உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சிரியாவில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் இரசாயனக் குண்டுவீச்சுக்குப் பலியானதை அடுத்து, சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்திய தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்த நிலையில் உள்ளன. அமெரிக்க தலைமையில் இப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றன. அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியதரைக்கடலுக்கு விரைகிறது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும். இ…
-
- 10 replies
- 914 views
-
-
மைதுகுரி: வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள கிரமாத்திற்குள் புகுந்த இஸ்லாமிய தீவரிவாதிகள் அங்குள்ள 44 பேரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் படி ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறி போகோஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது கிராமங்களில் புகுந்து மக்களை தாக்கி வருகின்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள தும்பா என்ற கிரமாத்திற்குள் புகுந்தனர். துப்பாக்கியால் சுட்டால் அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு கேட்டுவிடும் என்பதால் அவர்கள் 44 கிராமத்தினரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் கண்களை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்…
-
- 1 reply
- 497 views
-
-
பாங்காக்: தாய்லாந்து சென்ற குஜராத் மாநில காவல்துறை தலைவர் அமிதாப் பதக் இன்று அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற அவர் பாங்காக் நகரில் இறந்தார். அவருக்கு வயது 58. நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுதந்திர தினத்தன்று முதல்வர் நரேந்திர மோடி புஜ் நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த பதக் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் களைப்பாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக பதக் தெரிவித்திருந்தார். இந் நிலையில் தாய்லாந்தில் மரணமடைந்துள்ளார். சிபிஐ கஸ்டடியில் பிபி பாண்டேவை சந்தித்த பதக்: முன்னதாக இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ கஸ்டடியில் இருந்த மூத்த ப…
-
- 2 replies
- 546 views
-
-
******************** சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஓர் அமெரிக்க மாணவி இந்தியா வந்திருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை செய்தியாக்கி உலக அளவில் பெரும் சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார். ‘இந்தியா: நீங்கள் கேட்க விரும்பாத கதை’ என்று அவர் கொடுத்துள்ள தலைப்பால், இந்தியா எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அக்கறை இல்லாதவர்களும் இதை படித்துவிட்டு நமது நாட்டை விமர்சித்த வண்ணம் இருக்கின்றனர். மிஷலா க்ராஸ் என்ற அந்த பெண் தன் கதையை சிஎன்என் வலைதளத்தில் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பத்து லட்சம் பேருக்கு மேல் வாசித்துள்ளனர். பல ஆயிரம் பேர் கருத்து கூறியுள்ளனர். அந்நிய நாகரிகங்களை அனுபவபூர்வமாக அறிந்து கொள்வதற்காக மாணவர்கள் வெளிநாடு சென்று மாதக்கணக்கில் தங்குவதையும…
-
- 0 replies
- 420 views
-
-
டெல்லி: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர் உறுதி அளித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.ராஜா பேசுகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் அனுப்பிய கடிதத்தை மத்திய அரசு பரிசீலித்ததா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பிரனீத் கவுர், பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது தேசிய மற…
-
- 1 reply
- 527 views
-
-
ஸ்ரீகாளகஸ்தி: ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்ததால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆந்திர மாநில மக்கள் சென்டிமென்ட் திலகங்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் முக்கிய கோயிலான ஸ்ரீகாளகஸ்தியின் கோபுரம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதேபோல் கோபுர கலசங்களும் கீழே விழுந்திருந்தன. இதனால் இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டதாக கருதப்பட்டது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திராவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில் திடீரென ஸ்ரீ காளகஸ்தி கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5…
-
- 5 replies
- 1.3k views
-
-
மாற்று மீடியா வடிவில் இயக்க அமெரிக்காவின் லூசியான மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய புதைகுழி வேகமாக பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்த புதைகுழி குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வீடுகளும், கட்டிடங்களும் இல்லை என்பதால் மனித உயிருக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் அந்தப் புதைகுழி தொடர்ந்து பெரிதாகிக் கொண்டு வருகிறது. அதன் காரணாக வளர்ந்து நிற்கும் பெரிய மரங்கள் விழுந்துள்ளன. தரைக்கு கீழே இருக்கும் பாறைகள், அமில அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்படும்போது, பாறைகள் மெதுவாக வலு இழக்க ஆரம்பிக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் இந்த இயற்கை நிகழ்வின் இறுதியில் பாறை முற்றாக சிதைந்து போன பிறகு, தரை மட்டத்தில் விரிசல்கள் உருவாகின்றன. சில நேரங்கள…
-
- 3 replies
- 635 views
-
-
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் குப்வாரா பிரிவில் மீண்டும் ஊடுறுவல் மற்றும் தாக்குதல் முயற்சியில் பாகிஸ்தானியப் படைகள் இறங்கின. ஆனால் ராணுவம் அதை வெற்றிகரமாக முறியடித்தது. கேரன் பகுதியில் இந்த சில்மிஷத்தில் பாகிஸ்தானியப் படைகள் இன்று அதிகாலையில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானியத் தரப்பிலிருந்து திடீர் நடமாட்டம் அதிகரித்ததால், இந்தியப் படையினர் சுதாரிப்புடன் செயல்பட்டு முறியடித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் தரப்பி்ல நடந்துள்ள 19வது ஊடுறுவல் முயற்சி மற்றும் போர் நிறுத்த மீறலாகும் இது. ஆகஸ்ட்6ம் தேதி ஐந்து இந்தியப் படை வீரர்களை பாகிஸ்தானியப் படைகள் தாக்குதல் நடத்திக் கொலை செய்தன. அதன் பிறகு தொடர்ந்த…
-
- 10 replies
- 694 views
-
-
அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா காலவரையின்றி தடுத்துவைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற, இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐநா சாடியுள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்தச் செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை பரிசீலித்த ஐநா குழுவொன்று கண்டறிந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் குடிவரவு மையங்களில் தடுத்துவைக்கப்படுகின்றனர் இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியன்மாரிலிருந்து சென்ற ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் ஆகியோர் அடங்கிய இந்த அகதிகள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.க…
-
- 0 replies
- 365 views
-
-
டெல்லி: இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். திமுக சார்பில் வசந்தி ஸ்டான்லியும் அதிமுக சார்பில் மைத்ரேயனும் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை சிறையில் தற்போது 106 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களை மீட்க பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போதும், இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை …
-
- 0 replies
- 315 views
-
-
டெல்லி: இந்தியாவின் எல்லையில் சீனா முற்றுக்கிக் கொண்டு ஊடுருவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒரே ஒரு உள்நாட்டு போர்க்கப்பலை தயாரித்துவிட்டதாலே சீனாவோ குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறது. தெற்காசியாவில் இந்தியாவும் சீனாவும் சர்வ வல்லமை சக்திகளாக இருந்து வருகின்றன. இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும் சீனாவோ பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர் என இந்தியாவை சுற்றிய அனைத்து நாடுகளையும் தம் நட்பு சக்தியாக வைத்துக் கொண்டிருக்கிறது. சரி,,, இந்தியாவும் சீனாவும் எப்படியெல்லாம் என்னென்ன துறைகளிலெல்லாம் வலுவாக இருக்கின்றன? என பார்ப்போமா? ஜிடிபி எனப்படும் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா- 5% ; சீனாவோ 7.5% இந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு …
-
- 0 replies
- 364 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இந்தத் தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணா தன்வீர் கொண்டு வந்தார். தீர்மானத்தில், எல்லைப் பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு விதிமீறலாகும். மேலும் கோபத்தைத் தூண்டும் செயலாகும். இதுதொடர்பாக பாகிஸ்தான் கடுமையான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்தியாவுடான நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும். ஒரு முடிவு தெரியும் வகையிலான நடவடிக்கையை நாம் எடுத்தாக வேண்டும். மேலும் …
-
- 0 replies
- 318 views
-
-
பெனாசீர் பூட்டோவின் கொலையுடன் பேர்விஸ் முஷாரப்பிற்கு தொடர்பு? பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் அமரர் பெனாசீர் பூட்டோவின் கொலையுடன், முன்னாள் பிரதமர் ஜெனரல் பேர்விஸ் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்த போது பூட்டோ மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பூட்டோ கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துடன் முஷாரப்பிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்…
-
- 2 replies
- 398 views
-
-
டெல்லி: அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் ஊடுருவிய சீனா சில நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 4 மாதங்களுக்கு முன்பு சீனா ஊடுருவி பல நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனது. பின்னர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 30 கிலோ மீட்டர் வரை ஊடுருவியது சீனா. அருணாசலப் பிரதேசத்தின் சக்லஹம் மாவட்டத்துக்குள் ஊடுருவிய சீன படையினர் அதை தங்களது பகுதி என உரிமை கோரி பேனர் வைத்திருந்தனர். அப்போது இந்திய படையினர் ரோந்து சென்றனர். இருப்பினும் சீன ராணுவத்தினர் முகாம் அமைக்காததால் உடனே தங்களது எல்லைக்குத் திரும்பிவிடுவர் என்று கூறப்பட்டது. இருப்பினும் ஆகஸ்ட் 13-ந் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய அந்த சீன ராணுவக் குழ…
-
- 2 replies
- 467 views
-
-
காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே எல்லையில் இந்தியா மிகப்பெரிய போர் விமானத்தை நிறுத்தியுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவிய இடத்திலிருந்து வெளியேற சீன ராணுவம் மறுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சல்கலாம் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், அங்கு 30 கி.மீ தூரம் வரை ஊடுருவி கூடாரங்களை அமைத்தனர். தற்போது அந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு விட்டாலும் கூட, சீன ராணுவத்தினர் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். இந்திய ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் கூட, சீனப்டையினர் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். இதனிடையே காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே தவுலத் பெக் ஓல்டி என்ற இடத்தில், சீனா ஊடுருவிய இடத்தில் இந்திய விமானப்படை…
-
- 4 replies
- 545 views
-
-
சிரியாவில், தலைநகர் டமஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக எதிரணி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கிளர்ச்சிப் போராளிகள் மீது நடந்துவரும் கடுமையான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இரசாயன வெடிபொருட்கள் அடங்கிய ராக்கெட் குண்டுகள் ஏவப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐநா கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே சிரியாவில் விசாரணைக்காக சென்றுள்ள நிலையில் இந்தப் புதிய தாக்குதல் நடந்துள்ளது சிரியாவில் ஏற்கனவே இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஐநாவின் கண்காணிப்பாளர்கள் கடந்த ஞாயிறன்று அங்கு சென்றனர்.நச்சுப் புகை வீச்சுக்கு உள்ளாகியே மக்கள் இறந்ததாக நேரில் கண்டவர்கள் க…
-
- 0 replies
- 377 views
-
-
மனிலா: பிலிப்பைன்ஸில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 71 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள சிபு துறைமுகத்தில் எம்.வி. புனித தாமஸ் அக்வினாஸ் என்ற சொகுசு கப்பல் சல்பிசியோ எக்ஸ்பிரஸ் சீடே என்ற சரக்கு கப்பல் மீது கடந்த வெள்ளிக்கிழமை மோதியது. இதில் பயணிகள் கப்பலில் ஓட்டை விழுந்து அது கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 49 பேரின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இதுவரை பயணிகள், சிப்பந்திகள் என்று மொத்தம் 750 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. நேற்று காலை 5.30 மணிக்கு மீட்புக் குழுவினர் கடலில் இறங்கியுள்ளனர். ஆனால் ம…
-
- 0 replies
- 355 views
-
-
இந்தியாவைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கிறது பாகிஸ்தான் டெல்லி: இந்தியாவிடம் இருப்பதைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் தம் வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரக்சக் அண்மையில் தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 வீரர்கள் பலியாகினர். பெட்டரியில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊடகங்கள் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலிமை மற்றும் பாகிஸ்தான் வலிமை பற்றிய ஆய்வைத் தொடங்கின. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக இந்தியாவை விட மிக அதிநவீனமான நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் வசம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய கடற்படையிடம் இருப்…
-
- 3 replies
- 671 views
-
-
ஈழத்தில் இருந்து ஒரு குரல் இலங்கையர் மூவரையும் நாடுகடத்தக்கூடாது - வைகோ கோரிக்கை! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈழ நேரு, செந்தூரன், இத்தாலியராஜன் (எ) சுந்தரராஜன் ஆகிய மூன்று இலங்கைத்தமிழர்களை திரும்ப அவர்கள் நாட்டிற்கு அனுப்பக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இவர்களில் சுந்தரராஜன் சில இலங்கைத் தமிழ் அகதிகளை பயண ஆவணங்களின்றி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பமுயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அவர் மேல் முறையீடு செய்திருக்கிறார். ஈழநேரு தற்போது திருச்சி சிறையில் இருக்கிறார். அவர் ஒருவரை ஒரு இலட்சம் ரூபாய் அளவு ஏமாற்றியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. செங்கல்…
-
- 1 reply
- 344 views
-
-
திராவிடம் V/S தமிழ் தேசியம் சுதந்திரம் கிடைத்த பிறகு தேசிய அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இந்திய தேசத்தை காங்கிரஸ்தான் வழிநடத்தி வருகிறது. நாட்டை அது வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்குப்பதில் கடந்த பத்தாண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நகர்த்திவிட்டிருக்கிறது. அதிலும் சோனியாவின் வழிநடத்தலில் மன்மோகன், சிதம்பரம் எனும் பெரிய பொருளாதார மேதைகள் சர்க்கஸ் கோமாளிகளாக மாறிவிட்டனர். ஆனால் தமிகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் ஓரளவுக்கு வளர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரனம் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள், இயக்கங்கள் போன்றவைதான். ஒப்பு நோக்கலில் தெலங்கானா தவிர்த்த ராயல சீமா, ஆந்திரா பகுதிகள் செழிப்பானவைகவே இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை காமராஜருக்கு பின்னால் …
-
- 0 replies
- 671 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பு அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்த வருகிறது. இங்குள்ள காவல் துறை அதிகாரிகள், ஐ.நா.வின் அகதிகள் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் …
-
- 0 replies
- 316 views
-
-
அமெரிக்க டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு வரும் சரிவு திங்கள்கிழமையும் தொடர்ந்தது. அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கு 63.30 ரூபாய் தர வேண்டியிருந்தது.காலையில் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் இறுதியில் இருந்த 61.65 என்ற நிலையைவிட குறைந்து, ரூ. 62.30 அளிக்க வேண்டியிருந்தது.ஒரு கட்டத்தில் வரலாறு காணாத அளவில், ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ. 63.30 அளிக்க வேண்டிய நிலைக்கு இந்திய கரன்சி மதிப்பு தாழ்வுற்றது. ஒரே நாளில் 148 காசுகள் மதிப்பு குறைவதென்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். வர்த்தக இறுதியில் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்து, ஒரு டொலருக்கு ரூ. 63.13 என்ற அளவில் இர…
-
- 8 replies
- 990 views
-
-
சமீப காலமாக காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியப்படையினர் போராளிகளால் மட்டுமின்றி, அங்கு வாழும் முஸ்லிம் இளைஞர்களாலும் தாக்கப்படுகின்றனர். இதைவைத்து பார்க்கும்பொழுது இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் போராளிகளின் பிடிக்குள் செல்வதையே காட்டுகிறது. இங்குள்ள நிலையற்ற தன்மையினை சில அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த வருடம் அயல்நாட்டுப் படைகள் வெளியேறும்போது போராளிகளின் கவனம் இந்தியா மீது திரும்பக்கூடும் என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாக்குவதும…
-
- 0 replies
- 354 views
-
-
மும்பை: மும்பையின் வெர்சோவா பகுதிக்குப் போனால்.. அங்குள்ள ஜேபி சாலைக்கு மறக்காமல் போங்கள்.. அங்கு ஒரு பெண் சாலையோரம் உள்ள குருத்வாரா அருகே பரிதாப நிலையில் அமர்ந்திருப்பார்.. அவர் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் கோடீஸ்வரியாக வலம் வந்த ஒரு பிரபலமான பத்திரிக்கையாளர் சுனிதா நாயக்.. 65 வயதாகும் சுனிதா நாயக்.. இன்று எல்லாவற்றையும் இழந்து கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மிகப் பரிதாபமான சோகக் கதை. எத்தனையோ பிச்சைக்காரர்களைப் பார்த்து விட்ட மும்பை மக்களுக்கு இவர் இன்னொரு பிச்சைக்காரர்... ஆனால் இவரது கதை மிகப் பரிதாபமாகரமானது, சோகமயமானது. நிரம்பப் படித்தவர் சுனிதா நாயக். பெரும் பணக்காரர். அருமையான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தவர். பை நிறையப் பணத்துடன் வாழ்ந்த அவர்…
-
- 7 replies
- 2.2k views
-
-
கோலாலம்பூர்: மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி "மெட்ராஸ் கஃபே" படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் நேற்று மலேசிய உள்துறை அமைச்சகம், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் தொலைநகலிலும் அக்கடிதம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மலேசியா தமிழர்களின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, மெட்ராஸ் கஃபே படத்தை அமைதிப் பூங்காவாக இருக்கும் மலேசியாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது. ராஜபக்சே உதவியுடன் வெளிவரும் இப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், உடமைகளையும் உரிமைகளையும் இழந்து வாழும் ஈழத் தமிழர்களை களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஆகவே …
-
- 0 replies
- 371 views
-