உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
2003 ஆம் ஆண்டின் இராக் ஆக்கிரமிப்பு "இஸ்லாமிய அரசை" உருவாக்கியதா? இராக் போரில் பிரிட்டனை இறக்கியதற்கான தனது முடிவு சரியென்று முன்னாள் பிரதமர் டொனி பிளயர் மீண்டும் வாதாடியுள்ளார். முன்னதாக நேற்று புதன்கிழமை, இதற்கான திட்டமிடல், போர் நடத்தப்பட்ட விதம் மற்றும் போருக்கு பின்னரான நிலை குறித்து சில்காட் அறிக்கை கடுமையாக விமர்சித்திருந்தது. அதேவேளை, இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட பிரிட்டனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இராக்கில் 2003 ஆம் ஆண்டில் வெடித்த போர் இன்னமும் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பாக்தாதிலும் இராக்கின் இதர பகுதிகளிலும் இன்னமும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இலக்கற்ற திடீர் …
-
- 0 replies
- 359 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அமெரிக்க போலிஸ். இரண்டு நாட்களுக்குள் இரண்டு கறுப்பு இன ஆண்கள் சுட்டுக்கொலை. * போர் தொடுப்பது என்ற பிரிட்டனின் கண்டிக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட அழிவுகள் இராக்கில் இன்னமும் தொடர்கின்றன. இராக் அவலங்கள் குறித்த பிபிசியின் மற்றுமொரு சிறப்புத் காணொளி. * ‘’பெண்கள் மோசமாக நடக்கிறார்களா?’’ - பழமைவாத பாகிஸ்தானில், வளரும் ஒரு பெண் பிரபலம் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளார்.
-
- 0 replies
- 417 views
-
-
மனித உரிமைகள் வழக்கறிஞர் உள்பட மூன்று நபர்கள் சிறை வைக்கப்பட்டகாவல் நிலையத்தை, வில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.இந்த மூன்று நபர்களும் பின்னர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர். இந்த காவல் நிலையத்தை சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.மிகவும் மோசமாக தாக்கப்பட்ட வில்லி கிமானி, அவரது வாடிக்கையாளர் மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு நதியில் தூக்கி ஏறியப்பட்டது கண்டறியப்பட்டது. இவர்கள் மூவரையும் ஒரு வார காலமாக காணவில்லை. காவல்துறையின் தவறான செயல்கள் குறித்து வெளிப்படையாக விமர்சிக்கும் தன்மை உள்ளவராக கிமானி இருந்தார் என்பது குறிப்பி…
-
- 0 replies
- 274 views
-
-
கொய்சன் இனமக்கள் தென்ஆப்ரிக்காவின் பூர்வகுடிகள். ஆனால் அவர்கள் மோசமாக ஒடுக்கப்பட்டு பரவலாக வறுமையில் வாழ்கிறார்கள்.வடக்கு கேப் பிராந்திய கொய்சன் மக்கள் சமீபகாலமாக தமது மொழியை, நிலத்தை, வரலாற்றை, மரபுகளை உயிர்ப்போடு வைத்திருக்க போராடத்துவங்கியுள்ளனர். அவர்கள் தமது வாழ்க்கை முறையை பாதுக்காக்கவும் வரலாற்றை மீட்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். http://www.seithy.com/breifNews.php?newsID=161019&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 148 views
-
-
நவராத்திரி நோன்பு : பிரதமர் குடித்த தண்ணீருக்கு செலவு ரூ. 10 கோடி! பிரதமர் நரேந்திர மோடி, நவராத்திரி பூஜையின் போது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவார். சில சமயங்களில் ஜூஸ் அருந்துவார். கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, எந்த உணவையும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விருந்தை முடித்துக் கொண்டார். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த' ஜுன்தா கா ரிப்போர்ட்டர் ' என்ற பத்திரிகை, மோடி தலைமையிலான பா,.ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நவராத்திரி காலங்களில் பிரதமர் மோடிக்காக மினரல் வாட்டர் மற்றும் ஜூஸ் வாங்குவதற்கு…
-
- 0 replies
- 963 views
-
-
பிரிட்டனின் உள்ளே வெளியே! உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் வார்த்தை `பிரெக்ஸிட்'. ஐரோப்பிய யூனியனின் மிக வலுவான பிரிட்டன் அதில் இருந்து விலக வேண்டும் என்னும் முடிவை மக்களே எடுத்திருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்கிற அச்சத்தை விதைத்திருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஏன் விலகுகிறது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த ஐந்து கேள்விகள் உதவும். 1. ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன? இன்னோர் உலகப்போர் மூளாமல் இருக்கவேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.அதற்கு தேச எல்லைகளைக் கடந்து, ஒரு பெரிய குடையின் கீழ் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுதிரண்டு தங்களுக்குள் தடையற்ற அரசியல், பொருளாதார, வர்…
-
- 0 replies
- 469 views
-
-
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் வில்லியம் புரும்பி(54), இவர் சரசோடா என்ற இடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் ஸ்டீபன் புரும்பியும் உடன் இருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு தவறி திசை மாறி சென்று அருகில் இருந்த சுவரில்பட்டு விழுந்தது.அதன்பின்னர் மீண்டும் அவர் துப்பாக்கியால் சுட்டார். அக்குண்டு பின்புறம் நின்று கொண்டிருந்த அவரது மகன் ஸ்டீபன் உடலில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் பல சம்பவங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது போன்று கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 13,286 பேர் உயிரிழந்துள்ளனர். http://www…
-
- 0 replies
- 314 views
-
-
கறுப்பினத்தவர் ஒருவரை, வெள்ளையினத்தைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து, அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.லூசியானா தலைநகர் பேடன் ரோகில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு கடைக்கு வெளியே, துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை மிரட்டுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் ஆல்டன் ஸ்டெர்லிங். ஐந்து குழந்தைகளின் தந்தையான, 37 வயதான அவர், மார்பு மற்றும் பின்புறத்தில் காயமடைந்து உயிரிழந்திருக்கிறார்.இச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சுமார் 200 பேர் க…
-
- 0 replies
- 336 views
-
-
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து 1776-ம் ஆண்டு விடுதலை பெற்ற அமெரிக்காவின் சுதந்திர தினம் கடந்த 4-ம் தேதி அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.சுதந்திர நாடாக அமெரிக்கா பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக கையில் மைக்கை பிடித்து தாய்நாட்டை வாழ்த்தி அதிபர் ஒபாமா ‘ஹாப்பி பர்த்டே’ பாட்டைப் பாடினார். பின்னர், அதேநாளில் பிறந்த தனது மூத்த மகள் மாலியாவின் பிறந்தநாளுக்காக மகளை அருகில் அழைத்து மீண்டும் ஒருமுறை அவர் ‘ஹாப்பி பர்த்டே’ பாடும் காட்சியும், தனது பிறந்தநாளை அரசு விழாவைப்போல் சிறப்பித்த தந்தை ஒபாம…
-
- 0 replies
- 339 views
-
-
அண்ணனின் சிதையில் குதித்து தங்கை மரணம்! [Saturday 2016-07-02 19:00] ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் இறந்துபோன தமையனின் சிதையில் குதித்து தங்கை ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூர் மாவட்டம் சதிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராம் மனத் (வயது 35). இவரது சகோதரி துர்க்கா (வயது 28). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.துர்க்கா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அண்ணன் வேல்ராம் வீட்டில் வசித்து வந்துள்ளார்.அண்ணன் மீது துர்க்கா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.இந்நிலையில், வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் வேல்ராம் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த துர்க்கா கதறித் துடித்தார். அண்ணன் மறைவை அவரால் தாங்கி…
-
- 0 replies
- 520 views
-
-
ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை கடந்த 2013-ஆம் ஆண்டில், தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கோப்பு படம் தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசு மற்றும் பிஸ்டோரியஸ் ஆகிய இரு தரப்பும் மேல்முறையீடு செய்யலாம். கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை தாழ்ப்பாளிட்டிருந்த ஒரு கழிப்பறையில் நான்கு முறை சுட்டார். ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதை ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தின் விளைவாகவும், யாரோ திருடன் என்று எண்ணி…
-
- 2 replies
- 309 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ‘’தவறான உளவுத் தகவல், மோசமான திட்டமிடல், அமைதிக்கான வழி தவறவிடப்பட்டது’’ என இராக் போரில் பிரிட்டனின் பங்களிப்பு குறித்த கடுமையாக கண்டிக்கும் தீர்ப்பு. * பஸ்ராவிலும் பிரிட்டனிலும் குடும்பங்களை சோகத்தால் இணைத்த இராக் போர். அதில் ஒன்று பிரிட்டிஷ் சிப்பாயின் குடும்பம், அடுத்தது பிரிட்டிஷ் படையால் கொல்லப்பட்டவர் குடும்பம். * தமது பாரம்பர்யத்தையும் மொழியையும் காக்க போராடும் தென்னாப்பிரிக்காவின் கொய்சான் பழங்குடியின் கதை.
-
- 0 replies
- 407 views
-
-
உளவுத் துறை சேவையில் சீர்திருத்தம் கோரும் பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணை குழு கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற தாக்குதலுக்கு முன்னால், உளவுத் துறை பல விஷயங்களைச் செய்யத் தவறியதாகக் குறைகூறியிருக்கும் பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணை ஒன்று, உளவு அமைப்புகளில் முழுமையான சீர்திருத்தத்தை கோரியுள்ளது. நவம்பர் மாத பாரிஸ் தாக்குதலுக்கு முன்னால் உளவு துறையின் தோல்விகளை பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணை குறைகூறியிருக்கிறது. உளவுத்துறையிலேயே, ஒன்றுடன் மற்றொன்று போட்டியிட்டு செயல்படும் நிறுவனங்கள் இருப்பதாகவும், எந்த நிறுவனம் என்ன பணியை செய்ய வேண்டும் என்று தெளிவுகள் இல்லை என்று அந்த விசாரணையின் அறிக்கை தெரிவிக்கிறது. இவை அனைத்திற்கும் பதிலாக, பயங்கரவாதத்த…
-
- 0 replies
- 179 views
-
-
நிதிச்சந்தை கொந்தளிப்பு: பவுண்ட் மதிப்பில் தொடர்ந்து வீழ்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவது என்று வாக்கெடுப்பில் முடிவு வந்ததைத் தொடர்ந்து நிதிச் சந்தைகளில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவுகிறது. ஆசிய வர்த்தகத்தில், பிரிட்டிஷ் நாணயமான பவுண்டு 31 ஆண்டுகள் காணாத புதிய குறைந்த மதிப்பைத் தொட்டு, ஒரு டாலர் 28 செண்ட் என்ற அளவுக்குக் கீழ் விழுந்தது. முதலீட்டாளர்கள் பொதுவாக பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படும் அரசு கடன் பத்திரங்களுக்கு தங்கள் நிதியைத் திருப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள். சில பிரிட்டிஷ் நிதி மேலாளர்கள் தாங்கள் நிர்வகிக்கும் சொத்து நிதித்திட்டங்களிலிருந்து முதலீட…
-
- 0 replies
- 333 views
-
-
பதக்கங்களுக்காக மனிதநேயத்தை விற்கும் சீனா : பிஞ்சு தளிர்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி - வீடியோ ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் ஆசையில் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது. சீனா இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. (இதுபோன்ற வீடியோக்கள் பல தொகுதிகளாக வெளியாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.) http://www.virakesari.lk/article/8602
-
- 0 replies
- 224 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தற்போதைய நிலையில் மெஜாரிட்டி புள்ளிகளை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பே உள்ளது. இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.அதற்கான அறிவிப்பு வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஒபாமாவும், ஹிலாரியும் போட்டியிட்டனர். இறுதியில் ஒபாமா வேட்பாளராக தேர்வு பெற்றார். அதை தொடர்ந்து ஒபாமாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த ஹிலாரிய…
-
- 0 replies
- 347 views
-
-
துருக்கி நாட்டின் வடகிழக்கு கிரெசன் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. சிகோர்ஸ்கி என்ற அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரமாண மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் குழந்தைகள். கருங்கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரமலான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக இராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவ தலைமை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது உற…
-
- 0 replies
- 272 views
-
-
தென் ஆப்ரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சி, தனது தேர்தல் விளம்பரத்தில் மண்டேலாவின் குரலை பயன்படுத்தியதற்காக அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயக கூட்டணியின் விளம்பரத்தில், நீதி, அமைதி, வேலை, உணவு என்று மண்டேலாவின் குரல் ஒலிக்கிறது, பிறகு ஒரு இளம் பெண் வாக்குச்சாவடியின் உள்ளே நுழைகிறார்.அந்த பெண் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கிறார். இவ்வாறு அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெள்ளையின மக்களின் உரிமையைக் காப்பாற்ற, இறந்த தனது தாத்தாவின் பெயரை களங்கப்படுத்தியதாக மண்டேலா குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் உள்ளூர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. …
-
- 0 replies
- 298 views
-
-
நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று புதிய அமைச்சர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை 2வது முறையாக நேற்று பெரியளவில் மாற்றியமைத்துள்ளார். இதில் எஸ்.எஸ்.அலுவாலியா, எம்.ஜே.அக்பர் உட்பட19 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அத்துடன் சிறப்பாக செயல்படாத ஐந்து அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையைக் கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார்.அதன்பிறகு, புதிய அமைச்சர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் ''புதிதாக அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நீங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்காகவும் கடின உழைப்புடன், அர்ப்பணிப்பு உணர்வுடன், நேர்மையாக பணியாற்…
-
- 0 replies
- 335 views
-
-
பாக்தாத் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ள நிலையில், மீண்டும் நேற்றிரவு அந்நாட்டின் விமான நிலையத்தின் மீது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு வளையப் பகுதிகள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்றதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், உறுதி செய்துள்ளனர். 20 குண்டுகளுக்கு மேல் வெடித்த சத்தம் கேட்டதாக விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் கூறியுள்ளார். விமான நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 508 views
-
-
பஞ்சாப் மாநிலம் வழியாக நுழைந்து தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அம்மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மூன்று தீவிரவாதிகள் வெவ்வேறு வாகனங்களில் வெடிப்பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தின் வழியாக டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தையும் தீவிர…
-
- 0 replies
- 283 views
-
-
பிரிட்டனில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு: ஆன்மிகத் தலைவர் வேதனை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனில் விஷத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் போக்கு பலமடங்கு அதிகரித்திருப்பதாக சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் ஆன்மிகத் தலைவர் ஜஸ்டின் வெல்பி தெரிவித்துள்ளார். சமூகத்தில் நிலவி வந்த அமைதி மற்றும் சகிப்புதன்மை தொடர்பான மெல்லிய ஓட்டின் மீது விரிசல் விழுந்திருப்பதாக ஆர்ச்பிஷப் வெல்பி தெரிவித்தார். இனவெறி மற்றும் பிற நாட்டவர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். உட்பூசல்களுக்கு பலியாகிவிடாமல் நல்லிணக்கத்தையும் அன்பையும் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண…
-
- 0 replies
- 329 views
-
-
மின்னஞ்சல் விவகாரம்: 'ஹிலரி கிளிண்டன் மீது வழக்குப் பதியப்போவதில்லை' -எப்.பி.ஐ ஹிலரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக இருந்த போது, ரகசிய அரசு தகவல்களைப் பெற ஒரு அந்தரங்க மின்னஞ்சல் செர்வரைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிய பரிந்துரைக்கபோவதில்லை என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் கூறுயிருக்கிறது. அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் ரகசியத் தகவல்களை கையாள்வது குறித்த சட்டங்களை மீறியிருக்கலாம், ஆனால் அவர் வேண்டுமென்றே தவறாக நடந்துகொண்டார் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று எப்.பி.ஐயின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறினார். இந்தப் பிரச்சனை அமெரிக்க நீதித்துறைக்கு விடப்பட்டு…
-
- 0 replies
- 276 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * மாபெரும் வியாழக் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நாசாவின் ஜுனோ விண்கலம் நுழைந்தது. * மதீனாவில் முஹமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே நடந்த தற்கொலை தாக்குதலை உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர். * கோடைகாலத்தில் ரம்ஷான் வருவதால், நோன்பு இருப்பவர்கள் இங்கு பிரிட்டனில் பதினெட்டு மணிநேரம் உண்ணாமல் இருந்தாக வேண்டும். அதனை இங்குள்ள முஸ்லிம் மாணவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு குறிப்பு.
-
- 0 replies
- 604 views
-
-
கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு பொருளாதாரச் சவால்கள் தெளிவாகியுள்ளன - இங்கிலாந்து வங்கி பொருளாதாரச் சவால்கள் என்று அது இனம் கண்டிருப்பவை, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வாக்கெடுப்பின் விளைவாக தெள்ளத் தெளிவாகி இருப்பதாக பிரிட்டனின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி தெரிவித்திருக்கிறது. மககள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு, பொருளாதாரப் பிரச்சினைகள் தெளிவாகியுள்ளன -இங்கிலாந்து வங்கி ஐரோப்பிய ஒன்றியத்தோடும், உலகோடும் புதிய வர்த்தகத் தொடர்புகளை பிரிட்டன் நிறுவுவதற்கு நேரம் எடுக்கும். வெளிநாட்டு முதலீட்டை பராமரிப்பது கடினமாக இருக்கும் என்று அது தெரிவித்திருக்கிறது. கடன்களை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் அதிகச…
-
- 0 replies
- 168 views
-