உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27057 topics in this forum
-
இளவரசர் வில்லியம் - இளவரசி கேட் தம்பதியின் தாஜ் மஹால் விஜயம் 2016-04-18 10:48:45 இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி கேட்) நேற்றுமுன்தினம் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா 1992 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு விஜயம் மேற் கொண்டபோது தாஜ்மஹாலுக்கு முன்னால் அமர்ந்து பிடித்துக்கொண்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில், இளவரசி டயானாவின் தாஜ்மஹால் விஜயத்தின் நினைவுகளை மீட்டுவதாக இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோரின் தாஜ் மஹால் விஜயம் அமைந்திருந்தது. …
-
- 0 replies
- 624 views
-
-
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையே ஐஎஸ்தான் அரபு நாடுகளில் வசிக்கும் இளைஞர்களில் பெரும் பாலானவர்கள் ஐஎஸ் அமைப்புக்கு எதிராகத் திரும்பிவருகின்றனர். இஸ்லாமிய அரசை ஐஎஸ் அமைப்பால் அமைக்க முடியாது என்று அரபு இளைஞர்கள் கருதுகின்றனர். அரபு நாடுகளைச் சேர்ந்த 18 வயது முதல் 24 வயது வரையிலான 3,500 இளைஞர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், லெபனான், மொராக்கோ, ஓமான், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, துனீசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். இதை ‘அரபு இளைஞர் சர்வே-2016’ என்ற பெயரில் சர்வதேச வாக்கெடுப்பு நிறுவனமான பென் ஷியான் பெர்லேண்ட் எ…
-
- 0 replies
- 630 views
-
-
சார்லி சாப்ளின் அருங்காட்சியகம் சுவிஸ்ஸில் திறப்பு பிரபல பிரிட்டிஷ் நடிகர் சார்லி சாப்ளினின் வாழ்க்கையையும், பணியையும் போற்றும் வகையிலான அருங்காட்சியகம் இன்று சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டுள்ளது. சாப்ளின் படங்களின் பயன்படுத்திய இந்தப் பிரம்புத்தடியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது ஞாயின்று திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், ஜெனீவா ஏரியின் கரைப்பகுதியில் அவர் கடைசி 25 வருடங்கள் வாழ்ந்த பரந்துவிரிந்த மெனோர் டெ பான் தோட்டத்தில் அமைந்துள்ளது. பேசாப்படக் காலத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற சாப்ளின் அந்தப் பெருந்தோட்டத்தில் தனது மனைவி ஊனா மற்றும் எட்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார். படப்பிடிப்பு ஒன்றில் சார்லி சாப்ளின் இந்த அருங்காட்ச…
-
- 0 replies
- 483 views
-
-
அதிக வெப்பநிலை காரணமாக 150 பேர் பலி இந்தியாவில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக, இதுவரை 150 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாத்திரம், 120க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சராசரியாக 40 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருவதாகவும் இந்த வெப்பநிலையானது எதிர்வரும் தினங்களில் 44 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிஷா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருநெல்வேலி, மாவட்டங்களில் கடும் வெயிலுடனான காலநிலை நிலவியத…
-
- 0 replies
- 515 views
-
-
தென் அமெரிக்க நாடான எக்வடோரில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் ஒன்றில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன இந்த நிலநடுக்கமே பல தசாப்தங்களில் அங்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நாட்டின் துணை அதிபர் எச்சரித்துள்ளார். தற்போத்து எக்வடோரின் ஆறு மாகாணங்களில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் தேசியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.8 அளவுக்கு சக்தி கொண்டது என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 300 மை…
-
- 0 replies
- 479 views
-
-
முஸ்லிம் குடியேறிகள் சிலரை போப் இத்தாலிக்கு அழைத்துச் சென்றார் கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாமுக்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார். nபோப் பிரான்ஸிஸுடன் இத்தாலி செல்லும் சிரியன் முஸ்லிம் குடியேறிகள் குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே, இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என வாட்டிகன் தெரிவித்துள்ளது. குடியேறிகளை வரவேற்பதற்கான நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக, போப் பிரான்ஸிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என அவரது அலுவலகம் கூறுகிறது. முன்னதாக, …
-
- 1 reply
- 511 views
-
-
யேமன், சவுதியில் மழை வௌ்ளத்தால் 42 பேர் பலி inShare யேமன் மற்றும் சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழைக்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு யேமனில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 24 என்று அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் சனாவுக்கு வடக்கே உள்ள அம்ரான் மாகாணத்தில் மாத்திரம் 10 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். ஹஜ்ஜா மாகாணத்தில் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இரு மாகாணங்களிலும் ஏராளமான வீடுகள் சேதமடைந்…
-
- 0 replies
- 618 views
-
-
ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள் ஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே சனிக்கிழமை அதிகாலை இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதே பகுதியில் ஒரு நாள் முன்னரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன. இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்க…
-
- 1 reply
- 576 views
-
-
9/11 தாக்குதல்கள்: அமெரிக்காவுக்கு சவுதி கடும் எச்சரிக்கை அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாங்கள் மீது பொறுப்பு சுமத்தப்பட்டால் கடும் பெருளாதார விளைவுகள் ஏற்படும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. தாக்குதலில் நொறுங்கி விழுந்த கட்டடங்கள் அந்தத் தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டும் வகையிலான மசோதாவொன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரட்டைக் கோபுரம் வெடித்துச் சிதறியது. அந்த மசோதா நிறைவேறி சட்டமானால், 9/11 தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவுக்கு எதோவொரு வகையில் பங்கு இருந்தது எனக் கூறி அமெ…
-
- 0 replies
- 633 views
-
-
ஏலத்திற்கு வரவுள்ள எலிசபெத் மகாராணியின் காதல் கடிதம் (PHOTOS) inS இங்கிலாந்து ராணி எலிசபெத் இவரது கணவர் இளவரசர் பிலிப் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது ‘Royal Wedding’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் எழுதிய பெட்டி ஸ்பென்சர் என்பவருக்கு ராணி எலிசபெத் ஒரு கடிதம் எழுதினார். இளவரசர் பிலிப்புடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் 2 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. ராணி எலிசபெத் கடந்த 1942-ம் ஆண்டில் 21 வயத…
-
- 5 replies
- 916 views
-
-
ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர். கார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் ‘புகழ்’ பெற்ற கார் உற்பத்தியின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன. குட்டி நாடு ஜப்பான் ‘தொழில் வளர்ச்சியில் என்னமா அடிச்சு போறான் பாத்தியா?’ என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் வியப்பது உடன் நினைவுக்கு வருகிறதா? இன்றைய நிலையில் ஜப்பானில் கார் உற்பத்தி எவ்விதம் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. அசெம்பிளி ல…
-
- 0 replies
- 617 views
-
-
பிரஸ்ஸல்ஸ், பாரிஸ் தாக்குதல் சந்தேக நபர்கள் 5 பேர் பிரிட்டனில் கைது பிரஸ்ஸல்ஸ், பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐந்து பேரை பிரிட்டிஷ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். I 26, 40, 59 வயதுடைய மூன்று ஆண்களும் 29 வயதுடைய பெண் ஒருவரும் வியாழக்கிழமையன்று பிர்மிங்கமிலும் 26 வயதுடைய மற்றொரு நபர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கேட்விக் விமான நிலையத்திலும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஐந்து பேருமே பிர்மிங்கமில் வசித்துவந்தவர்கள். இந்தக் கைது சம்பவங்கள், மிக முக்கியமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரிட்டனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதைத் தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்…
-
- 0 replies
- 399 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * போர் நீடிக்கும் சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பியோட்டம்; லிபியக் கடல்வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்த தன்னால் இயலாது என லிபியா எச்சரிக்கை; * வரி ஏய்ப்பை தடுக்கப்போவதாக ஐரோப்பாவின் ஐந்து முக்கிய நாடுகள் சபதம்; பனாமா ஆவணங்கள் வெளியானதால் ஸ்பானிஷ் அமைச்சர் பதவி விலகல்; * ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கல்வி முடியும் முன்பே பல சிறுமிகள் விலகுவது ஏன் என்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 199 views
-
-
சிரியாவின் வடக்கிலிருந்து 48 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் இடம்பெயர்வு வடக்கு சிரியாவில் மோதல் நடந்துவரும் பகுதிகளிலிருந்து 48 மணி நேரத்திற்குள் குறைந்தது 30 ஆயிரம் பொதுமக்கள் தப்பிச் சென்றுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மோதல் பகுதிகளிலிருந்து தப்பிக்கும் மக்களுக்காக எல்லையை திறந்துவிடும்படி துருக்கியை அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மற்றைய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர் அல்லது அதனை நெருங்கிவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பிச்செல்லும் பொதுமக்கள் துருக்கி…
-
- 0 replies
- 472 views
-
-
விஜய் மல்லையாவின் கடவுச் சீட்டு முடக்கம் இந்தியத் தொழிலதிபரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான விஜய் மல்லையாவின் ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிங்ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா அவரது கடவுச் சீட்டு உடனடியாக நான்கு வாரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமலாக்கப் பிரிவின் ஆலோசனைக்கேற்ப அவரது ராஜதந்திர கடவுச் சீட்டை முடக்கும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கூறினார். முடக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டை ஏன் கைப்பற்றக் கூடாது அல்லது ரத்து செய்யக் கூடாது என்பது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டு…
-
- 0 replies
- 438 views
-
-
விமான விபத்தில் 12 பேர் பலி பப்புவா நியூ கினியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பப்புவா நியூ கினியாவின் கியுங்கா விமானநிலையம் அருகே குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது விமானி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 3 சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவைளை, குறித்த விமான விபத்தில் பலியாகிய விமானி அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இயந்திரக்கோளாரே குறித்த விபத்திற்கான காரணமென முதல்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ht…
-
- 0 replies
- 472 views
-
-
போதைப் பொருட்களுக்கு பதிலாக பாலாடையைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் போதைப் பொருட்களை நுகர்ந்து கண்டுபிடிக்க வேண்டிய மோப்ப நாய்கள் விமானப் பயணிகளிடமிருந்து பாலாடைக்கட்டி மற்றும் பன்றிக்கறி சாசேஜ்களை மட்டுமே கண்டுபிடிக்கின்றன என்பதை ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது. மோப்ப நாய்கள் பல பொருட்களை நுகர்ந்து கண்டறிய பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்திலுள்ள மான்செஸ்ட்டர் விமான நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருட்களை கண்டறிய ஆறு உயர்ரக நாய்கள் உள்ளன. அவற்றை பராமரித்து இயக்க இரண்டு மில்லியன் டாலர்கள் செலவாகின்றன. அந்த நாய்கள் சட்டவிரோத போதைப் பொருட்கள், புகையிலை, பணம், காட்டு விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றை நுகர்ந்து கண்டுபிடிக்க பயிற்சியளிக்…
-
- 8 replies
- 2k views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரான்ஸில் தண்டனை சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று ஆறு முதல் 15 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர் இவர்கள், 2011ஆம் ஆண்டு ஏடன் வளைகுடாவில் பிரான்ஸுக்கு சொந்தமான படகு ஒன்றை கடத்தி, அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட படகு உரிமையாளரின் மனைவி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களின் பின்னர் ஸ்பெயின் நாட்டுப் போர் கப்பலினால் மீட்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என தெரிவித்துள்ள கொல்லப்பட்டவரின் உறவினர்கள், நீதிபதி ஆயுள் தண்டனை வழங…
-
- 0 replies
- 478 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * நைஜீரியாவின் சிபோக் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு இரண்டாண்டுகள் ஆன நிலையில் புதிய காணொளியால் புது நம்பிக்கை; மாணவிகளை விடுவிக்கும்படி வலுக்கும் கோரிக்கை; * கைகள் செயலிழந்த மனிதரை கிடார் இசைக்கச் செய்கிறது தொழில்நுட்பம்; மூளை மற்றும் முதுகுத்தண்டுவட பாதிப்பாளர்களுக்கு புதிய சிகிச்சைமுறை; * இலங்கையில் சிங்கள மக்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை தயாரிக்கும் கலைஞர்களின் புத்தாண்டுக் கோரிக்கை ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 424 views
-
-
பள்ளிவாசல்களில் ஜெர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை ஜெர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார். கொலோன் பெரிய பள்ளிவாசல் அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார். அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உள்ளூர் இமாம்கள் உள்நாட்டிலேயே பயிற்சிபெற வேண்டும் எனவும் …
-
- 8 replies
- 947 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐ எஸ் அமைப்பிடமிருந்து திரும்பக் கைப்பற்றப்பட்ட சிரிய நகரின் இன்றைய நிலைமை குறித்த நேரடிச் செய்திகள்; கைதுசெய்யப்பட்ட ஐஎஸ் தளபதியின் பேட்டி; * மனிதகுலத்தின் அடுத்த பாய்ச்சல்; ஒரு தலைமுறை காலத்துக்குள் மைக்ரோசிப் எனப்படும் நுண்தகடளவு விண்கலத்தில் மற்றொரு சூரிய குடும்பத்துக்கு செல்வது சாத்தியமா? * வீட்டுக்குள் இருந்தபடியே பனிபடர்ந்த அண்டார்டிகாவின் பென்குயின்களை கண்காணிக்க வழி; புவி வெப்பமடைவதற்கு எதிரான போரில் நீங்கள் உதவுவதற்கான புதிய திட்டம் ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 347 views
-
-
மியான்மாரின்(பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/04/160413_myanmarquake
-
- 0 replies
- 572 views
-
-
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கப் பிரிவு வலியுறுத்தல் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குனரகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. மொத்தமாக ரூ.9,000 கோடி வங்கிக் கடனை திருப்பி செலுத்தாது பற்றிய வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ரூ.900 கோடி ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கு குறித்து விசாரணையாளர்களுக்கு மல்லையா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி அவரது பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடிதம் மூலம் வலுவான கோரிக்கை வைத்துள்…
-
- 1 reply
- 513 views
-
-
இமயமலையில் அரிய நாகலிங்கப் பூ 36 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை நாகலிங்கப் பூ, இமய மலையின் மானசரோவர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி 3:30 மணியளவில் மொட்டு, விரிந்து முழுப் பூவாகியுள்ளது. அழகிய இந்த பூவின் படம் இங்கே. இந்தியாவில் இவ்வாறு சொல்லப் படும் போது, இன்னுமொரு கதையும் இணைய வழியே வருகின்றது. இந்த படமானது Gordon J. Bowbrick என்பவரால் 2013 ல் எடுக்கப்பட்ட ஒரு கடல் வாழ் உயிரினம் என்கிறார்கள். ம்... உண்மையாகக் கூட இருக்கலாம், ஏனெனில் இவ்வளவு பெரிய பூ ஒன்று, மரத்தில் இல்லாமல், நிலத்தில் இருந்து முளைக்குமா? மூலம்: http://www.snopes.com/nagapushpa-flower-himalaya/
-
- 9 replies
- 3.7k views
-
-
ஃப்ரான்சில் ஒரு பரணில் கிடந்த அற்புத ஓவியம் எச்சரிக்கை: இங்கு இருக்கும் சில ஓவியங்கள் வன்முறைக் காட்சியை சித்தரிக்கின்றன ஹோலோஃபெர்னஸின் தலையைத் துண்டிக்கும் ஜூடித் என்ற இந்த ஓவியத்தை நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியின் மகத்தான ஓவியக் கலைஞர்களில் ஒருவரான கரவாஜ்ஜோ வரைந்ததாகக் கருதப்படும் ஒவியம் ஒன்று தெற்கு ஃப்ரான்ஸில் உள்ள ஒரு வீட்டின் பரணில் கிடைத்திருக்கிறது. இதன் மதிப்பு 94 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. விவிலியக் கதை ஒன்றின்படி, அசிரிய போர்த் தளபதி ஹோலோஃபெர்னஸின் தலையை ஜூடித் துண்டிக்கும் காட்சியை விவரிக்கும் இந்தப் படம், தூலோஸில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகக் கண்டுபிடிக…
-
- 0 replies
- 832 views
-