Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஓடும் ரயிலில் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி! ஓடும் ரயிலில் 14 வயது சிறுமி ஒருவர் இரு ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தா- அம்ரிஸ்தர் இடையே ஓடும் 'டம் டம் ' எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த அந்த சிறுமி, வீட்டில் கோபித்துக் கொண்டு, ஹவுரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறியிருக்கிறார். சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது குறித்து போலீசுக்கு வீட்டார் தகவல் அளித்துள்ளனர். போலீசார் சிறுமியை தேடிக் கொண்டிருக்கையில், அவர் 'டம் டம் 'எக்ஸ்பிரஸ் ரயிலிலில் ஏறி சென்றிருக்கிறார். ஹவுர…

  2. அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா? வரும் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு தம்பதியினர் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பூர்வமாக அறிவித்திருக்கிறது சீன அரசு. 1978-ம் ஆண்டு முதல் இருந்து வரும் சர்ச்சைக்குரிய 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை' திட்டத்தை நீக்கியிருப்பது சீன மக்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த முடிவுக்கு, சீனா வந்தது ஏன்? திட்டம் பிறந்த கதை அதைத்தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் வரலாற்றையும் கொஞ்சம் அறிய வேண்டியது அவசியம். 1949-ல் மாவோ சீனாவை தன்வசப்படுத்தியபோது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்ததும் சீனாதான். 50 கோடிக்கும் மேல் இருந்தது அன்றைய ச…

  3. மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஐஎஸ் அச்சுறுத்தல் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில், “தீவிரவாதம் தொடர்பான புள்ளிவிவர எண்ணிக்கை (50,000) என்பது உளவுத்துறையின் மதிப்பீடுகள் தான். தற்போது ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பவர்களில் 1 சதவீதம் பேர் தீவிரவாதத்தில் இறங்கி, மலேசியாவில் தாக்குதல் நடத்தினாலும், அது நாட்டிற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்துள்ளார். …

  4. இன்றைய நிகழ்ச்சியில்… - இராக்கிய படைகளின் அதிரடியில் வசப்பட்டது ரமாடி! கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னாள் அரசு வளாகம் ஐ எஸ் வசமிருந்து மீட்பு! - கூரைகளைப் பிய்த்தெறிந்து டெக்ஸாஸைத் துவம்சம்செய்தது டொர்னேடோ சுழல்காற்று! ஆயிரக்கணக்கானோரை வீடிழக்கச் செய்து பராகுவேயை உருகவைத்துள்ளது வரலாறு காணாத வெள்ளம்! - தென்கொரிய மக்களை ஆட்கொண்டு ஆட்டிவைக்கும் ஆட்டம்! வீடியோ கேம் விளையாட்டு விரைவில் ஒலிம்பிக்கிலும் இடம்பிடிக்குமா?

  5. மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி மேற்கு சிரியாவில் ஹோம்ஸ் நகரத்தில் இன்று இரண்டு குண்டுத்தாக்குல்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹோம்ஸ் நகரின் சஃர் பகுதியில் இன்று மதியம் , சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. http://www.virakesari.lk/article/1433

  6. மோடி- நவாஸ் சந்திப்பு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த 2008 மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் அதிகமானது. அண்மைகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சுமுக உறவு துளிர்விட்டுள்ளது. பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு மாநாட்டில் மோடியும் நவாஸும் சந்தித்துப் பேசினர். டிசம்பர் 6-ல் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பாங்காக்கில் ஆலோசனை நடத்தினர். கடந்த 9-ம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் மாநாட்டில் பங்கேற்றார்…

  7. மியன்மார்: இராணுவம் பற்றிய பேஸ்புக் கருத்துக்காக பெண்ணுக்கு சிறை மியன்மார் இராணுவம் (கோப்புப் படம்) மியன்மாரில் இராணுவத்தை ஏளனம் செய்து சமூக வலைத்தளம் ஒன்றில் கருத்துக்களை தெரிவித்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 6-மாதம் சிறைத் தண்டனை அளித்துள்ளது. ஜனநாயக-ஆதரவு தலைவி ஆங் சான் சூ கியின் பாரம்பரிய ஆடைகளுடன், அந்நாட்டு இராணுவத்தின் புதிய சீருடையின் நிறங்களை ஒப்பிட்டு வெளியான பேஸ்புக் கருத்து தொடர்பிலேயே கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டார். எந்தவொரு தொலைத்தொடர்பு வலையமைப்பு மூலமாகவும் அவதூறு செய்வதை தடைசெய்யும் பரந்துபட்ட அர்த்தங்களை கொடுக்கக்கூடிய சட்டம் ஒன்றினாலேயே சாவ் சாண்டி டுன் என்ற அந்தப…

  8. தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அரசுக்கு வழங்குவது தொடர்பாகவும் புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்திற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 159 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே இந்த சட்ட வரைவு சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய சட்டமானது, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தனது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எல்லை கடந்து செய்ய அனுமதித்துள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு படைகள் மத்திய ராணுவ ஆணையத்தின் அனுமதியை பெற்று அத்தகைய செயல்களில் ஈடுபடலாம். …

  9. உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, சீனா விளங்குகின்றன. இந்த நிலையில் உலக நாடுகளின் எதிர்கால பொருளாதார நிலவரம் குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ‘சி.இ.பி.ஆர்.’ என்னும் பொருளாதார வணிக ஆராய்ச்சி சிந்தனையாளர் மையம் கணித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * 2029-ம் ஆண்டில், சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக மாறும். அமெரிக்கா, முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு சரியும். இந்தியா மூன்றாவது பெரிய வல்லரசாக உருவாகும். * 2030-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 10 ஆயிரத்து 133 பில்லியன் டாலர்களாக உயரும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34 ஆயிரத்து 338 பில்லியன் டாலர…

  10. 1,96,000 அகதி குழந்தைகள் மீது ஜெர்மனியின் அக்கறை! ஜெர்மனியில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக 8,500 ஆசிரியர்கள் உலக அளவில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். போர் மற்றும் வறுமையின் காரணமாக ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த 1,96,000 அகதிக் குழந்தைகளுக்கு 8,264 சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், 2015 -ம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் வயதுடைய குழந்தைகள் 3,25,000 பேர் ஜெர்மனிக்குள் குடிபெயர்ந்தனர். இது இரண்டாம் உலகப்போரை விட மிக மோசமானதாகும். மேலும், 2015-ம் ஆண்டில் ஒரு மில்லியன் புகலிடக் க…

  11. 2015-ல் அமெரிக்காவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 1000 பொதுமக்கள் பலியானதாக தகவல் நியூயார்க்கில் கருப்பினத்தவர்களின் பாதுக்காப்பின்மை குறித்து விழிப்புணர்வு போராட்ட. | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். 2015ல் அமெரிக்க போலீஸ் நடத்திய பல்வேறு தாக்குதலில் பொதுமக்களில் 965 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கையில் ஆயுதம் இல்லாத கருப்பினத்தவர்களே அதிகம் என ஓர் ஆய்வு கூறிகிறது. அமெரிக்காவில் இனவெறுப்பு ரீதியான உள்நாட்டு வன்முறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்த நிலையில் உள்ளது. துப்பாக்கி கலாசார வன்முறை நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்த ஓர் ஆய்வை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட…

  12. ஆப்கான் விமான நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்: ஒருவர் பலி, 13 பேர் படுகாயம் காபூலில் தாலிபான்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய பகுதி.| படம்: ஏபி. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தற்கொலைப்படை தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காபூல் விமான நிலையம் அருகே காலை வேளையில் மர்ம நபர் ஒருவர் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு சிறிய ரக பேருந்து வெடித்துச் சிதறியது. இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேர் காயமடைந்ததாக காபூல் போலீஸார் தெரிவித்தனர். தாலிபான் தீவிரவாதிகள் ஆப்கானின் பல…

  13. சீனாவில் 2016-ம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணகெடுப்பின் படி அந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 136 கோடி ஆக இருப்பது தெரியவந்தது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக "நாம் ஒருவர் நமக்கு ஒருவர்" என்ற திட்டத்தை 1979ல் சீன அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இந்த சட்டத்தை மீறுவோருக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கபட்டது. இந்நிலையில் சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்க…

  14. அமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து ஆறு பேர் பலி அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் நாட்டின் தெற்கே பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்கள் காரணமாக குறைந்தது இருபத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே டல்லாஸ் பகுதியில் டொர்னேடோ சுழல்காற்று வீசி, சாலைகளில் இருந்து வாகனங்களை வீசியெறிந்துள்ளது. அவ்வூரின் கார்லண்ட் என்ற புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து கார்கள் வீசியெறியப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மின் கம்பங்களும் கம்பிகளும் பிடுங்கியெறியப்பட்டதால், ஐம்பதாயிரம் பேர் வரையிலானோருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸுக்கு கிழக்…

  15. உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். 2,400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 32 சதவீதம் பெண்கள் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மருத்து வசதியில்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் மேற்கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ”தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவற்றால் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.” என்று…

  16. 'பொறுமையிருங்கள், கடவுள் உங்களுடனிருக்கிறார்": ஐ.எஸ் தலைவர் மோதல் களங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவைத் தொடர்ந்து, போராளிகளுக்க உத்வேகமூட்டுவதற்கான முயற்சியாக, போராளிகளுக்கான செய்தியொன்றை, அக்குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அனுப்பிவைத்துள்ளார். 'இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்) போர்வீரர்கள், பொறுமையாக இருங்கள், ஏனெனில், நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள்" என, அச்செய்தி குறிப்பிடுகிறது. 'பொறுமையிருங்கள், ஏனென்றால், கடவுள் உங்களுடனிருக்கிறார்" என அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. இச்செய்தியில், பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான மோதல் குறித்தும், செய்தி வெளியிடப்பட்டுள்ள…

  17. சீனாவில் விழுந்துபோயுள்ள சுரங்கத்தின் உரிமையாளர் தற்கொலை விபத்து நடந்த ஜிப்சம் சுரங்கம் சீனாவின் கிழக்கில் ஷன்டொங் மாகாணத்தில் அண்மையில் விபத்து நடந்த ஒரு ஜிப்சம் சுரங்கத்தின் உரிமையாளர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளார் என சீனாவின் அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள பதினேழு பணியாளர்களை சென்றடைய மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் முயன்றுவருகின்றனர். வேறு பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கட்டுமானப் பணிகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற பெயரில் பயன்படுத்தப்படும் ஜிப்சம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கம் இது. கடந்த ஓராண்டில் சீனாவில் சுரங்க விபத்துகளில் தொள்ளாயிரம் பேருக்கும் …

  18. உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் பகட்டுகளை கைவிட்டு, எளிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தன்னுடைய நத்தார் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். நத்தார் தினத்தையொட்டி வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் புனித பாப்பரசர் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புனித பாப்பரசர் தெரிவித்துள்ளதாவது, “நவீன சமூகத்தின் ஆடம்பர வாழ்க்கையால், பொருள்களை வாங்கிக் குவிக்கும் மோகம் அதிகரிக்கிறது. சொத்து சேகரிப்பதிலும், பொருளாதாயத்திலும் மட்டுமே சுகம் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. தன்னலம் பெருகுகிறது. எளிமையான, சமநிலை கொண்ட, தேவைக்கு மிகாத வாழ்க்கை முறையையை கிற…

  19. மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து சென்னையை சிக்குமுக்காடச் செய்தது மழை. அதேபோன்று பிரித்தானியாவிலும் கனமழையினால் மான்செஸ்டர் நகர் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று விடாமல் மழை பெய்தது. அடுத்த நாள் காலை வரை தொடர்ந்த மழை காரணமாக ஏராளமான நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வடக்கு பிரித்தானியாவில் உள்ள லங்கஷியர், யோர்க்‌ஷியர், மான்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் பிரித்தானியாவில் வானிலை ஆய்வு மையம் ஒரே நாளில் 2 முறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலு…

  20. மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? பிரதமர் மோடியின் நேற்றைய திடீர் பாகிஸ்தான் பயணம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸில் இருந்து வந்த மோடி, பாகிஸ்தான் குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டாரா என்ற விவாதம் பரபரக்கிறது. இந்நிலையில் மோடியின் திடீர் பயணத்திற்கு வேறொரு ரகசிய காரணம் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அன்று பாகிஸ்தானிற்கு சென்றது மோடி மட்டுமல்லவாம்; சஜ்ஜன் ஜிண்டால் என்பவரும் அன்று பாகிஸ்தான் சென்றதுதான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் அந்த சஜ்ஜன் ஜிண்டால்? சஞ்சன் ஜிண்டால் இந்தியாவைச் சேர்ந்த ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் என்ற நிறுவனத்தின் இயக்குனர். இவர் தான் இந்த இரு பிரதமர்களுக்கும் இட…

  21. யார்மூக்கிலிருந்து சிரிய கிளர்ச்சியாளர்களை வெளியேற்றும் பணி நிறுத்தம் யார்மூக் முகாமில் உள்ள கிளர்ச்சிக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் உள்ள யார்மூக் அகதிகள் முகாமிலிருக்கும், சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றும் நடவடிக்கை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பைச்சேர்ந்த சிலரும், அல் நுஸ்ரா முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலரும், அவர்களது குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்படுவதற்கான பேருந்துகள் ஏற்கனவே முகாமுக்கு வந்துசேர்ந்துவிட்டன. அந்த முகாமில் சிக்கியுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அவசர உதவிப் பொருட்களை ஐநா வழ…

  22. மலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடங்கிய தமிழர்! மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் இன்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது. மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது மனைவி கார்த்தியானி கோவிந்தன் ஆகியோர் இந்த விமான நிறுவனத்தை தோற்றுவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் விமான சேவை இன்று தொடங்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 150 பயணிகளுடன் லங்காவி நகருக் முதல் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பணிப் பெண்கள் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவார்கள். முக்கியமாக ஹலால் வகை உணவுதான் பரிமாறப்படும். மத…

  23. "சிரிய ராணுவ வான் தாக்குதலில் கிளர்ச்சிக்குழுத் தலைவர் கொல்லப்பட்டார்" சிரிய இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் மூத்த கிளர்ச்சித் தலைவர் ஸஹ்ரூன் அலூஷ் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது சிரியாவில் வெள்ளியன்று தாம் நடத்திய வான்தாக்குதலில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த வான் தாக்குதல்கள் ரஷ்ய போர்விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று சிரிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சிக்குழுக் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டம் ஒன்றில், அந்த கிளர்ச்சிக்குழு தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்தத் தலைவர் ஸஹ்…

  24. ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 100 வீடுகள் எரிந்து நாசம் ஆஸ்திரேலிய காட்டுத்தீயை அணைக்க அரசு கட்டமைப்பு போராடிவருகிறது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களை இந்த காட்டுத்தீ பாதித்துள்ளது மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் Great Ocean Roadஉம் இந்த காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேகமாக பரவிய காட்டுத்தீயின் தீவிரம் காரணமாக இந்தப் பகுதிகளில் வசித்த பலரும் அங்கே சென்றிருந்த சுற்றுலாப்பயணிகளும்…

  25. தாதா பதவிக்கு தாவூத் முழுக்கு? மும்பை : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தாதா பதவிக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளான். பாகிஸ்தானில் இன்று நடக்கும், தன், 60வது பிறந்த நாள் விழாவில், புதிய தாதா யார் என்பதை அறிவிக்க, அவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிழல் உலக தாதா : மும்பையில், நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராகிம், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளான். இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில், அந்த நாட்டு உளவு அமைப்பின் கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் அவன் வசித்து வருகிறான். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.