உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26888 topics in this forum
-
மதத்தை கடந்த மனித நேயம்... சிலிர்க்க வைக்கும் வீடியோ! கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப்( Al Shabaab) என்ற அமைப்பு சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து கொலை செய்து வருகிறது. இந்நிலையில் கென்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மண்டேரா அருகில், பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பேருந்தை மறித்துள்ளனர். உடனடியாக பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள் த…
-
- 0 replies
- 775 views
-
-
ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியா? ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற முயற்சிகள் நடப்பதாக ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் மற்றொரு தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற ஐஎஸ் முயற்சிப்பதாக ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா- இந்தோனேஷியா அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே ஆஸ்திரேலிய அட்டர்னி ஜெனரல் ஜியார்ஜ் பிராண்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஐஎஸ் அமைப்பு தனது கைக்கூலிகளை இந்தோனேஷியாவில் உருவாக்கி அதன் மூலமாக தாக்க…
-
- 0 replies
- 466 views
-
-
பயங்கரவாத தாக்குதல் செய்திகளை வெளியிட சீன ஊடகங்களுக்கு தடை [ Wednesday,23 December 2015, 05:45:31 ] சீனாவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தனிநாடு கேட்டு போராடி வரும் உய்குர் இனத்தவர் அங்கங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு…
-
- 0 replies
- 631 views
-
-
சிறார் குற்றவாளிகள் வயது வரம்பைக் குறைக்கும் சட்டத்திருத்தம் நிறைவேறியது இந்திய நாடாளுமன்ற வளாகம் இந்தியாவில் கொலை, மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபடும் சிறார்களை தண்டிக்கும்போது 18 வயதுவரை அவர்களை சிறார் குற்றவியல் தண்டனைச்சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று தற்போதைய இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைத் திருத்தி 16 ஆண்டுகளைக் கடந்தவர் அனைவருமே வயதுக்கு வந்தவர்களாக கருதப்பட்டு மற்றவர்களைப் போல பொதுவான குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வகை செய்யும் சிறார் குற்றவியல் தண்டனைச் சட்டத்திருத்த மசோதா இந்திய நாடாளுமன்ற மேலவையில் செவாய்க்கிழமை நிறைவேறியது. இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட, டில்லி மருத்துவ…
-
- 0 replies
- 453 views
-
-
தலிபான்களிடம் வீழ்ந்துகொண்டிருக்கும் ஹெல்மண்ட் தெற்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான சண்டை நடக்கிறது. அங்கு கேந்திர முக்கியத்துவம் மிக்கசங்கின் மாவட்டத்தில், தலிபான்களிடம் இருந்து பாதுகாப்பு படைகள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றன. யாருடைய கை அங்கு ஓங்கியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தலிபான்கள் மீண்டும் பெரும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், ஹெல்மண்ட் மாகாணத்தை தக்க வைத்துக்கொள்ள ஆப்கான் படைகள் தடுமாறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2015/12/151222_helmandvt
-
- 3 replies
- 396 views
-
-
-
- 0 replies
- 324 views
-
-
திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 08:34.43 மு.ப GMT ] ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார். ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த இரண்டு ஆண்கள், அவரிடம் இருந்த பணத்தினை தருமாறு அவரை மிரட்டியுள்ளனர், இதற்கு அப்பெண் மறுக்கவே ஒரு நபர் அப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிடுகிறார். இதனால் நிலைகுலைந்த கீழே விழுந்த பெண்மணி, துணிச்சலுடன் எழுந்து அந்த நபரின் மூக்கில் பதிலுக்கு ஒரு குத்…
-
- 0 replies
- 625 views
-
-
ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன? [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 12:21.25 மு.ப GMT ] இந்தோனேசிய நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்துகிடந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகர் அருகில் சித்ரா என்ற ஏரியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் திடீரென ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க தொடங்கின. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகவுமே மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் பரவி வருகின்றன. இ…
-
- 0 replies
- 539 views
-
-
நடைபாதையிலிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை மோதிய பெண்; அழகுராணி போட்டி நடைபெற்ற ஹோட்டலுக்கு வெளியே சம்பவம்: ஒருவர் பலி,37 பேர் காயம் 2015-12-22 12:04:40 அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபாதையிலிருந்த மக்கள் மீது பெண்ணொருவர் காரை மோதியதால் ஒருவர் பலியானதுடன் சுமார் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, ஞாயிறு இரவு மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்வபவம் இடம்பெற்றுள்ளது. லாஸ் வேகாஸ் பொலிஸ் அதிகாரியான பிரெட் ஸிம்மர்மன் கருத்துத் தெரிவிக்கையில். இச்சம்பவம் ஒரு பயங்கரவாத நடவடிக்கை எனக் கருதப்படவில்லை எனக…
-
- 0 replies
- 446 views
-
-
பிரேசில்: பழங்கால ரயில் நிலையம் தீயில் எரிந்து நாசம் பிரேசில் தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையம் சேதமடைந்துள்ளது. பிரேசிலின் சா பாலோ நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சில பகுதிகள் எரிந்து நாசமாயின. அந்த ரயில் நிலையத்தில் போர்ச்சுக்கீசிய மொழியின் வரலாற்றை ஆவணப்படுத்தியிருந்த மிகப் பிரபலமான ஒரு அருங்காட்சியகமும் செயல்பட்டுவந்தது. இந்த விபத்தில் அந்த அருங்காட்சியகமும் பெருமளவில் சேதமடைந்தது. ஸ்டேஷன் ஆஃப் லைட் எனப் பெயரிடப்பட்டிருந்த இந்த ரயில் நிலையத்தை பிரிட்டிஷ்காரர்கள் கட்டினர். இந்தத் தீ விபத்தில் இதன் கூரை முழுவதுமாக எரிந்து போனது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் ரயில் நிலைய வ…
-
- 0 replies
- 562 views
-
-
நாற்பது ஆண்டுகளுக்கு பின் நடந்த அழகிப்போட்டி: 20 வயது மாணவி மிஸ். ஈராக் ஆனார்! கடந்த 1972-ம் ஆண்டுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றது. 20 வயது மாணவி மிஸ். ஈராக் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பாக்தாத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் 150 பேர் பங்கு கொண்டனர். இதில் கிர்குக் பகுதியை சேர்ந்த ஷ்யேமா அப்துல்ரகுமான் என்ற பொருளாதார மாணவி, மிஸ். ஈராக்காக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக் நாட்டில் அழகிப் போட்டி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இறுதி சுற்றுப் போட்டிகள் பஸ்ரா நகரத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் சில அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து போட்டி நடுவர் உள்பட 15 பேர் போட்டியில…
-
- 0 replies
- 576 views
-
-
ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பகுதியில் துருவ ஒளிக் காட்சி அரோரா ஆஸ்த்ரேலிஸ் என்று அழைக்கப்படும் துருவ ஒளிக் காட்சியை ஆஸ்திரேலிய கிழக்குக் கடற்கரையில் இருந்தபடி புகைப்படக் கலைஞர்கள் படம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள பகுதியில் துருவ ஒளிக் காட்சி பிரபஞ்சத்திலிருந்து வெளியாகும் கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் படும்போது இம்மாதிரியான காட்சிகள் கிடைக்கின்றன. வடதுருவத்தில் ஏற்படும் இதே போன்ற காட்சிகள், அரோரா போரியலிஸ் என்று அழைக்கப்படுகின்றன. இம்மாதிரிக் காட்சிகளைத் தான் பல வருடங்களாகத் தேடிவருவதாக இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான டேவிட் மாக்ரோ தெரிவித்தார். இவர் நியூ சவுத் வேல்ஸ் சென்ட்ரல் கோஸ்ட்டில் வசிக்கிறார…
-
- 1 reply
- 582 views
-
-
ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது. ஐரோப்பா வந்த குடியேறிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூ…
-
- 0 replies
- 569 views
-
-
ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள முக்கிய மாவட்டமான சாஞினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். 'ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' அந்த நகரில் உள்ள போலிஸ் தலைமையகம் இன்னமும் ஆயுதபாணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், உள்ளே இருக்கும் அதிகாரிகளுக்கு காபுலில் உள்ள அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த இரவு தலிபான்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால், காபுலின் மத்திய பகுதியை நோக்கி மூன்று ராக்கட்டுகள் ஏவப்பட்டன. முன்னதாக காபுலுக்கு வெளியே பக்ரம் விமான தளத்தை தாம் தாக்குவதாக த…
-
- 0 replies
- 628 views
-
-
எல்லைப் பாதுகாப்பு படை விமானம் விழுந்து நொறுங்கியது: 10 பேர் பலி (வீடியோ) புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படையின் விமானம் ஒன்று, டெல்லியில் விழுந்து நொறுங்கிய விபத்தில், அதில் இருந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். புதுடெல்லியில் இருந்து இந்திய எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் 3 பேர் மற்றும் 7 பொறியாளர்கள் சூப்பர் கிங் விமானத்தில் ராஞ்சி புறப்பட்டுச் சென்றனர். துவாரகாவில் இருந்து ராஞ்சி சென்ற அந்த சூப்பர் கிங் விமானம், பக்டொலா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் அந்தப் பகுதியில் உள்ள சுவர் மீது மோதி தீப்பிடித…
-
- 0 replies
- 495 views
-
-
சோவியத்தை திரும்ப அமைக்க முயற்சி செய்யவில்லை: ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் ரஷ்ய அதிபர் புதின் படம்: ராய்ட்டர்ஸ். சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டமைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால், பிரச்சினை என்னவெனில் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொலைக்காட்சியில் ‘வேர்ல்டு ஆர்டர்’ என்ற ஆவண ஒளிபரப்பில் இதுதொடர்பாக புதின் பேசியதாவது: உக்ரைன் உள்ளிட்ட பல பகுதிகள் முந்தைய சோவியத் ரஷ்யாவுக்கு உட்பட்டவை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனின் நலனுக்காக செயல்படவில்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். சோவியத் ரஷ்யா மீண்டும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். …
-
- 0 replies
- 565 views
-
-
சீனா நிலச்சரிவு : 90 க்கும் அதிகமானோரைக் காணவில்லை தெற்கு சீனாவில் நேற்று நிலச்சரிவில் டசின் கணக்கான கட்டிடங்கள் புதைந்துபோன இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மீட்பு பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். சீனா நிலச்சரிவு : 90 க்கும் அதிகமானோரைக் காணவில்லை ஷென்சென் நகரில் உள்ள தொழில்பேட்டையில், மண்ணும் சகதியும் சரிந்து மூழ்கடித்ததை அடுத்து இன்னமும் 91 பேரை காணவில்லை. பல இடங்களில் ஆட்கள் உயிருடன் இருப்பதற்கான சமிக்ஞைகளை தாம் கேட்டதாக அகழும் இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்கள் சகிதம் தேடுதலில் ஈடுபடும் பணியாளர்கள் கூறுகின்றனர். உயரமான இடத்தில் கட்டிட கழிவுப் பொருட்களை புதைத்து வைத்திருக்க, அது சரிந்து, கீழே இருந்த கட்டிடங்களை மூழ்கடித்துள்ளத…
-
- 2 replies
- 590 views
-
-
ஜிகாதிகளை திருமணம் செய்யும் வலையமைப்பு துனீஷியாவில் தகர்ப்பு வெளிநாடுகளில் இருக்கும் ஜிகாதி போராளிகளை திருமணம் செய்துகொள்ள பெண்களை சேர்த்துக் கொண்டிருந்த வலையமைப்பு ஒன்றை, தாங்கள் முறியடித்துள்ளதாக துனீஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் மீதான எதிர்த்தாக்குதலை துனீஷியப் படையினர் முன்னெடுத்து வருகின்றனர் நாட்டின் வடபிராந்தியமான பிஸ்ரெட்டில் இந்த பயங்கரவாத வலையமைப்பைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அங்கு பெரிய அளவில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிறகு, சந்தேகத்துக்குரிய நபர்கள் மீதான தமது எதிர் நடவடிக்கையை துனீஷியா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. துன…
-
- 0 replies
- 892 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - உலக கால்பந்தின் மிகவும் சக்தி மிக்க நபர்களான செப் பிளட்டர் மற்றும் மிஷேல் பிளட்டினி ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் தடை. - சீனாவில் முப்பதுக்கும் அதிகமான கட்டிடங்கள் புதையுண்ட நிலச்சரிவில், உயிர் தப்பியவர்களை மீட்க சுமார் ஆயிரம் பணியாளர்கள் முயற்சி. - அத்துடன், ஆப்பிரிக்காவின் அறுசுவை உணவுகளை லண்டனில் அறிமுகப்படுத்த விளையும் சமையல் கலைஞர் பற்றிய தகவல்கள்.
-
- 0 replies
- 581 views
-
-
அமெரிக்காவிலேயே எடுபடாமல் போன இஸ்லாமிய துவேஷம்! அவர் ஹிட்லரா... முசோலினியா? -முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. 'இரண்டும் இல்லை; அவர் ஒரு காமெடியன் மட்டுமே' என்கிறார்கள் சிலர். 'அதுவும் இல்லை, அவர் ஒரு உராங்குட்டான்' என்கிறார்கள் வேறு சிலர். டொனால்ட் டிரம்பின் ஆளுமை, அரசியல் பார்வை, சமூகக் கருத்துகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த ஒப்பீடு, அடிப்படையிலேயே பிழையானது என்பது தெரிகிறது. உராங்குட்டான் ஓர் அரிய குரங்கினம். அதற்கு வெறுக்கத் தெரியாது. டொனால்ட் டிரம்ப் அரிதானவர் அல்லர். மேலும், அவருக்குப் பேசத் தெரிந்த ஒரே மொழி, வெறுப்பு மட்டுமே. ஒரே ஓர் உதாரணம், அவருடைய இந்தச் சமீபத்திய அறிவிப்பு - ‘முஸ்லிம்களுக்கு இனி அமெரிக்காவ…
-
- 0 replies
- 766 views
-
-
விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம்: வருகிறது புதிய தொழில்நுட்பம் (பிரமிப்பு வீடியோ) தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீடு (Windspeed) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் அந்த தொழில்நுட்பம், விமானத்தின் கூரை மேல் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த கூண்டை சுற்றி பாதுகாப்ப…
-
- 0 replies
- 487 views
-
-
சிரியாவில் ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 43 பேர் பலி [ Monday,21 December 2015, 05:41:50 ] சிரியாவின் இட்லிப் நகரில் ரஷ்ய விமானம் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 43 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். பொது மக்கள் அதிகம் வாழும் பகுதியிலேயே இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தைகள், வீடுகள் அலுவலக கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளிலேயே விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையினால் பல உடல்கள் கட்டிடங்களுக்குள் சிக்குண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு ஆதரவாகவும் அங்குள்ள ஐ.எஸ் ஆயுத்தாரிகளுக்கு எதிராகவும் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் ரஷ்யா விமானத் தாக்குதல்களை…
-
- 1 reply
- 580 views
-
-
சிரியாவில் இருந்த லெபனியக் குழுவின் தலைவர் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக புகார் ஹிஸ்பொல்லாவின் முன்னணித்தலைவர் சமிர் குவண்டார் லெபனியக் குழுவான ஹிஸ்பொல்லாவின் முன்னணித்தலைவர் சமிர் குவண்டார் சிரியத்தலைநகர் டமாஸ்கஸ் நகரில் கொல்லப்பட்டார். ராக்கெட் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்திருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தாம் விசாரித்துவருவதாக சிரியா தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் நகரின் ஜரமன மாவட்டத்தில் இருக்கும் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின்மீது ராக்கெட்டுகள் தாக்கியதில் சமிர் குவண்டார் கொல்லப்பட்டார். நான்குபேர் கொல்லப்பட காரணமாக இருந்த தாக்குதலில் இவருக்குஇரு…
-
- 0 replies
- 409 views
-
-
அகதிகளின் உடைமைகளைக் கைப்பற்றும் டென்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு டென்மார்க்குக்கு வரும் சுமார் 2000 அகதிகளுக்கான முகாம்கள் தயார் டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆத…
-
- 0 replies
- 498 views
-
-
நிர்பயா வழக்கு இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டார்! புதுடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா, தனது ஆண் நண்பருடன் பேருந்து ஒன்றில் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல் இருவரையும் பின்னர் சாலையோரத்தில் வீசிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்குப்பின் சிங்கப்பூர் மருத்துவமனையில் டிசம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் …
-
- 0 replies
- 533 views
-