உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
இஸ்ரேல் ராணுவ வீரரைக் கத்தியால் குத்த முயன்ற பெண் சுடப்பட்டார் (வீடியோ) ஜெருசலேம்: ஜெருசலேம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்த முயன்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஜெருசலேமில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கரை பெய்டர் லிலிட் பகுதியில், பாலஸ்தீனிய பெண் ஒருவர் சாதாரணமாக நடந்து வந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் யூத நகரத்திற்குள் நுழைய ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கிரிடென் பெர்கர் என்ற இஸ்ரேல் வீரர் , அவரிடம் அடையாள அட்டையைக் கேட்கிறார். அடையாள அட்டையை அந்த பெண் காட்டுகிறார்.…
-
- 0 replies
- 556 views
-
-
ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகினூர் வைரம்: பிரிட்டன் அரசி மீது வழக்கு! இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பிரிட்டன் அரசர் நான்காம் ஜார்ஜ் காலத்திலிருந்து ( 1937-ம் ஆண்டு முதல்) பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது. தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தில் கோகினூர் வைரம் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு முதல் அவரது கிரீடத்தில் கோகினூர் வைரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரிட்டன் அரசுரிமை பொருளா…
-
- 3 replies
- 1.5k views
-
-
மேற்கு சஹாராவில் சமரசத்துக்கு இடமில்லை சர்ச்சைக்குரிய மேற்கு சஹாராவின் ஆளுகை குறித்தான சமசரங்கள் எவற்றுக்கும் இடம் கிடையாது எனவும், மொரோக்கோவின் கீழ் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனவும், அந்நாட்டின் அரசர் மொஹமட் ஏஐ தெரிவித்துள்ளார். மேற்கு சஹாரா மீதான ஆளுகை தொடர்பாக பல நாடுகள் தங்களது கோரிக்கையை விடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக நான்கு தசாப்தங்களாகக் குழப்பம் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பேரம் பேசலை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை, அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே, பிராந்தியத்துக்குத் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனத் தெரிவித்த அரசர், 'மொரோக்கோ வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இதுதான்" எனத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 553 views
-
-
நானும் ஒரு பெண்ணியவாதி' - நடிகை எம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த மலாலா எம்மா வாட்சன் - மலாலா | கோப்புப் படம் பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார். மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார். “பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை. நான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. சில நேர்ம…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும்: கமரூன் தனது சீர்திருத்தக் கோரிக்கைகள் கேட்கப்படாது விட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருப்பது தொடர்பில் தான் மீண்டும் சிந்திக்க வேண்டி ஏற்படும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஐரோப்பியத் தலைவர்களை எச்சரிக்கவுள்ளார். பிரித்தானியாவுக்காக வேண்டப்படும் மாற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய சபையின் தலைவருக்கு கடிதம் வரையவுள்ள, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சமகாலத்தில் நாளை தனது எச்சரிக்கையையும் விடுக்கவுள்ளார். டொனால்ட் டஸ்க்குக்கு வரையப்படவுள்ள மேற்படிக் கடிதம் மூலம், தனது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை தொடர்பில் முறையாக பே…
-
- 4 replies
- 1.3k views
-
-
அரவிந்த் கேஜ்ரிவால். | கோப்புப் படம்: சுசில் குமார் வர்மா. பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்வி, பிரதமர் மோடியின் அரசின் செயல்பாடுகள் மீதான தீர்ப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் அவரது செயல்பாடுகள் மீதான தீர்ப்பே பிஹார் தேர்தல் முடிவுகள். ஆளும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றி, மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோரது அராஜகம் மற்றும் கர்வத்தை சுக்குநூறாக்கியுள்ளது. வெறுப்பின் மீது கட்டப்படும் அரசியலை பிஹார் மக்கள் அனுமதிக்கவில்லை. நாட்டை சகிப்பின்மை…
-
- 0 replies
- 541 views
-
-
மகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி; பிஹாரில் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் நிதிஷ் குமார் பிஹாரில் நிதிஷ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் | படம்: ரஞ்சித் குமார் பிஹார் மாநில சட்டப்பேரவையின் 243 தொகுதிகளில் 170-க்கும் மேலான இடங்களை வசப்படுத்தும் நிதிஷ் - லாலு - காங்கிரஸ் மெகா கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். பிரதமர் மோடியின் பிரச்சார யுக்தியும், அமித் ஷாவின் தேர்தல் வியூகங்களும் பிஹாரில் கைகொடுக்கவில்லை என்பது தெளிவானது. | இணைப்பு - பிஹார் தேர்தல் முடிவுகள் - செய்தித் தொகுப்பு | நாடு முழுவதிலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பிஹார் மாநில சட்டப்பே…
-
- 0 replies
- 464 views
-
-
டைட்டானிக் 'மெனு' ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது other டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு மூழ்கியது AP ஜான் எஃப் கென்னெடி 1963-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார் டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட கடைசி இரவு விருந்தின் மெனு ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு ஏலம் போயுள்ளது. டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக கடைசியாக அளிக்கப்பட்ட இரவு விருந்தின் உணவுப் பட்டியல் (மெனு) கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரம் டாலருக்கு அமெரிக்காவில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. சூப்பர் வகுப்பு பயணிகளுக்கு அளிக்கப்பட்ட மெனுவ…
-
- 0 replies
- 417 views
-
-
தாவூத்தை நெருங்கும் இந்தியா: காப்பாற்ற தீவிரம் காட்டும் பாகிஸ்தான்! புதுடெல்லி: தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய உளவுத்துறை நெருங்கி விட்டதாகவும், ஆனால், அவரை காப்பாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 23 ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் பல பெயர்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், ஆஸ்திரேலியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா வந்தபோது பாலி நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இந்திய சி.பி.ஐ. சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், தாவூத் இப்ராஹிம் குறித்த பல்வேறு தகவல்களை சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 449 views
-
-
குண்டுவெடிப்பால் சிதறியது ரஷ்ய விமானம்: கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தகவல் எகிப்தின் சினாய் பகுதியில் சிதறி விழுந்த ரஷ்ய விமானத்தின் பாகங்கள் எகிப்தின் சினாய் பகுதியில் விழுந்த ரஷ்ய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை, குண்டு வெடிப்பால்தான் அந்த விமானம் சிதறி விழுந்துள்ளது என்று கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரஷ்யாவில் இருந்து எகிப்துக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ரத்து செய்தார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி எகிப்தின் ஷரம் அல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்த 22-வது நிமிடத்த…
-
- 0 replies
- 439 views
-
-
ஏவுகணை வீச்சில் இருந்து தப்பிய இங்கிலாந்து விமானம் Krish November 07, 2015 Canada இங்கிலாந்தின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் உடனடி நடவடிக்கையால் மோதலுக்கு உட்படாமல் தப்பியது. அதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியதுடன் மரணத்திற்கு மிக நெருங்கிய இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை. எகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 224 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து ஜெட் வ…
-
- 0 replies
- 535 views
-
-
ரஷ்ய அதிபர் புதின் நண்பர் அமெரிக்க ஹோட்டலில் மர்ம மரணம்: பரபரப்பு தகவல்கள்! வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நெருங்கிய நண்பரும், பிரபல தொழிலதிபருமான மிகயீல் லெஸின், அமெரிக்காவின் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதினின் மிக நெருங்கிய நண்பர்களில் குறிப்பிடத்தக்கவரான மிகயீல், ரஷ்ய அரசின் ஊடகத்துறையில் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் என்பதும், இவரது பதவி காலத்தில் ரஷ்யாவில் ஊடகங்களுக்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999 முதல் 2004 ம் ஆண்டுவரை அந்நாட்டின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி துறையின் அமைச்சராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். ரஷ்ய அரசுக்கு சொந…
-
- 0 replies
- 552 views
-
-
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவு இம்ரான் கான் - ரேஹம் கான். | கோப்புப் படம்: பிடிஐ. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீர்ரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவடைந்தது. ரேஹம் கான் மற்றும் இம்ரான் ஆகியோர் பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர். முதலில் பிரிட்டனைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித் என்பவரை இம்ரான் திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2004-ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். தற்போது டிவி நிருபர் ரேஹம் கானுடனான திருமண உறவு 10 மாதகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பரஸ்பர புரிதல் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. இம்ரான் கானின் …
-
- 3 replies
- 1k views
-
-
சிரியாவில் 65,00 பேர் காணாமல் போயினர் 2011ஆம் ஆண்டில் சிரிய சிவில் யுத்தம் ஆரம்பித்திருந்து, 65,000க்கும் மேற்பட்டோர் , அரசாங்கத்தினால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்ப்புக் குரலைக் கொண்டுள்ளோரையே அரசாங்கம், இவ்வாறு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில், காணாமல் போகச் செய்வதாக அச்சபை மேலும் தெரிவிக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 'சிறைக்கும் கல்லறைக்கும் நடுவில்" என்ற தலைப்பில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் நான்கு பிரிவுகளான இராணுவப் புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிர…
-
- 0 replies
- 686 views
-
-
15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீன பீங்கான் குடுவை ரூ.1.15 கோடிக்கு ஏலம் சீனாவின் பழங்கால பீங்கான் குடுவை ஒன்று, ரூ.1.15 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் உள்ள பீட்டர் பிரான்சிஸ் என்ற ஏல நிறுவனம் கடந்த புதன்கிழமை அரிய பொருட்களை ஏலம் விட்டது. இதில் சீனாவின் பழங்கால பீங்கான் குடுவை ஒன்று ஏலம் விடப்பட்டது. அழகிய பூ வேலைப்பாடுகளுடன் இந்த குடுவை 19 சென்டிமீட்டர் உயரம் உடையது. அதன் இரு பக்கமும் யானை தலை போன்ற வடிவில் சிறிய கைப்பிடிகள் உள்ளன. அடிபாகம் பெருத்தும் வாய் பாகம் குறுகியும் இருக்கும் சீன பீங்கான் குடுவைகள் மிகவும் பிரபலமானவை. பார்ப்பதற்கு ஆங்கில எழுத்தான 'S' போல இருக்கும். அந்த வகையை சேர்ந்த இந்த சீன …
-
- 0 replies
- 759 views
-
-
பஹ்ரைனில் 47 தீவிரவாதிகள் கைது: ஈரான் ஏவிவிட்டதாக குற்றச்சாட்டு நாசவேலையில் ஈடுபடும் நோக்கத் துடன் தங்கள் நாட்டில் செயல்பட்டு வந்த, ஈரானின் தீவிரவாத முகாமை அழித்துவிட்டதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. தீவிரவாத முகாமில் இருந்த 47 தீவிரவாதி களையும் கைது செய்திருப் பதாக அறிவித்துள்ளது. பஹ்ரைன் நாட்டின் உள்வி வகாரத்தில், அண்டை நாடான ஈரான் தலையிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பஹ்ரை னுக்குள், பயிற்சி பெற்ற தீவிர வாதிகளை அனுப்பி, அந்நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் ஈரான் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வந்தது. இந்த சூழலில், தலைநகர் மனாமா மற்றும் அதைச் சுற்றி யுள்ள புறநகர் பகுதிகளில், நேற்று பஹ்ரைன் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுப…
-
- 0 replies
- 530 views
-
-
லிங்கனின் கடிதம் ரூ.14.5 கோடிக்கு ஏலம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்கள் முன்பு தன் கைப்பட 10 வயது சிறுவனுக்கு எழுதிய கடிதம் 22.13 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.14.5 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்டது. 1865-ம் ஆண்டு, லிங்கன் தனது உள்துறை அமைச்சர் ஜான் யூசரின் மகன் லின்டன் யூசருக்கு இக்கடிதத்தை கைப்பட எழுதி, கையொப்பமிட்டுள்ளார். தனது இரண்டாவது தொடக்க உரையின் கடைசி பகுதியை அதில் லிங்கன் எழுதியுள்ளார். ஹெரிடேஜ் ஏல மையத்தில் நேற்று முன்தினம் விடப்பட்ட ஏலத்தில் இக்கடிதம் சுமார் ரூ.14.5 கோடிக்கு எடுக்கப்பட்டது. ஏலத்தில் எடுத்தவர் தனது பெயரை வெளியிட விரும்ப வில்லை. இதுபோன்று 5 கடிதங்களே இருப்பதால் இது மிகவும் அரிதானதாகக் க…
-
- 0 replies
- 494 views
-
-
கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ட்ருடியூ பதவியேற்றார் கனடாவின் ஒட்டாவா நகரில் 23-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டின் ட்ருடியூ. படம்: ஏஎப்பி கனடா நாட்டின் 23-வது பிரதமராக விடுதலை கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ருடியூ (43) நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். ஒட்டாவா நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ரிடியூ அரங்கு) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜஸ்டினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரெஞ்சு மொழி ஆசிரியராக பணியாற்றிய இவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 43 வயதான ஜஸ்டின், கனடா வரலாற்றில் 2-வது இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது தந்தை பீரே ட்ருடியூ கடந்த 1968 முதல் 1984 வரை (சிறிது இடைவெளி விட்டு) பிரதமராக …
-
- 0 replies
- 627 views
-
-
சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத்தின் இரகசிய மனைவிக்கு 425 கோடி ரூபா வழங்குமாறு இளவரசர் அப்துல் அஸீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு 2015-11-05 11:24:49 சவூதி அரேபிய முன்னாள் மன்னர் பஹத்தின் இரகசிய மனைவி எனக் கூறப்படும் பெண்ணொருவருக்கு 2 கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களை (சுமார் 425 கோடி ரூபா) வழங்குமாறு பிரித்தானிய நீதிமன்றமொன்று நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. 1982 முதல் 2005 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை சவூதி அரேபியாவை ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்தின் இரகசிய மனைவி என ஜெனான் ஹார்ப் எனும் பெண் கூறினார். தற்போது 68 வயதான ஜெனான் ஹார்ப், பலஸ்தீன கிறிஸ்தவ குடும்பமொன்றில் பிறந்தவர். தற்போது அவர் பிரித்தானிய பிரஜையா…
-
- 2 replies
- 1.6k views
-
-
விமான விபத்தில் உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் தலைநகர் ஜுபா விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு சரக்கு விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியது. தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் வெள்ளை நைல் நதிப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 41 பேரும் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இடிபாடுகளுக்கிடையே ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
ருமேனியா பிரதமர் விக்டர் திடீர் ராஜினாமா ருமானியாவில் இரவு விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 30 பேர் உயுிரிழந்தனர். இந்த விபத்தை தடுக்க அரசு தவறியதாக போராட்டம் நடந்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் விக்டர் பான்டா நேற்று திடீரென பதவியில் இருந்து விலகினார். ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில், இரவு விடுதியில், திடீரென தீ விபத்து நேரிட்டது. அப்போது விடுதியில் இருந்தவர்களில், 30 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 130க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனயில் சேர்க்கப்பட்ட னர். இந்த தீ விபத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும், பிரதமர் விக்டர் பான்டா, உள்துறை அமைச்சர் கேப்ரியல் ஆப்ரியா மற்றும் அந்நகர மேயர் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும், நேற்று, 20 ஆயிர…
-
- 0 replies
- 642 views
-
-
மாட்டிறைச்சி சர்ச்சைக்கு பதிலடி..சிக்கன் விற்பனைக்கு தடை கேட்கிறது முருக பக்தர்கள் முன்னேற்ற சங்கம். சென்னை: பெரும்பான்மை இந்துக்களின் உணர்வை புண்படுத்துவதாக கூறி, மாட்டிறைச்சிக்கு தடை கேட்டு வட இந்தியாவின் இந்துத்துவா அமைப்புகளும், சில அரசியல்வாதிகளும் சர்ச்சை கிளப்பிவருகின்றனர். பசு என்பது இந்துக்களுக்கு புனிதமானது என்பதை காரணமாக கூறி, தடை கேட்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மாட்டிறைச்சி சர்ச்சை நாடு முழுவதிலும் உச்சத்தில் உள்ளது. இதை கேலி செய்யும்விதமாக, சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஒரு படம் பரவிவருகிறது. அந்த படத்தில் முருகப்பெருமான் கையில் சேவற்கொடியோடு காட்சியளிக்கிறார். முருகரின் படத்துக்கு அருகே சேவல் படத்தை தனியாக எடுத்துப்போட்டு, அ…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. http://www.vikatan.com/news/article.php?aid=54652
-
- 0 replies
- 350 views
-
-
காதலனுடன் சென்ற பெண் கல்லால் அடித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம் காபூல்: காதலனுடன் சென்ற பெண்ணைக் கல்லால் அடித்துக் கொன்ற கொடூரம் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெரோஸ்கோவிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள கல்மீன் என்ற இடத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் ரோக்சஹானா. 21 வயதான இந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்தப் பெண், தனக்கு விருப்பமானவருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் அந்தப் பெண் மீது அதே ஊரைச் சேர்ந்த ஆண்கள் பலரும் கற்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி கொலை செய்தனர். அந்தப் …
-
- 0 replies
- 429 views
-
-
ஜூபா: தென்சூடானின் தலைநகர் ஜூபா விமான நிலையத்தில் ரஷ்யா தயாரிப்பு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி 40 பேர் பலியாகி உள்ளனர். எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற பயணிகள் விமானம் அண்மையில் ஷினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கி 224 பேர் பலியாகினர். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு ரஷ்யா தயாரிப்பு விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. தென் சூடான் தலைநகர் ஜூபா விமான நிலையமானது வெள்ளை நைல் நதி கரையில் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று ஒரு விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே 800 அடி உயரம் பறந்த நிலையில் அது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 40 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது பலோச் என்ற மற்றொரு நைல் நதி கரை ந…
-
- 1 reply
- 590 views
-