Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்... பாகிஸ்தானுக்கு நோ ஸ்வீட்ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…

  2. ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வி ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவத்திற்காக நடைபெற்ற தேர்தலில் ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 47உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு 2017ஆம் ஆண்டுக்காக 14உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் ஐ.நா பொதுச்சபையில் நேற்று வெள்ளிக்கிழமை மனித உரிமை பேரவைக்கு எஞ்சிய அங்கத்துவ உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் பங்கேற்று இரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் சிரியாவில் இடம்பெறும் விடயங்களுக்கு மூலகாரணமாக ரஷ்யாவே காணப்படுகின்றத…

  3. ஆண்களைவிட அதிக நேரம் உழைக்கும் இந்தியப் பெண்கள் உலக அளவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஆண்களைவிட பெண்கள் 39 நாட்கள் கூடுதலாக உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த போக்கு கூடுதலாக இருக்கிறது. இந்திய ஆண்களைவிட இந்திய பெண்கள் ஆண்டுக்கு ஐம்பது நாட்களுக்கும் மேல் கூடுதலாக உழைப்பதாக இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 50 நிமிடங்கள் அதிகம் உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பின் பாலின சமத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பெண்கள் அதைவிட இரண்டுமடங்கு நேரத்துக்கும் அதிகமாக உழைப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சராசரியாக இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 120 நிமிடங்கள் ஆண்…

  4. இந்திய இராணுவ ரகசியங்களை அளிக்கும் உளவாளிகளை ஐஎஸ்ஐ எப்படி அணுகுகிறது? பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்திய இராணுவத் தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு ஐஎஸ்ஐ என்ன சன்மானம் அளிக்கிறது என்ற தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன. மாதத்துக்கு ரூ.30,000-ல் இருந்து ரூ.50,000 வரை தகவல்களின் பயனைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. நிறைய ஆவணங்கள் கைமாறுகின்றன. அதில் சில பயனுள்ளவையாக இருக்கும். பல பயனற்றவையாக இருக்கும் என்று காவல்துறை உயரதிகாரி இணை ஆணையர் ரவீந்திர ஜாதவ் கூறியுள்ளார். பாகிஸ்தான் தூதரக ஊழியர் மஹ்மூத் அக்தர், ஐஎஸ்ஐ உளவாளியாக செயற்பட்டவர். இவர் ராஜஸ்தானிலும், குஜாரத்தி…

  5. பல ஆண்டுகால சர்வதேச சமரச பேச்சுக்களை அடுத்து, உலகின் மிகப்பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கான சரணாலயம் அண்டார்டிகாவின் தூய்மையான நீர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று புள்ளி ஐந்து ஏழு மில்லியன் சதுர மைல்கள் பரப்புக்கொண்ட அதற்கான பகுதி நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படும். http://www.bbc.com/tamil/science-37803415

  6. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்களிலும் அதிரடி பாதுகாப்பு சோதனை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பொழுதுபோக்கு பூங்கா கடந்த வாரத்தில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள ட்ரீம்வேர்ல்ட் என்றழைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில், நீர் சவாரி செய்யும் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான ஆய்வு விரைவில் தொடங்குவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட ட்ரீம்வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்கா மேலும், இம் மாத துவக்கத்தில் குயின்ஸ்லாந்தில் ஒரு கட்டட மனையில் சுவரொன்று இடிந்து விழுந்ததில் இருவர் பலியானா…

  7. பிரிஸ்பனில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநர் எரித்துக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயது மன்மீத் அலிஷர் என்ற பேருந்து ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபி சமூகத்தினரிடையே நல்ல பாடகராக திகழ்ந்த மன்மீது அலிஷர் பிரிஸ்பன் சிட்டி கவுன்சில் பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ஓட்டுநர் மீது எரியும் பொருள் ஒன்றை விட்டெறிய தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறிய படியே பேருந்தின் பின்கதவு வழியாக தப்பினர். இது தொடர்பாக 48 வயது நபர் ஒருவரை பிரிஸ்பன் போலீஸ் கைது செய்…

    • 2 replies
    • 300 views
  8. மின்னஞ்சல் விவகாரம்: ஹிலரி கிளிண்டன் மீது எஃப்.பி.ஐ வழக்குப் பதிவு செய்யுமா? அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அந்நாட்டின் வெளியுறவு செயலராகப் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரித்து வரும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, தங்களின் விசாரணைக்கு மிகவும் ஏற்புடையவை என்று தெரிவித்துள்ள சில புதிய மின்னஞ்சல்கள் குறித்த முழுத் தகவல்களையும் வெளியிடுமாறு, ஹிலரி கிளிண்டன், அந்த அமைப்பை கேட்டுக் கொண்டுள்ளார். ஹிலரி கிளிண்டன் (கோப்புப் படம்) இது தொடர்பாக கடந்த ஜுலை மாதத்தில் எஃப்.பி.ஐ. எடுத்திருந்த முடிவு, இந்த புதிய மின்னஞ்சல்களால் மாறாது என்று தான் திடமாக நம்பு…

  9. அமெரிக்க விமானத்தில் தீ ; 8 பேர் காயம் (காணொளி இணைப்பு) அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகாகோவின் ஓ´ஹேர் விமான நிலையத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12879

  10. மதுராவில் உலகின் மிக உயரமான இந்துக்கோயில் புதுடில்லி : உலகமே வியக்கும் வண்ணம் மதுராவில் கிருஷ்ணனுக்கு 700 அடி உயரமுள்ள (213 மீட்டர்) ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் சதுரடியில் 70 மாடிகள் கொண்ட, பிரமாண்டமான, உலகின் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. ( இதன் உயரத்தை ஒப்பிடும்போது தஞ்சை பெரிய கோவில் மற்றும் டில்லி குதுப்பினார் போல மூன்று மடங்கு உயரமாக கட்டப்பட்டு வருகிறது.(தஞ்சை பெரியகோவில் உயரம் 66 மீட்டர்) மிகப் பெரிய கோயில் : இஸ்கான் (The International Society for Krishna Consciousness) என்ற அமைப்பு, கிருஷ்ணன் அவதரித்த மதுராவில், உலகிலேயே பெரிய கோவிலாக பிரமாண்டமான கோவிலைக் கட்ட முடிவு செய்து பணிகள் துவங்கியுள்ளன. 62 ஏக்…

  11. இன்றைய நிகழ்ச்சியில், * இயற்கை பாதுகாப்புக்கு ஒரு வெற்றி; அன்டார்ட்டிக்காவில், உலகின் மிகப்பெரிய கடல்சார் உயிரின சரணாலயத்துக்கு உடன்பாடு. * சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கை முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது; ஆனால், இரண்டுக்கு மேற்பட்ட குழந்தையை பெற நினைப்பவர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் அபராதம் நீடிக்கிறது. * உலகின் மிகப் பிரபலமான பிக் பென் மணிக்கூண்டை பழுதுபார்க்கும் நேரம் வந்துவிட்டது; லண்டனின் இந்த அடையாளம் மராமத்து பணிகளுக்காக ஒலிக்காது ஓயும்.

  12. சவுதியின் முதலாவது பெண்களுக்கான செல்போன் கடை -------------------------------------------------------------------------------------------------- சவுதி அரேபியாவில் அந்தரங்கம் முக்கியமானது. குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள் தொடர்பில் இது கூடுதல் அவசியமானதும் கூட. பெண்களின் புகைப்படங்கள் தொடர்பான பிளாக்மெயில் புகார்கள் நூற்றுக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் சவுதி காவல்துறைக்கு வருகின்றன. இந்த பிரச்சனைக்கான தீர்வாக பெண்களுக்கான பிரத்யேக செல்பேசி பழுதுபார்க்கும் கடை ஒன்றை திறந்திருக்கிறார் ஒரு பெண். தனது இந்த முயற்சி சவுதி அரேபிய பெண்களின் அந்தரங்கத்தை பாதுகாக்க உதவும் என்று அவர் நம்புகிறார். BBC

  13. அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் கயிதாவின் இரு மூத்த உறுப்பினர்கள் பலி ஆஃப்கானிஸ்தானில் உள்ள குனார் மாகாணத்தில், இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலில் அல் கயிதா அமைப்பை சேர்ந்த இரு மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கோப்புப்படம் அல் கயிதாவின் வட கிழக்கு ஆஃப்கானிஸ்தானின் தலைவர் ஃபரூக் அல்-கட்டானி மற்றும் அவருடைய உதவியாளருமான பிலால் அல்-உடாபி ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக காபுலில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், செளதியில் பிறந்த கத்தார் பிரஜையான அல்-கட்டானியை, மிகவும் தேடப்படு…

  14. ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில் மூழ்கிப் பலி ஐரோப்பாவிற்கு செல்லும் வழியில் குடியேறிகள் சென்ற படகு ஒன்று சிக்கலுக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் நூறு பேர் காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளது. கோப்புப்படம் பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த வெறும் 20 குடியேறிகளை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இந்த ரப்பர் படகு புறப்பட்டுள்ளது. கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து படகு புதன் கிழமையன்று மூழ்கிப் போனது. மத்திய தரைக்கடலிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆ…

  15. இன்றைய நிகழ்ச்சியில்.. *மோசுல் புறநகர்ப்பகுதில் ஐ எஸ் அமைப்பு உருவாக்கிய சுரங்க பதுங்கு குழிகள். *அமெரிக்கத் தேர்தலில் ஆசிய வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்த காணொளி. *மூன்று நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான விக்டோரியா ஏரி அதே மீனவர்களை பலி கொள்வதன் மர்மத்தை விளக்கும் செய்தித் தொகுப்பு ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.

  16. ”நாற்றம் அடிக்கும் நாடோடி!'' இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து பெண்ணுக்கு கிடைத்த பெயர் இங்கிலாந்தின் நார்த் டிவோன் மாவட்டத்தின் சிறிய கிராமம். பரபரப்பற்ற, அழகிய கடற்கரை. கரையை ஒட்டி, கட்டைகளால் ஆன சிறு குடில்களும், கேரவான் எனப்படும் வண்டி வீடுகளும் நிறைந்திருக்கின்றன. இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், உலகின் பொதுச்சமூக ஓட்டத்தில் இருந்து சற்றே விலகியிருப்பவர்கள். ஹிப்பிக்கள், ஜிப்ஸிக்கள், நோமேட்ஸ் என அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. நம்மைப் பொறுத்தவரை, இவர்கள் நாடோடிக் கூட்டம் அல்லது இந்தியாவின் பயணத் தந்தையாக கருதப்படும் ராகுல சாங்கிருத்யாயன் கூற்றுப்படி "ஊர்சுற்றிகள்." இந்தப் பகுதியில் இருந்து 2008-ல், தன் காதலர் மற்றும் குழந்தைகளுடன், ஆறு மாதப் பயணமாக இந்த…

    • 13 replies
    • 1.5k views
  17. பிரான்ஸ்: “ஜங்கள்” அகதி முகாம் மூடல் ஆரம்பம் -------------------------------------------------------------------------------------- பிரஞ்சு துறைமுக நகரான கலேயில் உள்ள சர்ச்சைக்குரிய ''ஜங்கிள்'' என்றழைக்கப்படும் குடியேறிகள் முகாமை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. தொள்ளாயிரம் பேர் ஏற்கனவே பேருந்துகளில் அங்கிருந்து அனுப்பப்பட்டுவிட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கு மோசமான நிலைமைகளில் தங்கியிருந்தனர். அங்கிருந்தவர்களில் பலர் கடலைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய விரும்பியவர்கள். BBC

  18. இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய இத்தாலியில் 2 மணி இடைவெளியில் ஏற்பட்ட இரு பூமியதிர்ச்சியினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விஸ்ஸோ நகரில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 2 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இரு பூமியதிர்ச்சிகள் முறையே ரிச்டர் அளவு கோளில் 5.4 மற்றும் 5.9 ஆக பதிவானதாக இத்தாலி பூமியதிர்ச்சி ஆய்வக மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் இத…

  19. டென்மார்க்கில் உள்ள தூண்டில் மீனவர்கள், சுற்றுச்சூழல் சோகமாகக் கருதப்படும் நிகழ்வு ஒன்றை தவிர்க்க, தங்கள் தூண்டில்களில் மீன்களை கவரும் பூச்சிகளை ஏற்றி, தப்பிச் சென்ற வானவில் ட்ரவுட் வகை மீன்களைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். வானவில் ட்ரவுட் வகை மீன்கள் ஜட்லாந்து தீபகற்பத்தில் உள்ள மீன் பண்ணை ஒன்றின் மீது சரக்கு கப்பல் மோதியதில், கடலுக்குள் தப்பி சென்றதாக மதிப்பிடப்பட்ட 80 ஆயிரம் வானவில் ட்ரவுட் வகை மீன்களை, பிடித்து ஒரு வகை மீன்களால் மற்றொரு மீன் இனத்திற்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான பேரழிவை தடுக்க அவர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மூன்று கிலோ கிராம் எடை கொண்ட அந்த வானவில் ட்ரவுட் மீன்கள் , அவைகளுக்குப் பிடித்த உணவான கடல் ட்ரவுட் மீன்களின் முட்டைகளை, தின்…

  20. சிரியா விவகாரத்தில் ஹிலாரியின் அணுகுமுறை 3-ம் உலகப் போருக்கு வித்திடும்: டிரம்ப் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ் சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "சிரியாவில் ஐஎஸ்ஸுக்கு எதிரான ஹிலாரியின் அணுகுமுறை மூன்றாவது உலகப் போருக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்கா மோதல் போக்கை கைவிட வேண்டும். மேலும், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் உடனான ஒபாமாவின் மோதல…

  21. இன்றைய நிகழ்ச்சியில், * மொசூல் நகருக்குள் முற்றுகைக்குள் சிக்கிய ஐ எஸ் அமைப்பு; புறநகர் பகுதிக்கு முன்னேறியுள்ள இராக்கிய படைகளோடு பயணிக்கும் பிபிசியின் நேரடிச்செய்தித் தொகுப்பு. * பிரிட்டிஷ் பேரங்காடிகளுக்கான ஆடை தயாரிப்பில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்படும் சிரிய நாட்டு அகதிச் சிறார்கள் குறித்த பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்தி. * இவர்கள் வழக்கமான உயிர்காப்ப்பாளர்கள் அல்ல; கடலில் தத்தளிப்பவர்களைக் காக்கும் பணிக்குத் தயாராகும் நியூபவுண்ட்லாண்ட் நாய்கள்.

  22. பிரிட்டன் பெருநிறுவன ஆடை தயாரிப்பில் சிரிய அகதிச்சிறார்கள் -------------------------------------------------------------------------------------------------- பிரிட்டன் கடைகளுக்கான ஆடைகளை உருவாக்கும் பணியில் சிரிய நாட்டு அகதிக்குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது. Marks and Spencer, ASOS போன்ற நிறுவனங்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் துருக்கி நிறுவனங்களுக்கு பிபிசியின் பனோரமா குழு நேரில் சென்று புலனாய்வு செய்தது. அப்போது அந்த நிறுவனங்களில் சிரிய நாட்டு அகதிச்சிறார்கள் பணி செய்வதை பிபிசி செய்தியாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம், சிறார் தொழிலாளர் சுரண்டலை தாம் சகித்துக்கொள்வதில்லை என்று இந்த பிரிட்டிஷ் நிறுவனங்கள் தெரிவித்துள்ள…

  23. 'தமிழ்நாட்டில் நாம் நினைத்திருந்தால்...!' -அமித் ஷாவிடம் மனம் திறந்த மோடி தமிழக அரசில் இலாகா இல்லாத முதல்வராக தொடர்கிறார் ஜெயலலிதா. அப்போலோவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 33 நாட்கள் கடந்துவிட்டன. ' தமிழக அரசியல் சூழல்களுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகளை பா.ஜ.க அரசு எடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் போனதற்கும் பல காரணங்கள் உள்ளன' என்கிறார் தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் சேராமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு, தற்போது இத்திட்டத்தில் சேர ஒப்புதல் அளித்துவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி. அதேபோல் காவிரி விவகாரத்த…

  24. ட்ரம்பைக் கலாய்க்கிறார் ஒபாமா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அது தொடர்பான பதற்றங்களும் அதிகரித்துள்ளன. ஆனால், ஜிம்மி கிமெல் லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா, நகைச்சுவையுடன் டொனால்ட் ட்ரம்ப் மீது கேலிகளை முன்வைத்தார். இந்தத் தேர்தல், மோசடியானதாக இடம்பெறுகிறது என, ட்ரம்ப் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவரும் நிலையில், அதைக் கேலி செய்யும் விதமாக, "தேர்தலை மோசடியாக மாற்றும் நடவடிக்கையிலிருந்து ஓய்வெடுத்து, இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒபாமா கலந்துகொண்டார்" என, ஜிம்மி கிமெல் குறிப்பிட்டார். இதில், தன்னைக் கீழ்மைப்படுத்தும் டுவீட்கள் சிலவற்றை வாசித்த ஜனாதிபதி ஒபாமா, "ஐக்கிய அமெரிக்காவின் மிகவ…

  25. முற்பகல் செய்யின் 38 ஆண்டுகள் கழித்து விளையும்!...அன்று சுரேஷ்ராம் இன்று வருண் காந்தி ! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். ஆனால் 'முற்பகல் செய்யின் 38 ஆண்டுகளுக்கு பின் விளையும்' என்ற புதுமொழி உண்மையாகியுள்ளது இப்போது. உத்தரப்பிரதேசம் சுல்தான்பூர் தொகுதி எம்.பியான வருண்காந்தி உத்தரப்பிரதேச தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தனது தாயாரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி மூலம் பாஜகவை வலியுறுத்தி வந்தநிலையில், பாஜக இதற்கு மறுத்து விட்டது. இந்த அரசியல் பரபரப்புக்கிடையில் வருண்காந்தி தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் எட்மண்ட்ஸ் ஆலன் என்பவர் கூறியுள்ள குற்றச்சாட்டு இப்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக் ஆக ஆகியுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.