர் குடும்பத்தினர் சார்பில், இளவரசி அல்-ஜவ்ஹரா பிண்ட் பஹத், கல்வித் துறையில் பெண்களின் பங்கு குறித்து பேசவுள்ளதாகவும், அத்தோடு கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சவூதி பெண்களின் சாதனைகள், பெண்களின் வளர்ச்சி பங்கு குறித்த கருத்தாடல்களுடன், தொடர்ச்சி…
-
- 0 replies
- 690 views
-
-
. போதையுடன் நடந்து விபத்தில் சிக்கினால், மூச்சு சோதனை குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும்தான் மூச்சு சோதனை என்றால் இப்போது, குடித்துவிட்டு நடந்து போகும்போது விபத்தில் சிக்கினாலும் அந்த சோதனை நடக்குமாம் -- இது நமீபியாவில். நமீபியாவின் தலைநகரத்தில் பாதசாரிகள் சாலைவிபத்தில் மாட்டிக்கொண்டால், அவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை வி்டுக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து நடந்தால் வாகன ஓட்டிகளை எப்படி போலிசார் சோதிப்பார்களோ அதே போல சோதனைகளுக்கு பாதசாரிகளும் உட்படுத்தப்படுவர் என்று விண்ட் ஹோக் நகர போலிசார் கூறுகிறார்கள். ஒரே விஷயம் - இந்த சோதனையை பாதசாரி உயிர் தப்பினால்தான் செய்ய முடியும் ! பாதசாரிகள்…
-
- 0 replies
- 392 views
-
-
நேரடி, நீண்ட விமான சேவையில் அதிகரிக்கும் போட்டி தோஹாவிலிருந்து ஆக்லாந்துக்கு விமான சேவையை தொடங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம், உலகின் மிக நீண்ட, இடையில் நிறுத்தங்கள் இல்லாத ,பயணியர் விமான சேவை இதுதான் என்று கூறுகிறது. படத்தின் காப்புரிமைQATAR AIRWAYS Image captionதிங்களன்று ஆக்லாந்தில் தண்ணீர் தெளித்து வரவேற்கப்படும் கத்தார் போயிங் 777-200எல்ஆர் விமானம் QR920 என்ற அந்த விமானம் திங்கட்கிழமை 16 மணி, 23 நிமிட நேரத்துக்குப் பின் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு சற்று முன்பாகவே தரையிறங்கியது. புதிய பாதைகளில் வந்திறங்கும் விமானங்கள் மீது வழமையாக செய்யப்படுவதைப் போல இந்த போயிங் 777-200LR விமானத்தின் மீதும் குழாய்கள்…
-
- 1 reply
- 723 views
-
-
டிரம்ப் விதித்த பயணத்தடைக்கெதிராக அப்பிள், முகப்புத்தகம் கூகுள் உள்பட 100 தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு : அமெரிக்க வர்த்தகத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகள் மீது விதித்த பயணத்தடை உத்தரவு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அப்பிள், முகப்புத்தகம் மற்றும் கூகுள் உள்பட அமெரிக்காவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளன. சன் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கையெழுத்திட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன. இந்தத் தடை ஆணையால் வெளிநாடுகளில் தங்களுடைய சேவையை விரிவுப்படுத்துவதற்கு தேவ…
-
- 1 reply
- 340 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுமோதலில் சென்ற ஆண்டு பதினோராயிரத்து ஐநூறு பேர் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக ஐநா அறிவிப்பு; அதில் மூன்றில் ஒருபகுதியினர் குழந்தைகள் என்றும் கவலை. தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் பிரான்ஸின் தேசியவாத கட்சித்தலைவி மெரின் லுபென்; அவருக்கும் இம்மானுவல் மக்ரானுக்குமான ஆதரவு அதிகரிப்பதாக காட்டுகின்றன கருத்துக்கணிப்புகள். அரியணையில் அறுபத்தி ஐந்து ஆண்டுகள்; உலகில் நீண்டநாள் முடியாட்சி செய்யும் சாதனை படைத்தார் பிரிட்டிஷ் பேரரசி இரண்டாம் எலிசபெத்.
-
- 0 replies
- 492 views
-
-
டிரம்பின் தடை உத்தரவிற்கு தடை : அமெரிக்க நீதிபதியின் அதிரடி உத்தரவு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கு தடைவிதித்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக, நாடு தழுவியரீதியில் அமுலில் வரும்படியான தற்காலிக தடை உத்தரவொன்றை சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி தீர்ப்பாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக செயற்படுவதற்கு, அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட வரையறை இல்லையென அரச சட்டத்தரணிகள் கூறிவந்த நிலையிலும், சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி ஜேம்ஸ் ரொபர்ட் குறித்த நிர்வாக ஆணைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார். டிரம்பின் உத்தரவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு…
-
- 4 replies
- 1k views
-
-
சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று கார்ட்டூன்: ஜெர்மனி பத்திரிகை பிரசுரம் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று ஜெர்மனியின் பிரபல வார இதழ் ஒன்று கார்ட்டூனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெர்லின்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே சர்ச்சைக்குரிய அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளில் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நி…
-
- 1 reply
- 596 views
-
-
பாலியல் குற்றச்சாட்டின் பேரில் சவுதி தூதரக அதிகாரிக்கு நான்கு பிரம்படி, 26 மாத சிறை; சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பலவந்தப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சவுதி தூதரக அதிகாரியொருவருக்கு சிங்கப்பூர் அரசு நான்கு பிரம்படியும் 26 மாத சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரி பாந்தர் யெஹியா ஏ.அல்ஸஹ்ரானி (39). இவர் கடந்த வருடம் விடுமுறையைக் கழிக்கும் முகமாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவரை பலவந்தப்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் …
-
- 6 replies
- 624 views
-