உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26894 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்… லாஹூரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 71 பேரின் குடும்பங்கள் இறுதிச் சடங்குகள் செய்து கொண்டிருக்க, பஞ்சாப் மாகணாத்தில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது பாகிஸ்தான். இஸ்லாமிய அரசு என்னும் அமைப்பிடமிருந்து சிரிய நாட்டு இராணுவம் மீட்டிருக்கும் பழம்பெரும் நகரான பல்மைராவின் இன்றைய நிலவரம் என்ன? சீனாவின் லட்சக்கணக்கான கிறித்தவர்கள் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடினாலும் எந்த தேவாலயத்துக்கு செல்வது என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. அரசின் தலையீட்டுக்கு எதிராக அதிகரிக்கும் விமர்சனம்
-
- 0 replies
- 331 views
-
-
ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் ஆஃப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டடத் தொகுதி மீது தாலிபான்கள் ராக்கட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆஃப்கான் புதிய நாடாளுமன்ற கட்டடம் மீது தாலிபான் தாக்குதல் குறித்த தாக்குதலில் கட்டடம் ஒன்றின் ஜன்னல்கள் சிதறடிக்கப்பட்டுளன. ஆனால் எவரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலைகுலைந்து போயுள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆஃப்கன் உளவுத்துறை தலைமை அதிகாரி மக்கள் அவையில் பேச ஆயத்தமாகும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்தியாவினால் 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டடத் தொகுதி டிசம்ப…
-
- 0 replies
- 232 views
-
-
கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன. லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதுடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான 60 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130508/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 303 views
-
-
இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே – டோனி அப்போட் இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதே என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது இரண்டு ஆண்டு கால ஆட்சி தொடர்பில் அபோட் கட்டுரையொன்று அப்போட் வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டமை குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் தாம் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தவே முயற்சித்ததாகத் தெரி…
-
- 0 replies
- 371 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில், எங்களுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் முஸ்லிம்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க முஸ்லிம்கள் குறித்து, அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில், ''ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல்பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆத…
-
- 0 replies
- 391 views
-
-
லாகூர் தற்கொலைத் தாக்குதலில் சிறார்கள் அடங்கலாக 50 பேர் பலி பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் நடந்துள்ள வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சிறார்கள் பலரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த இந்த பூங்காவிற்கு அருகில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ஒரு பதற்றமான சூழல் காணப்படுவதாகவும், மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிய நிலையில், சிறார்கள் தமது பெற்றோரை காண முடியாமல் பிரிந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறார்கள், பெரியோர்கள் என ப…
-
- 1 reply
- 630 views
-
-
பத்தான்கோட் தாக்குதல் பற்றி ஆராய பாக். விசாரணைக் குழு தில்லி வந்தது nகடந்த ஜனவரியில் நடந்த இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாப்-இல் பத்தான்கோட் விமானப் படைத்தளம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக பாகிஸ்தான்விசாரணைக் குழுவொன்று தில்லி சென்றுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த இந்தத் தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜாய்ஷ்-இ- மொஹம்மட் என்ற இஸ்லாமியவாத ஆயுதக்குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. இவ்வாறான விசாரணை ஒன்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இயங்குவது என்பது மிகவும் அரிதாகவே நடக்கக…
-
- 0 replies
- 418 views
-
-
உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், உலகநாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் கடந்த ஏழாம் தேதியில் இருந்து தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா அமெரிக்க…
-
- 0 replies
- 606 views
-
-
அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள் 1996-ம் ஆண்டில், கத்தார் அரசாங்கத்தின் நிதியுதவில் நிறுவப்பட்ட அல்-ஜசீரா செய்தி ஊடகத்துக்கு உலகெங்கிலும் 70க்கும் அதிகமான அலுவலகங்கள் உள்ளன சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா கிட்டத்தட்ட 500 பணியிடங்களை நீக்கவுள்ளது. அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் மற்ற இடங்களிலும் பல பணியிழப்புகள் ஏற்படவுள்ளன. 'ஊழியர்களின் வினைத் திறனை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டே' இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அல் ஜசீரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கத்தார் அரசாங்கம் அல்…
-
- 0 replies
- 409 views
-
-
பாரிஸ்- பிரஸ்ஸல்ஸ் தாக்குதலாளிகளுக்காக 'போலி ஆவணம் தயாரித்துவர் கைது' பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேகநபர்கள் பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு போலி அடையாள ஆவணங்களை தயாரித்து கொடுத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் அல்ஜீரிய பிரஜை ஒருவர் இத்தாலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் தெற்கில் உள்ள சலேர்னோவுக்கு அருகே ன ஜமால் எடின் அவ்வாலி என்ற இந்த 40 வயது நபர் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவின் கீழ் இவரது கைது நடந்துள்ளது. கடந்த அக்டோபரில், பிரஸ்ஸல்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீர் சோதனையிடப்பட்ட போது, பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களில் ஈடுப…
-
- 0 replies
- 578 views
-
-
ஜப்பானில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கடந்த ஆண்டு மேன்முறையீடு செய்துள்ளதாக கியாடோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஜப்பானில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக கடந்த ஆண்டு மேன்முறையீடு செய்துள்ளதாக கியாடோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பத்திருந்த 7500க்கும் அதிகமான விண்ணப்பங்களில் 27 பேருக்கு மாத்திரம் அகதித் தஞ்சம் வழங்கப்பட்டதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு கூறியிருப்பதாக கியோடோ தெரிவித்துள்ளது. மேலும் 13,000 பேர் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பத்துவிட்டு முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதித…
-
- 0 replies
- 392 views
-
-
பிரஸல்ஸ் டிராம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் வைத்திருந்த பையை வெடிகுண்டு நிபுணர் சோதனை செய்கிறார், படம்: ராய்ட்டர்ஸ் பிரஸல்ஸ் விமான நிலைய தாக்குதலின்போது அங்கிருந்து தப்பிய 3-வது தற்கொலைப் படை தீவிரவாதி கைது செய்யப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெல்ஜியம் தலைநகர் பிரஸல் ஸில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐ.எஸ். தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 31 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். பிரஸல்ஸ் விமான நிலையத் தில் 3 தீவிரவாதிகளும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு தீவிர வாதியும் ஊடுருவினர். இதில் விமான நிலையத்தில் புகுந்த 3-வது தீவிரவாதி தாக்குதல் நடத்தாமல் தப்பியோடிவிட்டான். அந்த த…
-
- 0 replies
- 339 views
-
-
சிரியாவின் பல்மைரா நகர் மீண்டும் அரச படைகள் வசம் சிரியாவின் பழம்பெரும் நகரான பல்மைராவை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அரச ஊடகமும் செயல்பாட்டாளார்களும் கூறுகின்றனர். பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பின் சீரழித்துள்ளதாக சர்வதேசம் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக ரஷ்ய வான்படைத் தாக்குதல்கள் மற்றும் ஷியா ஆயுததாரிகளின் உதவியுடன் சிரிய இராணுவம் அங்கு நிலப்பகுதிகளை சிறிது சிறிதாக கைப்பற்றி வந்தது. அந்த நகரைக் கைப்பற்றுவதற்காக சனிக்கிழமை இரவு முழுவதும் சண்டைகள் நடைபெற்றுள்ளன. நகர் இப்போது அரச படைகள் வசம் நகரின் கிழக்குப் பகுதியில் இன்னும் துப்பாக்க…
-
- 0 replies
- 313 views
-
-
ஈபிள் கோபுரம் தகர்க்கப்படுவது போன்ற வீடியோ வௌியீடு ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. சமீபத்தில் இணையத்தில் ‘வீடியோ கேம்’ ஒன்றை வெளியிட்டனர். அதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் ‘ஈபிள் கோபுரம்’ குண்டு வைத்து தகர்க்கப்பட்டு தரையில் சாய்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரத்த ஆறு ஓடி அது அமெரிக்காவின் டொலர் நோட்டுகள், துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வைக்கப்பட்டுள்ள மர மேஜையின் மீது துளிதுளியாக விழுவது போன்று அனிமேசன் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவுக்கு ‘அவநம்பிக்கை மேற்கத்திய நாடுகள்’ என தலைப்பிட்டுள்ளனர். இவை சமூக வ…
-
- 0 replies
- 363 views
-
-
ஏமெனில் ஒரு வருடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அரசை நிலைநிறுத்த சவூதி அரேபியா தலைமையில் நடத்தப்பட்டுவரும் தாக்குதலைக் கண்டித்து தலைநகர் சனாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.சனா நகர் தற்போது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.சலேவின் கட்சியே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சபீன் சதுக்கத்தில் நடந்த கூட்டத்திலும் சலே கலந்துகொண்டார்.ஏமென் முழுவதும் தற்போது நடந்துவரும் யுத்தத்தில் கடந்த ஆண்டில் 6,300 பேர் வரை இறந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=154235&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 330 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு பிரஸ்ஸல்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் தீவிரவாத கொலை குற்றத்தித்தின் கீழ் சந்தேக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிரஸ்ஸல்ஸில் செவ்வாய்க்கிழமையன்று நடந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரது பெயர் ஃபைசல் சீ என மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டாலும் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதற்கிடையில், பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி ஒன்றுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால…
-
- 0 replies
- 311 views
-
-
வடகொரியாவின் ராணுவ ரகசியங்களை திருட முயன்றதாகவும், உளவு பார்த்ததாகவும் கைது செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தங்கள் நாட்டை உளவு பார்க்கும் அமெரிக்காவில் ஏவலர்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது. தங்கள் நாட்டு ராணுவ ரகரியங்களை உளவு பார்த்தாக அமைரிக்க இளைஞர் ஒருவரை ஆதாரங்களுடன் வட கொரியா சமீபத்தில் கைது செய்தது. குற்றச்சாட்டுகள் நிறுபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இதைபோல , மற்றொரு இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வடகொரியா மீது மனித உரிமை ஆர்வலர்கள் …
-
- 0 replies
- 579 views
-
-
செவ்வாய்க்கிழமை வரை பிரஸல்ஸ் விமான நிலையம் மூடல் பிரஸல்ஸ் விமான நிலையத்திலிருந்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் பயணிகள் விமான சேவை தொடங்காது என பெல்ஜிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெல்ஜியம் விமான நிலையம் கடந்த வாரம் அங்கு தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில், அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வு செய்யவுள்ளனர். இதனிடையே 31 பேர் உயிரிழக்கக் காரணமான அந்த குண்டுவெடிப்புகளை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா எனும் கேள்விகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. இதற்கிடையில் பாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் சாலாஹ் அப்தஸ்லாமிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் குற…
-
- 0 replies
- 394 views
-
-
தி இன்டிபென்டண்ட் நாளிதழின் அச்சுப் பதிப்பு நிறுத்தம் பிரிட்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த தி இன்டிபென்டண்ட் நாளிதழ் இன்றுடன் தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக்கொள்கிறது. தி இன்டிபென்டெண்டின் முதல் இதழும் கடைசி இதழும். கடந்த 30 ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழ், நாளை முதல் இணையத்தில் மட்டுமே படிக்கக் கிடைக்கும். பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று இம்மாதிரி மாறுவது இதுவே முதல்முறையாகும். 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய செய்தித் தாள் ஒன்று அச்சுப்பதிப்பை நிறுத்துவதும் இதுவே முதல்முறையாகும். 1986ல் நிறுவப்பட்ட இந்த நாளிதழ், ஆரம்பத்தில் மிக வெற்றிகரமான நாளிதழாகவே இருந்துவந்தது. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமைக்கென பிரத்யேகம…
-
- 0 replies
- 354 views
-
-
ஈராக் கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி! (படங்கள்) பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக்கின் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வைத்துள்ளனர். அங்கு, ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாடில் இருந்த குபேயிசா நகரத்தை அரசுப்படைகளும் சன்னி பழங்குடியின போராளிகளும் தங்கள் கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்ய ரசூல் தெரிவித்து இருந்தார். இந…
-
- 0 replies
- 331 views
-
-
அமெரிக்கத் தாக்குதலில் மூத்த ஐஎஸ் தலைவர் சாவு ராணுவத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் நிதியமைச்சர் என்று கருதப்படும் மூத்த தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. அப்த் அர் - ரஹ்மான் முஸ்தஃபா அல் - காதுலி என்ற இந்த நபரின் தலைக்கு அமெரிக்கா 7 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது. அந்த நபரின் பெயர் ஹாஜி இமாம் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டர் கார்டர் தெரிவித்திருக்கிறார். அவரது உண்மைப் பெயர் அப்த் அர் - ரஹ்மான் முஸ்தஃபா அல் - காதுலி என கூறப்பட்டுள்ளது. எப்படி, எங்கே அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் சொல்லப்படவில்லை. ஐஎஸ்ஸின் அமைச்சரவை என்று சொல்லப்படும் அமைப்பை தாங்கள் தொடர்சியாக அழித்துவருவதாக கார்டர்…
-
- 0 replies
- 517 views
-
-
ரஷ்யாவும் ஜப்பானும் உரிமைகோரும் சில தீவுகளில் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஆளில்லா விமானங்களையும் நிறுத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.குரில் தீவு எனப்படும் அந்தத் தீவுகளில் கடற்படைத் தளத்தை அமைப்பது குறித்தும் ரஷ்யா யோசித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தீவுகளை ஜப்பான் நார்தன் டெரிட்டரீஸ் என்று அழைத்துவருகிறது. அந்தத் தீவுகளில் ராணுவதளங்களை அமைக்கப்போவதாக ரஷ்ய அரசு முன்பே கூறியிருந்தது.இரண்டாம் உலகப் போரின் முடிவில் குரில் தீவுகளை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததையடுத்து ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன. http://www.seithy.com/breifNews.php?newsID=154168&category=WorldNews&language=tam…
-
- 0 replies
- 591 views
-
-
இந்தியாவுக்கு ஒரு முஸ்லிமால் ஜனாதிபதியாக முடியும் என்றால் பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு ஏன் வரக்கூடாது? என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.பாகிஸ்தானில் சிறுபான்மையின இந்து மக்கள் அதிகமாக வாழும் உமர்கோட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஒரேமகனான பிலாவல் பூட்டோ கலந்து கொண்டார். அவருக்கு ராஜஸ்தானி தலைப்பாகையை அணிவித்த இந்து மக்கள், அவர்மீது வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவரும் கூடியிருந்த மக்களின்மீது வண்ணப்பொடிகளை தூவி வாழ்த்து தெரிவித்தார். …
-
- 0 replies
- 287 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் சற்று முன்னர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஒரு நபரை காவலர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக பெல்ஜியத்தில் இருந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ஊடக செய்திகள்; பிரஸ்ஸல்ஸ் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று கூறும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியின் பேட்டி; இராக்கிய கிராமம் மீது ஐ எஸ் அமைப்பு நடத்திய ரசாயனத்தாக்குதல் குறித்து அங்கு சென்ற பிபிசி செய்தியாளர் தரும் நேரடித் தகவல்கள்; நோய்த்தடுப்பு மருத்துவமுறை மூலம் முதல் ரக சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா? இதற்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்த பிபிசியின் சிறப்புச் செய்தி ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 382 views
-
-
தேசப்பற்று என்பது ஆபத்தான ஒரு கருவியாகும். அதைப் பற்றுவோர், தத்தம் நாடுகளில் அழிவுக்கே வித்திட்டுள்ளனர். தேசப்பற்றைக் கையாளல், கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கொலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைய, முற்போக்கான திசைகாட்டிய தேசப்பற்றும் தேசநலனும், அடக்குமுறையின் ஆயுதங்களாகவும் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தும் கோட்பாடுகளாகவும் இன்று மாறியுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லொவாக்கியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்லொவாக்கிய தேசியவெறியை, அதன் நவீன நாஸிச வடிவில் பரப்புகின்ற 'எங்கள் ஸ்லொவாக்கியா' கட்சியானது, 8 சதவீத வாக்குகளைப் பெற்று 10 சதவீத நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, முதன்முறையாக வாக…
-
- 0 replies
- 438 views
-