Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க சிறப்பு படையினர் மிக விரைவில் சிரியாவுக்கு செல்லவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிமை உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே, ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் பிரெட் மெக்கர்க் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியட்ட அவர், “மிக விரைவில் அமெரிக்க சிறப்பு படையினர் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சிரியாவின் வடக்குபகுதியில் களமிறங்கும் அவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் உள்ளுர் படையினரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு உதவுவார்கள்” என்று;தெரிவித்துள்ளார்.இந்த முடிவு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தபடி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பி…

  2. அமெரிக்க விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு:16 பேர் படுகாயம் நியூ ஓர்லியான்ஸ்: அமெரிக்காவின் விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் பதட்டம் நிலவுகிறது. அமெரிக்காவின், நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள பன்னிஃப்ரெண்ட் பார்க் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதைக் காண்பதற்காக சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் கூட்டத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் 16 பேர் படு காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர…

  3. எதிர் கருத்து கூறியதால் 12 மாணவர்களை ஐ எஸ் கொன்றுள்ளனர் இராக்கிய நகரான மோஸுலில் ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் 12 மாணவர்களை கொன்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மோஸுல் நகர் ஐ எஸ் அமைப்பின் பிடியில் உள்ளது இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அக்குழுவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அந்த மாணவர்கள் முன்னெடுத்தனர் என்று கூறப்படுகிறது. அந்த மாணவர்களின் சடலங்கள் மோஸுலிலுள்ள சவக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. மோஸுல் நகரிலுள்ள ஐ எஸ் ஆதரவாளர்கள் சிலர் மோஸுல் நகரே இராக்கில் ஐ எஸ் அமைப்பின் வலுவான தளமாக உள்ளது. அந்நகரை கடந்த ஆண்டு அவர்கள் கைப்பற்றியது முத…

  4. பாரிஸ் தாக்குதல்:மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படம் வெளியீடு பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். பாரிஸில் தொடர்ந்தும் கடுமையான ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் அந்த தற்கொலை குண்டுதாரி பாரிஸின் தேசிய கால்பந்து விளையாட்டு அரங்கில் தாக்குதலை நடத்தியவர் என பிரெஞ்ச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வெளியிட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் படம் எம் அல் மஹ்மூத் எனும் நபருடையது என பிபிசி அறிகிறது. இப்போது படம் வெளியாகியுள்ள நிலையில், அத்தாக்குதல் தொடர்பிலான சாட்சிகளை முன்வருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். அந்த நபர் சிரியாவிலிருந்து துருக்க…

  5. பெல்ஜியத் தலைநகரில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிப்பு பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிக்கப்படுகிறது. பிரஸல்ஸ் நகரில் இராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படகூடும் எனும் அச்சுறுத்தல்கள் தொடருவதால் நாட்டின் தலைநகர் இந்த அதிகபட்ச உஷர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நகரெங்கும் காவல்துறையினர், இராணுவத்தினரின் கண்காணிப்பு பாரிஸில் நடைபெற்றது போன்ற தாக்குதல்கள் அங்கு நடைபெறாமல் தடுப்பதற்காகவே இந்த தயார் நிலை என்று கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது நாளை-திங்கட்கிழமை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தலைநகரின் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆ…

  6. ஐஎஸ் ஐஎஸ் நடத்தும் பள்ளிக்கூடம்! ஒரு சிறிய பள்ளி, பத்து வயது கூட ஆகாத குழந்தைகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஆசிரியர் போல நிற்கும் ஒருவர் கரும்பலகையில் இருக்கும் உருது வார்த்தையை காண்பித்து, இது என்னவென்று கேட்கிறார். மாணவர்கள்(சிறுவர்கள்) ஒருமித்த குரலில் சொல்லும் வார்த்தை... 'ஜிகாத்'! இந்தக் காட்சி நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு கிராமத்தில். மாணவர்கள் அமர்ந்திருக்க, ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா' என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், அவர்கள் முன்னிலையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பாடம் என்றால் வாழ்க்கைப் பாடமல்ல... மாறாக பலரின் வாழ்க்கையை அழிக்கும் துப்பாக்கியையும். வெடி குண்டையும் பற்றிப் படிக்க…

  7. கடந்த ஆகஸ்டு மாதம் கொரிய தீபகற்பகத்தில் படைகள் இல்லாத பிரதேசத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் தென்கொரிய வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அதையடுத்து, தென்கொரியா, வட கொரியாவுக்கு எதிராக கொரிய எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் நடத்தியது. இது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தென்கொரியாவை குறிவைத்து வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்த, தென்கொரியாவும் பதிலடி கொடுத்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இரு தரப்பும் சமரச பேச்சு நடத்தினர். அதில் அப்போது உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பினரும் மீண்டும் பேச்சு நடத்தவும் அப்போது முடிவானது. இந்த நிலையில், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வட கொரியா அழைப்பு விடுத்தது. அதை…

  8. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாரிஸ் நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நிலையங்களுக்குள் ஊடுருவி, குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து மக்களை கொல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மேனுவேல் வால்ஸ் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் நகரில் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்காக நெக்கர் என்ற அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முக்கிய ஊழியர்களை நச்சுமிகுந்த ரசாயனங்களின் பாதிப்புகள…

  9. ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டு, நிலப்பரப்பு மீட்கப்படும்:ஒபாமா இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் எவ்வித சுணக்கமும் காட்டமாட்டார்கள் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கோலாம்பூரில் ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்க அவர் சென்றிருந்தார் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணி, அவர்களை அழித்து அவர்கள் வசமுள்ள நிலப்பரபபையும் மீட்க உறுதிபூண்டுள்ளது என கோலாம்பூரில் பேசிய ஒபாமா சூளுரைத்தார். அவர்களுக்கான நிதி உதவிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, தலைவர்கள் தேடி அழிக்கப்படுவார்கள் எனவும் அதிபார் ஒபாமா கூறுகிறார். பாரிஸில் நடைபெற்ற தாக்குதல்கள் போன்றவை புதிய இயல்பு நிலை என்று கூறி எவ்வக…

  10. ஜம்மு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்திய தாக்குலை போல இந்தியாவிலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. இதுபற்றி, இந்திய ராணுவ உயரதிகாரிகளுள் ஒருவரான லெடினன்ட் ஜெனரல் ஆர்.ஆர்.நிம்போர்கர் கூறியவை பின்வருமாறு:- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 700-க்கும் அதிகமான தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அந்த எல்லைப்பகுதியில் 37-க்கும் அதிகமான தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. ஏவுகணைகளை ஏவுவதற்கு ஏவுதளங்களையும் அங்கே நிறுவியிருக்கிறார்கள். பாரீசில் நடத்திய தாக்குதலை போலவே இந்தியாவிலும் தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் லஷ்கர்-.இ-தய்பாவுடன் இணைய ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தற்…

  11. பெல்ஜியம் மெட்ரோ ரயில் நிறுத்தம் பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸின் மெட்ரோ ரயில் பாதை இன்று ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பகுதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத் தலைநகரில் ரயில் சேவைகள் நிறுத்தம் பாதுகாப்பு நிலைமைகள் மறுஆய்வு செய்யப்படும் வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அதே போன்று பெல்ஜியத்திலும் இடம்பெறலாம் எனும் எச்சரிக்கை காரணமாக, நாடு முழுவதும் அதியுயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியங்கள் சனிக்கிழமைமூடப்பட்டன. பல பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் என நம்பப்படும் …

  12. பயங்கரவாதிகளை மன்னிப்பது இறைவனைப் பொறுத்தது; ஆனால் அவர்களை இறைவனிடம் அனுப்புவது என்னைப் பொறுத்தது - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இப்படி கூறினாரா? 2015-11-22 09:53:05 “பயங்கரவாதிகளை மன்னிப்பது இறைவனைப் பொறுத்தது. ஆனால், அவர்களை அவரிடம் (இறைவனிடம்) அனுப்புவது என்னைப் பொறுத்தது” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது. திரைப்படங்களில் ஹீரோக்கள் பேசுவதைப் போன்றதொரு வசனம் இது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுவதை சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டியுள்ளனர். ரஷ்ய விமானமொன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு 224 பேர் கொல்லப்பட்ட நிலையிலு…

  13. ஐஎஸ்ஸை ஒழிக்க என்ன வழி? புஷ் வழி எடுபடாது ஐஎஸ் ஒழிப்புக்கு தியாகு பாரிஸ் அழுகிறது, பாரிஸுக்காக உலகமே அழுகிறது! பாரிஸ் உலகின் மிக அழகிய நகரம். புரட்சிகளின் தலைநகரம். வரலாற்றின் முதல் ஜனநாயகப் புரட்சி - பிரெஞ்சுப் புரட்சி, 1789 - பாஸ்தில் சிறையுடைப்பிலிருந்து வெடித்துக் கிளம்பியது இங்கேதான். உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கொம்யூன் 1881 - வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்ததும் இங்கேதான். உலக வரலாற்றில் பாரிஸ் நகருக்குள்ள பங்குபற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். இப்போது அதற்கு இடமில்லை. ஆனால், இன்றைக்கு உலகம் அச்சத்தின் விழிகளினூடே பாரிஸைப் பார்க்கிறது. ஐஎஸ் அமைப்பு நடத்திய தா…

  14. தீவிரவாதிகள் தாக்குதல் :பிரான்சுக்கு ரஷ்யா நாய்குட்டி பரிசளித்தது ஏன்? அண்மையில் பாரிஸ் நகரில் நடந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாரிசில் பிரெஞ்சு போலீசார் பயங்கரவாதிகளை வேட்டையாடத் தொடங்கினர். தேடுதல் வேட்டையின் போது, போலீசாருக்கு உதவியாக இருந்த பெல்ஜியன் ஷெபர்ட் ரகத்தை சேர்ந்த துப்பறியும் நாய் டீசல் இறந்து போனது. இதையடுத்து பிரான்ஸ் போலீஸ் துறைக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை ஜெர்மன் ஷெபர்ட் ரக நாய்குட்டி ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளது. பிரான்ஸ் மக்களுக்கும், போலீஸ் துறைக்கும் ரஷ்யாவின் ஆதரவு என்றும் உண்டு, என்பதை வலியுறுத்தும் வகையிலும் டீசலின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த நாய்குட்டியை பிரா…

  15. போர்க்குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள்! டாக்கா: போர்க்குற்றத்திற்காக வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள் 2 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்தர போராட்டம் நடந்தது. அதில், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வங்காளதேச எதிர்க்கட்சிகளான தேசியவாத கட்சி தலைவர் கலாஹுதீன் காதிர் சவுத்ரி மற்றும் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் செகரட்ரி ஜெனரல் அலி அக…

  16. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 10,000 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய இணைய ஊடுருவல் குழு பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களையடுத்து “அனானிமஸ்” எனும் மர்ம இணைய ஊடுருவல் குழுவொன்று, பயங்கரவாதிகளுக்கு எதிராக இணையவழி போரை ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் ஊடுருவி அக்கணக்குகளை முடக்குவதற்கு இக்குழுவினர் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இதுவரை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 10,000 பேரின் டுவிட்டர் கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக அக்குழுவினர் நேற்று தெரிவித்துள்ளனர். பாரிஸ் தாக்குதல்களை திட்டமிடுவதற்கு சமூக வலைத்தளங்களை பயங…

  17. பரிஸ் தாக்குதல் சந்தேகநபர் துருக்கியில் கைது தெற்கு துருக்கிய நகரான அன்டல்யாவில் வைத்து, பரிஸ் தாக்குதல்களில் அங்கம் வகித்ததாகச் சந்தேகிக்கப்படும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கைது பற்றிய ஏனைய விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டால் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வது தாமதமாகும் என்பதால் ஏனையை விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/159656/%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4…

  18. ஐ.எஸ். அமைப்பை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் எப்படிப் பார்க்கின்றன? இஸ்லாமிய அரசு அமைப்பை உலகில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் எதிர்மறையாகவே பார்க்கின்றன என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ஒரே ஒரு நாடுதான் விதிவிலக்கு. இஸ்லாமிய அரசு என்ற அமைப்பை, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் வசிக்கும் மக்கள் பொதுவாக எதிர்மறையாகவே பார்க்கிறார்கள் என்று சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ப்யூ ஆராய்ச்சி மையத்தின் உலக மனோபாவங்கள் குறித்த ஆய்வு ஒன்று பாலத்தீன நிலப்பரப்புகள், ஜோர்டான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தீவிரவாத அமைப்பை நிராகரிக்கிறார்கள் என்று க…

  19. சிரியா மீது நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏஞ்சலினா ஜோலி சொல்லும் 5 காரணங்கள்! 'அழகான உதடுகளைக் கொண்டவர்' என உலகம் முழுக்க ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியைக் கொண்டாடுவார்கள். ஆனால், அவருடைய அழகான உதடுகள் பேசுவதெல்லாம் உலகில் கைவிடப்பட்ட மக்களுக்காக என்பதே உண்மை. சிரியா அகதிகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏஞ்சலினா பேசிய உரை, உலகின் மனசாட்சியை இன்றளவும் உலுக்கி வருகிறது. அந்த உரையின் முக்கியமான 5 பாயிண்ட்கள் இங்கே... 1) " ‘உலக நாடுகளின் தலைவர்களே, குடிமக்களே... உங்களின் நாய்க்குட்டிகள் கூட உச்சபட்ச பாதுகாப்பில் தூங்கும் நேரத்தில்தான், 'என் மகளைத் துப்பாக்கி முனையில் ஒருவன் பாலியல் அடிமையாகக் கடத்திப் போனதைத் தடுக்க வழியின்றி வேடிக்…

  20. கயா அத்தனை அழுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தூசி, புகை, அழுக்கு, குப்பை, சாக்கடை. பண்டைய இந்தியாவில் பெரும் பேரரசை பிஹார் இயக்கியிருக்கலாம். நவீன இந்தியாவில் அது கிராமங்களின் தொகுப்பு. அமைதியான கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற பெயரைக் கொண்ட அழுக்கான கிராமங்கள். அன்றைக்குப் பகலில் மின்சாரமே இல்லை. நம்மூர் மின்வெட்டு ஞாபகம் வந்தது. பிஹாரிகளோ, “எங்களுக்கு மின்வெட்டு ஒரு பிரச்சினை இல்லை. இருட்டிய பிறகு மின்சாரம் கிடைப்பதே இங்கே பெரிய விஷயம். அதுவும், நிதிஷ் ஆட்சிக்கு வந்ததால் கிடைத்தது” என்றார்கள். தமிழக ஜனத்தொகை 7 கோடி. பிஹார் ஜனத்தொகை 11 கோடி. தமிழக மின்நுகர்வு 12,000 மெகாவாட். பிஹார் மின்நுகர்வு 3,500 மெகாவாட். இது நிதிஷின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு. அப்படியென்…

  21. தலைநகர் பிரஸல்ஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்:பெல்ஜியம் அரசு பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸ் நகருக்கு "உடனடியான, மிகத் தீவிரமான" பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு கூறியுள்ளது. பிரஸல்ஸில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன இதையடுத்து, அங்கு ஓடும் மெட்ரோ ரயில்கள் குறைந்தது ஞாயிற்றுக்கிழமை வரையிலாவது மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாப்பிங் மால்கள், இசைக் கச்சேரிகள் போன்ற அதிக கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தின் பிற பகுதிகள் குறைவான உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பெல்ஜியத் தலைநகரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பார…

  22. பரங்கிப்பேட்டையிலிருந்து ஐ.எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் | கோப்புப் படம். ஹாஜா ஃபக்ருதீன், அவரது நண்பர் குல் முகமது மரகாச்சி மரைக்காயர். இவர்கள் இருவரது கதையைப் படித்தால் உலகளவில் ஐ.எஸ். கோட்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. …

  23. பிகார் துணை முதல்வரான ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்! பிகாரின் துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தேஜஸ்வி ஒரு ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் என்பதுதான். டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஒரு ஐ.பி.எல். போட்டியில் கூட களமிறங்கியது இல்லை என்பது வேறு விஷயம். பிகார் முதல்வராக நேற்று நிதிஷ் குமார் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி சார்பில், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். தற்போது 26 வயதே நிரம்பிய தேஜஸ்வி யாதவ், லாலுவின் 9 பிள்ளைகளில் கடைக்குட்டி இதனால் லாலுவுக்கு இவர் மீது தனிபாசம். டெல்லி பப்ளிக் பள்ளியில் படிக்க வைத்தார். 9-ம் வ…

  24. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரை துருக்கி அரசு நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 2 பேரும் கடந்த 10 நாட்களுக்கும் முன்னர் தங்கள் பெற்றோரிடம் சென்னையில் வேலை பிடிக்கவில்லை என்றும், பெங்களூருக்கு செல்வத்காகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது துருக்கி நாட்டிற்கு சென்று அங்கிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதிக்கு சென்றிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காகவே அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துருக்கி சென்ற இரு இளைஞர்க…

  25. ஐ.எஸ். அமைப்பை அழிப்பது அவசியம்: ஐ.நா. சபையிடம் பிரான்ஸ் வலியுறுத்தல் பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து விமான நிலையம், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர். படம்: ஏஎப்பி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 129 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஐ.எஸ். அமைப்பின் தலைமை யகமான சிரியாவின் ரக்கா நகரம் மீது பிரான்ஸ் போர்விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வரு கின்றன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.