Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன ஜப்பான் கப்பலொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் முசசி என்ற உலகிலேயே மிகப் பெரிய போர் கப்பலை பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில் 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி குறித்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாடு அருகே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்க விமான படையினர் இந்த கப்பல் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டதில் கப்பல் மூழ்கியதுடன், அதில் இருந்த ஆயிரம் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த கப்பல் எந்த இடத்தில் மூழ்கியது என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. அமெரிக்காவில் புதைபொருள் ஆய்வு நிறுவனம் ஒன்று இந்த கப்பலை கண்டுபிடிக்க தானியங்கி வாகனங்கள் மூலம் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆய்வு ம…

    • 0 replies
    • 485 views
  2. சிங்கப்பூரில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றங்களுக்காக ஜெர்மனியர்கள் இருவருக்கு 3 பிரம்படிகளும் 9 மாதச் சிறையும் தண்டனைகளாக அளிக்கப்பட்டுள்ளன. ரயில் தரிப்பிடம் ஒன்றுக்குள் நுழைந்துள்ள இருவரும் ரயில் ஒன்றின் மீது ஸ்ப்ரே மூலம் எழுத்துக்களை கிறுக்கியுள்ளதாக குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர். குற்றம் இழைத்துள்ள இருவரும் இருபதுகள்-வயதில் இருப்பவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் குற்றங்களை இழைத்துவிட்டு சிங்கப்பூரில் இருந்து வெளியேறியிருந்த இருவரும், பின்னர் அண்டை நாடான மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் மிகவும் கவலைப்பட்டவர்களாக காணப்பட்ட இருவரும் தங்களின் செயல்களை 'முட்டாள் தனமான தவறுகள்' என்று கூறியுள்ளனர்…

  3. இலங்கையில் சீனா செலுத்திவரும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் என்பவற்றை குறைக்கும் நோக்கிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது இராணுவ உதவிகள் உள்ளிட்ட பலவகையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்கள், மின்நிலையங்கள், வீதிகளை அமைத்துள்ளதுடன் அதன் கடற்படையும் இந்து சமுத்திரத்திற்குள் தனது சுயலாபம் கருதி ஆழமாக ஊடுருவியுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இலங்கை துறைமுகத…

    • 6 replies
    • 434 views
  4. http://youtu.be/z8jWYJ5n79s புதுடெல்லி: தடையை மீறி 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பி.பி.சி. மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், யூ டியூப்பிலும் அந்த ஆவண படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறை வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சகத்திற்கு டெல்லி காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில், மேற்கூறிய ஆவண படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை செய்துள்ள போதிலும், அந்த படம் யூ டியூப்பில் இடம் பெற்றுள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட…

    • 4 replies
    • 913 views
  5. டெல்லி: பொதுநலன் கருதி எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு தடையா என்று அப்படத்தின் தயாரிப்பாளரான இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங்கிடம், திரைப்பட தயாரிப்பில் பல்வேறு விருதுகளை வென்ற லெஸ்லி உட்வின் பேட்டி கண்டார். அவனது பேட்டியுடன், பாதிக்கப்பட்ட நிர்பயா பற்றிய அவரது பெற்றோரின் சோகமயமான நினைவுகள், நிர்பயாவிற்கு கல்வி பயிற்சி தந்த இளைஞரின் கருத்துகள், நிர்பயா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்து "இந்தியாவின் மகள்" என்ற பெயரில் ஆவணப்படமாக லெ…

  6. பிருஸ்சல்ஸ், இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் துவங்கியுள்ள பேச்சுவார்த்தையை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன், நேர்மறையான அணுகு முறைக்கும் நிலையான உறவு மற்றும் நம்பிக்கைக்குமான அறிகுறியாக இருதரப்புக்கும் இது உள்ளது என்றும் இதனால் தெற்காசிய பிராந்தியம் நலம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு துறை செயலர் எஸ். ஜெயசங்கர் சார்க் நாடுகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் அவர், சார்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயசங்கர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத் சென்று, பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இந்திய வெளியுறவு துறை செயலரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை பாராட்ட…

  7. கலிபோர்னியா மாகாணம் இர்வின் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் சோதனையிடுவதற்காக செல்லும் போலீஸார். | படம்: ஏ.பி. தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெற கர்ப்பிணி என்பதை மறைத்து சீன பெண்கள் பலர் அமெரிக்காவுக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகப்பேறு சுற்றுலா சேவை என்ற பெயரில் இந்த மோசடி தொழில் நடைபெறுகிறது. இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள பல்வேறு அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையை தொடங்கி உள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இர்வின், ரான்சோ குகமோங்கா, ரோலேண்ட் ஹைட்ஸ் மற்றும் வால்நட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றும் அமெரிக்க குடி…

    • 0 replies
    • 239 views
  8. உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூர் Mar 04, 2015 Ariram Panchalingam Don't miss, Local, News Ticker, Top Slider, World 0 உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரே தொடர்ந்து உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது. அவ்வகையில் சிங்கப்பூரை அடுத்து பரிஸ், ஒஸ்லோ, ஜுரிக் மற்றும் சிட்னி ஆகியவை செலவுமிக்க நகரங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவு, உடை, மின்சாரம், வீட்டுவரி, தொலைபேசி, இணையத்தளம், குடிநீர், கழிவுநீர் போன்ற 160 செலவீனங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை பொறுத்தவரையில் நியூயோர்க்கைவிட சிங்கப்பூரில் விலைகள…

    • 0 replies
    • 292 views
  9. கனடா- வன்கூவர் துறைமுகத்தில் புதன்கிழமை பிற்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆபத்து விளைவிக்க கூடிய பொருட்கள் காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சலவைப்பொருள் மற்றும் தொழில்துறை கிருமி நாசினியாகிய Trichloroisocyanuric acid அடங்கிய குறைந்தது ஒரு கப்பல் கொள்கலன் எரிந்து கொண்டிருப்பதாகவும் துறைமுகத்தை சுற்றியுள்ள நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வெளியேற்றங்கள் ஏற்படலாம் என கருதப்படுகின்றது. அப்பகுதி ரயில் சேவைகள் மூடப்பட்டன. அண்மிய பகுதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காயப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் புகை மணத்தால் கண் எரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. - See more …

  10. இன்று காலை 238 பயணிகளுடன் துருக்கி விமானம் (Airbus A330) நேபாள் காத்மாண்டு விமான நிலைய ஓடுபாதையில் தரை இறக்கும் போது பனி காரணமாக ஓடுபாதையை விட்டு விலகி இறக்கியதால் சறுக்கி விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று காலை 7:45 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்தவித ஆபாத்தும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/38794.html#sthash.7nKeD4wm.dpuf

  11. வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள் பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார். மகனை கொன்று சமைத்து பெற்ற தாய்க்கே உணவாக்கிய ஐஎஸ்ஐஎஸ் மிருகங்கள் அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூர…

  12. புதுடெல்லி, ஆம்ஆத்மி கட்சியில் தேசிய அமைப்பாளர் கெஜ்ரிவாலுக்கும், அரசியல் விவகார குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கட்சியில் கெஜ்ரிவாலை முன்னிலைப்படுத்துவதாக இருவரும் புகார் கூறி இருந்தனர். இதனால் இன்று நடைபெறும் தேசிய செயற்குழுவில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தேசிய செயற்குழுவுக்கு அனுப்பினார்.இந்த ராஜினாமாவை ஏற்பது குறித்து இன்று பிற்பகல் நடைபெறும் கட்சியின் தேசிய செயற்குழுவில்தான் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறத…

  13. ஈராக்­கிய திக்றித் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று அந்த தீவி­ர­வாத குழு­வி­னரால் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­ட­மைக்­கா­கவே மேற்­படி நால்­வ­ருக்கும் தீவி­ர­வா­தி­களால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.திக்றித் நகரைக் கைப்­பற்ற அந்­நாட்டு அர­சாங்கம் 30,000 படை­யி­னரை உள்­ள­டக்கி இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றை ஆரம்­ பித்த தினத்­தி­லேயே இந்த வீடியோ காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மேற்­படி கொல்­லப்­பட்ட நால்வரு…

  14. லண்டனில் பிறந்து வளர்ந்து , பின்னர் சிரியா சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து பல வெளிநாட்டவர்களை கொலை செய்து வரும் நபர் தான் "ஜிகாட் ஜோன்" இவரது குடும்பம் இன்னும் லண்டனில் தான் இருந்து வசித்து வருகிறது. இவர்கள் கடந்த 20 வருடங்களாக அரசாங்கம் கொடுக்கும் உதவிப் பணத்தில் தான் வாழ்கையை நடத்தி வருகிறார்கள் என்ற விடையம் வெளியாகியுள்ளது. இக் குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களால் வேலைசெய்ய முடியாது என்று சாக்குப்போக்கை சொல்லி ,அதனைக் காரணம் காட்டி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுள்ளார்கள். கடந்த 20 வருடங்களில் பிரித்தானிய அரசு இவர்களுக்கு சுமார் 400,000 ஆயிரம் ஸ்டேலிங் பவுன்சுகளை வழங்கியுள்ளது. ihadi John family's 20 years on benefits: How it's cost taxpayers up to £40…

  15. உக்­ரேனில் இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் பலி­யா­ன­வர்கள் தொகை 6,000 ஐயும் தாண்­டி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் தலை­வர்கள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி மோதல்­களால் உக்­ரே­னி­லுள்ள பொது­மக்­க­ளது உயி­ருக்கும் உட்­கட்­ட­மைப்­புக்கும் பாரிய அழிவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதனை மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான ஒரு குற்­ற­மாக கருத முடியும் எனவும் மேற்­படி தலை­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். கிழக்கு உக்­ரேனில் ஒரு வரு­டத்­திலும் குறைந்த காலப் பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளி­லேயே மேற்­படி மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் ஸெய்த் அல் ஹுஸைன் தெரி­வித்தார். கடந்த பெப்­ர­வரி மாதம் 15 ஆம் திகதி செய்­து­கொள்­ளப…

    • 6 replies
    • 753 views
  16. மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 1995ஆம் ஆண்டு சிவசேனா- பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது 20 ஆண்டுகாலம் கழித்து இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அந்நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். http://tamil.oneindia.com/news/india/maharashtra-bans-beef-5-…

  17. மும்பை: இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என விரும்பினால் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவாய்ஸி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேசியபோது, மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வேண்டும். முஸ்லிம்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே அவர்களுக்காக நான் பேசுகிறேன் என கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: முஸ்லிம்கள் இத்தேசத்தில் இருந்து ஏதாவது விரும்பினார்கள் என்றால் முதலில் அவர்கள் இந்தியாவை தாய்நாடாக மதிக்க வ…

    • 2 replies
    • 291 views
  18. தி சிடிசன்' தான்சானியா நாளிதழ் லிபியாவின் அந்நாள் அதிபர் முகம்மது கடாஃபியை வீழ்த்துவதற்காக விரைந் தோடி வந்த மேற்கத்திய நாடுகள், இன்று தோல்வியை நோக்கிச் சென்றுகொண் டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளைக் கைவிட்டுச் சென்றிருப்பது மிகுந்த ஆயாசம் தருகிறது. நேட்டோ தலைமையிலான மேற்கத்திய நாடு களின் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் கடாஃபி கொல்லப்பட்ட பின்னர், கொண்டாட்டங்களுடன் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. கொடூர ஆட்சியிலிருந்து லிபிய மக்கள் விடுவிக்கப்பட்டதாகவே பேசப்பட்டது. ஆனால், தான்சானியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகள், லிபியாவில் நடந்துவந்த விஷயங்களைக் கவனமாகவே அணுகின. புதிதாக அமைந்த லிபிய அரசை ஏற்றுக்கொள்ளவும் அவை மறுத்துவிட்டன. கடாஃபிக்குப் பிறகு, அமைந்த புதிய அரசை வரவேற…

    • 0 replies
    • 559 views
  19. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாதக் கட்சியின் தலைவரின் தேர்வுக்கான தேர்தலில் அதிகளவிலான தமிழர்கள் அங்கத்துவத்தைப் பூர்த்தி செய்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக அங்கத்துவம் பெறுவது பற்றியும், தேசிய நீரோட்டத்தில் இணைவது பற்றியதுமான விளக்கங்களையும், தெளிவுகளையும் வழங்கியதன் மூலம் அவர்கள் இவ்வாறான முயற்சிக்குள் ஈடுபடுவதற்கு ஏதுவாக அனைத்து அமைப்புக்களுமே காரணமாக இருந்ததாக திரு. நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார். தலைமைப்பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவராக தமிழர்களிற்காக குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் போட்டியிடுவதால் இதன் தாக்கத்தை உணர்ந்தும் பல தமிழர்கள் தாமாகவே வந்து அங்கத்துவ விண்ணப்…

    • 1 reply
    • 513 views
  20. சிக்னலை கவனிக்க தவறியதே ரயில் விபத்துக்கு காரணம்! சுவிஸ் ரயில்வே விளக்கம் [ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015, 08:53.18 மு.ப GMT ] ரயில்வே தண்டவாளத்தில் உள்ள சிக்னலை கவனிக்க தவறியதே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதற்கு காரணம் என சுவிஸ் மத்திய ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 20ம் திகதி அதிகாலை 6.40 மணிக்கு Rafz ரயில் நிலையத்திலிருந்து Schaffhausen நகருக்கு புறப்பட்ட S-Bahn 18014 என்ற ரயில், ரயில் பாதையில் இருந்த ‘நிறுத்தல் சிக்னலை’யும் மீறி சென்றுள்ளது. மேலும் மணிக்கு 59 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்ததால், அவசரகால ’பிரேக்’ தானாக செயல்பட்ட, சில விநாடிகளில் சிக்னலை கடந்து 100 மீற்றர் தொலைவில் ரயில் நின்றுவிட்டது. அப்போது சூரிச…

    • 0 replies
    • 454 views
  21. அமெரிக்காவுடனும், அதன் கூட்டணி நாடுகளுடனும் போரிடுவதற்குத் தயாராக இருக்கும்படி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி, சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிளவுபட்ட கொரியாவை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான போரைத் தொடங்குவதற்கு காலம் நெருங்கிவிட்டது. அந்தப் போருக்காக கொரிய ராணுவம் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவை தூள் தூளாக்குவதற்கான பயிற்சியை ராணுவம் மேற்கொள்ள வேண்டும்'' என்று கிம் கூறியதாக வட கொரிய அரசுச் செய்தி நிறுவனம் கே.சி.என்…

  22. இஸ்லாமாபாத், கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ஷகியுர் ரஹ்மான் லக்வி (55). இதையடுத்து, தீவிரவாதியான லக்வியும், தாக்குதலில் சம்பந்தப்பட்ட அப்துல் வாஜித், மசர் இக்பால், ஹமது அமின் சாதிக், சாதிக் ஜமீல் ரியாஸ், ஜமீல் அஹமது மற்றும் யூனிஸ் அஞ்சும் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கான வழக்கு விசாரணை 2009-ம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் தீவிரவாதி லக்வியை டிசம்பர் 18, 2014-அன்று பாகிஸ்தானின் Anti-Terrorism Court ஜாமீனில் விடுதலை செய்வதாக …

  23. கனடா கியூபேக்கைச் சேர்ந்த ஆறு இளையோர்கள் ஐஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்வதற்காக சென்றுள்ளனர் என்ற சந்தேகத்தை கனடிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். காணாமற்போனவர்களில் நால்வர் மொன்றியல் கல்லூரியொன்றில் அண்மைக்காலமாக கல்வி பயின்று வந்தவர்கள். ஏனைய இருவரும் லாவல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அறுவரில் நால்வர் ஆண்கள், ஏனைய இருவரும் பெண்கள் எனவும், 18 மற்றும் 19 வயதுகளில் உள்ள இந்த அறுவரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கனடாவில் இருந்து புறப்பட்டனர். சிரியாவை நோக்கிப் பயணமாகினர் எனவும் இளைஞர் ஒருவரின் தந்தை மகனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கடவுச் சீட்டைப் பறித்து வைத்த போதிலும் மகன் தனது கடவுச் சீட்டு தொலைந்து போய் விட்டது என்று அறிவித்து புதிதாக ஒன்று பெற்றுக்கொண்டதாகவும் தெரி…

    • 0 replies
    • 387 views
  24. கனடா-சனிக்கிழமை அதிகாலை ரொறொன்ரோவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு துப்பாக்கிசூடு வரை இட்டுச்சென்று இருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடையும் நிலை ஏற்பட்டது. சனிக்கிழமை அதிகாலை 3-மணியளவில் டன்வோத் அவெனியு மற்றும் கொக்ஸ்வெல் அவெனியுவிற்கு அருகில் அமைந்துள்ள மக்டொனால்ட் உணவகத்தில் நடந்துள்ளது என ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர். உணவகத்தின் உள்ளே ஏற்பட்ட ஒரு வித கைகலப்பின் பின்னர் உணவகத்துடன் சம்பந்தப்படாத பாதுகாப்பு காவலர் ஒருவர் மூன்று ஆண்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மூன்றாவது மனிதன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வயது விபரம் வெளிய…

    • 0 replies
    • 489 views
  25. ஜெசிக்காவைத் தொடரும் இன்னுமொரு கனடியர் கனடா- ஒன்ராறியோ, லமிங்டன் என்ற இடத்தை சேர்ந்த ஒரு லாட்டரி வெற்றியாளர் தனது மிகப்பெரிய ஜாக்பொட் வெற்றி பரிசுதொகையை பெறுவதற்கு முன்னரே அதனை எவ்வாறு செலவழிக்க போகின்றார் தென்பதை தீர்மானித்து விட்டார். பணத்தை உள்ஊர் மாணவர்களிற்கு கொடுப்பதே அவரது விருப்பம். 54-வயதுடைய மைக்கல் சலேற்றர் என்பவர் 10-டொலர் விலையான Instant Cadillac Riches லாட்டரி அட்டையில் 250,000டொலர்களை வென்றார். 30-வருடங்களாக லாட்டரிகளை விளையாடி வருவதாக கூறியுள்ளார். தனக்கு கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி ஒரு திகிலான அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார். தனது முழு பரிசுதொகையையும் தனது மகன் படிக்கும் உயர்தர பாடசாலைக்கு நன்கொடையாக கொடுக்கப் போவதாக ஒன்ராறியோ லாட்டரி…

    • 0 replies
    • 467 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.