உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26694 topics in this forum
-
குஜராத் அணு உலை கசிவால் மூடல்: ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து தண்ணீர் கசிந்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கக்ரபார் அணுமின்நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் கூறும்போது, ''முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அணுஉலை மூடப்பட்டது. இதனால், அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை. குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
லிபிய விவகாரம்: வெளியில் வந்தது அமெரிக்க-பிரிட்டன் மோதல் ------------------------------------------------------------------------------------------------------------------------------ லிபியாவில் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அட்லாண்டிக் சஞ்சிகைக்கு பேட்டியளித்த ஒபாமா, இரண்டாயிரத்து பதினொன்றில் லிபியாவில் இராணுவ ரீதியில் தலையீடு செய்த பிறகு டேவிட் கமரென்னின் கவனம் சிதறிவிட்டதாக கூறியுள்ளார். இது பிரிட்டனில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. அதைத் தொடந்து தற்போது விளக்கமளித்திருக்கும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, பிரிட்டனுடனான உறவின் பலத்தை வலியுறுத்தியுள்ளது. …
-
- 1 reply
- 581 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - லிபியாவில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். - சிரியா உள்நாட்டு போர் ஆரம்பித்து ஐந்து வருடங்களின் பின்னர், கிளர்ச்சி முதன் முதல் வெடித்த டெர்ரா நகருக்கு பிபிசி சென்றது. - ஆளில்லாமல் ஓடும் கார். ஓட்டுனர் இல்லாத தமது காரை சுவீடனின் வொல்வோ நிறுவனம் சோதிக்கிறது.
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்காவில் முஸ்லிம் என நினைத்து பவுத்தத் துறவிக்கு சரமாரி அடி உதை அமெரிக்காவின் ஆரிகன் மாகாணத்தில் கோஸென் சாம்ப்சன் (66) என்ற பவுத்த துறவி மீது அவர் முஸ்லிம் என்று தவறாக நினைத்து தாக்குதல் நடத்தப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. ஹூட் ரிவர் பகுதியில் பவுத்தத் துறவி கார் கதவை நபர் ஒருவர் எட்டி உதைக்க அது அவரது தலையை பதம் பார்த்தது. பிறகு பவுத்தத் துறவியை அந்த மர்ம நபர் கடும் வசைச்சொற்களால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பு செய்தி கூறுகிறது. தாக்குதல் நடத்தியவர் பிரவுன் நிற தலைமுடி கொண்ட வெள்ளை ஆண் நபர் என்று போலீஸ் கூறுகிறது, பிப்ரவரி 29-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் மீதான விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இது இன…
-
- 1 reply
- 424 views
-
-
இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பணியாற்ற பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.போர் விமானங்களை இயக்க பெண் போர் விமானிகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது ஹைதரபாத்தில் அதற்காக பயிற்சியும் பெற்று வருகின்றனர். தற்போது ஹக்கிம்பேட் விமானப்படை மையத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.முதல் கட்ட பயிற்சி முடிந்து 2வது கட்ட பயிற்சி கிரண் எம்.கே 2 ரக போர் விமானங்களில் பயிற்சி பெறவுள்ளனர். 2வது கட்ட பயிற்சி முறைதான் மிக முக்கியமானது.இந்த பயற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 பெண் விமானிகளும் நிச்சயம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயராகியிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்…
-
- 3 replies
- 575 views
-
-
'முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை': டோனல்ட் ட்ரம்ப் மிச்சிகனில் நடைபெற்ற விவாதம் ஒன்றில்சக போட்டியாளர்களுடன் ட்ரம்ப் (மார்ச் 3) அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கின்ற டோனல்ட் ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை மீண்டும் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார். நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவரது போட்டியாளர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே, டோனல்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் நியாயப்படுத்தி பேசியுள்ளார். "இஸ்லாம் அமெரிக்காவை வெறுக்கிறது" என்ற ட்ரம்ப்-இன் கோசத்தை சவாலுக்கு உட்படுத்திய அவரது போட்டியாளரான ஃபுளோரிடா மாநில செனெட்டர் மார…
-
- 0 replies
- 296 views
-
-
ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் வசம் 31,000 கர்ப்பிணி பெண்கள் 2016-03-11 10:48:10 ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் வசம் 31,000 கர்ப்பிணி பெண்கள் இருப்பதாக குவில்லியம் என்ற அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் நடைமுறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து பிரித்தானியாவின் குவில்லியம் அறக்கட்டளை 6 மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈராக்கின் மொசூல் நகரில் கிளர்ச்சியாளர்கள் 8 வயது சிறுமியை கடத்திச் சென்று ஒரு கட்டடத்தல் வைத்து வல்லுறவு செய்துள்ளனர். வலியால் துடிக்கும் அந்த சிறுமி அலறியதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்து…
-
- 0 replies
- 356 views
-
-
பிரிட்டன் இந்துக்கள் சிலர் கோமியம் குடிப்பதேன்? லண்டனில் பசுவின் கோமியம் கடைகளில் விற்கப்படுவதை பிபிசியின் ஆசிய பிரிவு சேவை கண்டறிந்துள்ளது. லண்டனில் இருக்கும் தெற்காசியக்கடைகளில் கோமூத்ரா என்கிற பெயரில் விற்கப்படும் இந்த பசுவின் கோமியத்தை பிபிசி செய்தியாளர் காசு கொடுத்து வாங்க முடிந்தது. இந்த கடைகள் எல்லாமே உணவுப்பொருட்களையும் விற்கும் கடைகள். ஒரு கடையில் இந்திய துணைக்கண்டத்தின் அன்றாட உணவான ரொட்டிகளுக்கு அருகில் இந்த கோமியமும் அடுக்கி வைத்து விற்கப்பட்டது. “இந்துக்கள் இதை மத காரணங்களுக்காக வாங்கிச் செல்கிறார்கள். உதாரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டத்தை வரவழைக்க இந்த கோமியம் தெளிக…
-
- 0 replies
- 539 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் போர் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அங்கு போரால் பாதிக்கப்பட்ட சிறார்கள் குறித்த தகவல்கள். - ஜப்பானின் ஃபுக்குஷிமா பேரழிவு நடந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் அணு கதிரியக்க ஆபத்துள்ள அந்த பகுதிக்கு பிபிசி சென்றது. - ஆப்பிரிக்காவில் அழிந்துவரும் காண்டா மிருகங்களை காப்பாற்றுவதற்கான ஒரு திட்டம்.
-
- 0 replies
- 228 views
-
-
சிரியாவின் குழந்தைகள் : தொலைந்துபோன சந்ததி ============================================= அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்துக்கு எதிராக சிரியாவில் கிளர்ச்சி ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதனை தொடர்ந்த மோதல்களால் இரண்டரை லட்சம் பேர்வரை அங்கு இறந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். எழுபத்தைந்து லட்சம் பேருக்கு அங்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இருபத்தெட்டு லட்சம் பேருக்கு எந்தவிதமான கல்வி வசதியும் கிடையாது. அவர்களில் இரண்டு குழந்தைகளின் கதை இது.
-
- 0 replies
- 276 views
-
-
`இளையவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஆப்பிரிக்காவின் தலைவர்கள் மட்டும் வயதானவர்கள்' இளம் வயதினர் அதிகமாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளில் வயதான தலைவர்களே ஆட்சியில் உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமாக உள்ள நாடுகளின் தலைவர்களின் சராசரி வயது 61 என தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டுத் தலைவர்களில், வயதில் மூத்த முதல் 10 தலைவர்களின் சராசரி வயது 79 என்று தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே இளம் வயதானோர் அதிகம் வாழும் ஆப்பிரிக்கக் கண்டத்தில், அந்த நாடுகளின் தலைவர்கள் எப்போதுமே வயது முதிர்ந்தவர்களாக உள்ளதற்கு காரணம் பற்றிய ஆய்வுகளும் துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க சந…
-
- 0 replies
- 431 views
-
-
நான்கு வயது குழந்தையை பெட்டியில் வைத்து விமானத்தில் வந்த பெண் துருக்கியில் இருந்து பிரான்சுக்கு பெண் ஒருவர் தனது நான்கு வயது குழந்தையை , கையில் எடுத்துவரும் பெட்டியில் வைத்து விமானத்தில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் காலடியில் வைத்திருந்த அந்தப் பை அசைய ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் சென்ற சக பயணிகள் அதைக் கண்டுபிடித்தனர். பிரான்ஸில் வசித்து வரும் அந்தப் பெண், ஹைத்தியைச் சேர்ந்த இந்தக் குழந்தையை தத்தெடுக்க முயன்று கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் அதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் கருதப்படுகிறது. இஸ்தான்புல்லில் அவர் பயண மாற்றும் பகுதியில் ( ட்ரான்ஸிட் பகுதி) இருந்த அந்தப் பெண்ணை முதலில…
-
- 0 replies
- 337 views
-
-
2018ல் புழக்கத்திற்கு வர இருக்கும் புதிய தாள் நாணயங்களில் இயல்பு கடந்த கனடிய பெண்ணின் உருவகம் அமையும் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ செவ்வாய்கிழமை அறிவித்தார். சர்வதேச பெண்கள் தின அர்ப்பணிப்பாக இன்று முத்திரை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். புதிய தாள் நாணயத்திற்கான போற்றுதலுக்குரிய ஒரு பெண்ணை தெரிந்தெடுக்கும் பொது ஆலோசனையை இன்று ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார். எங்கள் நாட்டை கட்டி எழுப்பவதில் பெண்கள் ஒரு முக்கிய கருவிகளாவர். கிட்டத்தட்ட 150-வருடங்களாக வங்கி நோட்டில் கனடிய பெண் இடம்பெறவில்லை எனவும் கூறினார். பரிந்துரைக்கப்படும் பெண்கள்: கனடியராக பிறப்பால் அல்லது குடியுரிமை, கனடிய மக்களிற்கு பயன்படக்கூடிய தலைசிறந்த தலைமை…
-
- 0 replies
- 288 views
-
-
சோமாலியாவில் அல்- ஷபாப் தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களில், சோமாலிய துருப்பினரோடு இணைந்து அமெரிக்க படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பில் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்த சோமாலிய உளவுத் துறை அதிகாரி, சோமாலிய துருப்பினரோடு இணைந்து அமெரிக்க படையினர் நேற்று முன்னெடுத்த தாக்குதலானது, அல்-ஷபாப் தீவிரவாதக் குழுவின் உயர்நிலை அதிகாரி ஒருவரை இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.இது தொடர்பில் முன்னர் செய்தி வெளியிட்டிருந்த அல்-ஷபாப் தீவிரவாத குழு, வெளிநாட்டு படைகள் நடத்திய தாக்குதலுக்கு தாம் பதில் தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று நடத்தப்பட்ட குறித்த தாக்…
-
- 0 replies
- 207 views
-
-
கடந்த 18 மாதங்களாக சிரியா மற்றும் ஈராக்கில் டேஷ் ரக்ஃபிரி தீவிரவாதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல்களில், இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாக வான் தாக்குதல்களை கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.நேற்று பிரித்தானியைவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எயார்வாஸ் வான் தாக்குதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க கூட்டுப் படையினரால் ஈராக் மற்றும் சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட 352 வான் தாக்குதல்களிலேயே ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நம்பத் தகுந்த பொது அறிக்கைகள் மற்றும் அதிகாரிகளின் உறுதிப்படுத்தல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்ப…
-
- 0 replies
- 247 views
-
-
துபாய் அபுதாபியில் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு(வீடியோ) துபாய்: ஐக்கிய அரபு நாட்டில் துபாய்,அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது. கன மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் பெரு வெள்ளம் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் பள்ளிகள் மூடப்பட்டன. ஏரளாமான வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலையில் ஆறு போல் வெள்ளம் பெருகி கார்களை அடித்துச் சென்றன. அடிக்கும் பேய்க் காற்றுக்குத் தாங்காமல், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தொடரும் மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான ச…
-
- 1 reply
- 369 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - நீண்ட தூர ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு சிறிய ரக அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வடகொரிய தலைவர் அறிவித்துள்ளார். - இரவாக மாறிய பகல் வேளை. இந்தோனேசியாவில் மக்கள் கண்டுகழித்த அபூர்வமான சூரிய கிரகணம். - அழிவுக்கான ஆயுதமாக பார்க்கப்பட்ட ட்ரோன்கள் பிடித்த அழகான படங்களுக்கான வித்தியாசமான ஒரு திரைத்திருவிழா.
-
- 0 replies
- 300 views
-
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி என பெயர் பெற்ற ஹர்ஷா சவுதா ஷா, மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 1986ம் ஆண்டில் டெஸ்ட் டியூப் மூலம் ஹர்ஷா சவுதா ஷா பெற்றோருக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்து சாதனை படைத்த அதே மருத்துவ குழுவினர்தான், ஹர்ஷாவுக்கும் சிசேரியன் முறையில பிரசவம் பார்த்துள்ளனர். ஹர்ஷாவுக்கும் திவ்யபால் என்ற தொழிலதிபருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. தன்னை கடவுளின் வெகுமதியாக கூறிக்கொள்ளும் ஹர்ஷா, தனது குழந்தை கடவுளின் வரம் என பூரிப்புடன் தெரிவித்தார். ஹர்ஷா சவுதா ஷா பிறக்க காரணமாக இருந்த டாக்டர் இந்திரா ஹிந்துஜா தான் அவருக்கு பிரசவமும் பார்த்துள்ளார். இதுகுறித்து டாக்டர் இந்திரா ஹிந…
-
- 0 replies
- 1.1k views
-
-
முழு சூரிய கிரகணம்: இருளில் மூழ்கிய இந்தோனேசியாவின் சில பகுதிகள் இந்தோனேசியாவின் டெர்னேட் தீவின் கடற்கரையில் சூரிய கிரகணத்தை கண்டு களிக்கும் மக்கள். | படம்: ராய்ட்டர்ஸ். சென்னை, பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் சூரியகிரகணத்தைப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: எம்.கருணாகரன். முழு சூரிய கிரகணத் தாக்கத்தினால் இந்தோனேசியாவின் சில பகுதிகள் 2 நிமிடங்களுக்கும் மேல் இருளில் மூழ்கியது. முழு சூரிய கிரகணம் புதன் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஏற்பட்டது. இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு களித்தனர். இந்த ச…
-
- 0 replies
- 302 views
-
-
அணுக் கதிர்வீச்சு பாய்ந்த உணவை 30 ஆண்டுகளாக உட்கொண்டிருக்கும் மக்கள்: கிரீன்பீஸ் தகவல் டோக்கியோவில் 2011-ம் ஆண்டு செப்.19-ம் தேதி நடந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம். | படம்: ஏ.பி. செர்னோபில் அணு உலை வெடித்து 30 ஆண்டுகள் ஆகியும் கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த 30 ஆண்டுகளாக கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட உணவு, குடிநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அவலநிலை நீடிப்பதாக கிரீன் பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகள் அல்ல இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கதிர்வீச்சின் தாக்கம் போகப்போவதில்லை என்கிறது கிரீன்பீஸ் ஆய்வு. 1986-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகின் கருப்பு தினமாக மாறிப்போன அன்றைய செர்னோபில் விபத்…
-
- 0 replies
- 240 views
-
-
மின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார் மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான '@' குறியீடு என்பவற்றைக் கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து இருந்து இன்னொரு கணினிக்குக் கடிதங்களை அனுப்பும் முறையை 1971ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார். பின்னர் @ குறியீட்டுடன், தொலைவிலுள்ள ஏனைய கணினிகளுக்கு அந்தத் தகவல்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார். இன்று மின்னஞ்சல்; என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத…
-
- 1 reply
- 579 views
-
-
துருக்கிக்கு விரட்டப்படும் அகதிகள் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்றதாக நூற்றுக்கணக்கான அகதிகள் மேற்கு துருக்கி பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். படம்: ஏஎப்பி கிரீஸ் நாட்டில் முகாமிட்டுள்ள அகதிகளை மீண்டும் துருக்கிக்கு அனுப்ப ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதற்கு துருக்கி அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக் கப்பட்டுள்ள சிரியா, ஈராக்கில் இருந்து கடல்மார்க்கமாக துருக்கி, கிரீஸ் நாடுகளில் கரை யேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலான அகதிகள் துருக்கிக்கு சென்று அங்கிருந்து கிரீஸ், மாசிடோனியா வழியாக மேற்கு…
-
- 0 replies
- 287 views
-
-
துருக்கியின் எல்லை மீது ராக்கெட் தாக்குதல் சிரியாவிலிருந்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களில் துருக்கியின் எல்லைப் பகுதியான கில்லிஸில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என துருக்கியின் தென் பகுதியிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்து இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து துருக்கிய இராணுவத்தினர், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் நிலைகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.bbc.com/tamil/global/2016/03/160308_rocket_attack_turkey
-
- 0 replies
- 367 views
-
-
பல கண்டம் தாண்டும் ஏவுகணைகளை இரான் பரிசோதித்துப் பார்த்துள்ளது. அமெரிக்காவின் வற்புறுத்தலையும் மீறி இந்த சோதனைகளை இரான் நடத்தியுள்ளது.எவ்வித அச்சுறுத்தலையும் சமாளிக்க இரான் தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக இரான் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இதேபோல சோதனைகளை இரான் நடத்தியதையடுத்து, இரானின் ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடைய தொழில்களுக்கும் தனி நபர்களுக்கும் அமெரிக்கா தடைவிதித்தது. http://www.seithy.com/breifNews.php?newsID=152980&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 354 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - எம். எச் 370 விமானம் காணாமல்போய் இரண்டு வருடங்கள். தமது உறவுகளின் விதி குறித்து அறிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் இன்றும் போராடுகிறார்கள். - இந்தியா உட்பட மூன்று அணு வல்லரசுகளை நீதிமன்றத்துக்கு இழுக்கிறது ஒரு குட்டித்தீவு நாடு. - சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒரு பெண் கணித மேதையின் கதை.
-
- 0 replies
- 378 views
-