Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐஎஸ் தீவிரவாதிகளால் பந்தாடப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பான அதிர்ச்சி தகவலை யாஸிதியின பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக யாஸிதியினத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்தும், பெண்களை பாலியல் அடிமைகளாகவும் ஐ.எஸ். அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினரால் கலிதா என்ற யாஸிதி இன பெண் அனுபவித்த துன்பங்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கலிதா கூறுகையில், "என்னை கடத்திய தீவிரவாதிகள் ரசாக் …

  2. குடியேறிகளின் சடலங்களுக்கு துருக்கி மயானத்தில் இறுதிச் சடங்கு துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கி படகுப் பயணம் மேற்கொள்ளும் குடியேறிகளில் இந்த ஆண்டில் இதுவரை 360க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். துருக்கியில் கரை ஒதுங்கும் சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன. இஸ்மிர் என்ற இடத்தில் உள்ள மயானம் ஒன்றில் சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன மத்தியதரைக் கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. துருக்கியில் இவ்வாறு கரை ஒதுங்கிய பிரேதங்களில் அனேகமானவை இனம் காணப்படவில்லை. இவ்வாறான சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் உள்ள மயானம் ஒன்றில் அடக்கம் செய்யப்படுகின்றன. `உரிமை கோரப்படாத சடலங்கள…

  3. பிணைக் கைதியாக உள்ள பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ வீடியோவை ஐ.எஸ்.வெளியிட்டது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள, பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞரான ஜான் கான்ட்லீ தோன்றும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஸிடம் பிணைக் கைதியாக உள்ள புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ இந்த வருடத்தில் முதல் தடவையாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இராக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டிலுள்ள மோசூல் நகரிலிருந்து வெளியிடப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கருப்பு நிற ஆடை அணிந்து மெலிந்த தோற்றத்துடன் காணப்படும் கான்ட்லீ, இடிபாடுகளுக்கு மத்தியில் நின்றபடி, அமெரிக்க விமானப்படையினர், ஐ.எஸ்.இன் ஊடகப் பிரிவு மீது தாக்குதல் நடத…

  4. பாலஸ்தீனத்தில் பதின்ம வயது சிறுவன் சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. எப்ரோன் நகரில் உள்ள பேட்ரியார்க் குகைக்கு அருகில் 17 வயதான இந்தச் சிறுவனை எல்லைப் படையினர் சுட்டனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதியில் தெருக்களில் தினமும் தாக்குதல் நடப்பது வழக்கமாக இருந்துவருகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து இம்மாதிரி தாக்குதல்களில் சுமார் 190 பாலஸ்தீனியர்களும் 28 இஸ்ரேலியர்களும் 2 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். …

  5. கைதான நபரை விரைவில் நாடுகடத்த வேண்டும்: ஃப்ரான்ஸ் அதிபர் பாரிஸ் தாக்குதல் தொடர்பாக நேற்று ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கைதுசெய்யப்பட்ட சலா அப்தேசலாம் மருத்து சிகிச்சை முடிந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். காவல்துறையால் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படும் சலா அப்தேஸ்லாம். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது, துப்பாக்கியில் சுடப்பட்டு காயமடைந்த சலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த், விரைவிலேயே ஃப்ரான்ஸிற்கு நாடுகடத்தப்படுவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாதக் குழுவுக்கு இருக்…

  6. இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு; குறைந்தது நான்கு பேர் பலி துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதியை காவல்துறையினர் முழுமையாக மூடியுள்ளனர். இஸ்திக்லால் தெரு என்ற தெருவில் நடந்த இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தற்போது அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்களும் காவல்துறையினரும் விரையும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுவருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். குர்திய தீவிரவாத இயக்கமான டிஏகே அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. …

  7. அமெரிக்காவில் பயணிகள் விமானத்துக்கு அருகில் பறந்த ஆளில்லா போர் விமானம் படம்: ஏ.பி. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் அருகே லுஃப்தான்சா பயணிகள் ஜெட் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது 200 அடிக்கு அருகில் ஆளில்லா போர் விமானம் ஒன்று மோதும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானத்தை தரையிறக்கியவுடன் லுஃப்தான்சா ஏ380 விமானத்தின் பைலட் புகார் அளித்தார். விமானம் அப்போது 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு 14 மைல்கள் கிழக்காக பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் இந்த ட்ரோன் அபாயம் ஏற்பட்டது. ஆனால் விமானி சாமர்த்தியமாக அதிலிருந்து திசைதிருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார். ஆளில்லா போர் விமான பற்றிய தகவல் இல…

  8. அமெரிக்காவில் நிலநடுக்கம்:பொதுமக்கள் அச்சம் நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அலஸ்கா மாகாணத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.2 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியன. கடலுக்கடியில் சுமார் 10 கீ.மீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. http://www.vikatan.com/news/world/60855-earthquake-hits-off-alaska.art

  9. ரஷ்யாவில் விமான விபத்து ; 61 பேர் பலி [ Saturday,19 March 2016, 04:22:33 ] பிளை டுபாய் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று இன்று சனிக்கிழமை ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் பலியாகியுள்ளனர். டுபாயில் இருந்து பயணித்த எப் இசட் 981 ரக பயணிகள் விமானம் தெற்கு ரஷ்யாவில் உள்ள ரொஸ்டாவ் ஒன் டோன் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக உரிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததன் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விமானத்தில் 55 பயணிகள் இருந்ததாகவும், 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல…

  10. பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்ட பிரதான நபர் கைது பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டுவந்த சலா அப்தேஸ்லாம் பெல்ஜிய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாரிஸ் தாக்குதல் தொடர்பாக தீவிரமாகத் தேடப்பட்ட சலா அப்தேஸ்லாம். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்புத் தேடுல் வேட்டையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் உள்ள மொலன்பீக் பகுதியில் முன்னதாக துப்பாகி சுடும் சத்தம் கேட்டது. சலா அப்தேஸ்லாம் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ப்ரஸ்ஸல்ஸில் நடந்துவரும் ஐரோப்பிய யூனியன் -துருக்கி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பெல்ஜியப் பிரதமர் …

  11. இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் நெருக்கடி குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விவாதித்துக்கொண்டிருக்க, போகும் இடமறியாது ஆயிரக்கணக்கான அகதிகள் தவிக்கிறார்கள். - சிறைக்கம்பிகளுக்கு பின்னால் ஒரு வாழ்க்கை. துனிஸிய பெண்கள் சிறையில் நிலைமைகளை ஆராய்ந்த பிபிசி. - அழிந்துவரும் ஆசிய சிங்கங்களை பாதுகாக்க புதிய பிரிவை திறக்கும் லண்டன் மிருகக்காட்சிசாலை.

  12. சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் பீஜிங்கை தளமாக கொண்ட பத்தி எழுத்தாளர் ஒருவர் ஹாங்காங்குக்கு புறப்பட்டுச் சென்றவேளை காணாமல் போனதாக அவரது வழக்கறிஞர் பிபிசிக்கு கூறியுள்ளார். சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் செவ்வாயன்று இரவு ஜியா ஜியா என்னும் அந்த பத்தி எழுத்தாளர் விமானத்தில் ஏறச் சென்ற பிறகு, எவராலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் செய்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகக் கோரும் அனாமதேய கடிதம் ஒன்றை பிரசுரிப்பது தொடர்பில் இவர் தனது பத்திரிகை ஆசிரியரான நண்பர் ஒருவரை எச்சரித்திருந்ததாக கூறப்படுகின்றது. அரசாங்கத்துடன் தொடர்புடைய இணைய தளம் ஒன்றில் அந்தக் கடிதம் பிரசு…

  13. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் “தமிழுக்கு ஓர் இருக்கை” - 6 மில்லியன் டொலர் நிதி திரட்டும் முயற்சி தீவிரம் உலகப் புகழ்­பெற்ற அமெ­ரிக்கப் பல்­க­லைக்­க­ழ­க­மான ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமி­ழுக்கு ஓர் இருக்கை அமைப்­ப­தற்­காக உல­கெங்கு­முள்ள மக்­க­ளிடம் நிதி­யுதி கோரப்­ப­டு­கி­றது. 1636 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது உலகத் தர­வ­ரி­சையில் முத­லி­டத்தில் உள்­ளது. 2,500 ஆண்­டுகள் பழமை வாய்ந்த தமிழ்­மொ­ழிக்கு அப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருக்கை அமைப்­ப­தற்கு (Tamil chair) நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. 6 மில்­லியன் டொலர் ( சுமார் 85 கோடி…

  14. அகதிகள் முகாமில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு நையப்புடைப்பு கிறீஸ் நாட்டில் உள்ள ஐடோமெனி அகதிகள் முகாமில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் நையப்புடைத்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்நாட்டு போரால் ஏராளமானோர் ஐரோப்பாவுக்கு செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரீஸ் நாட்டின் வழியாகவே செல்கின்றனர். கிரீஸில் அண்டை நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதால் ஏராளமான அகதிகள் கிரீஸ் – மெசிடொனியா எல்லையருகே உள்ள அகதிகள் முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 45 ஆயிரம் அகதிகள் வரை கிரீஸ் நாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகாமை சேர்ந்த அகதி ஒ…

  15. ஐ.எஸ் தீவிரவாதிகளை பற்றி உளவு பார்த்த ஒருவரின் கழுத்தில் வெடிகுண்டு கட்டி, வெடிக்கச் செய்து கொடூரமாக, கொலை செய்த செய்தி வெளியாகியிருக்கிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு என்பது ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது சிரியா மற்றும் ஈராக்கிலும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பிரதேசங்களிலும் இயங்குகிறது. ஐ.ஸ். இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களுக்கு எதிராக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக முறையில் கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில், ஈராக் அரசாங்கத்துக்காக ஐ.எஸ் உளவு அமைப்பை உளவு பார்த்த 6 பேரை அவர்கள் கொ…

  16. சிரியாவின், தற்போதைய அதிபர் பஷார் அல்-ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத குழுக்கள் போரிட்டு வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா, ஈராக்கில் கடந்த பல மாதங்களாக தாக்குதல் நடத்தி வந்தன. ஆனால் சிரியா அதிபர் ஆசாத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க வில்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. அதனால், சிரிய அரசு ஆதரவு படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாக்குதலில் ஈடுபட்டு வந்தன.இதனையடுத்து, சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புடின் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்…

  17. தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடியாக, அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்கி ஜனாதிபதி ஒபாமா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சர்வதேச உடன்படிக்கைகளை புறக்கணித்து வடகொரியா 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. 3 முறை அணு குண்டுகளை வெடித்து சோதித்த அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி அதிரடியாக அணு குண்டை விட அதிபயங்கர சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதற்காக உலக நாடுகள், வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பிப்ரவரி மாதம் 7-ந் தேதி செயற்கைக்கோள் ஒன்றை ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவியதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அது ராக்கெட் சோதனை என்று கருதப்ப…

  18. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட் பாளர் போட்டியில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி வேட் பாளர் போட்டியில் டொனால்டு டிரம் பும் முன்னிலையில் உள்ளனர். அதிபர் வேட்பாளர் தகுதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட 3 அடிப் படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 35 வயது நிறைவடைந் திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதியாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடி யாது. அந்த நாட்டின் எழுதப்படாத சட்டத்தின்படி, மாகாண ஆளுநர் கள், செனட்டர்கள், …

  19. கனடா நாட்டில் முதன் முதலாக மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துகொள்ள நோயாளி ஒருவருக்கு நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் நகரில் பெயர் வெளியிடப்படாத நோயாளி ஒருவர் கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நபருக்கு ஏற்பட்டுள்ள நோயை குணப்படுத்த முடியாது என்பதால், மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இவரது கோரிக்கையை மருத்துவர்கள் நிராகரித்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நோயாளியின் உடல்நிலை அவர் அனுபவிக்கும் வேதனை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு மனிடோபா மாகாணத்திலேயே முதன் முறையாக மருத்துவர் உதவியுடன் தற்கொலை ச…

  20. இன்றைய நிகழ்ச்சியில்… - கடலில் வரும் அகதிகளை மீட்க விரையும் ஐரோப்பிய கப்பல்கள். அகதிகள் நெருக்கடிக்கு துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கும் நிலையில் கடலில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ளது. - சவுதியில் புதிதாக தேர்வான பெண் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திக்கும் சவால்கள். இவர்களால் பெண்களை ஒடுக்கும் போக்கை முடிவுக்கு கொண்டுவர முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. - புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசாரான டிமுர்லெங்கியா குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்கள்.

  21. ஐரோப்பா நோக்கிய அகதிகள் படகுகள் அதிகரித்துள்ளன =========================================== ஐரோப்பிய குடியேறிகள் நெருக்கடியை கையாள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண சந்திப்பை மேற்கொள்கிறார்கள். துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு வரும் குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கான வழியை காண இந்த உடன்படிக்கைக்கான பிரேரணை முயற்சிக்கிறது. ஆனால், இன்னமும் துருக்கியிலும் லிபியாவிலும் இருந்து படகுகள் ஐரோப்பாவுக்கு பயணிக்கின்றன. கடந்த இரு நாட்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய போர் கப்பல்களால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவை குறித்த பிபிசியின் காணொளி.

  22. அமெரிக்க மாணவனுக்கு வட கொரியாவில் 15 ஆண்டு சிறை ஒட்டோ வார்ம்பியர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடு பட்டதாக அமெரிக்க மாணவனுக்கு, வட கொரிய உச்ச நீதிமன்றம் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. ஐ.நா. உட்பட எந்த சர்வதேச அமைப்பின் விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் வட கொரியா அரசு செயல்பட்டு வருகிறது. அணு ஆயு தங்கள், ஏவுகணைகளை அவ்வப் போது சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை அழிப்போம் என்று பகிரங்கமாகவே மிரட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சுற்றுலா சென்ற மாணவ னுக்கு வடகொரிய உச்ச நீதி மன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஓகியோ மாக…

  23. ஏலம் விடப்பட்ட விஜய் மல்லையா வீட்டை வாங்க ஆளில்லை! மும்பை: வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் வீடு, ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஆரம்ப விலை ரூ.150 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 -ம் தேத…

  24. உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ வரிசைப்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்…

  25. டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் டொனால்டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவதே உலகம் எதிர்கொள்ளும் 10 முக்கிய ஆபத்துக்களில் ஓன்றாக காணப்படுவதாக பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் வெற்றிபெற்றால் உலகபொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவார்,அமெரிக்காவில் பொருளதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் உருவாவதற்கு காரணமாக அமைவார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது மற்றும் தென்சீனாகடலில் ஆயுதமோதல்கள் ஏற்படுவதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.