உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
துருக்கி அதிபர் எர்துவானைப் பிடிக்க முயன்ற 11 கமாண்டோக்கள் கைது துருக்கியில் இருவாரங்களுக்குமுன், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் தொடக்கத்தில் அதிபர் ரெசீப் தாயிப் எர்துவானை பிடிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் ராணுவ குழு ஒன்றை துருக்கி சிறப்பு படையினர் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி அதிபர் எர்துவான் தனது விடுமுறையைக் கழிக்க, மர்மாரிஸ் என்ற சுற்றுலா வாசத்தலத்தில் தங்கியிருந்தார். அதற்கு வெளியே சட்டவிரோதமாக வந்திருந்த 11 கமாண்டோக்கள் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற போது, ரகசியமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்த அதிபர் எர்துவான் தப்பியோடினார். …
-
- 1 reply
- 437 views
-
-
ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-8 என்ற உலங்குவானூர்தியொன்று சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த உலங்குவானூர்தியில் 5 பேர் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/9660
-
- 0 replies
- 435 views
-
-
ஜெர்மனி: அதிபர் ஆதரவாளர்கள் நடத்தும் பேரணியில் எர்துவானின் காணொளி உரைக்கு தடை ஜெர்மனியின் கலோனில் துருக்கிய அதிபரின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் பேரணியில், காணொளி இணைப்பு மூலம் அதிபர் ரிசீப் தயிப் எர்துவான் உரையாற்றுவதை ஜெர்மனி தடைசெய்திருப்பது, ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று துருக்கி அரசு தெரிவித்திருக்கிறது. எர்துவானின் செய்தியை தடை செய்ததற்கான உண்மையான காரணத்தை அறிய துருக்கி ஆவலாக இருக்கிறது என்று அதிபரின் பேச்சாளர் இப்ராஹிம் காலின் கூறியுள்ளார். ஜெர்மனியில் வாழும் துருக்கிய அதிபரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்கும் இந்த பேரணியில், துருக்கியின் விளையாட்டுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத்…
-
- 2 replies
- 411 views
-
-
பிரிட்டனில் நிலவும் தற்கால அடிமை முறையை அகற்ற பிரதமர் தீவிரம் பிரிட்டனில் தற்கால அடிமை முறையை ஒழிக்க தெரீசா மே தீவிரம் பிரிட்டனில் தற்கால அடிமை முறை என்று சந்தேககிக்கப்படும் ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கையாள புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரிவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே தலைமை தாங்கவிருக்கிறார். வெளிநாடுகளிலிருந்து மனிதர்களை கடத்துவதோடு தொடர்புடைய அடிமைமுறை காட்டுமிராண்டித்தனமான தீமை என்று தெரீசா மே குறிப்பிட்டுள்ளார். அடிமை முறைமைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓராண்டுக்கு முன்னர், பிரிட்டன் சட்டம் இயற்றியிருந்தாலும், காவல்துறையினருக்கும், குற்றவியல் நீதி அமைப்புகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் இன்னும் முரண்பாடுகள் இருப்…
-
- 0 replies
- 373 views
-
-
சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்களுக்கு உதவ தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் பல நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்துள்ளனர். பாஸ்போர்ட்கள் நிறுவனங்களிடம் உள்ளதாலும், ஊதியம் தரப்படாததாலும் நாடு திரும்ப முடியாமல் உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் உதவி கோரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 10,000 இந்திய தொழிலாளர்…
-
- 1 reply
- 597 views
-
-
இளைஞர்கள் அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்: போப் பிரான்சிஸ் போலாந்து நாட்டிற்கு மேற்கொண்டுள்ள ஐந்து நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று, திறந்தவெளி மைதானத்தில் கூடியிருக்கும் பெரும் திரளான இளைஞர்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை சேவை ஒன்றை நடத்தியிருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் உலக இளைஞர்கள் திருவிழாவின் ஒரு பகுதியாக தென் நகரமான கிராகோவில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுக்கிறார்கள் என கணிக்கப்படுகிறது. மாலையில் போர் பிரான்சில் வழிநடத்திய திருவிழிப்பு ஜபத்தை தொடர்ந்து பலரும் இரவிலிருந்தே அங்கு முகாமிட்டிருந்தனர். கணி…
-
- 0 replies
- 393 views
-
-
எது நடக்கக் கூடாதோ, அது நடந்தே விட்டது. போக்கிமான் கோ செல்போன் கேம் மூலம், இந்தியாவில் முதல் விபத்து பதிவாகி விட்டது. ஆக்மென்டட் ரியாலிட்டி டெக்னாலஜியில், பட்டையைக் கிளப்பும் போக்கிமான் கோ, செல்போன் உலகில் இப்போதைய நம்பர் ஒன் கேம். நிஜ உலகின் விர்ச்சுவல் சீன்களை மிக்ஸ் பண்ணி, செல்போன் கேம் உலகில் புது யுக்தியைக் கையாண்டு, கேம் பிரியர்களை அடிக்ட் ஆக்கிவிட்டது, போக்கிமான் கோ. இந்த கேமில் வரும் பூச்சிகளைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று, மாடியில் இருந்து தவறி விழுந்தவர்கள், நேருக்கு நேராக காரில் மோதியவர்கள் என்று இப்போது அமெரிக்காவில் ஜாலி பாதி; பீதி மீதி என்கிற ரீதியில் உலா வருகிறது போக்கிமான். இந்தியாவுக்கு இன்னும் வராமல் இருந்த போக்கிமான் கோ கேமை, ஆங்காங்கே ‘கபாலி’ திருட…
-
- 0 replies
- 524 views
-
-
35 குர்து தீவிரவாதிகளை கொன்றது துருக்கி ராணுவம் இராக்கின் எல்லை அருகே தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹக்காரி மாகாணத்தில் ஒரு ராணுவ தளத்தை அழிக்க முயன்ற 35 குர்து இன தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. ஹக்காரி மாகாணத்தில் உள்ள க்யூகர்கா மாவட்டத்தில் நடந்த மோதலில் எட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட பிகேகே என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், ராணுவ தளத்தை நெருங்கிய போது அவர்கள் உளவு விமானம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். ஓர் ஆண்டுக்கு முன்பு, துருக்கி ராணுவத்திற்கும் பிகே கே என்ற அமைப்பிற்கும் இடையே இருந்த போர் நிறுத்தம் முறிந்த பின் துருக்கி ராணுவம் கிளர்ச்சிய…
-
- 0 replies
- 375 views
-
-
கனடாவில் பின்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் கத்தியுடன் நுழைந்த நபரால் சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் வடக்கு யோர்க் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து பேருந்து ஒன்று பிஞ்ச் சுரங்க ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தில் கத்தியுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளர். இதை கவனித்த பயணி ஒருவர் அச்சத்தில் அலறியபடி சக பயணிகளுக்கும் இதை தெரியப்படுத்தியுள்ளார். உடனடியாக பயணிகள் அனைவரும் அந்த பேருந்து ஓட்டுனரிடம் முறையிடவே அந்த நபரை பேருந்தினுள் சிறை வைத்துவிட்டு மொத்த பயணிகளும் பேருந்து ஓட்டுனரும் வெளியேறியுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியப…
-
- 0 replies
- 356 views
-
-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்து யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பகுதிகளை மீட்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. பாகிஸ்தானிடமிருந்து அந்த பகுதிகளை விடுவித்து மீட்டெடுக்க பிரதமர் மோடி பிரச்சாரத்தை துவங்க வேண்டும். என்ன தைரியத்தில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்போம் என நவாஸ் செரிப் சொல்கிறார் என எனக்கு தெரியவில்லை. நமது குழந்தைகள் காஷ்மீரை வரைபடத்தில் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து விட்டது. ஒரு கோழை நாடு வலிமை வாய்ந்த நம் நாட்டின் பகுதியை கைப்பற்ற நினைக்கும் போது நாம் இங்கே சும்மா உட்கார்ந்து கொண்டு இர…
-
- 1 reply
- 359 views
-
-
பிரித்தானியாவை சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவ கொலை செய்துவிட்டதாக முதலாவது கணவர் அளித்த புகாரின் பேரின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட Samia Shahid (28) என்ற பெண், பிரித்தானியாவில் அழகு சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார், இவர் ஏற்கனவே தனது உறவினரான Mohammed Shakeel என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில், Kazam (30) என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்த கொண்டு பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்ப்பதற்காக அங்கு செ…
-
- 0 replies
- 314 views
-
-
தீப்பிடித்து விழுந்த சூடான காற்று பலூன்: 16 பேர் கதி என்ன? அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 நபர்களை கொண்ட சூடான காற்றடைத்த பலூன் 16 பேருடன் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் ஷெரீப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், அந்த பலூன், ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது.. பலூனில் இருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. http://www.bbc.com/tamil/global/2016/07/160730_america_texas
-
- 0 replies
- 283 views
-
-
பிரிட்டன் எரிசக்தி துறையில் சீன முதலீடு: தெரீசா மே அதிருப்தி? ஹிங்க்லே பாயின்ட் மின் உற்பத்தி நிலையம் சீன முதலீடுகள் குறித்து டேவிட் கேமரனின் அணுகுமுறையில் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மேவுக்கு உடன்பாடில்லை என பிரிட்டனின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவின் பங்களிப்புடன் புதிதாகக் கட்டப்பட இருந்த புதிய அணு உலை குறித்த முடிவை மறு ஆய்வு செய்ய இந்த வாரம் பிரிட்டன் அரசாங்கம் எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வின்ஸ் கேபிள், ஹிங்லே பாயிண்ட் மின் உற்பத்தி நிலையம் குறித்து புதிய பிரதமர் முன்னர் ஏற்கனவே பல ஆட்சேபணைகளை எழுப்பியதை நினைவுகூர்ந்தார். கடந்த க…
-
- 0 replies
- 395 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரித்தானியாவிற்குள் குடியேறுவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், குறிப்பிட்ட காலத்திற்குள் பிரித்தானியாவில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிரந்தரமாக அங்கு வாழும் உரிமையை பெற வேண்டும் என்றும் அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் உரிமை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஒரு பேச்சுப் பொருளாக இருக்கக்கூடாது என்றும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக ஐரோப்பாவிலிருந்து விலகுவதற…
-
- 0 replies
- 390 views
-
-
ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில விடங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருக்கின்றது. அந்த வகையில், பிரான்ஸில் முஸ்லீம் பள்ளிவாசல்கள் நிர்மானிப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பிரான்ஸ் நீஸ் நகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் புகுந்த இருவர், மூத்த பாதிரியார…
-
- 1 reply
- 334 views
-
-
இந்தோனீஷியாவில் சிறுபான்மையின மக்களான சீனர்கள் பயன்படுத்தி வந்த 6 கோயில்களை முஸ்லிம் குழு ஒன்று கொளுத்தியதை தொடர்ந்து, போலிசார் 7 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.சுமத்ரா தீவில், தன் வீட்டுக்குஅருகே இருந்த மசூதியிலிருந்து அதிக சத்தம் வருவதாக சீன பெண் ஒருவர் போலிசில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, புத்த மற்றும் கன்ஃபூசியர்களின் கோயில்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பான்மையான நாடு இந்தோனீஷியாஆனால், பெருமளவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது சில நேரங்களில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில், இன வன்முறைகளுக்கும் வழிவகுத்துள்ளது. http://www.seithy.com/breifNews.php…
-
- 0 replies
- 267 views
-
-
அமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட சியட்டலில் உள்ள முகில்டியோ நகர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/07/160730_us_shooting
-
- 0 replies
- 255 views
-
-
ஹிலாரி கிளிண்டனின் பிரசார கணினி செயல் வரைவுக்குள் ஊடுருவல் ஹிலாரி கிளிண்டனின் அதிபர் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் புரோகிராமிங் என்ற அழைக்கப்படும் கணினி செயல்வரைவு ஒன்று ஊடுருவப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவியவர்கள், கணினி அமைப்பிற்குள்ளும் நுழைந்துள்ளதாக கிளிண்டன் பிரசாரங்களை நிர்வகிக்கும் மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தங்களுடைய அமைப்பும் அனுமதியின்றி ஊடுருவப்பட்டதாக நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஊடுருவலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ரஷியா புலனாய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாகஅமெரிக்க ஊடக…
-
- 0 replies
- 273 views
-
-
பெல்ஜியத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக இருவர் கைது பெல்ஜியம் நாட்டில் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்கள் காவலில் வைக்கப்படவேண்டுமா என்று தீர்மானிக்க இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் மோண்ஸ் பகுதியில் உள்ள ஏழு வீடுகள் மற்றும் லீஜ் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்கள், முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட, மார்ச் மாதம் ப்ரஸல்ஸில் நடந்த தாக்குதலோடு தொடர்புடையவர்களாக …
-
- 1 reply
- 300 views
-
-
கறுப்பின ஆண் துணைக்கு குரல் கொடுக்கும் வெள்ளை இனப்பெண் ( காணொளி இணைப்பு ) இங்கிலாந்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனது கறுப்பின ஆண் துணைக்காக குரல் கொடுக்கும் வெள்ளை இனப் பெண் தொடர்பான காணொளி ஒன்று சமூகத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவரை இங்கிலாந்து பொலிஸார் மடக்கிப் பிடித்து தரையில் வீழ்த்தி விலங்கிட்டு அவரது தலையை ஒரு முகமூடியால் மூடுவது குறித்த காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/9590
-
- 0 replies
- 364 views
-
-
தன்னை அவமதித்தாக தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக எர்துவான் அறிவிப்பு அதிபரை அவமதித்தாக தனிநபர்கள் பலர் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழங்குகளையும் நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறுவதாக துருக்கி அதிபர் அறிவிப்பு தன்னை அவமதித்ததாக தனிநபர்கள் பலருக்கு எதிராக தொடுக்கப்பட்ட எல்லா வழக்குகளையும் நல்லெண்ண அடிப்படையில், வாபஸ் பெற்றுகொள்ளவதாக துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் அறிவித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிபரை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஏறக்குறைய 2000 குற்றச்சாட்டுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கின்றன. தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பில் கொல்லப்பட்டதாக அவர் கூறிய 200-க்கும் மேலானோருக்கு, அங்காராவில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் பேசி…
-
- 0 replies
- 201 views
-
-
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் சிறுவர்களை தண்ணீரை காட்டி கேலி செய்யும் அமேரிக்கா இராணுவ வீரர்கள் !!!
-
- 0 replies
- 292 views
-
-
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை மூட உத்தரவு துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அஜர்பைஜானில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்று படம்பிடித்து காட்டியதற்காக அதனை மூடும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அரசின் முடிவிற்கு அஜர்பைஜானில் உள்ள நீதிமன்றம் ஒன்றும் ஆதரவு தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் அஜைர்பைஜானின் இடையே உள்ள கேந்திர கூட்டுறவை சீர்குலைக்கும் வகையில் பிரபல தொலைக்காட்சி ஏ.என்.எஸ் செயல்பட்டதாக ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஏ.என்.எஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதற்குமுன், துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அமெரிக்காவில் இ…
-
- 0 replies
- 277 views
-
-
நாஜிக்களின் சித்ரவதை முகாமில் போப்பாண்டவர் அஞ்சலி நாஜிக்களால் ஒரு மில்லியனுக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் அவுஸ்விட்ச்-பெர்கன்னாவ் சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இறைவா! உம்முடைய மக்கள் மீது இரக்கம் வையும். அதிக அளவான இந்த கொடூரத்தை மன்னியும் என்று அந்த முகாமின் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பதிவையும் அவர் எழுதியுள்ளார். இந்த முகாமிலிருந்து தப்பித்தோர் மற்றும் அவர்களை காப்பாற்ற தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்த போலந்து மக்களை சந்தித்தப் பின்னர், அவர் விஷவாயு கூடங்கள் மற்றும் கல்லறைகளில் நடந்து சென்று மௌனமாக செபித்தார். போலந்து நாடு கிறிஸ்தவ மதத்தை தழுவிய…
-
- 0 replies
- 372 views
-
-
பெஷாவரில் தலிபான் மற்ற ஜிஹாதிகளின் தாக்குதல்கள் நடப்பது சகஜமாக உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தாரா நகரில் துப்பாக்கிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இங்கு கள்ள மார்க்கெட்டில் ஆயிரகணக்கான துப்பாக்கிக்கள் விற்கபடுகின்றன.மலைகளால் சூழப்பட்ட இந்த நகரில் வசிக்கும் தொழிலாளர்கள் துப்பாக்கிகளை மிக அருமையாக தயாரிக்கும் அனுபவம் கொண்டவர்கள்.இந்நகர் பெஷாவர் நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிற நாட்டினர் பயன்படுத்தும் நவீன துப்பாக்கிகளை பார்த்தால் கூட, எவ்வித மாற்றமும் இன்றி அதே போன்று இவர்கள் தயாரித்துவிடுவார்கள். இவர்களிடம் இருந்தே பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிகளை விலை கொடுத்து வாங்குகின்றனர், மேலும் மலை சூழ்ந்த இடம் என்பதால் தீவிரவாதிகளுக்கும் இது வசதியாக அமைந…
-
- 0 replies
- 538 views
-