உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
கொள்ளை மற்றும் பண மோசடி மூலம் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்க வெளிநாட்டினர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என பிரதமர் கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 31 தொழிலதிபர்கள் மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமருடன் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பிரதமர் கேமரூன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் கொள்ளை மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தை கொண்டு பிரித்தானியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்நிய நிறுவனங்கள்…
-
- 3 replies
- 981 views
-
-
ஆரத்தழுவிய அக்கா...உச்சிமுகர்ந்து முத்தமிட்ட சாரா பாட்டி: ஒபாமாவின் கென்யா பயணம் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 06:11.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியான பிறகு பராக் ஒபாமா முதன் முறையாக தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றுள்ளார்.கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணியளவில் ஒபாமா சென்றடைந்தார். அங்கு, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மற்றும் மந்திரிகள் உயரதிகாரிகள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். ஒபாமாவின் சகோதரி ஆவ்மா (தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர்) ஒபாமாவை ஆரத்தழுவி வரவேற்றார். ஒபாமாவின் வருகைக்காக மாதக்கணக்கில் காத்திருந்த சாரா பாட்டி, பேரனை உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு வாழ்த்தினார். தந்தைவழி குடும்பத்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
பஞ்சாப் - குர்தாஸ்பூரில் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் கார். | சந்தேகிக்கப்படும் தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பேருந்து ஒன்றிலும், காவல் நிலையத்திலும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கியதில் 5 பேர் பலியாகினர். இன்று அதிகாலை நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவலர் உட்பட 5 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 5 பேர் கொண்ட குழு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என நம்பப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணியில் ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆலோச…
-
- 1 reply
- 685 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: இறந்த தோழியின் கையை இறுகப்பிடித்துகொண்டு உயிருக்கு போராடிய பெண் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 07:10.13 மு.ப GMT ] துருக்கியில் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் மற்றும் குர்தீஸ் தீவிரவாதிகளாலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால், இதற்கு முடிவு கட்டும் விதமாக துருக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. சிரியாவின் எல்லையில் சோதனை நடத்தி நூற்றுக் கணக்கான தீவிரவாதிகளை கைது செய்தது. அவர்களில் குர்தீஸ் தீவிரவாதிகளும் அடங்குவர். மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தியதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 1…
-
- 0 replies
- 1k views
-
-
25 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பணிப்பெண் பிணமாக கண்டுபிடிப்பு! (வீடியோ இணைப்பு)[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2015, 11:10.19 மு.ப GMT ] 25 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பணிப்பெண்ணின் உடல் குட்டை நீருக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ரீட்டா சுயே ஸுல்-லை(36) என்பவர் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இவர் காணாமல்போய்விட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புளோரிடாவில் உள்ள குட்டை நீருக்குள் மூழ்கி கிடந்த காருக்குள் இவரது உடல் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதே பகுதியில் காணாமல் போன மற்றொரு பெண்ணை கண்டுபிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தபோது, 25 ஆண…
-
- 0 replies
- 566 views
-
-
பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: விளாசித்தள்ளிய சசி தரூர் உரை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார். இணையத்தில் லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட …
-
- 6 replies
- 984 views
-
-
பாரீஸ் நகர வீதிகளில் பிணங்களாக குவிப்போம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி சவால் டமாஸ்கஸ்: பாரீஸ் நகர தெருக்களில் பிணங்களாக குவிக்கப் போகிறோம் என்று பிரான்ஸை சேர்ந்த தீவிரவாதி கூறும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரான்ஸை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் தனது முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு சிரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை மலை உச்சியில் முழங்காலிட வைத்துள்ளார். பின்னர் அந்த தீவிரவாதி ராணுவ வீரர் பின்னால் நின்று கொண்டு அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டார்.இதில் பலியான வீரரை தீவிரவாதி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அதன் பிறகு தீவிரவாதி கூறுகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெருக்களில் பிணங்களா…
-
- 3 replies
- 988 views
-
-
கென்யாவில் ஒபாமா: அதிபரான பின் முதன்முறையாக தந்தையின் நாட்டுக்கு சென்றார் ஒபாமாவை வரவேற்கும் கென்ய சிறுமி. | படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அதிபர் ஒபாமா தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார். அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா மீது அதிக அளவு ஈர்ப்பு கொண்டிடுக்கும் கென்யா நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு அந்நாட்டு அதிபர் உஹுரு கென்யத்தா வரவேற்பு அளித்தார். இருபுறங்களிலும் நின்ற மக்கள் கென்ய மற்றும் அமெரிக்க நாட்டின் கொடியை ஏந்தியபடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். ஒபாமாவின் வளர்ப்புப் பாட்டியான சாரா, அவரை சந்திக்க நய்ரோபி வந்தி…
-
- 0 replies
- 410 views
-
-
கனடா- 27வயதுடைய பிறேசில் நாட்டை சேர்ந்த நீச்சல்காரர்கள் விளையாடும் கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் ஒருவர் டவுன்ரவுனில் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றத்திற்காக பொலிசார் பிடியாணை ஒன்றை விடுத்துள்ளனர்.யூலை 16ந்திகதி 22வயது பெண் ஒருவர் தனது படுக்கை அறையில் நித்திரை செய்து கொண்டிருந்த சமயம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.டவுன்ரவுனில் எப்பகுதியில் சம்பவம் நடந்த தொடர்மாடிக்கட்டிடம் அமைந்துள்ளதென்பதை பொலிசார் குறிப்பிடவில்லை.பாதிக்கப்பட்டவர் Pan Am விளையாட்டு வீரரல்ல. தனது நண்பர் ஒருவருடனும் பிறேசில் நாட்டு நீச்சல் கைப்பந்தாட்ட குழுவை சேர்ந்த இருவருடனும் இருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Thye Mattos Ventura Bezerra என்ற இச்சந்தேக நபர் பெ…
-
- 0 replies
- 503 views
-
-
அமெரிக்காவி லூசியானா மாகாணத்தில் சினிமா தியேட்டரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டு உள்ளார். லூசியானாவின் லஃபாயெட்டி நகரில்உள்ள கிராண்ட் சினிமா தியேட்டரில் இரவு 7:00 மணியளவில் மர்மநபர் நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி சூட்டை அடுத்து அங்கிருந்த மக்கள் தங்களது உயிரை காத்துக் கொள்ள பதட்டத்துடன் ஓடினர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து போலீசாரும் அங்கு விரைந்தனர். இதற்கிடையே பொதுமக்களை குறிவைத்து மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபருக்கு சும…
-
- 0 replies
- 499 views
-
-
திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு இந்த வெங்காயங்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்க! லண்டன்: கெட்ட மனசுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அந்த மனசுக்கு யாருமே நினைக்க முடியாத அளவுக்கு வில்லத்தனமா யோசிக்கத் தோன்றும். அவர்களை ஊர் பக்கத்தில் வினயம் பிடித்தவர்கள் என்று "செல்லமாக" கூப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.. இதோ லண்டனில் கூட உள்ளனர். இந்த உலகமே நமக்குச் சொந்தம்தான். ஆனால் மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை குரோதம், சின்னப்புத்தி, துரோகம், போட்டி, பொறாமை. லண்டனில் வீடு இல்லாதவர்கள் வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக தங்களது வீட்டின் முன்பு காலியாக உள்ள இடங்களை வினோதமான முறையில் டிசைன் செய்து மாற்றி நம்பியார்த்தனமாக நடந்து கொள்கிறார்கள…
-
- 11 replies
- 1.3k views
-
-
தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனையே சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் இன்றைய நவீன காலத்திலும் பேய், மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் பணம் பறித்து செல்லும் சம்பவங்களும் நமது தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறி வருகிறது. அதேப் போல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:– உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவர் தனது தோட்டத்தில் தென்னைமரங்களை வளர்த்து வருகிறார். இந்த தென்னந்தோப்பு மத்தியில் உள்ள பண்ணை வீட்டில் கோவிந்தா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பைந்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ராஜிவை போல் மோடியை கொல்ல சதி: அதிகாரிகள் 'அலர்ட்' புதுடில்லி : பீகார் செல்லும் பிரதமர் மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதி நடப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு (ஐ.பி.,) எச்சரித்துள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை பீகாரில் உள்ள பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு பிரதமர் செல்கிறார். பீகாரில் நடக்க சட்ட.சபை தேர்தலுக்கான பிரசாரத்தை அங்கு துவக்குகிறார். இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்வை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் …
-
- 0 replies
- 601 views
-
-
உலகின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் மோடியின் புகைப்படம் கூகுள் தேடுப்பொறியில் உலகின் முட்டாள் பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முட்டாள் பிரதமர்கள் என கூகுள் புகைப்பட தேடுப் பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றுகிறது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் கூகுள் நிறுவனம், மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் கூகுள் தேடுப்பொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் என டைப் செய்து புகைப்படத் தேடுப்பொறியில் தேடினால், மோடியின் புகைப்படம் தோன்றியது. தவறாக அவர் புகைப்படம் டேக் செய்யப்பட்டு விட்டதாக கூகுள் நிறுவனம் மன்னிப்பும் கோரியது. இதனை…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை 2004ல் இருந்து இதுவரை காணாத அளிவில் கனடிய டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது.கனடிய லூனியின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக 76.70ஆக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சி ஆறு வருடங்களிற்கும் மேலாக 2009 மார்ச் 9ல் 76.85 ஆக இருந்ததை விட குறைவானது. 11வருடங்களிற்கு முன்னர் 2004 செப்டம்பரில் 75சத மட்டத்தை தொட்டபின்னர் இந்த அளவிற்கு வீழ்ச்சியடையவில்லை என கூறப்படுகின்றது.கடந்த கோடைகாலத்தில் எண்ணெய் விலை வலுவிழக்க தொடங்கிய போது டொலர் கீழ் நோக்கி சரிவடைய ஆரம்பித்தது. - See more at: http://www.canadamirror.com/canada/46597.html#sthash.bRnxvwBk.dpuf http://www.bankofcanada.ca/rates/exchange/daily-converter/ ஆனால் இந்த வீடு விற்பனையாளர்களும் அவர்களுக்காக விபச்சாரம் மன்னிக்கவும் பிரச்…
-
- 0 replies
- 457 views
-
-
இந்தியாவை கலக்கும் மருத்துவ மாணவர் தேர்வு மோசடி! 36 பேர் பலி! மத்திய அரசு ஆட்டங்காணுமா? [ வியாழக்கிழமை, 23 யூலை 2015, 09:04.35 AM GMT ] வியாபாரம் என்ற மத்திய பிரதேச மாகாண மருத்துவ பரீட்சை மையத்தில் இடம்பெற்ற மாபெரும் பரீட்சை முறைக்கேட்டு ஊழலில் 2,000 பேர் கைது செய்யப்பட்டாலும் மருத்துவர்களின் தராதரம் பற்றிய கேள்வியை அது எழுப்பியுள்ளது. இப்போது இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டுள்ள இந்த விவகாரம் அந்த மாகாணத்தின் ஆளும் கட்சியான பா.ஐ.கட்சியையும், மோடியின் மத்திய அரசையும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது என இவ்வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா அவர்கள் குறிப்பிட்டார். http://www.tamilwin.com/show-RUmtyHRXSVnv0H.html#
-
- 0 replies
- 605 views
-
-
ஜகார்தா: இந்தோனேசியாவில் 5 எரிமலைகள் வெடித்து வானெல்லாம் புகையும், சாம்பலுமாக உள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இருக்கும் மவுண்ட் ரவ்ங் எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலையைச் சுற்றியுள்ள 6 ஆயிரத்து 560 அடிக்கு சாம்பலாக உள்ளது. கடந்த சில நாட்களாக குமுறிய எரிமலை வெடித்துள்ளது. மேலும் மொலுக்காஸ் தீவுகளில் உள்ள கமாலாமா மற்றும் டுகோனோ எரிமலைகள், சுமத்ரா தீவில் உள்ள சினபங் எரிமலை மற்றும் சியாவ் தீவில் உள்ள கரங்கெடாங் எரிமலை ஆகியவை வெடித்து சாம்பலாக கக்கி வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் வானம் இருண்டு, புகைமூட்டமாக உள்ளது. காற்றில் சாம்பல் கலந்து வருகிறது. எரிமலைகள் வெடித்துள்ளதால் அந்த பகுதிகளில் வசித்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகா…
-
- 0 replies
- 780 views
-
-
குட்டி ஏலியன்ஸ் வந்தாச்சு...! தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும் 'ஏலியன்ஸ்' என்று செல்லமாகவும் அழைக்கப்படும் டி வில்லியர்சுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்சின் மனைவி டெனிலாநிறைமாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் தென்ஆப்ரிக்கா திரும்பி சென்ற டி வில்லியர்ஸ் மனைவி டெனிலாவை அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்,அவரது மனைவி டெனிலா நேற்று ஆண் குழந்தை பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக உள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட்டையை கிளப்பிவரும் சுஷ்மா….. July 22, 20157:58 pm சுஷ்மா சுவராஜை வெளியுறவுத்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கியே தீர வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் இன்று இரண்டாவது நாளாக பாராளுமன்றம் முடங்கிப்போய் உள்ளது. சுஷ்மாவை பதவி நீக்கம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சுஷ்மா சுவராஜின் அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் இதுநாள் வரை காணப்பட்ட சுயகுறிப்பு விபரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை, அவரது முகப்பு பக்கத்தில் காணப்பட்ட ‘வெளியுறவுத்துறை மந்திரி’ என்னும் அடையாளக் குறியீடு தற்போது மாயமாகி விட்டது. இதில் ஏதோ சூட்சமம் உள்ளதாகவும், ஏதோ ஒரு மாற்றத்துக்கான முத…
-
- 0 replies
- 572 views
-
-
பதறும் சிறுவனின் கொலையின் நிஜ காட்சிகள்…. July 22, 201510:44 pm பங்களாதேஷ் நாட்டில் சிறுவனொருவன் அடித்துகொல்லப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. சமியுல் என்ற 13 வயதான சிறுவன் சைக்கிள் ‘ரிக்சா’ ஒன்றை திருட முயன்றதாக க் கூறி அவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தாக்குதலை நடத்தியோரில் ஒருவர் சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தாக்குதலை நட த்தியவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்றபோதிலும் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலில் 60 வரையான காயங்கள் இருந்த தாகவு…
-
- 0 replies
- 691 views
-
-
திரைத்துறையில் உலக வல்லரசாக வேண்டும் என்பது பாகிஸ்தானின் ஆசை. இந்திய திரைத்துறையில் பதிந்திருக்கும் கண்களை தமது பக்கம் திரும்பச் செய்து, சர்வதேச மட்டத்தில் அத்துறையின் தன்னை முக்கிய பங்காளியாக்கும் நோக்குடன் ஒரு புதிய படத்தை அது வெளியிட்டிருக்கிறது. 'பின்ரோய்' என்ற அந்தப் படம் இந்திய திரைத்துறையின் வழமையான தயாரிப்புச் செலவுகளுக்கு நிகராக செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகள், ஆடல்கள், பாடல்கள் என இந்திய சினிமாவின் பாணியை இது பின்பற்றுகின்றது. இது குறித்த பிபிசியின் ஒரு காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/07/150722_binroye
-
- 2 replies
- 509 views
-
-
ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். பிரிட்டனின் காலனியாதிக்கத் தாக்கங்களை தெளிவான புள்ளிவிவரம் மட்டுமின்றி, சுருக்கென குத்தும் நகைச்சுவையுடனும் தார்மிக சீற்றத்துடனும் ஆக்ஸ்ஃபோர்டில், சசி தரூர் எம்.பி. பேசிய வீடியோ, இந்திய இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. | வீடியோ இணைப்பு கீழே. | இந்தியாவின் பொருளாதார பின்னடைவுகளுக்கு சுதந்திரம் பெற்றதற்கு பிறகான ஊழல்கள், மக்கள் தொகை ஆகியவை பெரிதுபடுத்தப்படும் வேளையில், பிரிட்டன் காலனியாதிக்கத் தாக்கம், இந்தியாவின் வளர்ச்சியை பெரிதும் முடக்கிய வரலாறுகளை நாம் மறந்திருக்கிறோம். பள்ளிப் பாடப்புத்தகங்களில் நமக்கு போதிக்கப்பட்டதெல்லாம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்களின் தியாகங்கள் போன்றவையே.…
-
- 0 replies
- 577 views
-
-
பிள்ளைகளை எப்படிக் கையாளுவது என்பதற்கு கால்பந்தாட்டத்திலும் விதிகள் உண்டு. ஆனால் 14 வயதேயுடைய இளம் கால்பந்தாட்ட வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவுக்கு ஃபிஃபா விதிகளுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் கொண்டுவரப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து பதினையாயிரம் பதின்ம வயது கால்பந்தாட்ட வீரர்கள் வெளியே கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்றும் இவர்களில் பலர் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்றனர் என்றும் அரசு சார அமைப்பொன்று மதிப்பிடுகிறது. 18 வயதுக்கு குறைவான வெளிநாட்டு வீரர் ஒருவரை அணியில் சேர்த்ததற்காக ஐரோப்பிய சாம்பியன்களான பார்செலோனாவுக்கு வீரர்களைப் பரிமாறிக்கொள்ள ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உலக கால்பந்தி…
-
- 0 replies
- 265 views
-
-
சிறிலங்கா, மியான்மார் தேர்தல்களும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் – அட்மிரல் டெனிஸ் பிளேயர்JUL 22, 2015 | 11:09by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா மற்றும் மியான்மார் ஆகிய இரண்டு ஆசிய நாடுகளிலும் வரும் மாதங்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின் பெறுபேறுகள் ஆசியப் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இவ்வாறு அமெரிக்க கடற்படையின் ஓய்வுபெற்ற தளபதியான அட்மிரல் டெனிஸ் சி பிளேயர்* எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். Pakistan observer நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தக் கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. உலக வரைபடத்தில் சிறிலங்காவை அல்லது மியான்மாரை பெரும்பாலான அமெரிக்கர்களால் இலகுவாகக் கண்டுபிடிக்க முடியாத …
-
- 0 replies
- 367 views
-
-
சன் டி.வி.குழுமத்துக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் ஊடக உலகத்தை நடுங்க வைத்துள்ளது. 33 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் 45 வானொலி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்த குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் அண்ணன் என்பதால், இந்தக் குழுமம் பல்வேறு சோதனைகளை சந்திக்கிறது. இந்த குழுமம் தொடங்கப்பட்டதிலிருந்தே போட்டியும் பொறாமையும் கூடவே வளர்ந்து வந்தன. அதற்கு ஏற்றாற் போல் அக்குழுமத்தைச் சார்ந்தவர்களில் ஒருவரான தயாநிதி மாறன் மத்திய அமைச்சரானது, அதுவும் தொலைத் தொடர்புத்துறைக்கே அமைச்சரானது சன் டி.விக்கு தலைவலியாக மாறியது. சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந…
-
- 6 replies
- 1.4k views
-