உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
மூன்று பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலியப் படையினாரால் சுட்டுக்கொலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன இளைஞர்கள் மூவரை இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். பல தசாபதங்களாக மேற்குக்கரைப் பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது இவர்களில் இருவர் ஜெனின் நகருக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கற்களைக் கொண்டு தாக்கி பின்னர் இராணுவ வீரர்களை நோக்கிச் சுட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ள மூன்றாவது நபர் ஜெரூசலேம்-பெத்தலஹம் எல்லைப் பகுதியில் இருந்த காவல்துறையினரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார் எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இத்தாக்குதல் சம்பவங்களில் எந்தவொரு …
-
- 0 replies
- 415 views
-
-
ஐ எஸ் அமைப்பு மீதான தாக்குதலை சவுதி தீவிரப்படுத்துகிறது சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடத்த தயார் நிலையில் சவுதி இராணுவ விமானங்கள் துருக்கியத் தளம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் துருக்கியிலுள்ள ஒரு தளத்துக்கு தமது போர் விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. இதுவரை காலமும் அந்த அமைப்பின் மீதான அனைத்து தாக்குதல்களும் சவுதி விமானப்படைத் தளங்களில் இருந்தே நடத்தப்பட்டன. தமது விமானங்களை துருக்கிக்கு நகர்த்துவது, வடக்கு சிரியாவில் தாம் தாக்கத் திட்டமிட்டுள்ள இலக்குகளுக்கு அருகில் செல்ல…
-
- 0 replies
- 317 views
-
-
ட்ரம்ப், புஷ் கடும் மோதல் இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான உட்கட்சிப் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில், அதற்கான விவாதமொன்று, நேற்று இடம்பெற்றது. இதில், தேசியமட்டக் கருத்துக்கணிப்பில் முதலிடம் வகிக்கும் டொனால்ட் ட்ரம்பும், மற்றொரு வேட்பாளரான ஜெப் புஷ்ஷும், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் மகனும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சகோதருமான ஜெப் புஷ் மீது, கடுமையான விமர்சனத்தை, ட்ரம்ப் முன்வைத்தார். 'ஜோர்ஜ் புஷ், தவறொன்றைச் செய்தார். நாம் அனைவரும் தவறு செய்துள்ளோம். ஆனால், அவரது தவறு, அழகானது. அவர்கள் பொ…
-
- 0 replies
- 431 views
-
-
எப்- 16 மேம்படுத்தப்பட்ட போர் விமானத்தை காட்டி இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா! மேம்படுத்தப்பட்ட எப்- 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள போர் விமான மாடல்களில் அமெரிக்காவின் எப்.16தான் அனைத்து விதங்களிலும் புதிய தலைமுறை போர் விமானமாக கருதப்படுகிறது. உலகில் 25 நாடுகளின் விமானப்படையில் எப்-16 ரக போர் விமானங்கள் உள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு கடந்த 2012ம் ஆண்டு 13 எப்-16 ரக போர் விமானங்களை முற்றிலும் இலவசமாகவே அமெரிக்கா வழங்கியது. பின்னர் 2013ம் ஆண்டு ஜோர்டன் பயன்படுத்தி வந்த 13 எப்-16 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த ஆண்டு முதல் அந்த போர் விமானங்கள் ஒவ்வொன்றாக…
-
- 0 replies
- 981 views
-
-
சிரியாவில் போர் தொடரும்: அதிபர் ஆசாத், கிளர்ச்சியாளர்கள் பிடிவாதத்தால் சிக்கல் சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல் படுத்தப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் கூட்டாக அறிவித்துள்ளன. ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று அதிபர் ஆசாத்தும், அதிபர் பதவி விலகும்வரை போரிடுவோம் என்று கிளர்ச்சியாளர்களும் அறிவித் திருப்பதால் சண்டை நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் அதிபர் ஆசாத் படைகள், மிதவாத எதிர்க்கட்சி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சண்டை நிறுத்தம் அமல் செய்யப்படும் என்று அமெரிக் காவும் ரஷ்யாவும் அறிவித்துள் ளன. அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா வும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு அமெ…
-
- 0 replies
- 328 views
-
-
சோமாலியா பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக அல் சபாப் போராளிகள் அறிவிப்பு [ Sunday,14 February 2016, 05:46:55 ] சோமாலியாவில் பயணிகள் விமானம் மீது இந்த மாதத்தின் முற்பகுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் இஸ்லாமிய போராளிக் குழுவான அல் சபாப் தெரிவித்துள்ளது. அல் சபாப் போராளிக் குழு வெளியிட்ட மின்னஞ்சல் செய்தியிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சோமாலியாவிலுள்ள அல் சபாப் போராளிக்குழு மீது சர்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 74 பயணிகளுடன் பயணித்த டாலோ (Daallo) எயாலைன்ஸ் எயாபஸ் 321 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட…
-
- 0 replies
- 387 views
-
-
ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம் சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடன்படிக்கையை நிலை நிறுத்த, சிரியாவில் வான் தாக்குதல் நடத்தும் தமது கொள்கையை ரஷ்யா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோன் கெரி கூறியுள்ளார். ரஷ்யா மீது ஜோன் கெர்ரி கண்டனம் சட்டப்படியான எதிரணிக்குழுக்கள் மீதும், பொதுமக்கள் மீதுமே ரஷ்யா முக்கியமாக குண்டுவீசுவதாக மியூனிக்கில் நடக்கும் ஒரு பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் மத்தியில் அவர் பேசினார். சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களை ஓரங்கட்டினாலும் அவர்கள் சரணடையப் போவதில்லை என்றும் அவர் கூறினார். மிதவாத கிளர்ச்சிக்காரர்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் அவர்கள் சமா…
-
- 1 reply
- 346 views
-
-
`உலகம் ஒரு புதிய பனிப்போரை எதிர்கொள்கிறது' உலகம் ஒரு புதிய பனிப்போரை எதிர்கொள்கிறது ரஷ்யா, மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையேயான முறன்பாடுகள், உலகை ஒரு புதிய பனிப்போருக்கு இட்டுச் சென்றுள்ளது என, ரஷ்ய பிரதமர் டிமித்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார். நேட்டோ, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக, ரஷ்யா அனேகமாக ஒவ்வொரு நாளும் புதிய அச்சுறுத்தல்களை விடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுவதாக, மியுனிக்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் அவர் தெரிவித்தார். ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே வழமையான ஒத்துழைப்பு ஒன்றின் மூலமே, சிரியாவில் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார். http://www.bbc.com/tamil/glo…
-
- 0 replies
- 653 views
-
-
நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள் ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர். நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள் அந்தக் குழந்தைக்கு ஏதுவான ஒரு வீடு கிடைக்கும் வரை அதனை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கமாட்டோம் என்று அந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பசுபிக் தீவான நவுருவில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கடுமையான தீக்காயங்…
-
- 0 replies
- 453 views
-
-
சான்டர்ஸ், ட்ரம்ப்: புதிய அத்தியாயம்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இவ்வாண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், பல்வேறு விதமான சுவாரசியமான விடயங்களைத் தந்துள்ளது, இனியும் தொடர்ந்து தரவுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முன்னைய காலங்களை விட, மாபெரும் மாற்றமொன்றை, அந்த அரசியல் களம் கொண்டிருக்கிறது. கட்சிகளின் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்காக இடம்பெற்று, நேற்று முடிவுகள் வெளிவந்த நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் பேர்ணி சான்டர்ஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இந்த வெற்றிகள், ஓரளவு எதிர்பார்க்கப்பட்டவை தான் என்றாலும், இவர்களிருவருக்கும் முக்கியமான வெ…
-
- 0 replies
- 657 views
-
-
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம் சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பசுபிக் கடலின் 'ரிங் ஒப் பயர்' என்று அழைக்ககூடிய டெக்டானிக் அடுக்குள் மோதிக்கொள்ளும் இடத்தில் இந்தோனேஷியா அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலைவெடிப்புகள் போன்ற ச…
-
- 0 replies
- 465 views
-
-
சவுதி அரேபியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி சவுதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதியின் உள்துறை அமைச்சரான மான்சூர் துர்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி…
-
- 2 replies
- 477 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு திட்டத்தை உலக வல்லரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், அது ஐ எஸ்ஸுக்கு பொருந்தாது. - இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடம் இருந்து தப்பிய சிறுவர்கள், ஐ எஸ் தம்மை எப்படி மூளைச்சலவை செய்தது என்று பிபிசியுடன் பேசினார்கள். - பேரண்டம் குறித்த புதிய பார்வையைத் தரும் விஞ்ஞான கண்டுபிடிப்பு. ஈர்ப்பு விசை அலை உறுதி செய்யப்பட்டது.
-
- 0 replies
- 417 views
-
-
பிரான்ஸ் நாட்டில் பேருந்து மீது லொறி மோதியதில் 6 மாணவர்கள் பலி பிரான்ஸ் நாட்டில் பாடசாலை பேருந்து மீது லொறி ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று காலை 7.15 மணியளவில் இந்த பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளாகியது. தனியார் பாடசாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று 17 மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு பிறகு, பாடசாலை பேருந்து சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது, எதிரே வந்த லொறி ஒன்று பாடசாலை பேருந்தின் பக்கவாட்டு பகுதியை மிகக்கோரமாக உரசி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், இருவர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடம…
-
- 0 replies
- 340 views
-
-
கனடா- துருதுருப்பான ஒரு குழந்தையை படுக்கை ஆடைகளை அணிவித்து உறங்க வைப்பது ஒரு போராட்டம் என நீங்கள் யாராவது நினைத்தால்- கேம்பிரிட்ஜ் ஒன்ராறியோவை சேர்ந்த தாய் ஒருவரின் வழக்கமான படுக்கை நேர சச்சரவு உலகம் பூராகவும் அனைத்து பெற்றோர்களையும் ஈர்த்து எழுச்சியூட்ட கூடியதாக அமைந்துள்ளது. இந்த விதிவிலக்கான அல்லது முன்னுதாரணமான அம்மா தனது முப்பிறவி குழந்தைகளையும் ஒரு குறுநடை போடும் குழந்தையையும் படுக்கைக்கு தயார் படுத்துவது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. கூரி லின் வைட்டும் அவரது கணவன் டான் கிப்சன் இருவருக்கும் நான்கு குழந்தைகள். 2வயது எமில் மற்றும் எட்டு மாதங்களே ஆன முப்பிறவிகள் ஜக்சன், ஒலிவியா மற்றும் லிவி. வைட் ஒரு நேர-ஆதார வீடியோவை தனது வலைப்பதிவு பேஸ் புக்கில் வெளியிட்டார். தான…
-
- 0 replies
- 452 views
-
-
மெக்சிக்கோ சிறைச்சாலையில் மோதல் 49 பேர் பலி [ Friday,12 February 2016, 06:07:38 ] மெக்சிகோவின் வடக்கு பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். ரோபோ சிகோ (Topo Chico) என்ற சிறைச்சாலையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியுவோ லியோன் Nuevo Leon மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையிலிருந்த கைதிகள் கூர்மையான ஆயுதங்கள், தடிகள் ஆகியவற்றினால் ஒருவருக்கு ஒருவர் தாக்கியதுடன் சிறைச்சாலை களஞ்சிய சாலைக்கும் தீ மூட்டியுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் பாதுகாப்பு கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரைப்பட்டதுடன் கைதிகள் எவரும் தப்பிச் செல்லவில்லைய…
-
- 0 replies
- 312 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த நேட்டோ இணக்கம் [ Friday,12 February 2016, 06:09:54 ] ஏஜியன் கடற்பரப்பின் ஊடாக துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு அகதிகளை கடத்திச் செல்பவர்களை தடுக்க தாம் தயாராகவுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது. பிரஸல்ஸில் நடைபெற்ற துருக்கி, ஜேர்மன், மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் ஆராயப்படவுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள…
-
- 0 replies
- 410 views
-
-
9/11 தாக்குதல் சூத்திரதாரி குவான்டனாமோவில் அவதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டங்கள் மீது, 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரியொருவர், குவான்டனாமோ தடுப்பு முகாமில் அவதியுறுவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. முஸ்தபா அல்-ஹவ்சவி என்ற குறித்த நபர், செப்டெம்பர் 11 தாக்குதல்களை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும், சித்திரவதைகளின் காரணமாக, பாரிய உடல்நலப் பிரச்சினையை அவர் எதிர்கொண்டுவருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடித…
-
- 0 replies
- 581 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியா நெருக்கடி பேரழிவு நிலைக்கு செல்கிறது என்று உதவி நிறுவன்ங்கள் கவலை தெரிவித்துள்ளனர். அலெப்போவில் இருந்து ஐம்பதினாயிரம் மக்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். - வடகொரியாவின் ராக்கட் சோதனைக்கு பதிலடியாக, கூட்டாக நடத்திய தொழில் பேட்டையில் இருந்து வெளியேறுகிறது தென்கொரியா. - அத்துடன், மனிதனின் கோபத்தையும், மகிழ்ச்சியையும் அறிந்துகொள்ளும் குதிரைகள் பற்றிய தகவல்கள்.
-
- 0 replies
- 282 views
-
-
டர்பனால் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: சீக்கியரிடம் மன்னிப்பு கேட்டது விமான நிறுவனம் வாரிஸ் அலுவாலியா டர்பன் அணிந்திருந்ததால் விமா னத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மெக்சிகோ விமான நிறுவனம் சீக்கிய நடிகரிடம் மன்னிப்பு கோரியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மேன்ஹேட்டன் பகுதியைச் சேர்ந்தவர் வாரிஸ் அலுவாலியா (41). சீக்கியரான இவர் நடிகராகவும் பேஷன் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி மெக்ஸிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக அலுவாலியா விமான டிக்கெட் முன்பதிவு செய் தார். இதற்காக அவர் மெக்ஸிகோ சிட்டி விமான நிலையத்துக்கு சென்றபோது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவர் அணிந்திருந்த டர்பனை கழற்ற உத்…
-
- 0 replies
- 251 views
-
-
நைஜீரியா வடகிழக்கு முகாமில் இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 56 பேர் பலி [ Thursday,11 February 2016, 06:03:42 ] நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டை குண்டுத் தாக்குதலை பொகோஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாமில் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள் மீதே இரண்டு பெண் தற்கொலை குண்டுத் தாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். டிக்வோ முகாமில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தற்கொலை தாக்குதலில் அதிகளவாக …
-
- 0 replies
- 272 views
-
-
காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயண நேரம் அதிகரிக்கும் காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்து செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழு ஒன்றின் ஆய்வு கூறியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயண நேரம் அதிகரிக்கும் வெப்பநிலையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு கிழக்கு நோக்கி உயரத்தில் வீசும் காற்றின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி வரும் விமானங்களின் பயண நேரம் குறைந்தாலும், எதிர்த்திசையில் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்…
-
- 0 replies
- 336 views
-
-
வடகொரிய படைத்தளபதிக்கு மரண தண்டனை' வடகொரிய படைத் தளபதிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவருடன் ஜெனரல் றி ஜெனரல் றி யொங் ஜில் சொந்த நலனுக்காக ஊழலில் ஈடுபட்டதாக யொன்ஹப் செய்தி நிறுவனம் பெயர் கூறப்படாத ஒருவரை ஆதாரம் காட்டி கூறியுள்ளது. இந்த அறிக்கையை உறுதி செய்யமுடியவில்லை. வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னின் கீழ் 2013இல் ஜெனரல் றி அவர்கள், கொரிய மக்கள் படையின் தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2011இல் கிம் யொங் உன் பதவிக்கு வந்தது முதல் அவரது மாமா உட்பட 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு தென்கொரியா மதிப்பிட்டிருந்தது. http:…
-
- 0 replies
- 512 views
-
-
குடியுரிமை பறிப்பு தொடர்பில் பிரான்ஸில் புதிய சட்டம் பிரெஞ்சு அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரெஞ்சு அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பிரெஞ்சு நாடாளுமன்றின் கீழவை ஒப்புதல் கடந்த ஆண்டு பாரிஸில் ஜிஹாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசரகால அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் தீவிரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரெஞ்சு மக்களின் குடியுரிமையை பறித்தல் எனும் இரண்டு சர்ச்சைக்குரிய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மசோதா பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு எடுத்து ச…
-
- 0 replies
- 449 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தில் புதிய திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் நியூஹம்ஷ்யர் மாநிலத்தில் வெற்றி. - பதின்மவயது கர்ப்பத்தை தவிர்க்க கன்னிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்ட்த்தால் தென்னாப்பிரிக்காவில் பெரும் சர்ச்சை. - உறவுகளை இணைக்கும் நவீன தொழில்நுட்பம்- வயதான பெற்றோருக்கு சீன கார்டூன் கலைஞரின் வழிகாட்டி உதவி.
-
- 0 replies
- 288 views
-