உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
'அடுத்தது நீங்களே'- ஐஎஸ் தலைவர்களுக்கு ஒபாமா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துவதை குறிப்பிட்டு, தங்களது அடுத்த குறி அந்த இயக்கத்தின் தலைவர்கள் தான் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா மறைமுகமாக எச்சரித்தார். சிரியா, இராக்கில் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பகுதியை இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ள ஐ.எஸ். அமைப்பு தனி அரசை நடத்தி வருகிறது. இவர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, "ஐ.எஸ். மீது இதுவரை…
-
- 0 replies
- 725 views
-
-
மும்பை தாக்குதலில் தொடர்பை நிரூபிக்க முடியுமா? - இந்தியாவுக்கு ஹபீஸ் சயீத் கேள்வி ஹபீஸ் சயீத் மும்பை தாக்குதலில் எனக்கு தொடர்பு இருப்பதாக இந்தியாவால் நிரூபிக்க முடியுமா என ஜமாத் உத் தவா தலைவரும், தாக்குதலில் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் என இந்திய அரசால் குற்றம்சாட்டப்படுபவருமான ஹபீஸ் சயீத் சவால் விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திரும்பியுள்ளார். இந்நிலையில் ஹபீஸ் இந்தியாவுக்கு சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவேற்றியுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நமது அரசு மவுனம் காக்கிறது. ஆனால், சுஷ்மாவுக்க…
-
- 0 replies
- 384 views
-
-
துருக்கி கப்பலை விரட்டியது ரஷ்யா துருக்கி சரக்கு கப்பலை விரட்டியடித்த ரஷ்யாவின் கடலோர காவல் படை ரோந்து கப்பல். ரஷ்ய எல்லைப் பகுதியை நெருங்கிய துருக்கி கப்பலை அந்த நாட்டு கடற்படை விரட்டியடித்தது. இதனால் இருநாடுகளிடையே பதற்றம் எழுந்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது. கடந்த நவம்பர் 24-ம் தேதி சிரியா எல்லையில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததால் ரஷ்ய விமானம் சுடப்பட்டது என்று துருக்கி அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சிரியா எல்லையில்…
-
- 0 replies
- 459 views
-
-
மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை அமெரிக்காவில் திறப்பு [ Tuesday,15 December 2015, 05:55:24 ] மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை வட அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்திலுள்ள நீரை சுத்திகரித்து, குடிநீராகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த நீண்டகால திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிப்பதற்கான பணிகள் கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதோடு, இதன் ஊடாக ஒருநாளைக்கு சுமார் 4 இலட்சம் பேருக்கான குடிநீரை சுத்திகரித்து விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 478 views
-
-
இந்தியாவை இழிவுபடுத்தும் கேலிச்சித்திரம் அவுஸ்திரேலிய பத்திரிகையில் வெளியீடு [ Tuesday,15 December 2015, 04:55:59 ] அஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் இந்திய மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த கேலிச்சித்திரம் இனவெறியுடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீசில் நடந்த பருவ நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநாட்டில் இந்தியா சார்பில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிலையில், பருவ நிலை மாநாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை கேலிக்குள்ளாக்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான 'தி அவுஸ்திரே…
-
- 0 replies
- 406 views
-
-
அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன்: உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித்! [Tuesday 2015-12-15 08:00] மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு செயல்பாடுகள் மூலமாக தன்னால் உலகிற்கு மிகப் பெரிய பங்களிப்புகளை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பது என்பது மிகச் சிறிய சாதனைதான் என்று கூறியுள்ள அவர், முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது போன்ற பேச்சுகள் தன்னை தீவிர அரசியலில் வலுகட்டாயமாக ஈட…
-
- 0 replies
- 875 views
-
-
பிரான்ஸில் ஆசிரியர் மீது தாக்குதல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில், பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் ஆசிரியர் மீது தாக்குதல் கத்தரிக்கோல் மற்றும் பிளேட் கத்தி போன்றவற்றை வைத்திருந்த ஒருவரே அவரை தாக்கியதாக போலிஸார் கூறுகின்றனர். அந்த தாக்குதலை நடத்திய போது, தான் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர் என்று அந்த நபர் கூறியதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். ''இது இஸ்லாமிய அரசு. இது ஒரு எச்சரிக்கை'' என்று அந்த நபர் கூறியதாக கூறப்படுகின்றது. வகுப்பை நடத்த தயாராகிக்கொண்டிருந்த போது அந்த ஆசிரியர் விலா மற்றும் தொண்டையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உயிராபத்து இல…
-
- 2 replies
- 797 views
-
-
யேமென் சண்டையில் சவுதி , எமிரேட்ஸ் தளபதிகள் பலி சவூதியின் சிறப்புப்படைகள் யேமெனிய அரசுக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றன யேமனில் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையின்போது கொல்லப்பட்ட வெளிநாட்டு படையினரில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த அதிகாரி ஒருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போரிட்டு வரும், சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தங்கியிருந்த முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. கொல்லப்பட்டவர்களில், சூடானியப் படையினர் ஒருவரும் அடங்குவார். யேமன் அரசாங்கத்திற்கும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்குமிடையி…
-
- 0 replies
- 601 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குற்றச்சாட்டோ, வழக்கு விசாரணையோ இல்லாமல் குவாண்டனாமோவில் பதினான்கு ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்த ஷகிர் ஆமிர் பிபிசிக்கு வழங்கிய செவ்வி. - முதற்தடவையாக பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபியாவில் 13 பெண்கள் நகர சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். - புவியை வெப்படையச் செய்யும் வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான தீர்வாக பூச்சி, புழுக்களை உண்ண முடியுமா என்பது குறித்த ஒரு ஆய்வு.
-
- 0 replies
- 294 views
-
-
ருவாண்டா இனப்படுகொலை: குற்றவாளிகள் மீது ஐநா தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு சுமார் 20 ஆண்டுகளாக ருவாண்டா இனப்படுகொலை விசாரணைகள் நடந்துவந்தன ருவாண்டாவுக்கான ஐநாவின் சர்வதேச குற்றவிசாரணை தீர்ப்பாயம் விசாரணை நடத்திவந்த 6 பேரையும் குற்றவாளிகள் என்று உறுதிசெய்து இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. ஆறு பேரின் கடைசி மேன்முறையீடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அத்தோடு இந்தத் தீர்ப்பாயம் தனது பணிகளை முடித்துக்கொள்கின்றது. மூன்று குற்றவாளிகளின் ஆயுள்தண்டனைகள் தலா 47- ஆண்டு சிறைத் தண்டனையாக இந்தத் தீர்ப்பு மூலம் குறைக்கப்பட்டுள்ளன. ருவாண்டாவில் 1994-ம் ஆண்டில் நடந்த இனப்படுகொலையில் முக்கிய சந்தேகநபர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களை விசாரிப்பதற்காக தன்ஸானியாவ…
-
- 0 replies
- 668 views
-
-
முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு சவுதி அரேபியாவில் முதல் முறையாக சல்மா பிண்ட் ஹிஜாப் அல்-ஒடேய்பி எனும் பெண்மணி ஒருவர் நேற்று நடைப்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக சவுதி அரேபியாவில் இத்தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/988
-
- 1 reply
- 771 views
-
-
பிலிப்பைன்ஸை தாக்கும் பயங்கர ‘மெலர்’ சூறாவளி: 7 லட்சம் பேர் வெளியேற்றம் பிலிப்பைன்ஸில் உள்ள கியூசான் நகரத்தில் அந்நாட்டு அரசு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் மெலார் சூறாவளியின் சாட்டிலைட் படத்தை கண்காணிக்கின்றனர். | படம்: ஏ.பி. மெலர் என்ற பயங்கர சூறாவளி பிலிப்பைன்ஸை தாக்கியது ஆழிப்பேரலைகள், கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் என்ற எச்சரிக்கை காரணமாக மத்திய பிலிப்பைன்ஸிலிருந்து சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். வடக்கு முனையான சமர் என்ற விவசாயத் தீவில் இன்று அதிகாலை மெலார் புயல் கரையை மோதியது. மணிக்கு 185 கிமீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இங்குள்ள 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் உயிர்ச்சேதம் எதுவு…
-
- 0 replies
- 437 views
-
-
முஸ்லிம் சிறுமியிடம் வெடிகுண்டு சோதனை: மன்னிப்புக் கேட்டது அமெரிக்க பள்ளி அமெரிக்க பள்ளியில் சிறுமியின் பையில் வெடிகுண்டு உள்ளதா என்று ஆசிரியை கேள்வியெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்துச் சம்பவத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கோரினார். அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் செயல்படுகிறது ஷில்லோ என்ற பள்ளி. இங்கு படித்து வந்த 13 வயது சிறுமியிடன் தோல்பையில் வெடிகுண்டு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு ஆசிரியை சோதனை நடத்தியதாக அந்தச் சிறுமி வீட்டில் கூறினார். இதனால் பள்ளியில் கேலிக்கு உள்ளானதாகவும் வேதனையை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை அப்திர்ஸாக் ஆடன், பள்ளியில் தனது குழந்தை நடத்தப்பட்ட விதம் வேத…
-
- 0 replies
- 581 views
-
-
ஜெர்மனியில் ஃபேஸ்புக் அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல்; சுவரில் 'டிஸ்லைக்' வாசகம் பதிவு சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதப்பட்டிருந்தது. | படம்: ஏ.பி. ஜெர்மனியில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியதோடு அல்லாமல் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்ற வாசகத்தை சுவற்றில் எழுதி சென்றனர். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஃபேஸ்புக் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்று (ஞாயிறு) இரவு கறுப்பு உடையணிந்த சுமார் 20 நபர்கள் நுழைந்து அலுவலக ஜன்னல்களை சூறையாடியதாக புலனாய்வு போலீஸார் கூறினர். அதோடு, ஃபேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும் சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதியதாக அந்நாட்டு காவல்து…
-
- 0 replies
- 464 views
-
-
ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிராக கிறிஸ்தவப் பெண் போராளிகள்! [Monday 2015-12-14 08:00] சிரியாவில் கணிசமான பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக கிறிஸ்தவப் பெண் போராளிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட, சிரியா-கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் படை உருவாக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படையில், தற்போது சுமார் 50 பெண்கள் போராளிகள் உள்ளனர். இவர்களில் சிலர் திருமணமானவர்கள். அதில் ஒருவரான பாபிலோனியா என்பவர் கூறியதாவது: சிரிய…
-
- 0 replies
- 666 views
-
-
பெண் போராளிகளுக்கு 'பலவந்த கருக்கலைப்பு': ஸ்பெயினில் ஒருவர் கைது 'பெண்களை மோதல் களத்தில் வைத்திருப்பதற்காக, கட்டாயமாக கருக்கலைப்பு செய்துவிடும் கொள்கையை ஃபார்க் கிளர்ச்சிக் குழு கொண்டிருந்தது' கொலம்பியாவின் பெரிய கிளர்ச்சிப் படையான ஃபார்க் இயக்கத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகளுக்கு பலவந்தமாக கருக்கலைப்பு செய்துவைத்த குற்றச்சாட்டில் ஸ்பெயின் காவல்துறையினர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்-இல் மருத்துவ தாதியாக இவர் பணியாற்றி வந்துள்ளார். அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொலம்பிய அதிகாரிகள் கோரியுள்ளனர். தாங்கள் கருக்கலைப்பு செய்யவைக்கப்பட்டதாக குறைந்தது 150 பெண்கள் தங்களிடம் சாட்சியமளித்துள்ளதாக கட…
-
- 0 replies
- 742 views
-
-
லண்டன், பிரிட்டனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்ற அதிகளவில் முயற்சி செய்துவருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள முக்கிய அரசியல்வாதிகளை கொல்ல தனியாக ஒரு தற்கொலைப்படையையே ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாக்கியிருப்பதாக சண்டே எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு சென்று மீண்டும் திரும்பியுள்ள சந்தேகத்திற்குரிய 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பிரிட்டனில் சர்வ சாதாரணமாக வீதிகளில் உலா வருவதாக அங்குள்ள பாதுகாப்பு ஏஜென்ஸிகள் எச்சரித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகளை கொண்டு வரும் எம்.பி.க்களை குறிவைத்து பட்டியல் போட்டு கொலை செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மெட்ரோபோலிடன் பகுதிகளில் உள்ள மந்திரிகளுக்கு உச்ச…
-
- 0 replies
- 510 views
-
-
மாஸ்கோ, ரஷியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தெற்கு ரஷியாவில் உள்ள மனநல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 19 பேரது சடலங்கள் காணப்பட்டு உள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மருத்துவமனையில் மரப் பலகையினால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. http://www.dailythanthi.com/News/World/2015/12/13112908/Fire-at-Russian-hospital-kills-21.vpf
-
- 0 replies
- 535 views
-
-
கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம் கம்பியாவின் அதிபரான யஹ்யா ஜம்மா தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார். இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக அவர் பார்க்கப்படுகின்றார். காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார். தாம் எயிட்ஸ் நோய்க்கு மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளதாக 2007இல் அவர் அறிவித்தா…
-
- 1 reply
- 1.6k views
-
-
பாகிஸ்தானின் பழங்குடிகள் பகுதியில் குண்டு வெடிப்பு-15 பேர் பலி பாகிஸ்தானில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அங்காடிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குர்ரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் பலி, ஏராளமானவர்கள் காயம் பழங்குடிகள் பிரதேசமான குர்ரம் பகுதியின் தலைநகர் பராச்சினாரிலுள்ள துணிகள் அங்காடியில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடிப்பில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு காரணமாக அந்த அங்காடி சிதறிப் போனது. இச்சமவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தமது பிடியில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள இந்த நகரத்தில் ஷியாப் பிரிவு முஸ்லிம்களே பெரும்…
-
- 0 replies
- 515 views
-
-
பாரிஸ் உடன்பாடு: ஒரு திருப்புமுனை-அதிபர் ஒபாமா புவி மேலும் வெப்பமடைவதை தடுக்கும் நோக்கில் பாரிஸில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாடு உலகுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். I அனைத்து நாடுகளும் கரியமில வாயுவின் வெளியேற்றத்தை குறைக்க உடன்பட்டுள்ளன கரியமில வாயுவின் வெளியேற்றத்தை இதுவரை இல்லாத வகையில் தடுக்கவும், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளை தவிர்க்கவும், நாடுகள் உடன்பட்டுள்ளதற்கான உறுதிப்பாடு இதன்மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார். இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தி தேவைகளை முன்னெடுக்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு…
-
- 0 replies
- 539 views
-
-
தீவிரவாதம் பாதித்த நாடுகளில் அமெரிக்க படைகள் குவிப்பு : அதிபர் ஒபாமா தகவல் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கா தன் ராணுவத்தை குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான், ஐஎஸ், அல்-காய்தா ஆகிய தீவிரவாத அமைப் புகளை ஒழித்துக் கட்டுவதற்காக ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, துருக்கி, சோமாலியா, ஏமன், லிபியா, நைஜர், கேம்ரூன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, எகிப்து, ஜோர் டான், கொஸோவோ ஆகிய நாடு களில் நவீன ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா தாக்கல் செய்த அறிக் கையில் இந்த தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது கு…
-
- 0 replies
- 490 views
-
-
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தம்: மோடி - அபே முன்னிலையில் கையெழுத்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (இடது); இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (வலது) | பட உதவி: பிஐபி. இந்தியாவில் புல்லட் ரயில் உள்கட்டமைப்பு வசதியை நிர்மாணிப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இன்று (சனிக்கிழமை) டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தொடர்ந்து இருநாட்டுப் பிரதமரும் இந்திய - ஜப்பானிய தொழிலதிபர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். பின்னர் இருநாடுகளுக்க…
-
- 0 replies
- 545 views
-
-
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்க தில்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் ஒப்புக் கொண்டுள்ளதாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.தில்லி தமிழ்க் கல்விக் கழகபள்ளிகளில் மகாகவி பாரதியாரின் 134-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் லோதி எஸ்டேட் பள்ளி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆர்வலரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் பேசியதாவது: பெண் சமத்துவத்தை தனது கவிதைகளில் பாடி வடக்கையும், தெற்கையும் இணைத்தவர் பாரதி. விடுதலைப் போராட்ட காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தனது கவிதைகள் ம…
-
- 0 replies
- 569 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டிய கனமழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரண பொருட்கள் பல்வேறு தரப்பினரால் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதவிக்கரம் நீட்டியவர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே உள்ளது.அந்த வரிசையில் தற்போது சபரிமலை தேவசம்போர்டும் இணைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீளவும், வெள்ளத்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் சபரிமலையில் சிறப்பு ஹோமமும், வழிபாடும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சபரிமலையில் நேற்று தேவசம்போர்டு கூட்டம் நடைபெற்றது. …
-
- 0 replies
- 443 views
-