உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்! புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.பி. பரதன் காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரதன், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர். http://www.vikatan.com/news/india/57129-former-cpi-general-secretary-ab-bardhan-passes-awa.art
-
- 1 reply
- 659 views
-
-
சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் சவுதி அரேபியாவில் நேற்று மட்டும் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த (2015) ஆண்டில் மட்டும் 157 பேருக்கு இதைப்போல் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவ…
-
- 0 replies
- 558 views
-
-
டெல்லி புகையிரத நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் [ Sunday,3 January 2016, 05:40:34 ] டெல்லி - கான்பூர் புகையிரத நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மும்பை பயங்கரவாத தடுப்பு பொலிஸாருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் பலவற்றில் ஆயுததாரிகள் ஊடுருவி, மறைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 72 மணிநேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி புகையிரத நிலையத்தில் பல புகையிரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில தாமதமாக புறப்பட்டுச் செல்வதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழ…
-
- 0 replies
- 371 views
-
-
சீன ஆயுதப் படையில் மூன்று புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் ஆயுதப் படையை ஒருங்கிணைத்து நவீனமயப்படுத்தும் விரிவான திட்டங்களின் ஒரு பகுதியாக மூன்று புதிய இராணுவ பிரிவுகளை அந்நாடு அமைத்துள்ளது. சீனாவின் அணு ஆயுதக்கிடங்கை கட்டுபடுத்தும் ஒரு ஏவுகணை கட்டளை பிரிவு, தந்திரோபயமாக உதவிப் படைப்பிரிவு மற்றும் புதிய இராணுவ ஜெனரல் பிரிவு ஆகியவை இந்த புதிய பிரிவுகளில் அடங்கும். ஒரு வலுவான இராணுத்துக்கான சீனாவின் கனவை நனவாக்க இந்த மாற்றங்கள் உதவும் என்று அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு விழாவில் உரையாற்றிய அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். புதிய சீர்த்திருத்தங்களின் ஒரு பகுதியாக மக்கள் விடுதலை இராணுவத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை சீன…
-
- 2 replies
- 626 views
-
-
உளவுச் சேவைகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை : ஜெர்மனி வெளிநாட்டு உளவுச் சேவைகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று ஜெர்மனிய அதிகாரிகள் கோரியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வெளிநாட்டு உளவுச் சேவைகளுக்கு இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று ஜெர்மனிய அதிகாரிகள் கோரியுள்ளனர். ஜெர்மனியின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என்ற உறுதியான தகவல் வெளிநாட்டு உளவுச் சேவைகளிடமிருந்து ஜெர்மனிய காவல்துறைக்கு கிடைத்தப்பிறகு, அந்நகரில் இரண்டு ரயில் நிலையங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. தீவிரவாதிகளை தடுக்க, உளவுச்…
-
- 0 replies
- 393 views
-
-
சீனாவில் 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து மரிஜுவானா என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியர் ஆவார். இவர் 31 மாகாணங்களில் உள்ள 37 பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்து உள்ளார். ஹாங்காங் உள்பட பல நகரங்களிலும் இதனை விற்பனை செய்து வந்து உள்ளார். சன் என…
-
- 0 replies
- 427 views
-
-
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் இருவர் வீரமரணம் பஞ்சாபின் பதன்கோட் விமானப்படை தளத்தில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்: ஏஎன்ஐ. பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் இருவர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு …
-
- 1 reply
- 531 views
-
-
சவுதி சியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் பிரபல சியா மதகுருவான நிம்ர் அல் நிம்ருக்கு சவுதி அரேபியா மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. சவுதி சியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் பயங்கரவாத குற்றங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 47 பேரில் இவரும் அடங்குவதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சவுதி முடியாட்சியை விமர்சித்ததை அடுத்து 2012இல் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் எந்தவிதமான வன்செயல்களிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அவரது கைதை அடுத்து அந்த நாட்டின் சியா சிறுபான்மையினர் மத்தியில் போராட்டங்கள் வெடித்தன. அவரது மரண தண்டனை குறித்த செய்திக்கு, அந்த பிராந்தியத்தின்…
-
- 0 replies
- 596 views
-
-
சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் முடங்கின பிபிசி இணையதள கட்டமைப்பில் நடந்த சைபர் தாக்குதலால் பிபிசி இணையதளங்கள் சில மணி நேரம் முடங்கின மிகப்பெரிய இணையவழித் தாக்குதல் காரணமாக பிபிசியின் அனைத்து இணைய சேவைகளும் வியாழனன்று காலை பாதிக்கப்பட்டன. வியாழனன்று லண்டன் நேரம் காலை ஏழு மணிக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. அந்த சமயத்தில் பிபிசி இணைய பக்கங்களுக்கு வந்த பார்வையாளர்களால் குறிப்பிட்ட பக்கங்களை பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை. மாறாக Error message எனப்படும் குறிப்பிட்ட இணைய சேவையை நீங்கள் பார்க்க இயலாது என்கிற அறிவிப்புச் செய்தியை மட்டுமே அவர்கள் பார்த்தனர். DDOS (Distributed Denial Of Service) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் இணைய தாக்குதல் கார…
-
- 1 reply
- 376 views
-
-
மோசமான வானிலை... பயங்கர சூறாவளி... அலறிய 351 பயணிகள்... இதன் பின் என்ன நடந்தது? (வீடியோ) நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த கனடா விமானம் ஒன்று மோசமான வானிலை, பயங்கர சூறை காற்றில் சிக்கி சேதம் அடைந்ததோடு, விமானத்தில் இருந்த 351 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். https://au.news.yahoo.com/a/30469929/air-canada-turbulence-leaves-21-in-hospital-after-flight-from-hell/ ஏர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான AC088 என்ற விமானம் கடந்த டிசம்பர் 30ம் தேதி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரிலிருந்து கனடாவில் உள்ள டொரன்டோ நகருக்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 332 பயணிகள் மற்றும் 19 விமான குழுவினர் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களுக்…
-
- 0 replies
- 619 views
-
-
ஆப்கான், பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: காஷ்மீர், டெல்லியிலும் லேசான தாக்கம் ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியாவில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 என்று பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் ஜார்ம் என்ற இடத்துக்கு தென் கிழக்கே 35 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2:07 மணியளவில் ஏற்பட்ட இந்த மித நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகள், அதாவது டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் இத…
-
- 0 replies
- 327 views
-
-
ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு நாட்டை துரத்தும் துரதிர்ஷ்டம்! (வீடியோ) பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆவிகளை விரட்ட, பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஆயிரம் குடிசை வீடுகள் தீக்கிரையானது. பிலிப்பைன்ஸ் நாட்டில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துரதிஷ்டத்தை துரத்தும் சடங்கு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த சடங்கில் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை கொளுத்தி, அந்த ஆண்டில் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டத்தை பொதுமக்கள் துரத்தி வந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கமான அரசின் அறிவுறுத்தல்களுக்கு இடையே, கோலாகலமாக துவங்கியுள்ளது பட்டாசு கொளுத்தும் இந்த சடங்கு. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற இந்த சடங்கில், சிறுவர்கள் உள்ளிட்…
-
- 0 replies
- 477 views
-
-
புதிய தகவல் : புதின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க கெஞ்சிய கடாஃபி! லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபி, தனது மகனை ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அணுகி அந்த முயற்சியில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த மம்மர் கடாஃபி, கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி படையினரிடம் பிடிபட்டு கொல்லப்பட்டார். இவர் தனது 2வது மகனுக்கு ரஷ்ய அதிபர் புதினின் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்தாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் மூலம் ரஷ்யாவுக்கும் தனக்குமுள்ள உறவு வலுப்பெறும் என்றும், அதனால் லிபியாவில் தானும் நீண்ட நாட்களாக ஆட்சியில் இருக்கலாம் என்று ஆசைப்பட்ட …
-
- 0 replies
- 766 views
-
-
தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து புத்தாண்டில் ஜொலித்த உலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர சாலையில் பொதுமக்கள் பெருந்திரளாக கூடி புத்தாண்டை வரவேற்றனர். படம்: ராய்ட்டர்ஸ் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட் டது. கடந்த நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 பேர் உயிரிழந்தனர். 350 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக் காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை யடுத்து அந்த நாடுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செ…
-
- 0 replies
- 489 views
-
-
டுபாயில் அட்ரெஸ் ஹோட்டலின் 48 ஆவது மாடி ஜன்னலில் ஒரு மணி நேரமாக தொங்கிய புகைப்பட ஊடகவியலாளர் டுபாயில் புது வருட கொண்டாட்டங்களையொட்டி இடம்பெறும் வாணவேடிக்கைகளைப் புகைப்படம் எடுக்கும் முகமாக அந்நகரிலுள்ள அட்ரெஸ் ஹோட்டலில் தங்கியிருந்த புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர், அந்த மாடிக் கட்டடத்தில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தையடுத்து சுமார் ஒரு மணி நேரம் அந்த ஹோட்டலின் 48 ஆவது மாடியில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். அவர் அந்த ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல்களை சுத்திகரிப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த கயிற்றைத் தனது உடலில் கட்டிக் கொண்டு தொங்கியுள்ளார். அச்சமயத்தில் தான் உயிரிழப்பது நிச்சயம் எனவும் தன்னால் புது வருட பிறப்பை க…
-
- 0 replies
- 438 views
-
-
சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டில் 157 பேருக்கு மரண தண்டனை விதிப்பு சவுதி அரேபியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிப்பட்டவர்களில் 157 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 63 பேர் தலை துண்டிக்கப்படிடு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவை பொறுத்த வரை, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு கூட மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்தம் மரண தண்டனையில் போதை மருந்து கடத்தலில் சிக்கி மரண தண்டனைக்குள்ளானவர்கள் 40 சதவீதம் ஆகும். கடந்த 2010ஆம் ஆண்டும் போதை மருந்து கடத்தலில் சிக்கி மரண தண்டனை…
-
- 0 replies
- 467 views
-
-
சர்வதேசம் | தருணங்கள் 2015 2015-ன் தருணங்கள் இவை. உலகெங்கும் எவ்வளவோ நடந்திருக்கின்றன இந்த ஆண்டில். இந்தியப் பார்வையில் நம்மை அதிகம் கவனிக்க வைத்த, கலங்க வைத்த, நெகிழ வைத்த தருணங்களில் மிகச் சில இவை. ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் நடத்தும் பயங்கர மோதலும் அதனிடையே சிக்கிச் சின்னாபின்னமாகும் சாமானியர்கள் வாழ்க்கையுமே நினைவுகளின் அடுக்குகளில் எஞ்சும் என்று தோன்றுகிறது. ஐஎஸ் பெரும் அச்சுறுத்தலாக, மனிதகுல எதிரியாக உருவெடுத்ததும், ஆயிரக் கணக்கில் மக்கள் அகதிகளாக உயிர் பிழைக்க ஓடியதும் என்றும் மறக்கக் கூடியவை அல்ல. துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கிய அய்லானின் படம் மறக்கக் கூடியது அல்ல. புவியரசியல் பேயாட்டம் போடுகிறது; மானுடம் அஞ்சி ஓடுகிறது. இடம…
-
- 0 replies
- 518 views
-
-
சீன அரசுக்கு எதிரான புத்தகக் கடையைச் சேர்ந்த ஐந்தாவது நபரும் மாயம் சீன அரசை விமர்சிக்கும் புத்தகங்களை இந்த புத்தகக்கடை விற்பனை செய்துவந்தது சீன அரசை விமர்சிக்கும் புத்தகங்களை விற்கும் ஹாங்காங் புத்தகக் கடையைச் சேர்ந்த மேலும் ஒருவர் காணாமல் போயிருப்பதாகக் கருதப்படுகிறது. இதே புத்தகக்கடை மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் கடந்த மாதம் முத்தல் காணமல் போயிருக்கிறார்கள். சீன அரசுக்கு எதிரான விமர்சனப் புத்தகங்களுக்காக இவர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என அவர்களுடைய சக பணியாளர்கள் கருதுகின்றனர். ஹாங்காங்கில் எழுத்துச் சுதந்திரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், சீனாவிலிருந்து தொடர்ந்து தங்களுக்கு அழுத்தம் வருவதாக பதிப்புத் …
-
- 0 replies
- 480 views
-
-
கம்ஃபர்ட் வுமன் - ஜப்பானின் வரலாற்றுப் பிழை! இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பிரச்னை போலவே, தென்கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்னைகளில் ஒன்று ஜப்பானின் போர்க்காலகொடுமைகள். அதில் மிக முக்கியமான பிரச்னை கம்ஃபோர்ட் வுமன் (comfort women) என்றழைக்கப்படும், ஜப்பான் ராணுவத்தால், கடத்திசெல்லப்பட்டு ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு, பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட பெண்களின் துயரங்கள். இந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக, பல வருடங்களுக்காக ஜப்பானிடம் நீதி கேட்டு போராடி வருகிறது தென்கொரியா. இந்த பெண்களின் நினைவுச்சின்னமாக, அவர்களின் துயரங்களின் குறியீடாக, இளம்பெண் ஒருத்தி, கொரிய உடை அணிந்து, நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற வெண்கல சிலை ஒ…
-
- 1 reply
- 683 views
-
-
ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஜெர்மனியில் மீண்டும் வெளியாகிறது ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் (எனது போராட்டம்) நூல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஜெர்மனியில் கிடைக்கவிருக்கிறது. இந்த நூலின் பதிப்புரிமை பவேரியாவின் பிராந்திய அரசிடம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை பதிப்பிப்பதை அந்த அரசு தடைசெய்தது. இப்போது அந்தப் பதிப்புரிமை காலாவதியாகியிருக்கிறது. மியூனிக்கில் இருக்கும் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கான்டம்பரரி ஹிஸ்ட்ரி இதன் புதிய பதிப்பை அடுத்த வாரம் வெளியிடவிருக்கிறது. பல நாடுகளிலும் இந்த புதிய பதிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகி…
-
- 0 replies
- 469 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - துபாய் சொகுசு விடுதிக் கோபுரத்தில் பெருந்தீ ஏற்படக் காரணம் என்ன? தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டாலும் கனன்றுகொண்டிருக்க அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். - பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் புதுவருட கொண்டாட்டங்கள்! ஐ எஸ் ஆயுததாரிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, மியூனிக் நகர ரயில்நிலையங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்! - அத்துடன், தலையின் உள்ளே ஏற்படுகின்ற காயங்களைக் கண்டுபிடித்து, அடிபட்டவரின் உயிரைக் காப்பாற்ற உதவும், கைக்கு அடக்கமான மூளை ஸ்கேன்னர் கருவி!
-
- 0 replies
- 333 views
-
-
துபாயில் வானுயர் கட்டடம் ஒன்றில் தீ துபாயில் நகர மத்தியில் உள்ள வானுயர் மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பிடித்துள்ளது. புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது. அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது. 1000 அடி உயரமான இந்தக் கட்டடத்திலிருந்து எரிந்த துண்டுகள் விழுந்துகொண்டிருப்பதை பலரும் அவதானித்துள்ளனர். மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி உடனடியாக எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த தீயிற்காக காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. http://www.bbc.com/tamil/global/2015/12/151231_dubai_…
-
- 2 replies
- 623 views
-
-
பிரிட்டனில் ஒரே மாதத்தில் 3-வது புயல் ஸ்காட்லாந்தின் சவுத் ஆர்ஸையர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய பயணிகள் பஸ். பிரிட்டனில் ஒரே மாதத்தில் 3-வதாக புதிய புயல் உருவாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. வடக்கு பிரிட்டன், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பெய்யும் கனமழையால் அந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. வடக்கு பிரிட்டனில் சுமார் 6700 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் டெஸ்மாண்ட், ஈவா ஆகிய இரு புயல்கள் வடக்கு பிரிட்டனை புரட்டிப் போட்டன. இதனால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. இதனிடை…
-
- 0 replies
- 547 views
-
-
ஜனவரி1ல் அமுலுக்கு வரும் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள். Mohanay December 31, 2015 Canada கனடா-ஜனவரி 1, 2016ல் பல புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுலிலிருக்கும் சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல் படுத்தப்பட உள்ளன. புதிய வருடத்தில் ஏற்படும் மாகாண மற்றும் மத்திய மாற்றங்கள் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பெரிய அல்லது சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது. மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு: ஜஸ்ரின் ட்ரூடோவின் வாக்குறுதி பிரகாரம் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு ஜனவரி 1லிருந்து நடைமுறைக்கு வருகின்றது. இந்த குறைப்பு டொலர்கள் 45,282லிருந்து டொலர்கள் 90,563ற்கு இடைப்பட்ட வருமானத்திற்கு 22சதவிகிதத்திலிரு…
-
- 0 replies
- 563 views
-
-
இரண்டாவது விமானம் தாங்கி கப்பலின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தது சீனா [ Friday,1 January 2016, 06:04:08 ] சீனா இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. எனினும் இம்முறை முற்றாக உள்நாட்டு தொழில்ட்பமே இதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. டாலியன் துறைமுகத்தில் வைத்து நிர்மாணிக்கப்படும் குறித்த விமானம் தாங்கி கப்பல் 50 ஆயிரம் தொன் நிறைகொண்டதென குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த கப்பல் அணுவல்லமை கொண்டதாக அமைக்கப்படவில்லை என சீனப் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்பரப்புக்கள் தொடர்பில் அயல்நாடுகளுடனான முரண்பாடுகள் அதிகரித்த…
-
- 0 replies
- 481 views
-