Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பதான்கோட் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தானுடன் பேச்சு... மத்திய அரசு! புதுடெல்லி: பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதைப் பொருத்தே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரும், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் ஐஜாஸ் அஹமது செளத்ரியும், வருகின்ற 15-ம் தேதி இஸ்லாமாபாதில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறும…

  2. கொளுந்துவிட்டு எரியும் புதர்த்தீயினால் அவுஸ்திலேியாவில் 95 வீடுகள் நாசம் [ Friday,8 January 2016, 05:35:06 ] அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புதர்பகுதிகளில் கொளுந்துவிட்டு எரியும் தீ காரணமாக இதுவரை 95 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ காரணமாக மூவர் காயமடைந்துள்ளதோடு, இதுவரை முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாதிருப்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் வரலாற்று நகரங்களில் ஒன்றான யாரூப் பகுதியிலுள்ள புதர்தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் குறித்த நகரப்பகுதியில் 60 கிலோ மீற்றர் வான் பரப்பில் நிலைகொண்டிருக்கிறது. வேகமான பரவிவரும் தீயை கட்…

  3. பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும்?(வீடியோ) வடகொரியா அண்மையில் நடத்திய ஹைட்ரஜன் குண்டு வெடிப்புப் பரிசோதனை, உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகியிருக்கிறது. ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை செய்த நாடுகளின் பட்டியல் மற்றும் அது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/world/57345-hydrogen-bomb-video.art

  4. கத்தியுடன் வந்தவர் காவல் நிலையத்தில் சுட்டுக்கொலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்நிலையத்துக்குள் கத்தியோடு நுழைய முயன்ற ஒருவரை, அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் நினைவு நாளின்போது இந்த தாக்குதல் நடந்திருக்கிறது வடக்குப் புறநகரான Guth Dhor இல் நடந்த இந்த சம்பவத்தின்போது, இரண்டு அல்லது மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாக நேரில் கண்டவர் ஒருவர் கூறினார். போலி தற்கொலை அங்கியொன்றை அணிந்து வந்த அந்த நபர் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஷார்லி எப்தோ சஞ்சிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்ட ஓராண்டு நிறைவில் இந்த சம்பவமும்…

  5. இன்றைய நிகழ்ச்சியில்… - சார்ளி எப்தோ தாக்குதலின் ஒரு வருட நினைவு தினத்தில், பாரிஸில் போலிஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்தவர் சுட்டுக்கொலை. - ஜெர்மனியில் புதுவருட நள்ளிரவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த பதினாறு பேர் அடையளம் காணப்பட்டதாக கொலோன் நகர போலிஸார் அறிவித்துள்ளனர். - ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத் திருச்சபையினரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல இடங்களில் நடந்தன.

  6. கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஒருவர் பலி ஆப்கன் தேசியக் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக பெற்ற டெஸ்ட் போட்டித் தொடர் வெற்றியைக் கொண்டாடிய சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பதின்பருவ இளைஞர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் தெற்கே நடந்த இந்த சம்பவத்தைத் தவிர, தலைநகர் காபூலில் நடந்த வேறொரு சம்பவத்தில் வேறு பலர் காயமடைந்தனர். ஷார்ஜாவில் நடந்த ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றதை அடுத்து, ஆப்கான் ரசிகர்கள் பல இடங்களில் வீதிகளில் ஆடியும், வானில் துப்பாக்கியால் சுட்டும் கொண்டாடினர். இந்த சம்பவங்கள் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கி சூட்டு…

  7. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் அரசு படிவத்தில் தமிழ் மொழிக்கு இடம் கொடுத்து அங்கீகாரம்! ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நிறுவனங்கள், தொழிலாளர்களுடன் போடும் பணி ஒப்பந்தத்தின் அறிக்கை, தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள், ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை, அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேல…

  8. லிபியாவில் பயங்கர குண்டுவெடிப்பு: 65 பேர் உயிரிழப்பு லிபியாவில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் சுமார் 65 பேர் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு சத்தம் சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லிபியாவின் கிழக்கு நகரமான ஸ்லீதெனில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. வெடிகுண்டுகள் நிரப்பிய ட்ரக் பள்ளிக்குள் புகுந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு சுமார் 65 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை குறித்த அச்சம் நிலவுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த ராணுவ பள்ளி முன்னாள் லிபிய அதிபர் மம்மர் கடாஃபி காலகட்டத்தில் ராணுவ தளமாக வ…

  9. ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். அந்த நாடுகளில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள இவர்கள் தங்களது ஆயுத பலத்தையும் அபிவிருத்தி செய்து வருகிறார்கள். பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமையை அவர்கள் பெற்று இருப்பதை காட்டும் ஒரு காட்சி வெளியாகி சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சி, சிரியாவில் ராக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளத்தில், ராணுவம் கைவிட்ட ஏவுகணைகளில் பொருத்தி பயன்படுத்தத்தக்க வெப்ப பேட்டரியை ஐ.எஸ். தீவிரவாத இயக்க விஞ்ஞானிகளும், ஆயுத நிபுணர்களும் உருவாக்கி இருப்பதை காட்டுகிறது. எனவே இந்த பேட்டரியை ஏவுகணையில் பொருத்தி, பய…

  10. உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாமல் அந்த நாடு, இப்படி தான் நினைத்ததை நடத்திக்காட்டி வருவது உலக அரங்கை அதிர வைத்து வருகிறது. இதுவரை அணுக்குண்டுகளையும், அணு ஏவுகணைகளையும் சோதித்து பார்த்து வந்த வடகொரியா முதல் முறையாக அணுக்குண்டை விட அதிபயங்கரமான ஹைட்ரஜன் குண்டினை வெடித்து நேற்று சோதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, “வடகொரியா ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்திருப்பது நமது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதை முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாது” என கூறினார். மேலும் அவர் கூறும்போத…

  11. மீத்தேன் வாயு கசிவு எதிரொலி: கலிபோர்னியாவில் எமர்ஜென்சி அமலானது! லாஸ் ஏஞ்சல்ஸ்: அழிவை ஏற்படுத்தும் மீத்தேன் நச்சு வாயு கசிந்த சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘சோகால் கேஸ்’ (Southern California Gas Company) எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள கிணற்றில் இருந்து கேஸ் கசிவது, கடந்த ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மீத்தேன் கசிவு, கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டு…

  12. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்: சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் மரண தண்டனையை தொடர்ந்து ஈரானுக்கு சவுதிக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. | படம்: ஏபி. தங்களது நாட்டுக்கு எதிராக தூதரக ரீதியான நெருக்கடி அளித்து எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் என்று சவுதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக டெஹரானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவித் ஸரீஃப் கூறும்போது, "ஈரானை எதிர்க்கும் முயற்சிகளை சவுதி எடுக்க வேண்டாம். எங்களது முயற்சி அனைத்துக்கும் சவுதி முட்டுக்கட்டை போட்டு வருகிறது. எங்களது அணுஆயுத ஒப்பந்தத்தை முதலாவதாக எதிர்த்தனர்.…

  13. மேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்­கு­லக நாடு­களில் தாக்­கு­தல்­களை நடத்தும் முக­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சாரதி இல்­லாமல் செலுத்­தப்­படக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்­கி­ வருவதாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஐரோப்­பாவில் படு­கொலைத் தாக்­கு­தல்­களை முன்­னெ­டுக்கும் முக­மாக விஞ்­ஞா­னி­க­ளையும் ஏவு­கணை நிபு­ணர்­க­ளையும் பணிக்கு நிய­மித்­துள்­ளனர். சிரிய ரக்கா நக­ரி­லுள்ள ஜிஹாதி பல்­க­லைக்­க­ழ­கத்தில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்­படும் பாரிய நாசத்தை விளை­விக்கும் நகரும் குண்­டு­க­ளாகப் பயன்­ப­டுத்தக் கூடிய வாக­னங்­களை உரு­வாக்கும் முயற்சி முன…

  14. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ரானா சனுல்லா கூறும்போது, “மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உருவெடுத்ததிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து பெண்கள் உள்பட 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றாமல் இருக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் 8 ஜிகாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள். …

  15. தம்மாத்தூண்டு எறும்பு யானை காதுல பூந்து அம்மாம்பெரிய யானைக்கே ஆட்டம் காட்டும் தெரியுமா? என்று தமிழ் சினிமாவில் வரும் ஒரு பஞ்ச்(!!) டயலாக்கைப் போல், ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், நேற்று காலை 156 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல தயாராக இருந்தது. விமானத்தை டேக் ஆப் செய்ய முயற்சிக்கும் போது, விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை உணர்ந்த பைலட் விமானத்தை டேக் ஆப் செய்வதை உடனடியாக கை விட்டார். தொழில்நுட்ப அதிகாரிகள் சோதனை செய்தபோது விமானத்தின் முக்கிய பகுதியான பிடாட் கு…

  16. பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா பெங்களூரில் மருத…

  17. ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல் மே 21, 1956-ன் புகைப்படமான இதில் மார்ஷல் தீவுகளில் உள்ள நமூ தீவில் அமெரிக்கா சோதனை செய்த முதல் ஹைட்ரஜன் வெடிகுண்டு. | படம்: ஏ.பி. அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என்கின்றனர் நிபுணர்கள். அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த 'சூப்பர் வெடிகுண்டு' என்று கருதப்படும் ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளதையடுத்து உலக நாடுகள் வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. …

    • 2 replies
    • 503 views
  18. இன்றைய நிகழ்ச்சியில்… - ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வடகொரியா பிரகடனம் செய்தபோதிலும், அதன் கூற்றை நம்ப நிபுணர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். - குடியேறிகள் வருகையை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட எல்லைக்கட்டுப்பாடு சுவீடன் நாட்டில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த பிபிசியின் நேரடித் தகவல். - திராட்சை ரசம் மேட்டுக்குடி பானம் என்ற மனப்பாங்கு சீனாவில் மாறுகிறது. அங்கு அதன் விற்பனை சாதாரண மக்களையும் கவர்ந்திருக்கிறது.

  19. சவுதி அரேபியாவில் 45 அல் கொய்தா தீவிரவாதிகள் உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அல் கொய்தா தீவிரவாதிகளின் தலைகளை துண்டித்து படுகொலை செய்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அந்நாட்டில் உள்ள முக்கிய சிறைகள் மீது தாக்குதல் நடத்தி தகர்க்கப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, நேற்று வெளியிடப்பட்ட இணையவழி அறிக்கையில், சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஹய்ர் மற்றும் தரிஃபியா சிறைகளை அதிரடி மீது தாக்குதலால் தகர்த்தெறிவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள அல்-ஹய்ர் சிறையின் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு காரில்வந்த ஐ.எஸ்…

  20. ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யாவின் அதிர வைக்கும் ஆயுதத்தை பாருங்கள்! (வீடியோ) ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க, ரஷ்ய ராணுவம் திறமை வாய்ந்த ’எலிகள் ராணுவ படையை’ தயார்படுத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Rostov on Don நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். எலிகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக உள்ளதால், அவற்றை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரராக ராணுவத்தில் பயன்படுத்த ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. எலிகளின் மூளையை இணைக்கும் ‘மைக்ரோசிப்’ ஒன்று, சிகிச்சையின் மூலம் தலைக்கு உள்ளே வைக்கப்படும். இதன் மூலம், எலிகளின் மூளை எவ்வாறு செயல்படுகிறது, தற்போது அது எதனை உணர்கிறது உள்ளிட்ட தகவல்கள் அந்த …

  21. வடகொரியாவில் நிலநடுக்கம்: 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை காரணமா? சியோல்: பேரழிவை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதால் வடகொரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா,ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளில் மட்டும் ராணுவ உபயோகத்திற்காக ஹைட்ரஜன் குண்டுகள் இருக்கும் நிலையில், வடகொரியாவின் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனை வெற்றிகரமாக இன்று(புதன்) நடத்தப்பட்டுள்ளது.இது வடகொரியாவின் அணுசக்தி வளர்ச்சியில் ஒருமுக்கிய படியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ”வடகொரியா ஜனவரி 6-ம் தேதி காலையில் முதல் 'ஹைட்ரஜன்’ குண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தது,” எ…

  22. ஆத்திரமூட்டும் வட கொரியாவுக்கு பதிலடி: அமெரிக்கா சபதம் ஜான் கெர்பி. | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா சபதமிட்டுள்ளது. வட கொரியா ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை செய்துள்ளதாக அறிவித்தது சர்வதேச நாடுகளை அதிர்ச்சியைடைய செய்துள்ளது. ஆனால், இதனை தங்களால் உறுதி செய்யமுடியவில்லை என ஐ.நா. அணு ஆயுத பரிசோதனை விரிவான தடை ஒப்பந்த அமைப்பும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளன. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் தென் கொரியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின…

  23. அதி பயங்கர ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்து வட கொரியா பரபரப்பு வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. ஏற்கெனவே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் மற்றும் அமைதி அமைப்புகள் பலவற்றால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதித்துள்ளது. வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், தங்கள் நாடு ஹைட்ரஜன் வெடிகுண்டை தயாரித்துள்ளதாக கடந்த டிசம்பர் மாதமே அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) ஹைட்ரஜன் வெடிகுண்டை வ…

  24. கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்! [ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2016, 09:58.23 PM GMT ] துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர். எனவே இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012ஆம் ஆண்டும் நியூடவுன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியானார்கள். அந்த குழந்தைகளை பற்றி நினைக்கும்போது எல்லாம…

  25. புத்தாண்டு நிகழ்வுகளில் பாலியல் துஷ்பிரயோகம்; ஜேர்மனில் பெண்கள் ஆர்ப்பாட்டம் [ Wednesday,6 January 2016, 04:55:27 ] புதுவருடப் பிறப்பன்று இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜேர்மனில் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜேர்மனின் கொலோன் நகரில் இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுவருடப் பிறப்பன்று குறித்த நகரில் பெண்கள் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், சிலரது பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் முறைப்பாடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பில் தற்போதுவரை 90 முறைப்பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.