உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
ரொறொன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் பனிபொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிபருவகாலத்திற்கான முதல் பலத்த பனிபுயல் அடிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. 15-20 சென்ரி மீற்றர்கள் அளவிலான பனி GTA பகுதிகளில் பொழியலாமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இது ஞாயிறு காலை வரை தொடரும் எனவும் இன்று மாலை கடுமையா பனி பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஹமில்ரன், ஓக்வில், பேளிங்ரன் ஆகிய இடங்களிலும் பனிபுயல் எதிர்பார்க்கப்படுகின்றது என கனடா சுற்றுச் சூழல் பிரிவினரின் கூற்றுப்படி தெரியவருகின்றது. காற்று மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசலாமெனவும் இதனால் பனி பறந்து பார்வையை மறைக்க கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்படலாம் என எதிர்பார்ககப் படுகின்றது. பனிப்புயலினால…
-
- 5 replies
- 789 views
-
-
மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத வகையில் பல வருடங்களுக்கு பிறகு பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவுகிறது. உதாரணமாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் 112 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக பனிமழை பொழிந்திருக்கிறது. யேசு கிறிஸ்து பிறந்த ஊராக கருதப்படும் ஜெருசேலத்தின் வழமையாக கிரிஸ்துமஸ்து கொண்டாட்டங்களின் போது பனிப் பொழிவு ஏற்படுவதில்லை. ஆனால் இம்முறை கிரிஸ்து மஸ்து கொண்டாட்டங்கள் களைகட்டியிருப்பதற்கு இப்பனிப்பொழிவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதே போன்று சிரியா, இஸ்ரேல், லெபனான் போன்ற நாடுகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன், வரலாறு காணத வகையில் கடும் குளிர் நிலவுகிறது. சிரிய உள்நாட்டு யுத்தத்தினால் இதுவரை அயல்நாடுகளுக்கு இடம்பெயர்ந்த இரு மில்லியன் சிரிய அகதிகள் தற்காலிக அ…
-
- 0 replies
- 810 views
-
-
ஸ்ரீரங்கத்தில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. தென் இந்தியாவில் இருந்து நரசிம்மராவுக்குப் பிறகு நானும் (தேவே கவுடா) பிரதமர் ஆனேன். ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன். அதற்காக ஜெயலலிதாவை நான் ஆசிர்வதிக்கிறேன். ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி மத்திய அரசு அந்த சட்டத்தை மாற்ற விரும்பினால் பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளபடி அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எட…
-
- 0 replies
- 446 views
-
-
http://youtu.be/hd0UyrDFJXY All looked lost when this young and lone buffalo was attacked by two lions in a South African national park. But the pair had not bargained on the buffalo's friends coming to his rescue, and moments later they were tossed several feet in the air before being chased away. The dramatic scene was captured on camera in the Mjejane Reserve on the border of the Kruger Park. Scroll down for video Flyin' lion! A lion blindsides a smaller buffalo as it emerges from bushes at the Mjejane Reserve in South Africa. Two on one: The hungry cat doesn't factor in the first buffalo's larger friend following …
-
- 2 replies
- 661 views
-
-
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடித்துத் தள்ளிய தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்தும், முற்றத்தின் நிரந்தர பராமரிப்பு, பாதுகாப்புக்கென நிதி திரட்டும் வகையிலும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 14.12.2013., 15.12.2013. (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது. கீழ்கண்ட தொடர்வண்டி நிலையங்களில் பயணக்குழுவினரை வரவேற்க அந்தந்த ஊர்களில் உள்ள தமிழின உணர்வாளர்கள், ஈழ ஆதரவு அரசியல் கட்சியினர், மனித உரிமை இயக்கத்தினர் திரளாக கூடி வரவேற்று நிதியளித்து வழியனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். தொடர்புக்கு: கா. தமிழ்வேங்கை, 94421 70011, 7871…
-
- 1 reply
- 563 views
-
-
பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன. பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வட மாநில தேர்தலில் அந்த கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை பா.ஜனதா மீது திரும்பியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் இந்த முறை கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் நாட்டிலும் பா.ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்றும் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டி…
-
- 0 replies
- 485 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே, அணு ஆயுதப் போர் மூண்டால், 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சர்வதேச அணு ஆயுதப் போர் தடுப்பு ஆர்வலர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக நாடுகள், தங்களுக்குள் போர் செய்யும் போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படுவதோடு, எதிர்கால சந்ததியினரையும் கடுமையாக பாதிக்கும். இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக தீராத பிரச்னைகள் உள்ளன. ஏற்கனவே, மூன்று முறை, இரு நாடுகளிடையே போர் நடந்துள்ளது. எனினும், இனி வரும் காலங்களில் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டால், அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அவ்வாறு…
-
- 1 reply
- 596 views
-
-
உலகிலேயே முதன்முறையாக உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கஞ்சாச்செடியை வளர்க்கவும், கஞ்சாவை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உலகின் எந்தவொரு நாட்டிலும் சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இந்நிலையில், உருகுவே நாட்டில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவேறியது. தற்பொழுது செனட் சபையிலும் மசோதா நிறைவேறி இருக்கிறது. இதையடுத்து, வரும் ஏப்ரல் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பதால், 18 வயதுக்கு மேற்பட்ட கஞ்சா உபயோப்பவர்கள் மாதம் ஒன்றுக்கு 40 கிராம் கஞ்சா வாங்கிக்கொள்ளலாம் எனவும், உரிமம் பெற்ற மருந்துக்கடைகளில் மட்டுமே கஞ்சா விற்கப்…
-
- 1 reply
- 575 views
-
-
நெல்சன் மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அரசியல் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் கியூபாவுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா. இந்நிலையில், நேற்று முன்தினம் தென்ஆப்ரிக்காவில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதற்கு, சுதந்திர உலகத் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரி ஒருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்…
-
- 1 reply
- 699 views
-
-
டெல்லி விமான நிலையத்தில், உயிர் தப்பிய ராகுல் காந்தி. டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் நேர இருந்த விமான விபத்தில் இருந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மயிரிழையில் உயிர் தப்பினார். ரேபரேலி சென்றுவிட்டு ராகுல் காந்தி புதுடெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். அவர் சென்ற விமானம் தரையிறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்க தயாரானது. அதே நேரத்தில் அந்த ஓடு தளத்தில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நின்றுள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான விமானமும் ஓடு தளத்தில் மெதுவாக நகர்ந்த போது ராகுல் வந்த விமானம் தரையை நெருங்கியது. பின்னர், விமானம் இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் கடைசி நேரத்தில்…
-
- 4 replies
- 943 views
-
-
கடந்த 2009ம் ஆண்டு ஈழத்தில் நடந்த திட்டமிட்ட தமிழின படுகொலையால் இந்த உலகமே அதிர்ந்து நிற்கிறது. அந்த இனப்படுகொலைக்கு துணை போன போர் குற்றவாளி பிரணாப் முகர்ஜியை பழம்பெருமை வாய்ந்த லயோலா கல்லூரியின் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். ரத்தக்கரை படிந்த பிரணாப் முகர்ஜியின் கால்தடங்கள் லயோலா கல்லூரியின் புனித மண்ணில் படவேண்டாம் என்று தமிழக மாணவர்கள் சார்பாக உங்களை கேட்டு கொள்கிறோம் விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த கடிதத்தை தங்களிடம் ஒப்படைக்கிறோம். # இன்று 50க்கும் மாணவர்கள் அளித்த கடிதம். இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் லயோலா கல்லூரி உலக அளவில் பேசப்படுவது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கக்கூ…
-
- 1 reply
- 756 views
-
-
நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை நிகழ்வின்போது, டென்மார்க் நாட்டுப் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித் அவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில், சோகமான சூழ்நிலையில், அப்படியாக மூவரும் ஒட்டிக்கொண்டு தமது கைபேசியிலேயே படம்பிடித்துக்கொண்டது, பொருத்தமற்ற ஒரு நடவடிக்கை என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. பெண்ணான டென்மார்க் பிரதமருடன் ஒபாமாவும், கேமரெனும் ஒட்டிக்கொண்டு படம் பிடிப்பதை, ஒமாபாவின் மனைவியான மிஷேல் ஒபாமா கோபத்துடன் பார்ப்பது போன்ற பாவனையில் ஒரு படத்தை வெளியிட்ட சில பத்திரிகைகள் அதிபர் ஒபாமா தனது மனைவ…
-
- 21 replies
- 1.8k views
-
-
கேரள தமிழர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழர்கள் சென்று அங்கு தரிசாக கிடந்த நிலங்களை எல்லாம் விளை நிலங்களாக மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக உழைத்தார்கள். அதன் விளைவாக கேரளாவின் எல்லைப் பகுதியில் கொங்கு நாட்டு மக்கள் அதிகளவில் குடியேறி விவசாயம் செய்தனர். கேரளாவின் விவசாயம் வளர்ச்சிக்கு கொங்கு தமிழர்கள் காரணமாக உள்ளனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நொண்டி காரணங்களை கூறி கொங்கு தமிழர்களை கேரளாவில் இருந்து துரத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது. கேரளாவில…
-
- 0 replies
- 443 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான அரை இறுதி களமாக கருதப்பட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.. இதனைத் தமிழகத்தில் கூட்டணி மாற்றங்களுக்கு வலுவான அடித்தளமும் போடப்பட்டு வருகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த இந்த வெற்றி லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் கருதுகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் பாரதிய ஜனதா அணியில் இடம் பிடித்துவிட்டோமே என்று துண்டு போட்டு உட்கார்ந்திருக்கிறது மதிமுக.. இதை உறுதிப்படுத்துவிதமாகவே 4 மாநில தேர்தல் முடிந்த உடனேயே மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். http://tamil.oneindia.in/news/india/modi-wave-after…
-
- 1 reply
- 718 views
-
-
உலகம் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் அமைதியாக ஒரு டீலிங் நடந்து முடிந்திருக்கிறது. அமைதியாக நடந்தாலும் இது ஆபத்தான டீலிங். ஆயுத டீலிங்குக்கு சமமான டீலிங். அதுவும் அமெரிக்க டீலிங். அதனாலேயே இதனைக் கவனிப்பது அவசியமாகிறது. ரோஸோபொரான் எக்ஸ்போர்ட் (Rosoboron export) என்பது ஒரு ரஷ்ய கம்பெனி. ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள், ராணுவ வாகனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஸ்தாபனம். பிரசித்தி பெற்ற எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை உலகெங்கும் பறக்க விடுவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தம் செய்து, முதல்கட்டமாக சுமார் ஒரு பில்லியனுக்குச் (சுமார் ரூ. 6200 கோடி) சற்று அதிகமான மதிப்பீட்டுத் தொகைக்கு எம்.ஐ.17 ரக ஹெ…
-
- 0 replies
- 534 views
-
-
சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை சவூதி அரேபியாவில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவருக்கு அந்நாட்டிற்கு போதைவஸ்தை கடத்தி வந்த குற்றச்சாட்டில் தலையை வாளால் வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மொஹமட் ஸேயர் கான் என்ற மேற்படி நபர் சவூதிக்கு பெருமளவு போதைவஸ்தை கடத்திச் சென்றவேளை கைது செய்யப்பட்டார். http://www.virakesari.lk/?q=node/359777 அவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையுடன் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 73 ஆக உயந்துள்ளது.
-
- 0 replies
- 614 views
-
-
புதுடெல்லி: டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததாதோடு, யாரும் ஆட்சியமைக்கவும் முன்வராததால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் எனத் தெரிகிறது. டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31, ஆம் ஆத்மி 28 காங்கிரஸ் 8 மற்றும் இதர கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றி உள்ளன. இந்நிலையில் தங்களுக்கு ஆட்சியமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை என்பதால், தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷவர்தன் நேற்றே அறிவித்துவிட்டார். அதேப்போன்று இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், எத…
-
- 0 replies
- 521 views
-
-
நேற்றிரவு (08-12-2013) சிங்கப்பூரில் நடந்த கலவரத்தின் காணொளி. http://www.dailymotion.com/video/x18614n_fatal-accident-leads-to-riot-in-singapore-s-little-india_fun கட்டிட தொழிலாளி தமிழர் ஒருவர் விபத்தில் இறந்ததின் ஆத்திரத்தால் கலவரம் மூண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. source:http://sg.news.yahoo.com/singapore-police--scdf-draw-praise-for-handling-of-little-india-riot-063040963.html
-
- 26 replies
- 3.2k views
-
-
டெல்லி அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிகின்றன. தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமாக ஆம் ஆத்மிகள் (சாமான்ய மனிதர்கள்) கெஜ்ரிவால் கட்சியின் வியப்பூட்டு வெற்றிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஆம் ஆத்மி கட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தியது. கட்சியின் அதிகாரபூரவ ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறும்பதிவு சேவையான ட்விட்டரையும் கட்சி தீவிரமாக பயன்படுத்தியது. குறிப்பாக வாக்குப்பதிவு நெருங்கிய நிலையில் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் …
-
- 0 replies
- 468 views
-
-
இந்திய அரசியலின் ஆச்சரியம் இவர்...... டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களைப் பிடித்திருந்தாலும், பெரும்பான்மை பெறவில்லை. மொத்தமுள்ள, 70 இடங்களில், 31 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. இந்நிலையில், டில்லியில், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது: டில்லி தேர்தலில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், ஆட்சி அமைக்க அழைக்கும்படி, நான் உரிமை கோர முடியாது. என்ன நிகழப் போகிறது என்பது தெரியவில்லை. "முதல்வரானால், வெளிப்படையான நிர்வாகத்தை அளிப்பேன்' என, மக்களுக்கு உறுதி அளித்தேன். அந்த உறுதிமொழியை காப்பாற்ற முடியாத, உதவியற்ற நிலையில் உள்ளேன். எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும், குதிரைப் பேரத்தில…
-
- 2 replies
- 861 views
-
-
இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உள்ள ஊழல் கறை படிந்த அதிகாரிகள் வெளியேற்றப்படாவிடில், இந்தியா, ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலக்கப்படக்கூடும் என்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். வரும் செவ்வாய்க்கிழமைக்குள் நல்ல நிர்வாகத்திற்கான விதிமுறைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் சமர்ப்பிக்கத் தவறினால் அவர்களின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது கொள்கைகள் பற்றிய விஷயம் என்று தெரிவித்த பச், நல்ல நிர்வாகம் என்பதுதான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முக்கிய கொள்கையாகும். இதில் நாங்கள் உறுதியாக இருக்க விரும்புகின்றோம் என்றும் கூறினார். கடந்த 40 வருடங்களுக்கு முன்னால் இனவெறிக் கொள்கைகளின் காரணமாக தென்னாப்ப…
-
- 2 replies
- 593 views
-
-
ஈழத்தமிழர் படுகொலையில் பங்காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு, இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்து உள்ளது. தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத்தமிழர் படுகொலையில் பங்காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது. 2014-ல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாக இருக்கி…
-
- 0 replies
- 567 views
-
-
பாஜக வெற்றி முகம் இந்தியாவில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மிசோரத்தை தவிர மீதம் உள்ள 4 மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்திய நேரம் காலை 11.05 மணி அளவில் உள்ள நிலவரங்கள்: டெல்லிசட்டமன்றத்தேர்தல்முன்னணிநிலவரம் டில்லித் தேர்தலில் பாஜக முன்னிலை டெல்லியின் புது டெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், கடந்த மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வ…
-
- 2 replies
- 347 views
-
-
சைப்ரஸ் - கந்து வட்டிகாரனாகும் ஐரோப்பிய யூனியன் கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் ,அவற்றை வெவ்வேறு விதமாக பெயில் அவுட் செய்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.பொதுவாக பெயில் அவுட் செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறையை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்த படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும். அயர்லாந்து பெயில் அவுட் பற்றி பிரிதொரு பதிவில் எழுதி இருந்தேன்.தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு தற்போது பெயில் அவுட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.மற்ற நாடுகளில் நடந்தது …
-
- 1 reply
- 615 views
-
-
ப.சிதம்பரத்துக்கு ஒரு பகிரங்க மடல்.. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம். 'இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும்’ என்ற தலைப்பில் சென்னையில் 'சிந்தனையாளர்கள்’ பங்கேற்ற அரியதோர் கருத்தரங்கில் நீங்கள் ஆற்றிய உரையில் வழங்கிய அபூர்வமான விளக்கங்களை நான் அறிய நேர்ந்தது. 'இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கும் வரை இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்’ என்று நீங்கள் சங்கநாதம் செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஈழ நில…
-
- 3 replies
- 821 views
-