உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
மனம் உடைஞ்சு அழுதுட்டார் மோடி, Apollo ரெட்டியால அழ முடியலயே! நிலைமை இந்தா சரியாப் போகும், இப்போ சரியாப் போகும்னு ரெண்டுபேர் சொல்றாங்க.. ஒண்ணு நரேந்திர மோடி! இன்னொண்ணு அப்போலோ ரெட்டி! ரெண்டுபேருமே நாட்டு மக்களுக்கு உற்சாகம் ஊட்டுறதுக்காக இப்படிச் சொல்றாங்களா, இல்லேன்னா தங்களோட கவலையை மறக்கிறதுக்காகச் சொல்றாங்களான்னே தெரியல! ரெண்டு நாள்ல குணமாயிடும், முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பிடுவாங்க, சாதாரண காய்ச்சல்தான்னு சொன்னாங்க....அதேபோல நிலைமை விரையில் சீராகிடும்னு சொல்லி, ரூபாய் நோட்டு செல்லாதுன்ற அறிவிப்பை வெளியிட்டாரு மோடி. 20 நாட்களுக்குப் பின்னரும் வங்கிகளிலும், ஏ,டி.எம்-களிலும் பணம் இல்லாத நிலைதான் தொடருது.. நாட்ல என்னதான் நடக்குது?-ன்ன…
-
- 0 replies
- 475 views
-
-
ஃபிரான்ஸ் அதிபருக்கான முதன்மை தேர்தலில் மத்திய வலதுசாரி வேட்பாளராக ஃபியோங் தேர்வு ஃபிரான்ஸில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான மத்திய வலதுசாரி கட்சியின் வேட்பாளராக விவாதத்திற்கு இடமின்றி ஃபிரான்ஸ்வா ஃபியோங் வெற்றிப் பெற்றுள்ளார். மகிழ்ச்சி ஆராவாரங்களை எழுப்பிய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஃபியோங் முதன்மை தேர்தலில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் மற்றொரு முன்னாள் பிரதமரான அலேன் சூபேவை, ஃபியோங் தோற்கடித்துள்ளார். அடுத்த வருடத் தேர்தலில் இன்னும் நியமிக்கப்படாத சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளர் மற்றும் தீவிர வலது சாரிக் கட்சி வேட்பாளர் மரீன் ல பென் ஆகியோரை எதிர்கொள்ளவுள்ளார் ஃபியோங். மகிழ்ச்சி ஆராவாரங…
-
- 0 replies
- 245 views
-
-
கியூபா... கம்யூனிசம்... காஸ்ட்ரோவுக்குப் பிறகு!? சிறுவர்களுக்கான மாய மந்திரக் கதைகளில் வரும் உயரமான ராட்சதர்களைப் பார்த்திருப்பீர்கள். அப்படித்தான் ஃபிடல் காஸ்ட்ரோவும். ஆறரை அடி உயரம், கையில் சுருட்டு, இடுப்பில் துப்பாக்கி, புரட்சிக்காரர்களுக்கே உரிய கரும்பச்சை உடை. எங்கிருந்தாலும் யாராலும் எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய இந்த உருவத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வளவோ முறை முயன்றும் பிடிக்க முடியவில்லை. தனியொரு மனிதனை கொல்ல கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் என 638 முறை இவர்மீது கொலைத் திட்டம் தீட்டினார்கள். அத்தனை முறையும் அவர்களிடமிருந்து தப்பித்த காஸ்ட்ரோவை தன் 90-வது வயதில் இயற்கை தழுவிக் கொண்டது. அதுவும் அவர் முன்பே அறிந்து விட்டிருந்த மரணம் …
-
- 3 replies
- 706 views
-
-
காலிஸ்தான் தலைவர் ஜெயிலில் இருந்து எஸ்கேப் பஞ்சாப்பில் உள்ள நபா சிறைச்சைலையிலிருந்து காலிஸ்தான் விடுதலைப் படை தலைவர் மற்றும் நான்கு பேர் தப்பித்துள்ளனர். இன்று காலை, பாதுகாவலர்கள் போல் உடை அணிந்து ஆயுதங்களுடன் 10 பேர் நபா சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் காலிஸ்தான் விடுதலைப் படை தலைவர் ஹர்மிந்தர் சிங் மின்டூ மற்றும் குர்ப்ரீத் சிங், விக்கி கோண்ட்ரா, நிதின் டியோல், விக்ரம்ஜீத் சிங் ஆகிய நான்கு குற்றவாளிகளையும் தப்பிக்கச் செய்துள்ளனர் . சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் ராணுவத்தினர் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் முழுக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. http://www.vikatan.com/news/india/73576-khalistan-lead…
-
- 2 replies
- 518 views
-
-
எலெக்ட்ரானிக் தேசம் தாய்வான்! வேல்ஸ் இந்தியா - தாய்வான் இரு தரப்பு வர்த்தகம் 480 கோடி டாலர். இந்தியாவிலிருந்து தாய்வானுக்கு ஏற்றுமதி 187 கோடி டாலர். தாய்வானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி 293 கோடி டாலர். தென் சீனக் கடலில் மிதந்து கொண்டிருக்கும் சின்னஞ்சிறு தீவான தாய்வானும் இந்தியாவும் இப்போது ஒன்றை ஒன்று வாஞ்சையோடு பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தியா மென்பொருள் உற்பத்தியில் வலிமையான நாடு. தாய்வானோ வன்பொருள் (Hardware) உற்பத்தியின் அசைக்கமுடியாத சக்தி. வன்பொருள் உடல் என்றால், மென்பொருள் உயிர். உடலோடு உயிர் ஒன்று சேர்ந்தால் இரு நாட்டுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகம் உயிர்ப்பு பெறும். பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி காணும் …
-
- 0 replies
- 575 views
-
-
ஸ்விட்சர்லாந்தில் அணு உலைகளை மூடுவதற்கான வாக்கெடுப்பு ஸ்விடசர்லாந்தில், அணு உலையை படிப்படியாக மூடுவதற்கான கடுமையான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். நாட்டின் ஐந்து அணு உலைகளை மூடும் திட்டத்தை ஸ்விடசர்லாந்து அரசு அறிவித்தது; ஆனால், அதை செயல்படுத்துவதற்கான தேதியை அறிவிக்கவில்லை. அவ்வாறு அணு உலைகளை உடனடியாக மூடுவது, மின் தட்டுபாட்டிற்கு வழிவகுக்கும் என வர்த்தக தலைவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் 45 வருடங்களுக்கு மேலான காலம் செயல்பட்டுள்ள எந்த ஒரு அணு உலையும் செயல்படக்கூடாது என எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்மூலம் குறைந்தது இரண்டு அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பதை உணர்த்தியு…
-
- 1 reply
- 404 views
-
-
அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை! அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். அதே வேலையில், ட்ரம்ப் குறைந்த அளவு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில், க்ரீன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜில் ஸ்டெய்ன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்று கோரி இருந்தார். இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் சில தினங்களில் அதிகாரப்பூர்வ மறுவாக்கு எண்ணிக்கை…
-
- 2 replies
- 643 views
-
-
மக்களை ஏமாற்ற மோடி அரசு நடத்தும் கருத்துக் கணிப்பு மோசடிகள்.. சதா சர்வ காலமும் மக்களை எப்படி முட்டாள்கள் ஆக்குவது என்பதைப் பற்றி மட்டுமே சில பேர் யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எதையாவது செய்து தொடர்ந்து மக்களை சிந்திக்க விடாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக புதிது, புதிதாக தினுசு, தினுசாக பொய்களை பரப்புகின்றார்கள். முட்டாள் பயல்களை எல்லாம் அதிபுத்திசாலியாகக் காட்டுவது, ஒன்றுக்கும் ஆகாத காவலிகளை எல்லாம் வீராதி வீரன்களாகவும், சூராதி சூரன்களாகவும் காட்டுவது என அனைத்துத் தில்லாலங்கடி வேலைகளையும் செய்கின்றார்கள். முன்பெல்லாம் அப்படி எதாவது பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டால் அதை வதந்தி என்று சொல்வார்கள். இப்போது இது ட…
-
- 0 replies
- 500 views
-
-
துருக்கி :எர்தோகன் ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை துருக்கி ஜனாதிபதி ரெசிப் தய்யிப் எர்தோகன் ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையான தொனியில் எச்சரித்திருக்கிறார். துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தையை காலவரையறை இன்றி தவிர்க்கும் வாக்கெடுப்பொன்றை ஐரோப்பிய பாரஆளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் எர்தோகனின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது. ஐரோப்பாவுக்குள் வரும் அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்ததில் உள்ள விடயங்கள் ஐரோப்பா நி…
-
- 0 replies
- 377 views
-
-
நவம்பர் 26 இன்று பி.பி.சி செய்தித் தளம் பிடல் காஸ்ரோ காலமாகி விட்டதாக அறிவித்து உள்ளது. ஃபிடல் என்று காலமாகினார் என்றோ அல்லது மேலதிக தகவல்களோ தெரிவிக்கப்படவில்லை. Fidel Castro, Cuba's former president and leader of the Communist revolution, has died aged 90, state TV has announced. It provided no further details. Fidel Castro ruled Cuba as a one-party state for almost half a century before handing over the powers to his brother Raul in 2008. His supporters praised him as a man who had given Cuba back to the people. But his opponents accused him of brutally suppressing opposition. In April, Fidel Castro gave a rare speech on the final day of the co…
-
- 33 replies
- 5.4k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்ரேலின் வடக்கு பகுதியில் பரவும் பெரும் காட்டுத்தீ; எண்பதாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர். * ஐஎஸ் அமைப்பால் தமது ஊரிலிருந்து விரட்டப்பட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இராக்கிய கிறிஸ்தவர்களுக்கு பேரதிர்ச்சி; அவர்கள் கிராமமே முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. * அனாதை யானைகளுக்கு ஒரு சரணாலயம்; அவற்றை வளர்ப்பது குறித்து விளக்குகிறார் அபயம் அளித்த வளர்ப்புத்தாய்.
-
- 0 replies
- 701 views
-
-
அடுத்தவாரம் பாரிஸில் நடைபெறவிருந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து ஆண்கள் அடுத்த வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று பாரிஸ் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பாரிஸ் அரச வழக்கறிஞர் பிரான்சுவா மோலின்ஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் கு…
-
- 0 replies
- 397 views
-
-
பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம் பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது. தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்தனை இணையத்தளம் மூலமாகவும், செல்போன் app கள் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் பண அட்டைகள் மூலமாக பணத்தை செலுத்தும் முறையினால், 2009 ஆம் ஆண்டு முதல் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பண தாள்களே…
-
- 0 replies
- 444 views
-
-
குண்டு துளைக்காத ஜன்னல்களுடன், ஒரு லட்சம் ஏக்கரில் வாஸ்து விதிகளின்படி கட்டப்பட்ட சொகுசு பங்களாவில் தெலங்கானா முதலமைச்சர் குண்டு துளைக்காத ஜன்னல்களைக் கொண்ட கழிவறைகளுடன், வாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய ஆடம்பர பங்களாவில், இந்தியாவின் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குடியேறியுள்ளார். ஹைதராபாத் நகரின் பேகம்பேட் பகுதியில் கட்டப்பட்ட இந்த ஆடம்பர பங்களா வாஸ்து விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஹோமம் வளர்க்கும் கேசிஆர் வியாழக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு பாரம்பரிய முறைப்படி கிரகப்பிரவேச பூஜைகள் செய்யப்பட்டன. வாஸ்து பூஜை, சுதர்சன யாகம், பூர்ணாஹுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. முதலமைச்…
-
- 1 reply
- 609 views
-
-
பிரான்ஸில் 70 பேர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட பிக்குகள் மீட்பு ; தீவிரவாத சதிதிட்டமா? பிரான்ஸில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோண்ட்பெல்லியீர் பகுதியில் அமைந்துள்ள இல்லத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஓய்வு இல்லத்தில் நுழைந்து மர்ம நபர் ஒருவன் 70 பேரை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். இந்நிலையில், அங்கிருந்த தப்பித்த பணிப்பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து வ…
-
- 0 replies
- 399 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு: மீண்டும் வாக்குகளை எண்ண ஹிலாரி அணி வலியுறுத்தல் ட்ரம்ப், ஹிலாரி. | படம்: தி கார்டியன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஹிலாரி கிளின்டன் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சர்ச்சைக்குரிய விஸ்கான்சின், மிக்ஸிகன், பெனிஸ்வேனியா மாகாணங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும் போட்டி யிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவில் ஒவ்வொரு ம…
-
- 0 replies
- 367 views
-
-
சம்பள உயர்வு கோரி லுஃப்தான்சா பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: 115,000 பயணிகள் பாதிப்பு ஜெர்மனி, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் வரிசையாக நிற்கும் லுப்தான்சா விமானங்கள்.| ஊதிய உயர்வு கேட்டு பைலட்கள் போராட்டம். ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான சேவை நிறுவன பைலட்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் இதுவரை 900 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் 115,000 பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லுஃப்தான்சா விமானிகள் ஆண்டு ஒன்றுக்கு 3.66% சம்பள உயர்வு கோரியும், பணிச்சூழல் சீரமைப்பு கோரியும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பணவீக்கத்தினால் விமானிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லுஃப்தான்சா நிறுவனமோ பில்லியன்களி…
-
- 0 replies
- 287 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்கர்களிடம் தேசிய ஒருமைப்பாட்டை கோருகிறார் டொனால்ட் ட்ரம்ப்; ஆனால், அவரது சொந்த வணிக சாம்ராஜ்ஜியத்தொடர்புகள் அமெரிக்க அதிபராக அவரது அரசியலை பாதிக்குமா? * இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பெரும்பாலான ஆயுதங்கள் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டவை; போர்க்கள முன்னரங்கத்திலிருந்து பிபிசியின் புலனாய்வுத் தகவல். * பிரிட்டனின் வடகடலில் நிர்மாணிக்கப்படும் காற்றாலைப் பண்ணை விரைவில் பிரிட்டனுக்கு மின்சாரத்தை வழங்கும்; 2025 ஆம் ஆண்டில் நிலக்கரி மின்சாரத்தை ஒழிக்க நினைக்கிறது பிரிட்டன்.
-
- 0 replies
- 279 views
-
-
“இது முறைப்படுத்தப்பட்ட கொள்ளை... சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்” மன்மோகன் சிங் விளாசல்! #Demonetisation பேசாத பிரதமர் என எதிர்கட்சிகளால் கிண்டலுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்துள்ளார். ரூபாய் நோட்டுகள் தடை பற்றி 6 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன், ஆழமான அழுத்தமான கருத்துகளை கூறி மோடி அரசை விமர்சித்தார். மன்மோகன் பேசும் போது அரங்கத்தில் கரகோஷங்கள் தெறித்தன. மன்மோகன் பேசி முடித்த பிறகு, பிரதமர் மோடியே மன்மோகன் இருந்த இடத்திற்கு சென்று கைக்கொடுத்தார். மன்மோகன் சிங் பேசிய உரை தமிழில் இங்கே... ''1000, 500 ரூபாயினை செல்லாது என அறிவித்த பிறகு எழுந்த பிரச்னைகளைப் பற்றி நான் பேசவுள்ளேன். 1…
-
- 0 replies
- 330 views
-
-
வெற்றிச் சொல்: இந்த ஆண்டின் சொல்! உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் குழுவினர் ஆண்டுதோறும் ‘இந்த ஆண்டின் சொல்’ என்று ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். 2016-ன் சொல்லாக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொல்லை ஆங்கிலம் அறிந்த இந்தியர்களும்கூட அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த ஆண்டின் வெற்றியாளர் ‘Post-truth’ என்ற சொல்தான். “மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதில் உண்மைத் தகவல்களைவிட உணர்ச்சியும் தனிப்பட்ட நம்பிக்கையும் அதிகச் செல்வாக்கு வகிக்கும் சூழலுக்குத் தொடர்பான அல்லது அந்தச் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்திலான” என்று இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி விளக்கம் கொடுத்திருக்கிறது. இல…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கை செல்போன் நிறுவனங்களின் சிக்னல்: இரு நாட்டு கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்? தனுஷ்கோடிக்கு மிக அருகில் உள்ள தலைமன்னாரில் உள்ள செல்போன் டவர். இலங்கையில் உள்ள செல்போன் நிறுவனங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால், கடத்தல் கும்பல்கள் தப்ப உதவியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1978-ல் ராமேசுவரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் டிரான்ஸ்மிஷன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, இந்தியா விலிருந்து இலங்கைக்கு தொலை பேசி சேவை வழங்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவை வழங்குவது தடைபட்டது. 1988-ல் இந்திய அமைதிப் படை இலங்கை சென்றபோது டிரான்ஸ்மிஷன் மீண்டும் செயல்…
-
- 0 replies
- 391 views
-
-
சமந்தா பவரின் இடத்தை பிடிக்கிறார் இந்திய வம்சாவழிபெண் அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக தென் கரோலினா மாகாண ஆளுனர் நிக்கி ஹாலேயை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளிப் பெண்ணான நிக்கி ஹாலே, டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஐ.நாவுக்கான தற்போதைய தூதுவர் சமந்தா பவரிடம் இருந்து அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் பதவியானது, அமைச்சர் பதவிக்கு இணையானதாகும். தற்போது ஐ.நாவுக்கான தூதுவராக பதவி வகிக்கும் சமந்தா பவர், இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு கொண…
-
- 0 replies
- 287 views
-
-
ஜோ காக்ஸை கொன்றவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸை கொலை செய்த நபருக்கு இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசார காலகட்டத்தில் , ஜோ காக்ஸ் கொல்லப்பட்டார். இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் அவருடைய தொகுதியில் வைத்து ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தபோது, "பிரிட்டன் தான் முதலில்" என்று தாமஸ் மயர் கத்தினார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோ காக்ஸ், பிரிட…
-
- 0 replies
- 351 views
-
-
148 ஆயிரம் டாலர் ஏலம் போன பதின்ம வயதினரின் கவிதை நாஜி இனப்படுகொலை பற்றி அதிகம் படிக்கப்பட்ட மிகக் கடுமையான கண்டனம் என்று கருதப்படும் நாட்குறிப்பு ஒன்றை எழுதிய டச்சு பதின்ம வயதினர் அன்னே ஃபிராங்கால் எழுதப்பட்ட கவிதையின் அபூர்வமான கையெழுத்து படிவம் ஒன்று 148 ஆயிரம் டாலர் தொகைக்கு நெதர்லாந்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த தொகை எதிர்பார்த்ததை விட அதிகமான தொகையாகும். நாஜிக்களின் சித்தரவதையில் இருந்து தப்பிக்க பிராங்கின் குடும்பம் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டாங்கில் இரண்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்வதற்கு முன்னர் அவர் வேதனையை வெளிப்படுத்தும் இந்த எட்டு வரிக் கவிதை வேலை பற்றிய ஒரு ஆன்மிக படைப்பு . 1944 ஆம் ஆண்டு அவருடைய குடும்பம் கா…
-
- 0 replies
- 588 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பர்மிய இராணுவத்தால் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதான புதிய குற்றச்சாட்டுக்கள் குறித்து பிபிசிக்கு கிடைத்துள்ள தகவல்கள். * யெமெனில் காலரா நோய் தாக்கியுள்ளதாக ஐநா கவலை; ஏற்கனவே போரால் அவதியுறும் அங்கு சுகாதார சேவை ஆட்டங்கண்டுள்ளதாக அச்சம் அதிகரிக்கிறது. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்றைய பெண்மணி ஐஷியா இவான்ஸ்; “கறுப்பு உயிர்களும் பெறுமதியானவையே” என்கிற போராட்டத்தில் இவர் காட்டிய உறுதிப்பாடு அவரை உலகளாவிய கதாநாயகியாக்கியுள்ளது குறித்ததொரு பார்வை.
-
- 0 replies
- 438 views
-